கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, October 22, 2018

மீ டூ..

மீ டூ.. 

சேகருக்கு சுஜிதாவை பார்க்கும் பொழுது ஆச்சர்யமாக இருந்தது. அவர் சிறு குழந்தையாக பார்த்த பெண், இன்று கிட்டத்தட்ட அவர் தோளுக்கு வளர்ந்து நிற்கிறாள். அவர்கள் வீட்டிலேயே, சாப்பிட்டு, தூங்கி, அவர் மகளோடு விளையாடிய குழந்தை, இன்று முது கல்வியை முடித்து விட்டு, தனக்கு கிடைத்திருக்கும் இரண்டு வேலைகளில் எதை தேர்ந்தெடுப்பது என்று அவரிடம் ஆலோசனை கேட்க வந்திருகிறாள். காலம் எத்தனை சீக்கிரமாக ஓடுகிறது!

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த எல்லோரும் பழைய கதைகளை அசை போட்டபடியே சாப்பிட்டனர். டெசர்ட்டை கையில் எடுத்துக்கொண்டு ஸோஃபாவில் அமர்ந்த பொழுது பேச்சு நிகழ்காலத்திற்கு திரும்பி 'மீ டூ'வில் வந்து நின்றது. 

"ஒரு வகையில் நல்லதுதான், ஆனா, இப்படியே போனா, யார் வேணா யார் மேல வேண்டுமானாலும் பழி சொல்லி விடலாம் போலிருக்கு. ஏன் சுஜி கூட என் மேல மீ டூவில் எழுதி விடலாம்.." சேகர் விளையாட்டாய் கூற, சுஜிதா,

"கரெக்ட் அங்கிள், உங்களைப் பற்றி நான் நிஜமாவே மீ டூவில் எழுதலாம்" என்க, எல்லோரும் திடுக்கிட்டனர்.

"ஏய் யாரைப் பார்த்து என்ன சொல்ற? மூடு வாயை." என்று அவள் அம்மா அதட்டினாள்.

"நீ சும்மா இரும்மா.. உனக்கு ஒண்ணும் தெரியாது, ஆன்டிக்கு தெரியும்" என்று சுஜிதா சொல்ல, சேகரின் மனைவி ராதா குழம்பினாள்.

சுஜிதா சிரித்துக் கொண்டே, என்ன அங்கிள், ஆன்டி ரெண்டு பேரும் பயந்து போயிட்டீங்களா? சின்ன வயசில், நானும் அபியும் இங்க விளையாடி கொண்டிருப்போம், அங்கிள் ஆஃபிஸிலிருந்து வந்ததும், அபியை தூக்கி தட்டாமாலை சுற்றி இறக்கி விடுவார். நான் உடனே, அங்கிள் மீ டூ, மீ டூ, என்று என்னையும் சுற்றச் சொல்லுவேன், உடனே என்னையும் தூக்கி தட்டாமாலை சுற்றுவார்.." மறந்து விட்டதா? நான் அதைத்தான் சொன்னேன்."

"அடிப் பாவி! ஒரு நிமிஷம் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல் ஆகி விட்டது, என் வாழ்கையோடு விளையாட்டிடயே?" என்று ஸோஃபாவில்  நிம்மதியாக உட்கார்ந்து, " இன்னும் ஒரு ஸ்கூப் ஐஸ் க்ரீம் போடு" என்றதும்

"மீ டூ" என்றாள் சுஜி. 

22 comments:

  1. ஹா... ஹா... ஹா... ரசித்தேன். அந்த வார்த்தைதான் எப்படி பதட்டத்தை உண்டு பண்ணுகிறது!

    ReplyDelete
  2. ஷார்ட் அண்ட் சுவாரஸ்யம். ஆனால் பிரபலங்கள் மீது சொல்லப்படும் 'மீ டூ'க்கள்தான் பிரபலமாகும்!!

    ReplyDelete
    Replies
    1. அட! இப்படி ஒரு விஷயம் இருக்கோ? தோனாமல் போச்சே.. சேகரை ஒரு ப்ரபலஸ்தர் ஆக்கியிருக்கலாம். வருகைக்கு நன்றி.

      Delete
  3. சொல்ல நினைப்பதை அழகாயும் சுருக்கமாயு அதே சமயம் விறுவிறுப்புடனும் சொல்லத் தெரிந்திருப்பதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு சந்தோஷமான நன்றி!

      Delete
  4. Replies
    1. ஏதிர்பார்த்தது அதைத்தானே?. நன்றி டி.டி. சார்.

      Delete
  5. சின்மயி செய்தவேலை உங்களுக்கு குட்டிக்கதை சொல்ல வைத்து விட்டது.
    ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. சின்மயி மட்டுமா? ஊரே அல்லோலப் படுகிறதே. நன்றி ஜி!

      Delete
  6. நல்லவேளை..

    நாங்க தப்பிச்சோம்!..

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா மீ ரூ படுத்தும் பாடு:)... இது எத்தனை நாட்களுக்கோ....

    ReplyDelete
    Replies
    1. அதேதான் அதிரா. நன்றி! மற்ற பதிவுகளில் புகுந்து கலக்கும் நீங்கள் என் பதிவில் மட்டும் ரொம்ப சமத்தாக இருக்கீர்களே? நான் என்ன அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக உங்கள் கண்ணுக்கு தெரிகிறேனா?

      Delete
  8. நிஜமாகவே அதிர்ந்து விட்டேன். பானு மா. நல்ல குறும்பான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ வல்லி அக்கா நீங்கள் அவ்வளவு அப்பாவியா? நன்றி!

      Delete
  9. விளையாட்டு மீ டூ. வருகைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  10. பானுக்காவின் கதை என்றாலே ஒரு ட்விஸ்ட் இருக்குமே என்று நினைத்து வாசித்தேன் அதே போல...முடிவு ஹா ஹா ஹா...

    நல்லா இருக்கு அக்கா...மீடூ ந தும் உடனே உங்களுக்கு ஒரு கதை தோன்றி அதை எழுதியும் வீட்டிங்க...சூப்பர் அக்கா! கதையும் சூப்பர்...

    ஆனா இந்த மீ டூ வந்து நான் அடிக்கடி சொல்லும் மீ டூ வை பயன்படுத்த தயக்கம் ஏற்பட வைச்சுருச்சு..ம்ம்ம்

    அக்கா எனக்கு கரு தோன்றி கதையின் வடிவம் வந்தாலும் எழுதவே வருவதில்லை இப்ப...அப்படியே வந்தாலும் ஸ்ரீராம் கவிதையில் சொல்லியிருப்பது போல் இடையில் அறுந்துவிடுகிறதி....ஏதேனும் தடங்கல் வந்து அப்புறம் உட்கார நேரக்ம் காலம் தெரியாமல் மண்டையில் ஓடுது...குறிப்பா அடுப்புல ஏதானும் கொதிக்கும் அப்பத்தான் மண்டைல ஓடும் சரி எழுதி வைச்சுரலாம் டிங்கரிங்க் அப்புறம் பார்த்துக்கலாம்னு பண்ணின அடுப்புல தீயும்...ஹா ஹா ஹா ஹா....இப்படித்தான் ஓடுது....

    இதுக்குத்தான் பெரிய ஆளூங்க எல்லாம் ரூம் போட்டு யோசிக்கறாங்க போல...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அக்கா எனக்கு இன்னொன்றும் தோன்றியது சுஜிதா மீ டூ என்று சேகரைச் சொல்லிவிட்டு அப்புறம் சும்மா சொன்னேன் இப்படியும் சில பெண்கள் தப்பர்த்தம் கற்பித்து அல்லது வேண்டுமென்றே கூடச் சொல்லலாம் இல்லையா என்று மீ டூ வை அக்கோணத்திலும் பார்க்கனும் என்று சொல்லுவாளோ என்றும் நினைத்தேன்.

      ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் பிரபலங்கள் மட்டுமே இதிலும் பிரபலம்!!!!! வேறு யாரை உண்மையாகவே சொன்னாலும் கண்டு கொள்ளாமல் போய்விடுவார்கள்....பிரபலங்களைப் பற்றி என்பதால் பேசப்படுகிறது...இப்படி இதற்கு ஆளான எத்தனையோ பெண்கள் வெளியில் சொல்ல முடியாமல்...இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகவும் சாதாரணமானவர்கள்.

      கீதா

      Delete
    2. நன்றி கீதா! பெங்களூரில் செட்டில் ஆயாச்சா?

      Delete
  11. கதை மிக நன்றாக இருக்கிறது. நிஜமாகவே சேகரை சுஜிதா ஏதாவது சொல்லப் போகிறாளோ என்று ஒருசின்ன பயம் தோன்றியது...நல்லகாலம் அப்படி இல்லை...நல்ல ட்விஸ்டுடன் ஆன முடிவு. விளையாட்டு வினையாகாமல்!

    வாழ்த்துகள். பாராட்டுகள்

    இங்கும் கேரளத்திலும் மீ டூ சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன். உடல் நலம் சரியாகி விட்டதா?

      Delete