எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே?
கொரோனாவின் நேரடி விளைவுகள் நோய், மரணம், வெளியே செல்ல முடியாதது, கோவில்,சினிமா, திருவிழாக்கள் எல்லாவற்றிர்க்கும் தடை. வேலை இழப்பு, சம்பளம் கட். இதன் மறைமுக விளைவுகள் மன உளைச்சல், மற்றும் பெருகி வரும் திருட்டுகள், குறிப்பாக ஆன் லைன் திருட்டுகள்.
வங்கியிலிருந்து பேசுகிறோம், என்று அழைத்து நம் கணக்கு முடக்கப்படும் என்று பயமுறுத்தி விவரங்களை பெற்று கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்வது ஒரு முறை. இதிலாவது நாம் விவரங்கள் கொடுத்தால்தான் அவர்களால் பணத்தை எடுக்க முடியும். இன்னொரு மிகவும் ஆபத்தான ஒன்று இருக்கிறது. அதில் நம்முடைய செல் போனை அப்படியே கடத்தி விடுகிறார்கள்.
எங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு அவள் பெற்றோர் ஏதோ கூரியர் அனுப்பியிருக்கிறார்கள். அந்தப் பெண் அவர்கள் அனுப்பிய கூரியரை டிராக் செய்து பார்த்திருக்கிறாள். ஒரு நாள் அவளுக்கு ஒருவன் தான் கூரியர் கம்பெனியிலிருந்து அழைப்பதாகவும் அதில் பின்கோட் தெளிவாக இல்லை, என்றும், அவன் சொல்லும் ஒரு ஆப் ஐ டவுன்லோட் செய்யும்படியும் கூறியிருக்கிறான். முதலில் அந்தப் பெண் அவன் சொன்னதை கேட்க்கவில்லை. அதனால் அவன் அந்தப் பெண்ணின் அப்பாவை செல்போனில் அழைத்து, "உங்கள் மகளை இந்த ஆப் ஐ டவுன்லோட் பண்ணச் சொல்லுங்கள் அப்போதுதான் எங்களால் கூரியர் அனுப்ப முடியும்" என்று கூற, அவளுடைய அப்பாவும் அந்தப் பெண்ணிடம் ஆப் ஐ டவுன்லோட் பண்ணும்படி கூறியிருக்கிறார். அந்தப் பெண் ஆப் டவுன் லோட் செய்தவுடன் அவள் போன் அடுத்த நிமிடம் அவளுடைய அவளுடைய செல் போன் ஸ்க்ரீன் மிரரிங் செய்யப்படுவதை உணர்ந்திருக்கிராள் , பிறகு என்ன? அவள் கண்ணெதிரிலேயே அவள் கணக்கிலிருந்து பணம் சூறையாடுப்படுவது தெரிந்திருக்கிறது, என்றாலும் அதை தடுக்க முடியவில்ல. ஸ்க்ரீன் மிர்ரரிங் செய்யப்= பட்டிருப்பதால் ஆன் லைன் பரிவர்த்தனைக்கான ஒன் டைம் பாஸ் வார்ட் அவனால் பார்க்க முடிந்திருக்கிறது. முப்பது வினாடிக்குள் முப்பதாயிரம் அபேஸ்! இம்மாதிரி சைபர் க்ரைம் குற்றவாளிகள் குறி வைப்பது பெரும்பாலும் பெண்களைத்தான். எச்சரிக்கையாக இருங்கள் தோழிகளே.
புதிதாக எந்த ஆப் ஐயும் டவுன்லோட் செய்ய வேண்டாம் குறிப்பாக உங்கள் கை ரேகையை பதிவு செய்யச் சொல்லும் ஆப்புகள் நமக்கு அப்பு வைத்து விடும் அபாயம் உண்டு. பே டி எம், கூகிள் பே என்று எல்லாவற்றையும் பயன் படுத்த வேண்டாம். அவை ஏதாவது ஒன்றை ஹாக் செய்தாலும், அதன் மூலம் மற்றவற்றையும் சுலபமாக ஹாக் பண்ண
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வாரம் தொலைகாட்சியில் நான் பார்த்த செய்திகளில் என்னைக் கவர்ந்த இரண்டு செய்திகளை சொல்கிறேன் கேளுங்கள்
சிறுவயதில் நாமெல்லாம் மயிலறகு குட்டிப் போடும் என்று நம்பி, அதை நோட்டு புத்தகத்திற்குள் மறைத்து வைப்போம். அது ரசிக்கக் கூடிய அப்பாவித்தனம். கிட்டத்தட்ட அதைப்போலவே ஒருவர் பொன் நகைகளை பூமியில் புதைத்து வைத்தால் அவை இரட்டிப்பாக பெருகும் என்று ஒரு போலி மந்திரவாதி கூறியதை நம்பி அறுவது சவரன் நகைகளை தன் வீட்டின் பின் புறம் புதைத்து வைத்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து அந்த இடத்தில் தோண்டி பார்க்க, நகைகள் எதுவும் இல்லை. மந்திரவாதியிடம் கேட்டதற்கு,"உலகத்தில் எதுவும் சரியில்லை அதனால்தான் நகைகள் காணாமல் போய் விட்டன' என்று கூறியிருக்கிறான். அப்போது முழித்துக் கொண்ட அந்த புத்திசாலி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலி மந்திரவாதியை போலீஸ் கைது செய்திருக்கிறது. "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?"
அடுத்த செய்தி கொஞ்சம் சுவாரஸ்யமானது: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குளியல் அறையில் இருக்கும் ஷவர் சரியாக இல்லையாம். அது அவர் குளிக்கும் பொழுது அவருடைய பின் மண்டையை சரியாக நனைப்பதில்லையாம், எனவே அதை மாற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். அதை சரி பார்த்து மாற்றித் தர வெள்ளை மாளிகை நிர்வாகம் ஒப்புக்கொண்டிருக்கிறதாம். எப்..பூ..டி?
---------------------------------------------------------------------------------------------------------------------------
தூங்காதே தம்பி தூங்காதே