கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 16, 2018

நவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.

நவராத்திரியை முன்னிட்டு 
அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.




1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன?

2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட இடம் எது? அங்கிருக்கும் அம்மனுக்கு இன்னொரு சிறப்பு உண்டு? அது என்ன?

3. கன்னியாகுமாரி தான் சிவனை மணந்து கொள்ள வேண்டுமென்றால், அந்த திருமணத்தில் என்னன்ன அபூர்வ பொருள்கள் வேண்டும் என்று கேட்டாள்?

4. இந்த கோவிலில் கர்பக்ரஹத்தில் இருக்கும் அர்த்தமேருதான் சக்தி வாய்ந்தது. உருவ வழிபாட்டிற்கு பழக்கப்பட்ட் நமக்காக அம்மன் உருவச் சிலை இருந்தாலும் அபிஷேகம், பூஜை போன்றவை அர்த்தமேருவிற்குத்தான்.  நான் குறிப்பிடுவது எந்த கோவிலை என்று தெரிகிறதா?

5. மிகவும் உக்கிரமாக இருந்த இந்த அம்மனின் சக்தியை ஆதி சங்கரர் இரண்டு ஸ்ரீசக்ரங்களில் ஆவாஹனம் செய்து அவ்விரண்டையும் அம்மனுக்கு தாடங்கங்களாக(தோடுகளாக) அணிவித்தார். அதனால் இந்த கோவிலில் தீபாராதனை செய்யும் பொழுது, தாடங்கங்களுக்கும் கற்பூர ஹாரத்தி காட்டி தரிசிக்க சொல்வார்கள். எந்த கோவில் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். 

6. ஒரு காலத்தில் சென்னையின் எல்லை தெய்வமாக விளங்கியவள். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் முன் இவளை வணங்கி விட்டுதான் செல்வார்களாம். மீனவர்கள் மட்டுமல்ல, மராட்டிய வீரன் சிவாஜியும், மஹாகவி பாரதியும் கூட இவளை வணங்கியிருக்கிரார்கள். 

7. சமயபுரம் மாரியம்மனுக்கு மூன்று சகோதரிகள் உண்டு. அவர்கள் யார் யார்?, அவர்கள் குடி கொண்டிருக்கும் கோவில்கள் எவை எவை?

8. ஸ்ரீரெங்கம் ரெங்கநாயகி தாயாரின் திருவடியை (திருவடி சேவை) வருடத்தில் ஒரு முறைதான் தரிசனம் செய்யக் கிடைக்கும், அது எந்த நாள்?  

9. பேச்சாயி, பேச்சி அம்மன், பிடாரி அம்மன் இவை எல்லாம் எந்த தெய்வ வடிவங்கள்?