பியூஷன் உலகம்
முதலில் பெண் வீட்டு வழக்கப்படி சடங்குகள் நடத்தப்பட்டன, பிறகு பிள்ளை வீட்டு வழக்கப்படி தொடர்ந்தன. இப்போதெல்லாம் இம்மாதிரி திருமணங்கள் அதிகமாகி விட்டன. காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் சர்ச்சில் கிருத்தவ முறைப்படியும் கூட சில கல்யாணங்கள் நடக்கின்றன. இத்தகைய திருமணங்களை பியூஷன் வெட்டிங் என்கிறார்கள்.
இந்த பியூஷன் விஷயங்கள் திருமணத்தில் மட்டுமல்ல, வாழ்வின் பல்வேறு விஷயங்களில் பழக்கத்தில் வந்து விட்டது. கர்நாடக இசையையும், ஹிந்துஸ்தானி இசையையும் இணைத்து பாடும் ஜுகல்பந்தி என்னும் கச்சேரி ஒரு வகையில் பியூஷன் இசைதான். இதை இசை விமர்சகர் சுப்புடு," ஜாங்கிரியை மோர் குழம்பில் ஊறப்போட்டது போல" என்பார்.
இப்போது ஜுகல்பந்தியை விரும்பி கேட்காதவர்கள் கூட, கர்நாடக சங்கீதத்தை மேற்கத்திய இசையோடு இணைத்து பாடும் பியூஷன் ம்யூசிக்கை மிகவும் ரசிக்கிறார்கள். உதாரணம் ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியிருக்கும் 'ரெங்கபுரவிஹாரா..' பாடல். கேட்டுத்தான் பாருங்களேன்.
முன்பெல்லாம் பெண்களுக்கு புடவைக்கு மாட்சிங்காக பிளவுஸ் வாங்க படும் பாட்டை வைத்து நிறைய நகைச்சுவை துணுக்குகளும், ஏன் கதைகளும் கூட வந்திருக்கின்றன. இப்போது யாரும் அப்படி மேட்சிங் ஆக பிளவுஸ் அணிவதில்லை. பச்சை புடவைக்கு ப்ரவுன் நிறத்திலும், பிரவுன் புடவைக்கு மஞ்சள் நிறத்திலும், மஞ்சள் புடவைக்கு கருப்பு நிறத்திலும் கான்ட்ராஸ்டாகவோ, அல்லது கலம்காரி பிலௌசுகளோ அணிவதுதான் பேஷன். ஏன் சூடிதார் கூட மிக்ஸ் அண்ட் மேட்ச் என்று ஒரே நிற பாட்டமிற்கு வேறு வேறு நிற குர்தாக்களை அணிகிறார்கள். இவையெல்லாம் பியூஷன்தானே?
திருமண விருந்துகளில் காலை முகூர்த்தத்தின் பொழுது சம்பிரதாய சாப்பாட்டை போட்டு விட்டாலும், வரவேற்பின் பொழுது சூப், மன்ச்சூரியன்,சப்பாத்தி,புலாவ், பன்னீர் மட்டர் மசாலா என்று வட இந்திய உணவு, சாம்பார் சாதம், உருளை கிழங்கு கறி, ரசம், தயிர் சாதம், ஊறுகாய் என்று எல்லாவற்றையும் கலந்து பியூஷன் விருந்து பரிமாறுகிறார்கள்.
பெரும்பாலான நவீன யுவதிகள் ஜீன்ஸ், மூக்குத்தி, மெட்டி என்று அலங்கரித்துக் கொள்கிறார்கள், அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.