கணம்தோறும் பிறக்கிறேன்
Saturday, October 19, 2019
Wednesday, October 16, 2019
Tuesday, October 15, 2019
மாமனிதர் போற்றுதும்! மாமனிதர் போற்றுதும்
மாமனிதர் போற்றுதும்! மாமனிதர் போற்றுதும்
அப்துல் கலாமின் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட இந்த நினைவிடத்தை DRDO மிகச்சிறப்பாக பராமரிக்கிறார்கள்.
உள்ளே நுழைந்ததும் மைய ஹாலில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகம் போன்ற அமைப்பில் அவர் ஒரு மேஜைக்குப் பின்னால் அவர் அமர்ந்திருப்பது போன்ற மெழுகு பொம்மை வெகு தத்ரூபமாக இருக்கிறது. இதைத்தவிர உலகத்தலைவர்களோடு அவர் அவர் இருப்பது போன்ற மெழுகு பொம்மைகளும் உள்ளன. அவர் பயன் படுத்திய பேனா, வீணை, மடிக்கணினி, அவருடைய காலணி, எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கடைசியாக அவர் கொண்டு சென்ற ஒரு சிறிய பிரீஃப் கேசில் வைத்திருந்த அவருடைய உடைகள் இரண்டே இரண்டு,மற்றும் ஒரு ஹவாய் செப்பல் இவற்றை பார்க்கும் பொழுது எத்தனை பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்! என்றுதான் தோன்றுகிறது. கட்டிடத்திற்கு வெளியே அக்னி ஏவுகணையின் மாதிரி ஒன்றும் இருக்கிறது.நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்தான்.
Subscribe to:
Comments (Atom)

