கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 30, 2018

ஒரு பூ, செண்டாகிறது!


ஒரு பூ, செண்டாகிறது! 

கொஞ்சம் கொஞ்சமாக பூத்து, ஒரு செண்டு போல் மலரும் விருட்சிப்பூ ஒரு அதிசயம்தான். 








                       


                                                       
         
கொஞ்சம் கொஞ்சமாக பூத்து, ஒரு செண்டு போல் மலரும் விருட்சிப்பூ ஒரு அதிசயம்தான்
                                         

                                         













Sunday, June 24, 2018

காணாமல் போன தோடு


காணாமல் போன தோடு




நேற்று காலை குளிக்கும் பொழுதுதான் தெரிந்தது, இடது காதில் தோடு இல்லையென்பது. திருகு மட்டும் காதில் ஒட்டிக் கொண்டிருந்தது. எங்கே விழுந்ததோ தெரியவில்லையே..? பாத் ரூம் முழுவதும் பார்த்து விட்டேன், ம்ஹூம், கண்ணில் படவேயில்லை.

வெளியில் வந்து உடையணிந்து கொண்டு வீடு முழுவதும் தேடிப் பார்த்தேன். எங்குமே கண்ணில் படவில்லை.

கடவுளே! அரைக்காசு அம்மா!(ஏற்கனவே அரைக்காசு அம்மனுக்கு ஓவர் டியூ), மதர்! என்றெல்லாம் புலம்பிக் கொண்டே நோட்டம் விட்டேன். கண்ணில் பட்டால்தானே?

சென்ற வாரம் தலைக்கு குளித்த சமயம், தோடு, மூக்குத்தியை அலம்பி விட்டு மீண்டும் அணிந்து கொண்ட பொழுது திருகு மாறிவிட்டது போலும். இடது காது தோடு மிகவும் லூசாக இருந்தது. கழட்டி மாற்றி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் ஏனோ ஒத்திப் போட்டுக் கொண்டே இருந்தேன். முன்பே மாற்றிக் கொண்டிருக்கலாம் என்று எப்போதும் போல் பட்ட பின்பு வரும் ஞானம் இப்போதும் வந்தது.
குட்டித் தூக்கம் போட்டுக்கொண்டிருந்த கணவரை எழுப்பி, “என் காது தோட்டை காணவில்லை,உங்கள் கண்ணில் படுகிறதா பாருங்கள், என்றேன்.

“அது வைரமா?”

“இல்லை ஜெர்கான்”

“எங்கே போட்ட?”

மிக்ஸி ரிப்பேர் என்று சர்வீஸ் செய்ய எடுத்துக்கொண்டு போனால், “மிக்ஸியை உடைத்திருக்கிறீர்கள் மேடம்” என்று நாம் ஏதோ வேண்டுமென்றே கீழே போட்டு உடைத்தது போல பேசும் சர்வீஸ் சென்டர் ஆளைப் போல கேட்டார்.

"ம்ம் எனக்கு போரடித்தது, அதனால் என்னுடைய தோட்டை எங்கேயோ எறிந்து விட்டு தேடுகிறேன்.."

"தொலைப்பதையும் தொலைத்து விட்டு, இந்த மாதிரி பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை."

பதில் பேசி சண்டை வளர்ப்பதை விட, எனக்கு தோடு முக்கியம் என்பதால் வாயை மூடிக் கொண்டேன்.

“எங்க போய் விடும்? இங்கதான் இருக்கும், வேலைக்காரி வந்து பெருக்கும் பொழுது கிடைத்து விடும். சாதாரணமாக திருகுதான் கீழே விழும், உனக்கு என்னமோ தோடு கீழே விழுந்திருக்கிறது”

அதுதான் எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது தோடு விழுந்தும் எப்படி திருகாணி விழாமல் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறது என்று. ஒரு வேளை முன்பு கட்டிக் கொண்டிருந்த புடவையில் ஓட்டிக் கொண்டிருக்குமோ? க்ளோசசெட்டில் விழுந்து நான் ஃப்லஷ் செய்திருந்தால்…? ஒன்றும் செய்ய முடியாது.

படுக்கையில் விழுந்திருந்து நான் கவனிக்காமல் விட்டிருப்பபேனோ? யோசித்துக் கொண்டே படுக்கையை பார்க்கிறேன்… அதில் தலயணைக்கருகில் கவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறது காணாமல் போன என் தோடு.

அப்படியென்றால் காலையில் எழுந்திருந்த பொழுதே என் காதில் தோடு இருந்திருக்காது, ஆனாலும், காலையிலிருந்து என் கனவரோ, மருமகளோ என் ஒரு காதில் தோடு இல்லை என்பதை கவனிக்கவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.