Tuesday, October 31, 2017

OCT.31

OCT.31 இரும்பு பெண்ணாக விளங்கிய இந்திரா காந்தியை அவருடைய காவலர்களில் ஒருவனே சுட்டுக் கொன்ற நாள் Oct.31. அந்த நிகழ்ச்சி நடந்த அன்று நாங்கள் பம்பாயில்(அப்போது மும்பை ஆகவில்லை) இருந்தோம். எங்கள் தலை தீபாவளி முடிந்து, என் கணவர் மஸ்கட் திரும்பும் முன் பம்பாயில் இருந்த என் பெரிய நாத்தனாரின் இரண்டாவது மகனின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்புவதாக திட்டம். 

அக்டோபர் 31 அன்று பாந்திராவில் வசித்துக் கொண்டிருந்த எங்கள் நாத்தனாரோடு நானும் என் கணவரும் செம்பூரில் அவர்களுக்குத்  தெரிந்த ஒரு பொற்கொல்லர் கடைக்கு சில நகைகள் ஆர்டர் கொடுப்பதற்காகச் சென்றோம். அவர் நம் ஊர் பொற் கொல்லர்களைப் போல இல்லாமல் பாண்ட், ஷர்ட் அணிந்து கொண்டு, ஷர்டை டக் இன் செய்து கொண்டு மிடுக்காக இருந்தார். ஒரு ஜோடி வைர தோடுகளை எடுத்துக் காட்டி, அவை நடிகை சாந்தி கிருஷ்ணாவிற்காக செய்யப் பட்டவை என்று மலையாளத்தில் நனைந்த தமிழில் கூறினார்.  

நாங்கள் செம்பூர் மார்க்கெட்டில் இருந்த பொழுதுதான் இந்திரா காந்தி சுடப்பட்ட செய்தி கிடைத்தது. ஷாப்பிங்கை அவசரமாக முடித்துக் கொண்டு, வீடு திரும்பினோம். ஆனால், மார்க்கெட்டிலோ, வரும் வழியிலோ எங்கும் எந்த அசம்பாவிதமும் இல்லை. கடைகள் கூட அவசர அவசரமாக மூடப்படவில்லை. ஆனால் அலுவலகங்களுக்குச் சென்றிருந்தவர்கள் மதியமே வீடு திரும்பி விட்டார்கள். இரண்டு நாட்கள் தொலைக்காட்சி பெட்டியே கதி என்று இருந்தோம். 

'மா குரு தன ஜன யவ்வன கர்வம் 
ஹரதி நிமேஷா கால சர்வம்' 

(உன்னுடைய உடைமைகள், நண்பர்கள் குறித்தோ, இளமை குறித்தோ கர்வம் கொள்ளாதே, இவை அனைத்தும் காலன் நினைத்தால் ஒரு நொடியில் நிர்மூலமாகிவிடும் ..)

என்னும் பஜ கோவிந்த வரிகளை நான் முழுமையாக உணர்ந்த தருணம் அது.  

8 comments:

 1. இந்தியாவின் அவமானத்துக்குறிய நாள் இன்று.
  எமது நினைவஞ்சலிகளும் அன்னைக்கு...

  ReplyDelete
 2. துணிச்சலான பிரதமர். நான் அப்போது மதுரையிலிருந்தேன்.

  ReplyDelete
 3. நினைவுகள் அருமை!

  ReplyDelete
 4. இந்திய வரலாற்றில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கிய சாதனையாளர்.

  ReplyDelete
 5. கடுமையான நேரமே...

  இவர்களை பற்றி இன்னும் வாசிக்கனும்...

  ReplyDelete
 6. உன்னுடைய உடைமைகள், நண்பர்கள்--- இதுல 'குரு' வை விட்டுட்டீங்களே.

  இந்தக் கொலையைப் பற்றி நீங்கள் முழுமையாகப் படித்திருக்கலாம். இந்திரா, பொற்கோவில் நடவடிக்கை எடுத்ததனால், சீக்கிய பாதுகாவலர்களை நீக்கவேண்டும் ரிஸ்க் என்று உளவுத்துறை அறிவுறுத்தியபோது, தவான் அவர்கள், இந்திராவிடம் பேசிவிட்டு, அரசியல் ரீதியாக பலன் தரும் என்று, அந்த சீக்கிய பாதுகாவலர்களை வேலையில் தொடருமாறு செய்தார். இந்த விளைவு ஏற்படும் என்று அறியாமலேயே...

  ReplyDelete
 7. நல்ல அனுபவம்.

  நெல்லைத்தமிழன் சொல்லியிருப்பது போல் சீக்கியர்களுக்கு இந்திரா காந்தி மேல் கோபம் இருந்தது. சீக்கியர்களின் கோபம் இப்படி மாறும் என்று அறியாம எடுத்த அரசியல் முடிவு என்றாலும் எப்படியும் சீக்கிய பாதுகாவலர்களை நீக்கியிருந்தாலும் அவர்கள் நடத்தியிருப்பார்கள் என்றே தோன்றியது. நான் அப்போது எம் ஏ இரண்டாம் வருடம் படித்த சமயம். விடுமுறை விட்டாலும் வீட்டிற்கெல்லாம் செல்லவில்லை. ஹாஸ்டலிலேயே கழித்தோம். அசம்பாவிதம் எதுவும் இல்லை. செய்தித்தாள் மற்றும் ஒரு சிறிய டி வி பெட்டி ஹாஸ்டல் பொது அறையில் இவற்றில் செய்திகளை நண்பர்களுடன் பார்த்து அப்படி பொழுது போனது.

  துளசி

  ReplyDelete
 8. இந்திரா காந்தியின் கொலை வருந்தத்தக்கதே ஆனால் தொடர்ந்த படுகொலைகள் கண்டிக்க வேண்டியவை

  ReplyDelete