கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 29, 2016

அரிசி,தேங்காய் வெல்லப்பாயசம்

    அரிசி,தேங்காய் வெல்லப் பாயசம்
              ( ஆடி வெள்ளி ஸ்பெஷல்)

தேவையான பொருள்கள்:


அரிசி    ---- 1/2 கப்
தேங்காய் துருவல் ----- 1/2 கப்
வெல்லம் ------- 200கிராம்
ஏலக்காய் ----- 4
முந்திரி பருப்பு  ----- 6

அரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.  ஊறியதும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும். மாவு போல நைசாக இருக்க வேண்டாம், அதிகம் கொரகொரப்பாகவும் இருக்கக் கூடாது. அரைத்த மாவோடு ஒரு கப் தண்ணீர் சேர்த்து,அடுப்பில் மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறவும். மாவு வெந்ததும், வெல்லத்தூளை சேர்த்து மீண்டும் அடி பிடிக்காமல் கிளறவும். வெல்லம் நன்கு கறைந்து பச்சை வாசனை போனவுடன்(ஏறத்தாழ 10 நிமிடங்கள் அடுப்பில் இருக்க வேண்டும்), கீழே இறக்கி வைத்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு, முந்திரி பருப்பை சிறியதாக ஒடித்து நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். சுவையான, பாயசம் ரெடி. அடிப் பிடித்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தவிர இது செய்வதற்கு மிகவும் சுலபமானது.
 

3 comments:

  1. என் அம்மா அவ்வப்போது செய்வார்கள்.ஆட்டுரலில் அரைத்து செய்வார்கள்.முருகனுக்கு நைவேத்தியம்

    ReplyDelete
  2. எனக்கும் மிகவும் பிடித்த பாயசம். எளிதானது.

    ReplyDelete
  3. இந்தப் பாயசம் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். என்னோட செய்முறை கீழே. அநேகமாச் சித்திரை விஷுவன்னிக்கு இந்தப் பாயசம் இருக்கும் முன்னெல்லாம். இப்போதெல்லாம் பாயசம்னு சாதத்திலேயே சர்க்கரை, பால் சேர்த்துச் சும்மாவாச்சும் ஒப்புக்குப் பண்ணிடறேன். :)
    http://sivamgss.blogspot.in/2013/04/blog-post_13.html

    ReplyDelete