அலைச்சல் அனுபவங்கள்
திருவண்ணாமலை |
அண்ணாமலையார் கோவில் கோபுரம் |
மலை மீது தவழும் மேகம் |
கிட்டதட்ட பத்து நாட்களாக ஒரே அலைச்சல். பங்களூர், ஷீர்டி, மும்பை, பங்களூர், திருவண்ணாமலை, சென்னை மீண்டும் பங்களூர் என்று சூறாவளி சுற்றுப் பயணம்! திருமணம், பூணூல், பிரிந்தவர் கூடுதல், தினசரி எல்லோரோடும் கதைத்து விட்டு இரவு நேரம் கழித்து உறங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து, விருந்து சாப்பாடு சாப்பிட்டு, விமானம், பேருந்து, ஆட்டோ, கார் என்று அனைத்திலும் பயணித்து, வரிசைகளில் நின்று…. ஊஃப்! உடம்பு களைத்து விட்டது. தலையிலிருந்து கால் வரை வலி. இன்னும் அசதி தீரவில்லை. இதற்கிடையில் வீட்டிற்கு விருந்தினர் வருகை. விரைந்து வந்து கொண்டிருக்கும் தீபாவளி.
சாயி சத்சரிதாவை படித்துவிட்டு ஷிர்டிக்கு முதல் முறையாக செல்பவர்கள் ஏமாந்து போவார்கள். எல்லா புனித தலங்களையும் போலவே ஷிர்டியும் வியாபார தலமாகி விட்டது. ஆன்லைனில் நாங்கள் புக் பண்ணியிருந்த ஹோட்டல் கோவிலிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால் அங்கு தங்காமல், கோவிலுக்கு அருகில் வேறு ஒரு ஹோட்டலில் தங்கினோம். அன்று வியாழக்கிழமையாக இருந்தாலும் நாங்கள் ஷிர்டியை அடைந்த பொழுது, நேரம் அதிகமாகி விட்டதால் அன்று இரவு தரிசனம் செய்ய முடியவில்லை.
ஷீர்டி பாபா கோவில் கோபுரம் |
மறு நாள் காலை முதல் தரிசனம் காணச்சென்றால் அவ்வளவாக கும்பல் இருக்காது என்றார்கள். எங்களிடம் யாரோ சொன்னது போல பல பேரிடம் பலர் சொல்லியிருப்பார்கள் போலிருகிறது. நல்ல கும்பல் இருந்தது. தரிசனம் முடித்து விட்டு வந்து, செல்ஃபோனை திரும்ப பெற்றுக்கொள்ள சென்ற பொழுது காற்று வாங்கியது. ஹூம்!
மும்பையில் நடந்த திருமணம் ஒரு ஃபுயூஷன் வெட்டிங். ஊஞ்சலுக்கு பதிலாக சேரில் மணமக்களை அமரச்செய்து, பாடச் சொன்னார்கள். பாடத்தெரிந்தவர்கள் இல்லாததால், நான், ‘கன்னூஞ்சல் ஆடி நின்றாள் காஞ்சனமாலை மனமகிழ்ந்தாள்..’ தொடங்கி, ‘மல்லிகை முல்லை பூப்பந்தல்..’வரை பாடி தீர்த்து விட்டேன். மேளம் கிடையாது. டி.ஜே.யில் மேளம், அதிலேயே கெட்டி மேளம் கூட இருக்கிறது.
மும்பையிலிருந்து வந்த அடுத்த நாளே திருவண்ணாமலையில் ஒரு பூனூல் கல்யாணதிற்காக செல்ல வேண்டியிருந்தது. திருவண்ணாமலை அதிகம் மாறவில்லை. குறிப்பாக ரமணாஸ்ரமம். ஷிர்டி சாயி பாபா, ரமண மஹரிஷி இருவருமே மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்கள்தான். ஷிர்டி ஒரு ப்ரார்த்தனை ஸ்தலமாக இருப்பதால் அங்கு லோகாயதமான விஷயங்களை வேண்டிச் செல்பவர்கள் அதிகமாக இருக்கிரார்கள். அதனால் அந்த இடமும் வணிக தலமாக இருக்கிறது. ரமணாஸ்ரமத்துக்கு வருபவர்கள் ஆழமான ஆன்மீக தேடலை உடையவர்களாக இருப்பதால் இன்னும் மாறவில்லை. இதுவும் அவர்களுடைய சங்கல்பமே.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளை தரிசனம் செய்யச் சென்ற பொழுது என் மகனுக்கு வாயு பிடிப்பா, தசைப் பிடிப்பா என்று தெரியாமல் திடீரென்று வயிற்று வலியால் துடிக்க ஆரம்பித்ததும், அங்கு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ் ரே, எடுத்து, அதில் எதுவும் ப்ரச்சனை இல்லை என்று தெரிந்து, ஊசி போட்டு, மருந்துகள் வாங்கிக் கொண்டு வந்தது ஒரு தனி கிளை கதை.
ரமணாஸ்ரமத்தில் தியானம் செய்வது ஒரு அற்புத அனுபவம். அந்த அனுபவதிற்குப் பிறகு, “இன்னும் எத்தனை நாட்கள் இப்படி தேடி நிதம் சோறு தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி, வாடி மிக உழன்று கொண்டிருக்கப் போகிறோமோ?” என்று தோன்றியது.
ரமணாஸ்ரமத்திலிருந்து மலையின் காட்சி |
வீட்டிற்கு வந்ததும் விருந்தினர்களுக்காக கல்கண்டுபாத், வடை என்று
சம்பிரமமாக சமையல், தீபாவளி பட்சண பிரிபரேஷன், புடவைக்கு மேட்சாக தைக்க கொடுத்திருந்த ப்லௌஸ் சரியாக தைக்கப்பட்டிருப்பதில் சந்தோஷம், இன்னும் மேட்சிங் ஆக உள் பாவாடை வாங்க வேண்டும்.. அடுத்த ஜென்மத்தில் ஞானம் வரலாம்.
'' அடுத்த ஜென்மத்தில் ஞானம் வரலாம் //
ReplyDeleteஹா... ஹா.. ஹா....
பாட்டுப்பாடி அசத்தியது சூப்பர். இனியப்பயணங்கள் என்று தெரிகிறது. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
நான் பாடியதை கேட்காமலேயே சூப்பர் என்று கூறி விட்டீர்கள். கெட்டிக்காரர்தான்.நன்றி.
Deleteசில சமயங்களில் இப்படி தொடர் பயணங்கள் அமைந்து விடுவதுண்டு. கஷ்டம் தான்.
ReplyDeleteஅடுத்த ஜென்மத்தில்.... ஹாஹா....
ஷீரடி - வியாபாரத் தலமாகி விட்டது தான். பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் இப்படி ஆகிக் கொண்டு வருவது கண்கூடு....
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.
Delete"இதுவும் அவர்களுடைய சங்கல்பமே"- ஒரே விஷயத்தை பதிவர்கள் ஒவ்வொருவரும் பார்க்கும் முறையே வேறு. அது அவங்க அவங்க மனோபாவத்தைப் பொறுத்தது போலும்.
ReplyDeleteஅருமையாச் சொல்லியிருக்கீங்க. பாராட்டுகிறேன்
நன்றி நெ.த. சென்னை திரும்பியாச்சா?
Deleteஅழகான படங்களுடன் - பதிவு!...
ReplyDeleteஷீரடி நாதனுக்கு தமிழகத்தின் ஊர்கள் எல்லாவற்றிலும்
கோயில் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்...
சென்ற மகாமகத்தின் போது கூட மகாமகக் குளத்தின் மேல்கரையில் மடம் அமைத்து பஜனை ஆராவாரம் குறைவில்லாமல் கோலாகலமாக இருந்தது...
சின்னஞ்சிறிய திருவலஞ்சுழி.. அங்கேயும் சாய் பாபா கோயில்...
பல ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சையிலும் ஒருகோயில் கட்டியாயிற்று..
தஞ்சை பெருவுடையார் லிங்க வடிவத்தின் மீது பாபாவை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார்கள் பக்தர்கள்...
அப்புறம் -
நல்லனவற்றைச் செய்து கொண்டே செல்வோம்...
ஞானம் வரும்போது வரட்டும்...
சமயத்தில் ஞானம் அடைந்திருந்தாலும் நாம் உணர்வதில்லை!...
//நல்லனவற்றைச் செய்து கொண்டே செல்வோம்...
Deleteஞானம் வரும்போது வரட்டும்...// ரொம்பவும் சரி. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
அனைத்தும் ஞாபகம் இருக்கிறதே... அப்படியென்றால் ஞானம் வந்து விட்டது...!
ReplyDeleteஇது நன்றாக இருக்கிறதே..! நன்றி டி.டி.
Deleteஹா அஹ ஹா ஹா பானுக்கா சூறாவளிப் பயணத்தை நீங்களும் சூறாவளி போலச் சொல்லிட்டுப் போயிட்டீங்க!!! ஹா ஹா
ReplyDeleteஷீரடி இப்போது சென்றால் மிகுந்த ஏமாற்றமே வரும். நான் பல வருடங்களுக்கு முன்பு பூனா சென்ற போது (அங்கு மைத்துனர் குடும்பம் இருப்பதால் அவ்வப்போது போகும் சூழல் வரும். இப்போதுதான் குறைந்திருக்கு..) ஷீரடி சென்றோம். அப்போ பாபா இத்தனை ஃபேமஸ் ஆகலை. ரொம்ப அருமை கூட்டமில்லை...ரொம்பவே நிதானமாக....இப்போ அப்படி இல்லைனு கேள்விப்பட்டேன்...
திருவண்ணாமலை அருமையான இடம்...அக்கா ஞானம் எல்லாம் இருக்கும் இடத்திலேயே வந்துரும்...அது வரும் போது வரட்டும்...அதுக்கும் தீபாவளி ப்ளவுஸ் சந்தோஷம், உள்பாவாடை இதற்கெல்லாம் சம்பந்தமில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து...எஞ்சாய் அக்கா...விருந்தினர், விருந்து, தீபாவளி எல்லாமே...
காலையிலேயே படிச்சுட்டேன்...கருத்தும் போட்டு அது போகாம இங்கிட்டே இருந்துருக்கு...இப்ப வந்து பார்த்தப்ப தளம் ஓபன்லியே இருந்துச்சா ஸோ கருத்து அழியலை நல்லகாலம் அப்படியே இப்ப காப்பி பண்ணிட்டு தளத்தை ரிஃப்ரெஷெ பண்ணிட்டு வெளியிடறேன்...காலைல போட்ட கருத்து நான் தான் முதல் ஆளாக்கும்!!!! ஹா ஹா ஹா
கீதா
உங்கள் பதிவுகளைப் படிக்கும் போதே ஸ்பீடா பயணிப்பது போலத் தோன்றும்...நீங்க ஸ்பீடா சொல்லிச் செல்வது போல....சூப்பர்!!!
ReplyDeleteகீதா
இது ப்ள்ஸ்ஸா, மைனஸ்ஸா என்று தெரியவில்லை. எனிவே, நன்றி.
Deleteபயணத்தில் அதிகமான இடங்களைக் காண முடிந்தது. ரமண ஆச்ரமம் மனதிற்கு அதிகமாக நிறைவைத் தந்ததை என் பயண அனுபவத்தில் கண்டுள்ளேன்.
ReplyDeleteரமணாஸ்ரமம் ஒரு அலாதி இடம்தான். வருகைக்கு நன்றி ஐயா.
Deleteஇவ்வளவு பயணம் போய், எத்தனையோ சொல்ல இருக்க, இவ்வளவு சுருக்கமாக முடித்துவிட்டீர்களே.. தீபாவளி பக்ஷணம் பண்ணனுமேங்கிற டென்ஷனா?
ReplyDeleteசீரடி, ஷீரடி, காலடி என்றெல்லாம் ஒவ்வொருவரும் இஷ்டத்துக்கும் பக்திமிகுதியால் எழுதுவதைப் பார்த்து அலுத்துப்போனபின், ஷிர்டி என்று சரியாக நீங்கள் எழுதியதைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. இதற்காகவே உங்களுக்கு ஒரு வாழ்த்துமடல் அனுப்பலாம்.
//..அடுத்த ஜென்மத்தில் ஞானம் வரலாம்.//
இப்படி சுஜாதா ஸ்டைலில் அலுத்துக்கொண்டிருக்கிறீர்களே கடைசியில்!
நான் சென்ற இடங்களுக்கு பலரும் சென்றிருப்பார்கள் என்பதால்தான் விரிவாக எழுதவில்லை. அது சரி வாழ்த்து மடல் இன்னும் வரவில்லையே..? வருகைக்கு நன்றி.
Deleteசென்னையில் ஒஉ ஷிர்டி ஆலயம் சென்றிருந்தேன் very quiet place அங்கு ஞானமோ பக்தியோ வரலாம் பயணங்கள் இனிமை தீபாவளி பெங்களூரில் ஏழாம் தேதியாமே
ReplyDeleteநாங்கள் ஆறாம் தேதிதான் கொண்டாடினோம். வருகைக்கு நன்றி.
Deleteஞானம் வந்துவிட்டால் இப்படியெல்லாம் blog எழுதமுடியுமா? ஆலோசித்து முடிவெடுங்கள். அவசரப்பட்டு ஞானம் பெற்றுவிடாதீர்கள். தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇராய செல்லப்பா சென்னை
ஹா ஹா ஹா! வருகைக்கு நன்றி சார்.
Deleteஞானம் விரைவில் கை கூட+ தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஇரண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி!
Delete