பெஸ்டோ பாஸ்தா(Pesto Pastha)
தேவையான பொருள்கள்:
பாலக் கீரை - 1/2 கட்டு
கொத்துமல்லி - 1/4 கட்டு
பூண்டு - 7 பல்
பாதாம் - 8
முந்திரி பருப்பு - 7
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு அகலமான வாணலியில் தண்ணீர் வைத்து, அதில் ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும், தண்ணீர் கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட்டு வேகவைக்கவும்.
பாஸ்தா வெந்ததும், அதை வடிய வைத்து, குளிர்ந்த நீரில் அலம்பி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிசிறி வைக்கவும்.
பாஸ்தா வேகவைத்த வாணலியிலேயே கொஞ்சம் எண்ணெய் விட்டு, *சீரகம் சேர்த்து வெடித்ததும், பாஸ்தாவை போட்டு, அதோடு அரைத்து வைத்த கீரை, பூண்டு, பருப்புகள் விழுதையும் சேர்த்து கிளறிவிடவும். அந்த கலவையில் கரம் மசாலா மற்றும் சர்க்கரை ஒரு சிட்டிகையும் சேர்த்து நன்கு கலந்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் சின்ன தீயில் வைத்திருந்து இறக்கி விடலாம்.
ஜெயா டி.வி.யில் பார்த்ததை நேற்று முதல் முறையாக செய்தேன். என் மகனுக்கும், மருமகளுக்கும் மிகவும் பிடித்திருந்தது. Quality of pudding is in eating என்பது நிரூபிக்கப்பட்டது. செய்து பாருங்கள் உங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் பிடிக்கும். டொமேட்டோ கெச்சப்புடன் நன்றாக இருந்தது.
பெஸ்டோ பாஸ்தா - பெஸ்டோ என்றால் கீரை, ஆலிவ் ஆயில், மற்றும் பருப்புகள் சேர்த்து செய்யும் சாஸ். இதில் வறுத்த வால்நட் கூட சேர்க்கலாம். அப்போது முந்திரியின் அளவை குறைக்க வேண்டும். பாதம் பருப்பை ஊற வைத்து தோல் உரித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
* அவர்கள் செய்து காட்டியதில் கரம் மசாலா, சர்க்கரை போன்றவை சேர்க்கவில்லை. சப்பென்று இருக்கப் போகிறதே என்று நான் சேர்த்தேன். அதே போல சீரகம் தாளித்ததும் என் விருப்பம்.