Wednesday, October 16, 2024

Bad Newz (Hindi movie review)

 Bad Newz (Hindi movie review)




என் அக்கா ஸ்போக்கன் ஹிந்தி கற்றுக் கொள்கிறாள். அவளுடைய டீச்சர் "ஹிந்தி படங்கள் பாருங்கள்" என்றாராம். எனக்கு ஹிந்தி ஓரளவிற்கு புரியும், ஹிந்தி படங்களை சப் டைட்டில் இல்லாமல் பார்த்தால் ஹிந்தி அறிவு விருத்தியாகும் என்று 'Bad News' (பெயரைப் பார், சகுனமே சரியில்லை)என்று ஒரு ஹிந்தி படத்தை கிளிக்கினேன்.   ரொம்ப வித்தியாசமான ஒரு கதை.


ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஷெஃப் ஆக பணியாற்றும் சலோனி பாகாவிற்கு (திருப்தி டிம்ரி) தான் பணியாற்றும் ரெஸ்டெரெண்டிற்கு மெராக்கி ஸ்டார் டைட்டில் வாங்கித்தர வேண்டும் என்று ஆசை. ஆனால் அவள் திருமணம் செய்து கொண்ட Akil Chadda (ரிக்கி கௌஷல்) மனைவி மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்த செய்யும் செயல்களால் அவள் பணியாற்றும் ரெஸ்டெரண்ட் மெராக்கி ஸ்டார் வாங்கும் வாய்ப்பை நழுவ விடுகிறது, அதனால்அவள் வேலையிலிருந்து தூக்கப்படுகிறாள். வெறுத்துப் போன அவள் விவாகரத்து செய்ய முடிவெடுத்து முஸ்ஸோரியில் குர்பீர் சிங் பன்னு(Ammy Virk) என்னும் சர்தார்ஜி நடத்தும் ஒரு ரெஸ்டாரெண்டிற்கு வேலைக்குச் செல்கிறாள்.


சலோனியின் மாஜி கணவன் அவளை வெறுப்பேற்றுவதற்காக நிறைய பெண்களொடு சந்தோஷமாக இருப்பது போல் புகைப்படமெடுத்து அவளுக்கு அனுப்ப, அதில் காண்டான சலோனி வோட்காவை குடித்துவிட்டு குர்பீர் சிங்கை பலவந்தப்படுத்தி அவனோடு இணைகிறாள். தன் ரூமிற்கு வந்தால் அங்கே மாஜி கணவன், அவளைத் தான் இன்னும் விரும்புவதாக கூற அவனோடும் உறவு கொள்கிறாள்(என்ன கஷ்டம்டா!). அறுபது நாட்களுக்குப் பிறகுஅவள் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. தான் போதையில் இருந்ததால் தான் யாருடைய குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்த இரவில் தான் உறவு கொண்ட இரண்டு ஆண்களையும் பேடர்னட்டி டெஸ்ட் செய்ய அழைக்கிறாள். அதில் என்ன டிவிஸ்ட் என்றால் அவள் வயிற்றில் உருவாகியிருப்பது இரண்டு குழந்தைகள் அதுவும் இரண்டும் இரண்டு ஆண்மகன்களுடையது(போதுமா?) heteropaternal superfecundation என்னும் அபூர்வ விஷயமாம். இதோடு முதல் பாதி முடிகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? யாரை அவள் மணந்து கொண்டாள்? அந்த குழந்தைகளை என்ன செய்தாள்? போன்றவை அடுத்த பாதியில் ஜவ்வாக இழுக்கப்பட்டிருக்கின்றன.


முதல் பாதி ஓகே! இரண்டாவது பாதியில் தனக்குதான் நல்ல துணவனாகவும், நல்ல தகப்பனாகவும் இருக்கும் தகுதி இருக்கிறது என்பதை நிரூபிக்க ரிக்கி கெளஷலும், அமி விர்கும் செய்யும் கோமாளித்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன. இந்த கூத்தில் படம் நகராமல் ஒரே இடத்தில் நிற்கிறது. 


ரிக்கி கெளஷலுக்கு கொ..ஞ்..ச..ம்.. ஓவர் ஆக்டிங் என்றாலும் நம்மூர் பிரகாஷ்ராஜ் மாதிரி நடிப்பு பிரவாகமாக வருகிறது. ஆமியும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார். 


கடைசியில் சலோமி தன் முன்னாள் கணவனோடு இணைகிறாள், குர்பீர்சிங் பழைய காதலியோடு விட்டுப்போன உறவை புதுப்பித்துக் கொள்கிறான். இரண்டு குழந்தைகளையும் இரண்டு தம்பதிகளும் வளர்க்க முடிவு செய்கிறார்கள், சலோமி ஆசைப்பட்டபடி அந்த ரெஸ்டாரெண்டிற்கு மெராக்கி ஸ்டாரும் கிடைக்கிறது. All is well, they started living happily ever after என்று சந்தோஷமாகத்தான் முடித்திருக்கிறார்கள். நமக்குதான் எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நிஜமாகவே நடக்க ஆரம்பித்துவிடுமோ என்று நடுக்கமாக இருக்கிறது.


 

11 comments:

  1. // நமக்குதான் எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நிஜமாகவே நடக்க ஆரம்பித்துவிடுமோ என்று நடுக்கமாக இருக்கிறது. //

    இதுவரை இப்படி நடக்கவில்லை என்று நம்புகிறீர்களா?""

    ReplyDelete
    Replies
    1. //இதுவரை இப்படி நடக்கவில்லை என்று நம்புகிறீர்களா?"// ம்ம்ம்..!

      Delete
  2. நான் நிறைய படங்கள் பார்க்கிறேன்.  சில விமர்சனம் எழுதலாம் என்று நினைப்பேன்..  விட்டு விடுவவேன்.  GOAT பார்த்தேன், வேட்டையன் பார்த்தேன்...  போகுமிடம் வெகு தூரமில்லை பார்த்தேன்.  தரமான படம்.

    ReplyDelete
    Replies
    1. //GOAT பார்த்தேன், வேட்டையன் பார்த்தேன்... போகுமிடம் வெகு தூரமில்லை பார்த்தேன்.// கோட்டும், வேட்டையனும் பார்க்கும் துணிவோ,ஆர்வமோ இல்லை. போ.வெ.தூ. பார்த்தேன்,ரசித்தேன்.

      Delete
  3. என்னவோ அதிசயமாக கமெண்ட் நழுவி கீழே விழாமல் நிற்கிறது.  சென்ற பதிவுக்கு நான் போட்ட கமெண்ட்ஸ் போயி போச்...  ஸ்பாம்ல இருந்து எடுங்க என்று போட்ட கமெண்ட்ஸும் காணாமப்போச்சு...

    ReplyDelete
    Replies
    1. //ஸ்பாம்ல இருந்து எடுங்க என்று போட்ட கமெண்ட்ஸும் காணாமப்போச்சு...// ஹாஹா!

      Delete
  4. வணக்கம் சகோதரி

    ஹிந்தி திரைப்பட விமர்சனம் அருமை. படத்தை பார்க்காமலேயே தங்கள் விமர்சனத்தைப் படித்தவுடன் படத்தை பார்த்த திருப்தி வந்து விட்டது.அவ்வளவு அழகாக முடிவு வரை சொல்லி விட்டீர்கள். நடு நடுவில் உங்கள் மனது அளித்த கமெண்ட்ஸ்களையும் ரசித்தேன். சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல் நாட்டு நடப்புகள்தான் இதை விட மோசமாக உள்ளதே.! ஆனாலும், இதெல்லாம் "சகஜமப்பா சகஜம்" என்று நாம் கடக்கும் காலங்கள் வந்து விடும், / வந்து கொண்டிருக்கின்றன. / வந்தும் விட்டன.

    என்னவோ!! முன்பு போல் நல்ல படங்களை பார்க்கும் ஆவல் இப்போதெல்லாம் என்னை விட்டு அகன்றே விட்டது.. ஆனாலும் இப்போது புதிதாக வந்த விஜய் படத்தை குழந்தைகளுடன் பாடல்கள் ஓட்டி பார்த்தோம். அவர்கள் தியேட்டரில் சென்று பார்த்து வந்தாகி விட்டது. பின் எனக்காக டிவியிலும் பார்த்தார்கள். பழைய படங்களின் மசாலா கதைகள். இணைந்தது. நீங்களும் அப்படத்தை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. விஜய் படங்கள் பெரும்பாலும் பார்ப்பதில்லை.

      Delete
  5. சினிமா பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் மக்களை பார்த்து சினிமா எடுப்பவர்களும் கேட்டுப் போகிறார்கள் என்றும் சொல்லலாம் போலிருக்கிறது. இந்தப் படம் குறித்து ஒரு சில வரிகள் முன்னர் பார்த்தபோது, என்ன கேவலமான கதை என்று தோன்றவே பார்க்கும் எண்ணத்தையே விட்டுவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. //என்ன கேவலமான கதை // அதேதான். நன்றி வெங்கட்.

      Delete
  6. அன்புள்ள நண்பர்களே, அதிக எண்ணிக்கையிலான வலைப்பதிவுகளைக் கொண்ட தமிழ் வலைப்பதிவு திரட்டியை அறிமுகப்படுத்துகிறேன்.. இன்றிலிருந்து படிக்கத் தொடங்குங்கள்
    Click Here

    ReplyDelete