அன்று திருகோவிலூரில் நல்ல மழை. தங்க ஒரு இடம் தேடிய அந்த வைணவருக்கு ஒரு வீட்டின் இடை கழியில் இடம் கிடைத்தது. அங்கேயே படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் கதவு தட்டப் பட்டது. திறந்தால், மழைக்கு ஒதுங்க இங்கே இடம் கிடைக்குமா? என்று கேட்டபடி வாசலில் ஒரு அந்தணர்! நான் ஒருவன் இங்கே படுத்துக் கொண்டிருந்தேன், நாம் இருவர் உட்கார்ந்து கொள்ளலாம் உள்ளே வாருங்கள் என்று அழைத்தார். அந்த இருவரும் அமர்ந்து கொண்டனர். மீண்டும் பட பட படபடவென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் இம்முறையும் ஒரு வைணவர் நிற்கிறார். "வெளியே நல்ல மழை. அது நிற்கும் வரை இங்கே தங்கி விட்டு செல்லலாமா"? என்று வந்தவர் கேட்க, தாரளமாக... உள்ளே வாருங்கள், நாங்கள் இருவர் அமர்ந்து கொண்டிருக்கிறோம், நாம் மூவர் நிற்க முடியும் உள்ளே வாங்கள், என்று அவரையும் வரவேற்றனர். இருக்கும் இடத்தில் மூன்று பேரும் நெருக்கி அடித்து நின்று கொண்டிருந்தனர்,மழை சாரலைத் தவிர்க்க கதவையும் சாற்றியாகி விட்டது. அகவே கும்மிருட்டு! இந்த நிலையில் அந்த மூவருக்கும் இடையே இன்னும் ஒருவர் புகுந்தது போல இட நெருக்கடி...சற்று தள்ளிதான் நில்லுங்களேன் ஏன் இப்படி நெருக்குகிரீர்கள்? நான் எங்கே ஐயா நெருக்குகிறேன்? நீங்கள் அல்லவா என்னை நெருக்குகிறீர்கள்
அவளை வணங்கி உள்ளே செல்கிறோம். பெருமாளின் த்ரிவி
இந்த கோவிலின் மற்ற சிறப்புகள், 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்று. அதே போல பஞ்ச கிருஷ்னாரண்ய ஷேத்ரங்களுள் ஒன்று. திவ்ய ப்ரபந்தம் தோன்றிய இடம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சாதாரணமாக எல்லா கோவில்களிலும் இருப்பதை போல வலது கையில் சக்கரம், இடது கையில் சங்கு என்றில்லாமல்,மாற்றி வலது கையில் சங்கை ஏந்தியிருப்பதால் ஞானத்தை அருளக் கூடியவர் என்று நம்பிக்கை.
புன்னகை தவழும் பெருமாளின் மலர்ந்த முகத்தை தரிசனம் செய்தால் நம் கவலைகள் மறையும் என்று கோவில் தலபுராணம் தெரிவிக்கிறது. உண்மைதான்! உலகளந்த பெருமாளின் அழகை காணும் போது ,
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.
என்னும் கம்ப ராமாயணப் பாடல் நினைவுக்கு வருகிறது. ராமனின் அழகை வர்ணிக்க முயன்ற கம்பர் முடியாமல் தோற்றுப் போய் "ஐயோ! இவன் அழகை எப்படி சொல்வேன்?" என்று முடித்திருப்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது. இந்தக் கால இளசுகளின் பாஷையில் சொன்னால்,"சான்சே இல்ல, அல்டிமேட்!"
பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க நம் மனதில் ஆனந்தம் பெருகுகிறது. எங்கே ஆனந்தம் இருக்கிறதோ அங்கே கவலைகள் இருக்குமா என்ன? ஒரு முறை திருகோவிலூர் சென்று உலகளந்த பெருமாளை தரிசித்து ஆனந்தம் அடையுங்கள்! விழுபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருக்கோவிலூருக்கு விழுப்புரதிலிருந்து ஏராள பேருந்துகள் உள்ளன! திருவண்ணாமாயிலிருந்தும் செல்லலாம்.
ஒரே ஒரு குறை, மூலவரை முழுமையாக தரிசிக்க முடியாமல் அவருக்கு முன்னால் ஒரு பெஞ்ச் போட்டு, அதில் உற்சவரை எழுந்தருள செய்திருக்கிறார்கள். திருவடியை குனிந்து தரிசிக்க வேண்டும். பெருமாளுக்கு வலது புறம் இருக்கும் மஹாலட்சுமி, மற்றும் பிரும்மாவையும், இடது புறம் இருக்கும் முதலாழ்வார்களையும், மிருகண்டு முனிவரையும் நாம் நமக்கு இரண்டு புறங்களிலும் இருக்கும் தூண்களுக்கு
அருகில் சென்று தரிசிக்க வேண்டும். அர்ச்சகர் காட்டும் அரை நிமிட தீபாதாரணைக்குள் கருவறையின் இருட்டிற்கு நம் கண்கள் பழகி, தரிசனம் செய்வது கஷ்டமாக இருக்கிறது, இதற்கு ஏதாவது செய்யலாம்.
எப்போதோ இந்த கதையைப் படித்த நினைவு. திருக்கோவிலூர் புராணமும், விவரங்களும் சுவாரஸ்யம்.
ReplyDeleteஎன்னுடைய ப்ளாகில் முதல் முறை சென்று வந்த பொழுது எழுதினேன். இப்போது லேசாக டிங்கரிங் செய்து வெளியிட்டிருக்கிறார்.
Deleteவெள்ளை எழுத்துகள் கண்களை படுத்துகின்றன. பாரா பிரித்தும் போட்டிருக்கலாம்.
ReplyDeleteசிவப்பு நிறமாக மாற்றியிருக்கிறேன்.
Deleteமையோ, மரகதமோ, மறி
ReplyDeleteகடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்
எனும் இந்தப் பாடல் பதிவில் இருக்கிறது என்று எத்தனைபேர் உணர்வார்கள்?! என்னடா... மூன்று வெள்ளைப்பட்டை என்று சோதித்தபோது மறைந்திருந்தது கிடைத்தது!
இப்போது ஓகேவா?
Deleteஓகே...
Deleteஸ்ரீராம்
மன்னிக்கவும்., அடிக்க வராதீர்கள். இந்த நிறமும் கண்ணை உறுத்துகிறது. ப்ளஸ் கொஞ்சம் நீளமான பாராக்களை சிறிய பாராக்களாக்கலாம். இந்த கமெண்ட்டை வெளியிட வேண்டும் என்று அவசியமில்லை.
ReplyDeleteOh!... let me try.
Deleteமிக அருமையான கோவில் போய் இருக்கிறோம்.
ReplyDelete//ஒரே ஒரு குறை, மூலவரை முழுமையாக தரிசிக்க முடியாமல் அவருக்கு முன்னால் ஒரு பெஞ்ச் போட்டு, அதில் உற்சவரை எழுந்தருள செய்திருக்கிறார்கள்//
நிறைய கோவில்களில் இப்படித்தான் இருக்கிறது. பாத தரிசனம் கீழே குனிந்து தான் பார்க்க வேண்டும்.
படங்கள் அழகு.
நன்றி கோமதி அக்கா!
Deleteஅக்கா, அழகான கோவில். நான் சென்றிருக்கிறேன். கதையும் விவரங்களும் தெரிந்தது என்றாலும் (இந்தக் கதை ரொம்ப பிராபல்யம் ஒருவர் கிடக்க இருவர் அமர, மூவர் நிற்க....
ReplyDeleteசில கோயில்களில் மூலவரின் பாதம் மறைக்க உற்சவரை எழுந்தருள் வைச்சிருப்பாங்க. பாத தரிசனம் கிடைப்பது சிரமம். அதுக்கென்ன மனக்கண் இருக்கே!!!
கீதா
கோவிலுக்கு போய் மனக்கண்ணில் பார்ப்பதா? நியாயமா கீதா?
Deleteநல்லதொரு பகிர்வு. அற்புதமாக ஸ்தலம். பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அழைக்க வேண்டுமே!
ReplyDeleteநல்ல விருப்பங்கள் நிறைவேறும்.
Deleteதிருக்கோவிலூர் கோவிலிலிருந்து வெளியே வந்து வெளியே வரும் திசையிலேயே இடது புறம் திரும்ப வேண்டும் கொஞ்ச தூரம் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து மீண்டும் இடது புறம் திரும்பி சிறிய தூரம் நடந்தால் வலது புறம் ஆதி கால பைரவர் கோவில் மிக விசேஷமான கோவில் இருக்கிறது. இரு கோவில்களுக்கும் இடையே ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தான்.
ReplyDeleteகீதா
அங்கு நிறைய கோவில்கள், ஆஸ்ரமங்கள் இருக்கின்றன. கூட வருபவர்கள் ஒத்துழைக்க வேண்டுமே?
Delete