கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, August 19, 2025

திரை விமர்சனம்: லவ் மேரேஜ்

 திரை விமர்சனம்: லவ் மேரேஜ் 

நடிகர்கள் - விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக் 

இயக்கம் - சண்முகபிரியன் 

33 வயதாகியும் திருமணமாகாத ராமசந்திரனுக்கு(விக்ரம் ப்ரபு) ஒரு வழியாக கோவைக்கருகில் இருக்கும் ஒரு கிராமத்து பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இதற்காக அவர்கள் குடும்பதினர் மதுரையிலிருந்து ஒரு பஸ்ஸில் கிளம்பி வருகிறார்கள்.   

நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பஸ் ரிப்பேராகி விட அவர்கள் ஒரு நாள் பெண் வீட்டிலேயே தங்க நேரிடுகிறது. அடுத்த நாள் முதல் லாக் அவுட் அறிவிக்கப்பட்டுவிட அவர்கள் அங்கிருந்து கிளம்ப முடியவில்லை. உறவினர்கள் எல்லோரும் அங்கே இருப்பதால் திருமணத்தை அப்போதே நடத்தி விடலாம் என்று முடிவு செய்கிறார்கள். அப்போது கல்யாணப் பெண் தன் காதலனுடன் ஓடிப்போய் விடுகிறாள்(லாக் அவுட் நேரத்தில்!!) மறுபடியும் ராமச்சந்திரனின் திருமணம் நின்று விடுகிறது. ராமசந்திரனின் ராசிதான் இதற்கு காரணம் என்று அவனுடைய மாமா கேவலமாக பேசுகிறார். இதற்கிடையில் மணப்பெண்ணாக வரவிருந்த பெண்ணின் சகோதரிக்கும், ராமசந்திரனுக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. அவர்கள் திருமணம் நடந்ததா? என்பதுதான் மீதிக்கதை. 

மாமா தன் ராசியைப் பற்றி கேவலமாக பேசும்பொழுது அதற்கு ரியாக்ட் செய்யும் காட்சியில் விக்ரம் பிரபு நன்றாக நடித்திருக்கிறார். கதாநாயகி குள்ளம், விக்ரம் பிரபு அருகில் இன்னும் குள்ளமாக தெரிகிறார். பாடல்கள் ஒரே மாதிரி இருக்கின்றன.

ரத்தம் தெறிக்கும் வன்முறை, காதை செவிடாக்கும் இரைச்சல், பிரும்மாண்டமான செட், இவையெல்லாம் இல்லாத யதார்த்தமான கதைகதைபடம் முழுவதும் ஒரு வீட்டிலேயே நகர்கிறது.

 மெலிதான நகைச்சுவை. இயல்பான நடிப்பு, இவைதான் இந்தப் படத்தின் ப்ளஸ். லாக் அவுட் சமயத்தில் ஓடிப் போகிறாளாம். ஒரு சண்டை வைக்க வேண்டும் என்பதற்காக லாக் அவுட் நேரத்தில் மார்கெட்டில் கசகசவென மக்கள் நடக்கிறார்கள். எந்த காட்சியிலும்,யாரும் மாஸ்க் அணியவில்லை. இதுபோன்ற ஓட்டைகள் இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். போரடிக்கவில்லை.

12 comments:

  1. விமர்சனம் இயல்பாகவும் சரியாகவும் இருக்கிறது..(படம் பார்த்தவன் என்கிற வகையில் )வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்August 21, 2025 at 4:22 AM

      நன்றி சார்.

      Delete
  2. ஒவ்வொரு முறையும் தாண்டிச் செல்கிறேன்.  இதுவரை படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியதில்லை.  பார்த்து விடுகிறேன்!

    ReplyDelete
  3. எந்த OTT யில் பார்த்தீர்கள் என்பதையும் சேர்த்து எழுதுங்கள்.  படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. பானுமதி வெங்கடேஸ்வரன்August 21, 2025 at 4:25 AM

      இங்கே கனடாவில் ஐ.பி. டி.வி. என்று ஒன்று இருக்கிறது. நம்மூர் கேபிள் டி.வி. போல, அதனால் ஓடிடி தெரியாது. ப்ரைம் என்று நினைக்கிறேன்.

      Delete
  4. நான் நேற்று கோர்ட் சீன்களுக்கு ஆசைப்பட்டு JSK பார்த்தேன்.  பரவாயில்லை ரகம்.  சிறு ட்விஸ்ட்கள், சுமாரான கோர்ட் ரூம் காட்சிகள்.  சுரேஷ் கோபி அனுபமா பரமேஸ்வரன் நடித்த படம்.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிறேன். நன்றி

      Delete
  5. நல்லதொரு விமர்சனம். இப்படி ஒரு படம் வந்ததை தங்கள் பதிவிலிருந்து தான் அறிந்தேன். எனக்கும் சினிமாவுக்கும் ஆன தொடர்பு குறைவு. எப்போதாவது You Tube இல் படம் பார்ப்பதோடு சரி.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. திரை விமர்சனம் நன்றாக உள்ளது. சத்தங்கள், வன்முறைகள் இல்லாத இந்தப் படத்தை பார்க்கத் தூண்டுகிறது. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete