கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 3, 2017

குழு மனப்பான்மை.

குழு மனப்பான்மை. 

ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவர் சொன்னது. அவருடைய நிறுவன மேலாளரை சந்தித்த ஒரு பிரபல நடிகர் அவர்களுடைய அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதற்கென்ன தாராளமாக வாருங்கள் என்று வரவேற்பளித்த மேலாளர்,அதற்கென ஒரு நாளையும் குறிப்பிட்டு, அவரது அலுவலக பிரத்யேக வெப்சைட்டில் இந்த தேதியில் இந்த நடிகர் நம் அலுவலகத்திற்கு வருகை தர உள்ளார். அவர் வரும்பொழுது அவரிடம் ஆட்டோகிராப் வாங்கவோ, அவரோடு செல்பி  கொள்ளவோ யாரும் முயலக்கூடாது என்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். ஆனாலும், அந்த நடிகர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த பொழுது அவரை சூழுந்து கொண்டு,புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், கை குலுக்கவும், பேசவும் கணிப்பொறி என்ஜினீர்கள் முயன்றதால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவை பழக்கம் இருப்பதாலோ என்னவோ நடிகர் திறமையாக சமாளித்தாராம்  சி.ஈ.ஓ தான் பாவம்  ஒரு மூலைக்குத் தள்ளப் பட்டதில் நொந்து போய் விட்டாராம். மறு நாள் இப்படிப்பட்ட ஒரு அலுவலகத்திலா நான் சி.ஈ.ஓ.வாக இருக்கிறேன் என்பதை நினைத்தால் மிகவும் வெட்கமாக இருக்கிறது என்று அலுவலக வெப் சைடில் புலம்பி இருந்தாரம்.

அவரை வெட்கமும் வருத்தமும் பட வைத்த குழு மனப்பான்மைக்கு பாமரர், படித்தவர் என்ற பேதம் கிடையாது போலிருக்கிறது.

Wednesday, November 1, 2017

Budhan pudhir - substitute

புதன் புதிர் பார்க்காவிட்டால் கை நடுங்குபவர்களுக்காக... substitute


1. தொந்தி பருத்தவன் தினமும் கொஞ்சம் இளைப்பான், அவன் யார்?

2. 
a).சந்திரசேகர் 
b).ரெங்கராஜன் 
c).செந்தில் 
d).ராமசாமி தேவர் 
e).தாமரை 

இவர்கள் எல்லாம் தமிழ் சினிமா பாடலாசிரியர்கள். நாம் இவர்களை எப்படி(எந்த பெயரில்)அறிவோம்? கூகுளார் உதவியை நாடும் போங்காட்டம் எல்லாம் ஆடக்கூடாது.


If 24 H in a D refers 24 hours in a day 
What the folowing refer?

90 D in RA
26 L of the A
7 W of the W
12 S of the Z
52 C in a P
11 P in a C T
5 F in a H
206 B in a B
29 D in F in LY

Enjoy. Answers will be revealed by tomorrow morning.



OCT.31

OCT.31 



இரும்பு பெண்ணாக விளங்கிய இந்திரா காந்தியை அவருடைய காவலர்களில் ஒருவனே சுட்டுக் கொன்ற நாள் Oct.31. அந்த நிகழ்ச்சி நடந்த அன்று நாங்கள் பம்பாயில்(அப்போது மும்பை ஆகவில்லை) இருந்தோம். எங்கள் தலை தீபாவளி முடிந்து, என் கணவர் மஸ்கட் திரும்பும் முன் பம்பாயில் இருந்த என் பெரிய நாத்தனாரின் இரண்டாவது மகனின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்புவதாக திட்டம். 

அக்டோபர் 31 அன்று பாந்திராவில் வசித்துக் கொண்டிருந்த எங்கள் நாத்தனாரோடு நானும் என் கணவரும் செம்பூரில் அவர்களுக்குத்  தெரிந்த ஒரு பொற்கொல்லர் கடைக்கு சில நகைகள் ஆர்டர் கொடுப்பதற்காகச் சென்றோம். அவர் நம் ஊர் பொற் கொல்லர்களைப் போல இல்லாமல் பாண்ட், ஷர்ட் அணிந்து கொண்டு, ஷர்டை டக் இன் செய்து கொண்டு மிடுக்காக இருந்தார். ஒரு ஜோடி வைர தோடுகளை எடுத்துக் காட்டி, அவை நடிகை சாந்தி கிருஷ்ணாவிற்காக செய்யப் பட்டவை என்று மலையாளத்தில் நனைந்த தமிழில் கூறினார்.  

நாங்கள் செம்பூர் மார்க்கெட்டில் இருந்த பொழுதுதான் இந்திரா காந்தி சுடப்பட்ட செய்தி கிடைத்தது. ஷாப்பிங்கை அவசரமாக முடித்துக் கொண்டு, வீடு திரும்பினோம். ஆனால், மார்க்கெட்டிலோ, வரும் வழியிலோ எங்கும் எந்த அசம்பாவிதமும் இல்லை. கடைகள் கூட அவசர அவசரமாக மூடப்படவில்லை. ஆனால் அலுவலகங்களுக்குச் சென்றிருந்தவர்கள் மதியமே வீடு திரும்பி விட்டார்கள். இரண்டு நாட்கள் தொலைக்காட்சி பெட்டியே கதி என்று இருந்தோம். 

'மா குரு தன ஜன யவ்வன கர்வம் 
ஹரதி நிமேஷா கால சர்வம்' 

(உன்னுடைய உடைமைகள், நண்பர்கள் குறித்தோ, இளமை குறித்தோ கர்வம் கொள்ளாதே, இவை அனைத்தும் காலன் நினைத்தால் ஒரு நொடியில் நிர்மூலமாகிவிடும் ..)

என்னும் பஜ கோவிந்த வரிகளை நான் முழுமையாக உணர்ந்த தருணம் அது.  

Monday, October 30, 2017



4 கேள்விகள் உங்களுக்கு...
ரொம்ப யோசிக்காம உடனே பதில் சொல்லுங்க..
☺😊...நீங்க 😀😀மட்டுமே😁😁 அறிவாளி
...
...
...
கேள்வி :1
நீங்கள் ஒரு பைக் ரேசில் இருக்கீங்க..
ரொம்ப கஷ்டப்பட்டு 2nd positional இருக்கிறவரை முந்துறீங்க...
இப்போ உங்க position என்ன?
...
...
...
....
Position 1ன்னு சொன்னீங்கன்னா..
நீங்க தப்புங்க..
2வது ஆள முந்தினா நாம 2 வது position க்குத்தான் வருவோம்...
...
....
...
ஓகே..
தெளிவாய்ட்டீங்களா.
...
...
...
இப்போ அதே ரேசுல நீங்க கடைசியா வருகிறவரை முந்துறீங்கன்னு வச்சுக்கலாம் ..
இப்போ உங்க position என்ன..
டக்குன்னு சொல்லுங்க..
...
...
...
...
....
கடைசில இருந்து 2வது இடம்னு சொன்னா...
நீங்க சரியா யோசிக்கலைன்னு அர்த்தம்..
கடைசியா வருபவரை எப்புடீங்க ஓவர்டேக் பண்ணுவீங்க..
....
...
...
...
....
இப்போ 3வது கேள்வி...
...
...
...
ஒரு கணக்கு.. கால்குலேட்டர் உபயோகிக்காம வாசிச்ச உடனே ans. சொல்லணும்...
...
...
...
ஒரு 1000 எடுங்க அதோட 40 கூட்டுங்க
மீண்டும் ஒரு 1000 அதோட 30 கூட்டுங்க
இன்னொரு 1000 அதோட 20 கூட்டுங்க
மற்றுமொரு 1000 அதோட 10 கூட்டுங்க..
...
...
...
...
விடை?
5000 அப்படீன்னு சொன்னவங்க கால்குலேட்டரை யூஸ் பண்ணுங்க..
...
...
...
...
...
...
விடை 4100 சரிபார்த்துகீங்க..
...
...
....
.....
......
4 வது கேள்வி..
மேரியோட அப்பாவுக்கு 5 பெண்குழந்தைகள்..
முதல்பெண் Tanu
இரண்டாவது Tenu
மூன்றாவது Tinu
நான்காவது Tonu
அப்போது 5வது குழந்தை பெயர் என்ன?
...
...
...
....
....
....
Tunu அப்படீன்னு சொன்னவங்க கேள்விய திரும்ப வாசிங்க...
...
...
...
...
போனஸ் கேள்வி..
வாய் பேச முடியாதவருக்கு
டூத் பிரஷ் தேவைப்பபட்டது..
கடைக்கு போய்...
" ஈ " என காண்பித்து அது மேல விரலை வைத்து தேய்த்தார்..
கடைக்கார் புரிந்துகொண்டு பிரஷ் எடுத்துக் கொடுத்தார்..
...
...
இப்போ..
கண் தெரியாதவருக்கு ஒரு கூலிங்கிளாஸ் வேணும்..
என்ன செய்யலாம்..
...
...
...
....
கண்ண சிமிட்டுனவங்க
கண்ண தேய்ச்சவங்கல்லாம் அவுட்டு..
...
...
...
...
கண் தெரியாதவர் கூலிங்கிளாஸ் வேணும்ணு வாயாலே கேட்கலாம்...
...
....
...
அம்புட்டு கேள்விக்கும் கரீக்டா பதில் சொன்னவங்களுக்கு வாழ்த்துகள்...💐
....
மத்தவங்க ரொம்ப டென்சனாகீறீங்க...💤💤😭😰
நிதானமா இருங்க..
🙂🙂 பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...😜😜
பகிர்வு