கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, October 16, 2018

நவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.

நவராத்திரியை முன்னிட்டு 
அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.




1.சக்தி பீடங்களில் தமிழகத்தில் எத்தனை உள்ளன?

2. லலிதா ஸஹஸ்ரநாமம் முதன் முதலாக சொல்லப்பட்ட இடம் எது? அங்கிருக்கும் அம்மனுக்கு இன்னொரு சிறப்பு உண்டு? அது என்ன?

3. கன்னியாகுமாரி தான் சிவனை மணந்து கொள்ள வேண்டுமென்றால், அந்த திருமணத்தில் என்னன்ன அபூர்வ பொருள்கள் வேண்டும் என்று கேட்டாள்?

4. இந்த கோவிலில் கர்பக்ரஹத்தில் இருக்கும் அர்த்தமேருதான் சக்தி வாய்ந்தது. உருவ வழிபாட்டிற்கு பழக்கப்பட்ட் நமக்காக அம்மன் உருவச் சிலை இருந்தாலும் அபிஷேகம், பூஜை போன்றவை அர்த்தமேருவிற்குத்தான்.  நான் குறிப்பிடுவது எந்த கோவிலை என்று தெரிகிறதா?

5. மிகவும் உக்கிரமாக இருந்த இந்த அம்மனின் சக்தியை ஆதி சங்கரர் இரண்டு ஸ்ரீசக்ரங்களில் ஆவாஹனம் செய்து அவ்விரண்டையும் அம்மனுக்கு தாடங்கங்களாக(தோடுகளாக) அணிவித்தார். அதனால் இந்த கோவிலில் தீபாராதனை செய்யும் பொழுது, தாடங்கங்களுக்கும் கற்பூர ஹாரத்தி காட்டி தரிசிக்க சொல்வார்கள். எந்த கோவில் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். 

6. ஒரு காலத்தில் சென்னையின் எல்லை தெய்வமாக விளங்கியவள். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் முன் இவளை வணங்கி விட்டுதான் செல்வார்களாம். மீனவர்கள் மட்டுமல்ல, மராட்டிய வீரன் சிவாஜியும், மஹாகவி பாரதியும் கூட இவளை வணங்கியிருக்கிரார்கள். 

7. சமயபுரம் மாரியம்மனுக்கு மூன்று சகோதரிகள் உண்டு. அவர்கள் யார் யார்?, அவர்கள் குடி கொண்டிருக்கும் கோவில்கள் எவை எவை?

8. ஸ்ரீரெங்கம் ரெங்கநாயகி தாயாரின் திருவடியை (திருவடி சேவை) வருடத்தில் ஒரு முறைதான் தரிசனம் செய்யக் கிடைக்கும், அது எந்த நாள்?  

9. பேச்சாயி, பேச்சி அம்மன், பிடாரி அம்மன் இவை எல்லாம் எந்த தெய்வ வடிவங்கள்?


19 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நான் சொன்னது வரவில்லையே...

      Delete
    2. கமெண்ட் மாடரேஷன் செய்திருந்தேன். அதில் என்ன தவறானது என்று தெரியவில்லை, என்னால் எந்த விடையையும் பார்க்க முடியவில்லை. அதனால்தான் அதை எடுத்தேன். அதன் பிறகும் எந்த விடையும் காணப்படவில்லை. என்ன தவறு? எங்கே? என்று புரியவில்லை. கலந்து கொண்டதற்கு நன்றி.

      Delete
    3. ஆகமொத்தம் முதலில் சொன்ன எனக்கு பரிசு இல்லை.

      Delete
    4. அது அந்தப் பரிசை
      நக்கீரன் வந்து வாங்கிக்கிட்டுப் போய்ட்டாராம்!...

      கஜானா காலியா கிடக்குறப்போ
      போட்டி என்ன வேண்டிக்கிடக்கு..ந்னு
      மகாராஜா சத்தம் போட்டதா
      காத்து வாக்குல சேதி!...

      Delete
  2. ஒருவர் கூட பதில் சொல்லவில்லையே? அவ்வளவு கடினமாகமா இருக்கிறது? கீதா அக்கா வாங்கோ.. you will crack.

    ReplyDelete
  3. என்னது?...

    ஒருவர் கூட பதில் எழுதவில்லையா!...

    அப்படியானால்
    நான் எழுதிய விடைகள் எல்லாம் எங்கே?.

    ஒன்பதுக்கு விடை சொல்லியிருந்தேன்..

    இன்று விடியற்காலையில் வெளியிடுவீர்கள் என்று பலதடவை அலைந்தது தான் மிச்சம்....

    ம்ஹூம்... இது சரி வராது..
    நாடு தழுவிய போராட்டம் தான் தீர்வு!...

    ReplyDelete
  4. நேற்று பதில் அளித்தபோது
    அப்புறமாக கருத்துரை வெளியிடப்படும் என்று வந்ததே!...


    இதில் ஏதோ சதி ஒளிந்திருக்கிறது!...

    ReplyDelete
  5. 1)பதினெட்டு பீடங்கள்..
    2)திருமீயச்சூர்..இங்கே அம்பிகை அமர்ந்த கோலத்தினள்..
    3)கணு இல்லாத கரும்பு, காம்பு இல்லா வெற்றிலை, கண் இல்லாத தேங்காய்..
    4)மாங்காடு காமாக்ஷி அம்மன் திருக்கோயில்...
    5)திருஆனைக்கா..
    6)ஸ்ரீகளிகாம்பாள்..
    7)சமயபுர மாரியம்மனுக்கு மூன்று தங்கைகள் என்பதை ஒத்துக் கொள்வதில்லை..
    எல்லாமே அவளுடைய ஸ்வரூபங்கள் தான்..
    8)ஸ்ரீரங்கநாயகியின் திருவடி தரிசனம் நவராத்திரி சமயத்தில் என்பார்கள்..
    9)பேச்சாயி, பேச்சி அம்மன் - இருவரும் ஒருவரே.. காளியின் உக்ரத்திலிருந்து வெளிப்பட்டவள் பேச்சி அம்மன்.. ஐயப்ப சரிதத்துடன் தொடர்புடையவள்... பேச்சியமனைப் பற்றி நான் எழுதியுள்ளேன்..

    இணைப்பு தேடித் தருகின்றேன்.. ஸ்ரீ பேச்சியம்மனைப் பற்றி முழுதுமாக எழுத ஆவல்..

    பிடாரி அம்மனும் அவ்வாறே.. பீடைகளை அரிபவள் என்பதாக அர்த்தம் சொல்வர்..

    ஆனால் மக்கள் அவளை மறந்தனர்.. மிக பழைமையான வழிபாட்டுக்குச் சொந்தக்காரி..

    பிடாரி அம்மனையும் ஜேஷ்டா தேவியையும் ஏளனம் செய்வது தமிழர்களின் வேலையாயிற்று...

    தஞ்சை மாவட்டத்தில் - இவளுக்கு பல இடங்களில் கோயில்கள் உள்ளன.. ஆனாலும் கவனிப்பாரில்லை...

    திருவிழாக்களில் எழுந்தருளும் அஸ்த்ரதேவர் போல
    அம்மன் மூலஸ்தானம் கொண்டுள்ள திருக்கோயில்களின் திருவிழாக்களில் சூலப் பிடாரி என எழுந்தருள்வாள்...

    எல்லைப் பிடாரி என்ற சிறப்பு இவளுடையது..

    இவள் சிறப்பிக்கப்பட்டால் ஊரின் எல்லையைத் தாண்டி தீய வினைகள் உள்ளே வராது என்பது ஐதீகம்... இவளுடைய கோயிலில் நாகம் கண்டிப்பாக இருக்கும்...

    ReplyDelete
  6. 6) ஸ்ரீகாளிகாம்பாள்..
    அங்கே பிழையாகி விட்டது..
    மதிப்பெண்ணைக் குறைத்து விடாதீர்கள்!.

    ReplyDelete
  7. பிடாரி அம்மன் கோயில் என்றால் ஊர் நடுவே பெரிதாக எல்லாம் இருக்காது..

    பெரும்பாலும் ஊர் எல்லையில் வயல்வெளிகளில் சிறிய மண்டபத்துடன் சந்நிதி கொண்டிருப்பாள்.. சமயங்களில் ஐயனார் கோயிலும் சேர்ந்திருக்கும்...

    மக்கள் எளிதில் அணுக முடியாதபடிக்கு சிறு காடுகளுக்குள் இருந்ததுவே பிரச்னை...
    ஆனால் - நம்புவார்க்குத் தன்னை வெளிக்காட்டத் தவறியதேயில்லை.. வரப்ரசாதி..

    ReplyDelete
  8. கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார். நான் முதலில் கமெண்ட் மாடரேஷன் செய்திருந்தேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை, பின்னூட்டத்தை பார்க்க முடியவில்லை. அதனால் அதை எடுத்து விட்டேன். இப்போது விடைகள்
    1. சக்தி பீடங்களில் ஒன்றுதான் தமிழ் நாட்டில் இருக்கிறது அது காஞ்சீபுரம்.
    2. திருமீயச்சூர். இங்கு அம்பாள் அமர்ந்த கோலத்தில் இருப்பது மட்டும் சிறப்பு அல்ல. அம்பாளின் கால்களுக்கு கொலுசு அணிவிக்க முடியும்.
    3. கணு இல்லாத கரும்பு, கண் இல்லாத தேங்காய், காம்பில்லா வெற்றிலை.
    4. மாங்காடு
    5. திருவானைக் கோவில்
    6. காளிகாம்பாள்
    7. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான், என்றாலும் சமயபுரம் மாரியம்மன், நார்தாமலை மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், அன்பில் மாரியம்மன் இந்த நால்வரும் சகோதரிகள் என்று ஒரு நம்பிக்கை உண்டு.
    8. ஸ்ரீரெங்கம் ரெங்கநாயகித் தாயாரின் திருவடி சேவை நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று மட்டுமே கிடைக்கும்.
    9. பேச்சாயி, பேச்சி அம்மன், பிடாரி(பட்டாரிகையே பிடாரி என்று திரிந்ததாம்)அம்மன் இவை எல்லாமே சரஸ்வதியின் வடிவங்களே என்று தெய்வத்தின் குரலில் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. 51 வது இடமாக தேவியின் உடற்பகுதி வீழ்ந்த இடமே ஐம்பத்தோராவது ஊர் என்று பெயர் பெற்றது;அதுவே நாளடைவில் அம்பத்தூர் ஆனது;// இதைப் பல நாட்களாகச் சொல்ல நினைச்சு, இன்னிக்கு வேறே ஏதோ தேடப் போய் நினைவு வந்தது. வைஷ்ணவி பீடம் என்கின்றனர். ஆனால் அங்குள்ள வைஷ்ணவி கோயில் தனியாரால் நிர்மாணிக்கப்பட்டது. இது குறித்து நன்கு தெரிந்து கொள்ளணும். அது வரை அம்பத்தூரையும் ஓர் சக்தி பீடம்னு ஒத்துக்க வேண்டியது தான்! :))) (எனக்கு மட்டும்.) :)))))

      Delete
  9. //பேச்சியமனைப் பற்றி நான் எழுதியுள்ளேன்..

    இணைப்பு தேடித் தருகின்றேன்.. ஸ்ரீ பேச்சியம்மனைப் பற்றி முழுதுமாக எழுத ஆவல்..//
    படிக்க ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான விடைகளை சரியாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!

      Delete
    2. தாங்கள் பாராட்டுரைகளுக்கு மகிழ்ச்சி... நன்றி...

      Delete
  10. இப்போது வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்..

    இதிலுள்ள விடைகளில் சிலவற்றைப் பற்றி பிறகு சொல்கிறேன்...

    ReplyDelete
  11. சொக்கா, சொக்கா! போச்சே,பொற்கிழி போச்சே! :))))

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கீதாக்கா லேட்டா வந்தா அப்புடித்தான் ஆனாலும் இப்பவும் நீங்க விடைகளில் ஏதேனும் இடம் பொருள் சொற் குற்றம் இருந்தால் சொல்லலாமே!!!! ஹாஹா ஹா ஹா

      கீதா

      Delete