மாமனிதர் போற்றுதும்! மாமனிதர் போற்றுதும்
அப்துல் கலாமின் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்ட இந்த நினைவிடத்தை DRDO மிகச்சிறப்பாக பராமரிக்கிறார்கள்.

உள்ளே நுழைந்ததும் மைய ஹாலில் அமைக்கப்பட்டிருக்கும் அலுவலகம் போன்ற அமைப்பில் அவர் ஒரு மேஜைக்குப் பின்னால் அவர் அமர்ந்திருப்பது போன்ற மெழுகு பொம்மை வெகு தத்ரூபமாக இருக்கிறது. இதைத்தவிர உலகத்தலைவர்களோடு அவர் அவர் இருப்பது போன்ற மெழுகு பொம்மைகளும் உள்ளன. அவர் பயன் படுத்திய பேனா, வீணை, மடிக்கணினி, அவருடைய காலணி, எல்லாவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். கடைசியாக அவர் கொண்டு சென்ற ஒரு சிறிய பிரீஃப் கேசில் வைத்திருந்த அவருடைய உடைகள் இரண்டே இரண்டு,மற்றும் ஒரு ஹவாய் செப்பல் இவற்றை பார்க்கும் பொழுது எத்தனை பெரிய மனிதர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்திருக்கிறார்! என்றுதான் தோன்றுகிறது. கட்டிடத்திற்கு வெளியே அக்னி ஏவுகணையின் மாதிரி ஒன்றும் இருக்கிறது.
நிறைய சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ராமேஸ்வரத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்தான்.
மாமனிதர். அவர் எளிமையாக வாழ்ந்ததாலேயே அவர் பெருமையை பலர் உணரவில்லைபோல... என்ன ஒரு எளிமையான மனிதர்... என்ன ஒரு நேர்மையான மனிதர்....
ReplyDeleteகற்றாரை கற்றாரே காமுறுவர் என்பது போல் அவருக்கு கிடைக்க வேண்டிய பெருமையும், புகழும் கிடைக்காமல் போகவில்லை. உலகமெங்கிலும் இருக்கும் பல விஞ்ஞான கழகங்கள் அவருக்கு விருதுகள் அளித்து கௌரவப்படுத்தியிருக்கின்றன. நம் நாட்டின் மிகப் பெரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம விபூஷண் உள்பட கிட்டத்தட்ட 17க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறார். உலகின் தலை சிறந்த 40 பல்கலை கழகங்களள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கின்றன.
Deleteஇன்று அலுவலகத்தில் இரண்டுபேர் எனக்கு அவர் பிறந்த நாளுக்காக ஸ்வீட் கொடுத்தார்கள்.
ReplyDeleteஇது ஒன்று போதாதா அவருக்கு கிடைத்த பெருமையை பறைசாற்ற? வேறு எந்த ஜனாதிபதியின் பிறந்தநாளையாவது பொது மக்கள் கொண்டாடியிருக்கிறார்களா?
Deleteராமேஸ்வரம் சென்றால் பார்த்து வணங்க வேண்டிய மாமனிதர் . அவர் வாழ்ந்த ஊரில் நினைவிட படங்கள் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசில மாதங்களுக்கு முன் ராமேஸ்வரம் போன போது போனீர்களா? அப்போது எடுத்த படமா?
எளிமையான தலைவர்களை இனி பார்க்க முடியுமா ?
/சில மாதங்களுக்கு முன் ராமேஸ்வரம் போன போது போனீர்களா? அப்போது எடுத்த படமா? //
Deleteஆமாம், என் கணவரோடு கடைசியாக சென்ற இடம்..ராமர் பாதம், அப்துல் கலாம் நினைவிடம் இவைகளைப்பற்றி அப்பொழுதே எழுத நினைத்தேன். எதிர்பாராத என்னென்னவோ விஷயங்கள் நடந்து விட்டன. இன்று கலாம் அவர்களின் பிறந்த நாள் என்பதால் பகிர்ந்து கொண்டேன்.
மாமனிதர் போற்றுதும்...
ReplyDeleteமாமனிதர் போற்றுதும்...
அந்த எளிய மனிதரையும் வசை பாடி மகிழ்ந்தனர்...
//அந்த எளிய மனிதரையும் வசை பாடி மகிழ்ந்தனர்//யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள்? வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
Deleteஆமாம் பானுக்கா மிக மிக எளிமையானவர். நேர்மையான மனிதரும் கூட. அவருக்கு ஒரு நினைவிடம் வடிவமைத்திருப்பது மிகப் பெரிய விஷயம். சிறப்பானதும் கூட. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்றுதான்.
ReplyDeleteஅவரையும் கூட நிறையப் பேர் ஏற்க மறுக்கின்றனர். எனக்குத் தோன்றும் அப்படினா என்னதான்யா ஒரு மனுஷங்கிட்ட எதிர்பார்க்கறீங்க....
கீதா
//அப்படினா என்னதான்யா ஒரு மனுஷங்கிட்ட எதிர்பார்க்கறீங்க/யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள்? வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.தன்னால் முடியாததை மற்றவர்கள் சாதிக்கும் பொழுது வரும் எரிச்சல். வேறு என்ன?
Deleteஅக்கா மெழுகுச் சிலையோடு படம் எடுக்கும்படி இல்லை இல்லையா? லண்டன் ம்யூசியத்துல கூட இவரது சிலை இருக்கிறதே என் கஸின் தன் சமீபத்திய பயணத்தின் போது அவரது மெழுகு சிலைக்குப் பக்கத்தில் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். தத்ரூபமாக இருக்கிறது...
ReplyDeleteகீதா
உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அக்னி ஏவுகணையின் மாடலைக் கூட யாரும் கவனிக்காத பொழுது எடுத்தேன்.ஒரு முறை சங்கீத சீஸனின் பொழுது காமராஜர் அரங்கத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த கலாமின் மெழுகு சிலைக்கு அருகில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அதை தேடி எடுக்க முடியவில்லை. அப்போது முகநூலில் பகிர்ந்திருந்தேன்.
Deleteநாங்கள் சென்றபோது அது கட்டுமானமாய் இருந்தது அது கட்டிமுடிப்பதற்கு ஏராளமான சர்ச்சைகளிருந்ததாகக் கேள்வ்ப்பட்டேன்
ReplyDeleteமோடிஜி இருக்க என்ன கவலை? எல்லா தடைகளையும் தகர்த்து விடுவாரே. வருகைக்கு நன்றி!
Deleteஇந்த நினைவிடம் அமைக்கப்பட்ட பின்னர் ராமேஸ்வரம் போகவில்லை. போனால் கட்டாயமாய்ப் போய்ப் பார்க்க வேண்டும். விபரங்களுக்கு நன்றி.
ReplyDeleteஅவசியம் சென்று பாருங்கள். நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபோற்றுதலுக்குரிய மாமனிதரின் நினைவிடத்தை அவரது பிறந்த நாளான இன்றைய தினம் பகிர்ந்தது சிறப்பு. இராமேஸ்வரம் செல்லும் போது அவர் நினைவிடத்தை காண ஆவலாக இருக்கிறேன். தங்கள் பதிவின் மூலம் விபரங்கள் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அப்துல் கலாமின் பிறந்த நாளாக இருப்பதால்தான் இன்று பகிர்ந்தேன். வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Deleteஅன்பு பானு மா. சமீபத்தில் ராமேஸ்வரம் சென்றபோது பார்த்த இடம். பூவுலகில் இவரைப் போல மனிதரைப் பார்க்க முடியுமா.
ReplyDeleteஇந்தியாவும் உலகமும் வணங்கிப் போற்ற வேண்டிய மனிதர்.
அனைத்துப் படங்களும் அருமை. இந்த எளிய மனிதர் இன்னும் எத்தனையோ ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். நமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை.
நன்றி மா.
மிக மிக எளிமையான நல்ல மனிதர். என் தோழி ஒருவர் போலந்து பல்கலைகழகத்தில் மேற்படிப்பிற்கு ஏற்பாடு செய்து தரும் நிறுவனத்தை நடத்துகிறார். அவர் மூலம் போலந்து செல்ல விரும்பிய ஐஸ்வர்யா என்னும் மாணவி அங்கு ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் படிக்க விரும்பினார். அந்த துறையை அவர் தேர்ந்தெடுக்க காரணம் அப்துல் கலாமின் உரையை கேட்டதுதான். மிகவும் எளிய குடும்பத்தை சேர்ந்த அந்தப் பெண், அதைப் பற்றி யா சந்தேகங்களை காலமிடமே கேட்டு தெளிவு படுத்திக்கொள்ள விரும்பி அப்போது ஜனாதிபதியாக இருந்த அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறாள். இரண்டு முறை அவளுடைய அழைப்பை ஏற்க முடியாத அப்துல் கலாம், தானே அந்தப் பெண்ணை தோலை பேசியில் அழைத்து அவள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, போலந்து பல்கலைக்கழகத்தில் அவள் படிக்கலாம் என்று தைரியம் கொடுத்தாராம்.இப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதியை, ஏன் பல விருதுகள் பெற்ற ஒரு விஞ்ஞானியை பார்க்க முடியுமா?
Deleteராமேஸ்வரம் செல்லும் போது காண ஆசைப் படும் இடம் ...
ReplyDeleteஎன்றும் அனைவருக்கும் பிடித்த மாமேதை இவர்..
மிக மிக எளிமையான இனிய மனிதர். வருகைக்கு நன்றி.
Delete//அப்துல் கலாமின் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவருக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. //
ReplyDeleteஓ... நான் அறியவில்லை இதை. மிக அழகாக கட்டியிருக்கிறார்கள்.. பார்க்க கண்ணுக்கு பார்க் போல அழகாக இருக்குது. அவருக்கு நிட்சயம் கட்டத்தான் வேண்டும்.
மிக நன்றாக பராமரிக்கவும் செய்கிறார்கள். வருகைக்கு நன்றி அதிரா.
ReplyDelete