கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, February 11, 2018

பத்மாவதியும், மோகனாவும்

பத்மாவதியும், மோகனாவும் 



பத்மாவதி சாரி, பத்மாவத் படம் பார்த்து விட்டேன். சென்னையில் பார்த்தேன், ஆனால் அங்கு wifi இல்லாததால், இணையத்தில் இணைவது கஷ்டமாக இருந்தது.

இந்த படத்தை ஏன் எதிர்த்தார்கள் என்று தோன்றியது. ஆச்சேபிக்கும் விதமாக எதுவும் இல்லை. இருந்ததை நீக்கி விட்டார்கள் என்கிறார்கள் சிலர்.

அலாவுதீன் கில்ஜியாக வரும் ரன்பீர்சிங் மிரட்டியிருக்கிறார். என்ன உடல் மொழி! என்ன நடிப்பு! ராணா ரத்தன் சிங்காக வரும் ஷாகித் கபூரிடம் கம்பீரம் கொஞ்சம் குறைகிறது. சாக்கிலேட் பையனை ராஜா வேஷத்திற்கு தேர்ந்தெடுத்த இயக்குனரின் தைரியத்தை பாராட்ட  வேண்டும். பிரமாதமாக நடிக்காத தீபிகா படுகோன் அப்படி நடித்திருப்பதாக தோன்றச் செய்வதும் இயக்குனரின் திறமைதான். அலாவுதீன் கில்ஜியின் மனைவியாக வரும் அதிதி ராவ் (காற்று வெளியிடை கதா நாயகி) கவனிக்க வைக்கிறார்.

பாடல் காட்சிகளும், போர் காட்சிகளும் சிறப்பு. குறிப்பாக குடை போன்ற பாவாடை அணிந்து கொண்டு தீபிகா குழுவினர் ஆடும் நடனம், அற்புதம்! மொத்தத்தில் ரசிக்கக் கூடிய  பிரு...மா.....ண் ...ட...ம்...!

அந்தக் கால பிரும்மாண்ட தயாரிப்பான தில்லானா மோகனாம்பாள் படம் பற்றிய செய்திகள். ராஜ் டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை வெள்ளித் திரை நிகழ்ச்சியில் சித்ரா லக்ஷ்மணன் கூற கேட்டது. இப்போது போல அப்போதெல்லாம் மேக்கிங் ஆப் தி பிலிம் என்று எடுப்பது பழக்கம் இல்லாவிட்டாலும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் அதை டாகுமெண்ட்ரியாக எடுத்திருக்கிறாராம்.


தில்லானா மோகனாம்பாள் படம் எடுப்பது என்று முடிவு செய்த பிறகு எம்.பி.எம். சேதுராமன், எம்.பி.எம்.பொன்னுசாமி இருவரையும் கச்சேரி செய்ய   சொல்லி ஏ.பி.நாகராஜன், சிவாஜி கணேசன், கே.வி.மஹாதேவன் ஆகிய மூவரும் உட்கார்ந்து கேட்டார்களாம்.

அந்த கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு, சவடால் வைத்தி கதாபாத்திரத்தை தன்னை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதினாராம். அந்தக் கதை படமாக்கப்படும் பொழுது தான்தான் அந்த பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினாராம். எஸ்.எஸ். வாசன் இயக்கி இருந்தால் நிச்சயமாக கொத்தமங்கலம் சுப்பு அவர்களைத்தான் வைத்தி பாத்திரத்தில் போட்டிருப்பார், ஆனால் ஏ.பி.நாகராஜன் இயக்கியதால் நாகேஷுக்கு அந்த வாய்ப்பை அளித்து விட்டாராம். இதனால் கொத்தமங்கலம் சுப்பு கடைசி வரை அந்தப் படத்தை பார்க்கவே இல்லையாம்.

அந்த வருடத்திற்கான தமிழக  அரசின் திரைப் பட விருதுகள் வழங்கப்பட்ட பொழுது சிறந்த நடிகைக்கான விருது தி.மோ.வில் கதாநாயகியாக நடித்த பத்மினிக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது மனோரமாவிற்கும், துணை நடிகருக்கான விருது பாலைய்யாவுக்கும் வழங்கப் பட்டதாம். ஆனால் சிறந்த நடிகருக்கான விருது அந்த வருடம் வெளியான குடியிருந்த கோவில் படத்தில் நடித்த எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டதாம். அவர்களை சொல்லி குற்றமில்லை சிவாஜி கணேசன் அந்தப் படத்தில் எங்கே நடித்தார்? சிக்கல் ஷண்முக சுந்தரமாகவே வாழ்ந்திருந்தார். அதனால்தான் சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப் பட்டிருக்காது.

ஆனால் எம்.ஜி.ஆர். தான் ஒரு சிறந்த கலைஞன், ரசிகன் என்று வேறு விதமாக நிரூபித்திருக்கிறார். அவர் முதலமைச்சராக இருந்த பொழுது, தமிழ் நாட்டிற்கு வருகை புரிந்த  ரஷ்ய நாட்டு கலாச்சார குழு ஒன்றிர்க்கு நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் இவைகளை விளக்கும் திரைப் படம் ஒன்றை திரையிட்டு காட்ட வேண்டும் என்று அரசு தரப்பில் தீர்மானம் போடப்பட, அப்போதிருந்த அரசு அதிகாரி ஒருவர் எம்.ஜி. ஆர் படங்களை குறிப்பிட்டாராம். எம்.ஜி.ஆரோ சிரித்துக் கொண்டே அவைகளை புறம் தள்ளி விட்டு, "நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் இவைகளை விளக்கும் படம் என்றால் தில்லானா மோகனாம்பாள்தான் சிறந்த தேர்வு. அதை திரையிட்டுக் காட்டுங்கள்" என்றாராம். பெரிய மனிதர்! 



16 comments:

  1. உங்கள் தகவல்கள் "தில்லானா மோகனாம்பாள்" குறித்தவை ஆச்சரியமூட்டும் விதத்தில் இருக்கு. பத்மாவத் படத்தில் குறிப்பிட்ட கனவுக்காட்சியை நீக்கி விட்டார்கள். :) மற்றபடி படம் நன்றாக இருப்பதாகவே பொதுவான கருத்து நிலவுகிறது. இப்போது ராணி லக்ஷ்மிபாய் குறித்துப் படம் எடுக்கிறார்கள். அது என்ன மாற்றங்கள் அல்லது போராட்டங்களைக் கொண்டு வருமோ! ராணி லக்ஷ்மிபாய் ஓர் பிராமணப் பெண் என்பதால் வடநாட்டு பிராமணர் எதிர்ப்பதாகக் கேள்வி! பார்ப்போம்! :))))

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் தகவல்கள் "தில்லானா மோகனாம்பாள்" குறித்தவை ஆச்சரியமூட்டும் விதத்தில் இருக்கு.// எல்லா புகழும் சித்ரா லக்ஷ்மணனுக்கே! ராஜ் டி.வி.யில் வெள்ளித்திரை என்னும் நிகழ்ச்சியில் அவர் கூறிய தகவல்கள்தான் இவை.

      Delete
  2. பத்மாவத் படம் மிக நீண்ட படம் என்றார்கள். பார்க்கும் பொறுமை இல்லை! ஆனால் என் இரு மகன்களும் பார்த்து விட்டார்கள் என்பது ஆச்சர்யம்! தீபிகா காரணமாக இருக்கலாம்!!!

    ReplyDelete
    Replies
    1. சற்று பெரிய படம்தான். ஆனால் படத்தை நகர்த்தியுள்ள விதத்தில் நமக்கு நீளமாக தோன்றவில்லை. பாருங்கள்.

      Delete
  3. தில்லானா மோகனாம்பாள் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். எம் ஜி ஆருக்கு பாரத் பட்டம் வழங்கப்பட்டபோது நடந்த சில பாராட்டு விழாக்களில் எம் ஜி ஆர் சிவாஜியின் மிகை நடிப்புப் பற்றிக் குறிப்பிட்டு 'இனி அது வெளிக்காகாது என்று (மறைமுகமாகத்தான்) பேசி இருப்பார். சிவாஜியே பாராட்டு விழா எடுத்த உடன் பேச்சு பாணி சற்றே மாறியிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ராஜ் டி.வி. யில் வெள்ளித்திரை நிகழ்ச்சியில் சித்ரா லக்ஷ்மணன் சிவாஜியின் பல படங்களை எம்.ஜி.ஆர். பார்த்திருக்கிறார் என்றும், சிவாஜியின் நடிப்பை புகழ்ந்திருக்கிறார் என்றும் கூறினார்.

      Delete
  4. தில்லானா மோகனாம்பாள் படத்தில் இடம் பெறாத காட்சிகள் என்று ஒரு திரைத்துளி முன்பு முக நூலில் வளம் வந்துகொண்டிருந்தது. பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  5. என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் பதிவினைக் கண்டேன். பத்மாவத் பார்த்தேன். இவர்களுடைய அரசியலை ஒதுக்கிவிடுவோம். படம் அருமை. தில்லானாமோகனாம்பாள் எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத் தூண்டும் திரைப்படம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பத்மாவதி நல்ல படம்தான். நிறைய பணம் மட்டுமல்ல, உழைப்பையும் கொட்டி எடுக்கப்பட்டுள்ள படம்.

      Delete
  6. பத்மாவத் படம் வெளிவந்தவுடன் பார்த்துவிடுகிறேன். தில்லானா மோகனாம்பாள் எப்போதும் பார்க்கமுடிகிற படம். (அது, கர்ணன், திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்கள் ஆல் டைம் ஃபேவரைட்.. அடடா எல்லாமே சிவாஜி நடித்ததாயிற்றே)

    ReplyDelete
    Replies
    1. // பத்மாவத் படம் வெளிவந்தவுடன் பார்த்துவிடுகிறேன்.//
      ??? எங்கே சொல்கிறீர்கள்? அங்கு இன்னும் வெளியாகவில்லையா?

      Delete
  7. ஓ!பத்மாவத் படம் பார்த்தாச்சா அக்கா...என் தோழியும் பார்த்துவிட்டு நன்றாக இருக்கு இதுக்குப் போய் ஏன் இத்தனைப் பிரச்சனை என்றாள்...

    தி மோ....பற்றி படம் மேக்கிங்க் பற்றி ஒரு டாக்குமென்ட்ரி எடுக்கப்பட்டதை அறிவேன்...சில காட்சிகள் கூட பார்த்த நினைவு....மற்றவை புதிய தகவல்கள் குறிப்பாகக் கொத்தமங்கலம் சுப்பு நடிக்க நினைத்தது தெரியும் ஆனால் படமே பார்க்கலைனு சொன்னது தகவல். ரொம்பப் பிடித்த படம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமலேயே, சின்னத்தனமான அரசியல் பண்ண எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
      தி.மோ. யாருக்குத்தான் பிடிக்காது?

      Delete
    2. உண்மை தான். ராஜஸ்தான் இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு வழக்கம்போல் காங்கிரஸ் ஒரு தரப்பு மக்களைத் தூண்டிவிட்டு ஆடிய நாடகம். ராஜஸ்தான் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானவுடனேயே கர்ணி சேனா அமைப்பினர் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியம் நிறைவேறி விட்டதால் போராட்டம் தொடராது என்று வெளிப்படையாக அறிவிப்பும் செய்தனர்! :)))))) எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்னும் நினைப்பில் காங்கிரஸ் இருப்பதால் மீண்டும் ஆட்சிக்கு வர எதை வேண்டுமானாலும் செய்வார்கள். :)))))

      Delete
  8. ஆஹா இதுதான் பானுமதி அக்காவின் புளொக்கோ.. இன்றுதான் கண்டு பிடிச்சேன்.

    நானும் அறிஞ்சேன் கோபப்படும்படி படத்தில் ஒன்றும் இல்லையாமே பிறகெதுக்கு கேர்ஃபியூ எல்லாம் போட்டாங்க கர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. வரணும், வரணும், அதிரா மீண்டும் மீண்டும் வரணும்.

      Delete