நவராத்திரி - ஒரு முன்னோட்டம்
|
கொலுப்படி கட்டும் கணவர்,மகன்,மருமகள் |
|
கொலுவேற காத்திருக்கும் பொம்மைகள் |
|
எங்களுக்கு எங்கு இடம் கிடைக்குமோ? |
|
95% சதவிகிதம் ரெடி. இன்னும் சீரியல் செட் போட வேண்டும் |
ஆக, ஒரு வழியாக கொலுவிற்கு ரெடியாகி விட்டோம். கொலுவிற்கு டச் அப் வேலைகள் பாக்கி. சுண்டலுக்கு தேவையான சாமான்கள் வாங்கியாச்சு. புடவைகள், ப்லௌஸ்கள் ரெடி, கிஃப்ட் ரெடி. ஆகவே மக்களே ஒன்பது நாட்களும் பாடுவதற்கு தோடி, கல்யாணி, காம்போதி, பைரவி, பந்துவராளி, நீலாம்பரி, புன்னாகவராளி, வசந்தா ராகங்களில் பாடல்கள் தயார் செய்து கொண்டு எங்கள் வீட்டுக்கு தாம்பூலம் வாங்கிக் கொள்ள வாங்கோ.
உங்கள் வரவை அன்போடும், ஆவலோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் எதிர்பார்க்கும்.
பானுமதி வேங்கடேஸ்வரன்
இதோ புறப்பட்டு விட்டேன்ன்ன்ன்ன் வலது காலைப் பிளேன் படியில வச்டிட்டேன்ன்ன்ன்ன்ன்:).. எனக்கு பிங் சாறிதான் வேணும்ம்ம்ம்ம்:)
ReplyDeleteGranted. புடவை நிச்சயம் உண்டு, ஆனால் பாட்டு பாட வேண்டும்.
Deleteகொலுவுக்கு தயாராகி விட்டீர்களா? பட்டாணி சுண்டல் என்று செய்கிறீர்கள் என்று சொல்லுங்கள். அன்று வருகிறேன்!!! நான் பாடுவேன். அது என்ன ராகம், ராகமா, சோகமா என்று நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்!!!!
ReplyDeleteஅது சுண்டல் ராகமாக இருக்கும்போல:)
Deleteகிண்டலா!!
Deleteஆஆஆவ்வ்வ்வ் எதுகை மோகன் ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே :).. எதுகை மோனையில பேசுறார் ஶ்ரீராம் ஹா ஹா ஹா:)..
Deleteஸ்ரீராம் உங்களுக்கு உக்காரை, புட்டு, வெல்ல காராமணி சுண்டல் இவையெல்லம் பிடிக்காதா?
Deleteசிக்கென்று சின்னக் கொலு! எங்க வீட்டில் இருந்த பொம்மைகளைக் கொடுத்துவிட்டதோடு அல்லாமல் கொலுப்படியையும் சில ஆண்டுகள் முன்னர் தான் விற்றோம்! :) சும்மா இருக்கும் சில பொம்மைகளைத் தான் வைக்கிறேன். இந்த வருஷம் அதுக்காகப் படியும் கட்ட முடியலை!
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் பொம்மைகளை நான் வைக்கவில்லை. சென்னை வீட்டில் தோரணங்கள் கட்ட ப்ரொவிஷன் செய்து வைத்திருந்தோம். இது வாடகை வீடு என்பதால் தோரணங்கள் கட்ட முடியவில்லை. பூங்காவும் அமைக்கவில்லை.
Deleteஎனக்கு அரக்கு, மெஜந்தா, பச்சை இல்லாமல் வேறே ஏதேனும் ஒரு நிறத்தில் புடைவை கொடுத்தால் போதும். இந்த வைச்சுக்கொடுக்கிறவங்க கூட மெரூன், பச்சை, மெஜந்தா கலரிலேயே புடைவையோ, ப்ளவுசோ கொடுக்கிறாங்க! ஏன் அவங்களுக்கெல்லாம் மஞ்சள், நீலம், பிங்க், ப்ரவுன், காஃபி ப்ரவுன், ஆரஞ்சு, மஸ்டர்ட், ஆலிவ் க்ரீன், ஊதா, கத்திரிப்பூக் கலர் இதெல்லாம் கண்ணிலேயே படறதில்லை என்பது எனக்கு இன்னிக்கு வரைக்கும் ஆச்சரியம்! இஃகி, இஃகி, :)))))))
ReplyDeleteபுடவை வைத்து கொடுக்கும்பொழுது கருப்பு வரக்கூடாது என்று சிலர் நினைப்பார்கள். நான் கருப்பு, வெள்ளை இந்த நிறங்களைத் தவிர எல்லா நிறத்திலும் வைத்து கொடுப்பேன். உங்களுக்கு இல்லாததா? என்ன கலர் வேண்டும் சொல்லுங்கள்.
Deleteஇஃகி, இஃகி எல்லாக் கலரிலேயும் ஒண்ணொண்ணு போதும் இப்போதைக்கு! தீவாளிக்கு அப்புறமா வாரேன்! செரியா?
Deleteநீங்க, அதிரடி,இவங்கல்லாம் எங்க வீட்டு நவராத்திரி லலிதாம்பிகையைப் பார்க்க வரவே இல்லை!
Deleteபராசக்தி அம்பிகையின் நல்லருள்
ReplyDeleteபாரெங்கும் நிறைவதாக!...
வாழ்க நலம்!..
மிக்க நன்றி. உங்களுக்கும் நவராத்திரி நல் வாழ்த்துக்கள்.
Deleteகும்பகோணத்தில் எங்கள் வீட்டில் 1970களிலும், 1980களிலும் நாங்கள் கொலு வைத்த நாள்கள் நினைவிற்கு வந்தன.
ReplyDeleteகொலு நாட்கள் யாராலும் மறக்க முடியாதவை.
Deleteஅன்பு நல் வாழ்த்துகள் பானு மா. அழகாக வைத்திருக்கிறீர்கள். இங்கே இனிதான்
ReplyDeleteகிஃப்ட் எல்லாம் வாங்க வேண்டும்.
3 batch ஆக அழைக்கப் போகிறாள் மகள்.
டின்னரும் கொடுப்பதால் செம வேலை பிடித்துக் கொள்ளும். தள்ளுமோ தள்ளாதோ.
ஆனால் கலகலப்பாகச் செல்லும் நாட்கள்.
//தள்ளுமோ தள்ளாதோ. ஆனால் கலகலப்பாகச் செல்லும் நாட்கள்.// உண்மைதான், அதுதான் நவராத்திரியின் சிறப்பு. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகள்! வருகைக்கு நன்றிமா!
Deleteநவராத்திரியின்போது காம்போதி ராகமா? ஏன் இதை யாரும் கவனிக்கவில்லை?
ReplyDeleteநெல்லைத் தமிழரே, முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்ட நவாவரணக் கீர்த்தனைகள் நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராகத்தில் பாடுவார்கள். அதிலே காம்போதியும் இருக்கானு கீதா ரெங்கன் வந்து தான் சொல்லணும். :)
Deleteஇப்போத் தான் கவனிச்சேன் மூன்றாம் நாளைக்கான ராகம், காம்போதி. சங்கீதத்தில் அவ்வளவாகப் பரிச்சய இல்லாததால் நினைவில் நிற்கலை. :) ஆனால் என் குறிப்புக்களில் இருக்கு! :))))
Deleteவாங்க நெல்லை,நவராத்திரியில் காம்போதி ராகம் பாடக்கூடாதா என்ன?
Deleteபரவாயில்லையே! கணவர் மீது எவ்வளவு கரிசனம் உங்களுக்கு! அவருக்கு வேலை கொடுக்கவேண்டாம் என்றுதானே சின்னஞ்சிறியதாக ஒரு கொலுவை அமைத்தீர்கள்! கொடுத்துவைத்தவர் உங்கள் கணவர்!
ReplyDelete-இராய செல்லப்பா சென்னை
சிறிய கொலுவாக இருக்கலாம், சின்னஞ்சிறியது அல்ல. சூம் செய்து பாருங்கள், ஒரே படியில் இரண்டு வரிசை பொம்மைகள் இருப்பது தெரியும். இன்னும் சில பொம்மைகளை வைக்கவில்லை.
ReplyDelete