கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, August 30, 2010

madarasa pattinum

எல்லோராலும் பெரிதும் புகழப்பட்ட மதராசபட்டினம் திரைப்படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். technical சிறப்பு  மட்டும் கருத்தில் கொண்டு பார்த்தால் மதராசபட்டினம் ஒரு நல்ல படம்தான்.
கதை நடக்கும் காலம் 1946-1947. அந்த சமயத்தில் மதராஸ் நன்கு வளர்ந்து விட்ட ஒரு பெரிய நகரம். அத்தனை பெரிய நகரத்திற்கு ஒரே ஒரு வண்ணாந்துறை மட்டும்தானா இருந்திருக்கும்? வாஷர்மேன்பேட்டிலிருந்து அடையாறு வரை சென்று துணிகளை துவைக்க  எடுத்து வரவேண்டும் என்பது சற்று இடிக்கிறதே? தவிர அது என்ன டிரஸ்?  லகானிலிருந்தா? அதுவே தப்பு.. நம் ஊரில் உழைப்பாளிகள் எப்போது மூல கச்சம்  அணிந்து குடிமியும் இல்லாமல் க்ராப்பூம் இல்லாமல் ஒரு ஹேர் ஸ்டைலோடு இருந்திருக்கிறார்கள்?
மிகப்பெரிய ப்ளா க்ளைமாக்ஸ் நடக்கும்  காலம்....நாம் அறிந்தவரை இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு முதல்நாள் நாடே திருவிழா கோலம் பூண்டிருந்தது என்பதுதான்.  வெறிச்சோடிய சென்றலும் கூவம் கால்வாய் பகுதிகளும் யதார்தத்திற்கு வெகு தூரம்.        
ஆர்யாவைத்தவிர மற்ற அணைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். எனிவே குட் அட்டெம்ப்ட்!               
                                 

2 comments:

  1. திரைப்பட விமர்சனம் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளது.

    தங்களின் ‘தம்பட்டம்’ என்ற வலைப்பதிவினில் கொடுத்துள்ள இந்த முதல் வெளியீட்டுக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தாமதமாக படித்தேன் விமர்சனத்தை.... சொன்னதெல்லாம் உண்மை.
    - கில்லர்ஜி

    ReplyDelete