கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 2, 2016

விநாயகர் குறித்த ஒரு வினாடி வினா

விநாயகர் குறித்த ஒரு வினாடி வினா



1. விநாயகருக்கு விசேஷமான நாமாக்கள் எத்தனை?

2. முருகனைப் போலவே விநாயகருக்கும் ஆறுபடை வீடுகள் உண்டு, அதில் குறைந்த பட்சம் மூன்றினை குறிப்பிடுங்கள்.

3. பொல்லாப்   பிள்ளையார்/பொள்ளாப் பிள்ளையார் இரண்டில் எது சரி? ஏன்?

4. விநாயகருக்காக பிரத்யேகமாக எட்டு கோவில்கள் ஒரு                         தொகுப்பாக அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?

5. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தோற்றச் சிறப்பு என்ன?

6. குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருப்பான் என்பது வழக்கு, ஆனால் ஊரின் மத்தியில் இருக்கும் இந்த குன்றின் உச்சியில் விநாயகர் அமர்ந்து ஊருக்கே பெருமை சேர்க்கிறார். நான் குறிப்பிடுவது எந்த ஊரை?  

7. "முப்புரம் எரி செய்த அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா" திருப்புகழில் குறிப்பிடப் படும் இந்நிகழ்ச்சி நடைப் பெற்றதாக நம்பப்படும் சென்னைக்கு அருகில்  உள்ள அந்தத் தலம் எது?  

8. ஒரு முறை மகா விஷ்ணுவின் சக்கரத்தை குழந்தை கணேசன் வாய்க்குள் போட்டுக்                   கொண்டு விட்டான். அதை அவனிடமிருந்து வரவழைக்கும் பொருட்டு மாமா மஹா                   விஷ்ணுஒரு செயல் செய்தார். அதைப் பார்த்து சிரித்த கணேஷ் சக்கரத்தை வெளியே                 துப்பி விட்டாராம். மகா விஷ்ணு செய்த அந்த செயலை நாம் இன்றைக்கும் விநாயகருக்கு        முன் செய்கிறோம். அந்த செயலை மூளைக்கான யோகா என்று மேல் நாட்டினர் இன்று                கொண்டாடுகின்றனர். சுருக்கமாக அந்த செயலை நாம் எப்படி குறிப்பிடுவோம்?  

9. நவ கிரஹங்களில் எந்த கிரஹத்திற்கு அதிபதியாக விநாயகர் கருதப் படுகிறார்?

10. விநாயக சதுர்த்தி அன்று இருபத்தோரு இலைகளால் பிள்ளையாரை அர்ச்சிக்க வேண்டும்,        அதில் ஒரு இலையால் அன்று மட்டும்தான் அர்ச்சிக்க வேண்டும். அது எந்த இலை?

11 comments:

  1. 2. உச்சி பிள்ளையார் கோவில், பிள்ளையார்பட்டி,

    6. திருச்சி

    8. தோ(ர்)ப்பிக்காரணம்.

    10. எருக்க இலை!

    ReplyDelete
    Replies
    1. கலந்து கொண்டதற்கு நன்றியும் பாராட்டுகளும் ஸ்ரீராம். விநாயகர் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

      Delete
  2. ஷோடச நாமாக்கள்
    ஸுமுகச்ச, ஏகதந்தச்ச, கபீலோ, கஜ கர்ணக,
    லம்போதரச்ச, விகடோ, விக்நராஜோ,விநாயக,
    தூமகேதுர், கணாத்யக்ஷோ, பாலசந்த்ரோ,கஜானான,
    வக்ரதுண்ட, சூர்ப்பகர்ணோ, ஹேரம்ப, ஸ்கந்த பூர்வஜ -


    திருவண்ணாமலை ஆயிரம் திரை கொண்ட விநாயகர்
    திருமுதுகுன்றம் ஆழத்துப் பிள்ளையார்
    திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார்.
    மதுரை ஆலால சுந்தர விநாயகர்
    . பிள்ளையார்ப்பட்டி கற்பக விநாயகர்
    திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.

    ReplyDelete
  3. உளியினால் பொள்ளாத காரணத்தால் பொள்ளாப் பிள்ளையார். என் புக்ககத்து ஊரில் பொய்யாப் பிள்ளையார் என்றொருவர் உண்டு.

    ReplyDelete
  4. மஹாராஷ்டிரா. பிள்ளையார் பற்றிய தொடரில் எழுதி இருக்கேன். :)

    ReplyDelete
  5. http://freetamilebooks.com/ebooks/pilliyar

    இதைப் பதிவிறக்கிப் படிக்கலாம்.

    ReplyDelete
  6. எனக்குத் தெரிந்து பாண்டியர் காலத்துக் குடவரைக்கோயில் என்பது தான் சிறப்பு. வேறே சிறப்பு இருந்தால் சொல்லுங்கள். தெரிஞ்சுக்கலாம். பிள்ளையாரோட வலக்கையிலே லிங்கம் இருப்பதும் ஒரு சிறப்பு.

    ReplyDelete
  7. அட, நம்ம ஊரு உ.பி.கோயில் :)

    அடுத்து அச்சிறுபாக்கம், இப்போ அச்சரபாக்கம்னு சொல்றாங்க.

    ReplyDelete
  8. தோர்பிஹரணம், சுருக்கமாத் தமிழிலே தோப்புக்கரணம். ஹிஹிஹி
    கேது பகவான்
    அடுத்துக் கடைசியா எனக்குத் தெரிஞ்சு துளசி மட்டும் தான் பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குப் பயன்படுத்துவாங்க. மற்ற நாட்களில் துளசி பிள்ளையாருக்குப் போடுவதில்லை. எருக்க இலை பிள்ளையாருக்கு மிக விசேஷம். ஆகையால் அதுக்குத் தள்ளுபடி இல்லை! :)

    ReplyDelete
  9. கீதா மேடம் சூப்பர்!

    ஆறாவது கேள்விக்கு ஏன் விடை அளிக்கவில்லை? அவசரத்தில் கவனிக்கவில்லையா? ஆறாவது கேள்விக்கு விடை திருச்சி.
    இரண்டாவது கேள்விக்கான விடையில் ஒரு சிறிய தவறு, மதுரை ஆலால சுந்தர விநாயகர் இல்லை, திருச்சி உச்சி பிள்ளையார் என்பதுதான் சரி.

    5. பிள்ளையார்பட்டி விநாயகரின் தோற்றச் சிறப்பு : இவருக்கு தும்பிக்கையை சேர்க்காமல் நான்கு கரங்கள் கிடையாது, இரண்டு கரங்கள்தான்.

    பிள்ளையாருக்கு சதுர் காய் உடைப்பது போல டாண் டாண் என்று பதில் அளித்திருக்கும் உங்களுக்கு அந்த ஆணை முகனின் அருள் நிறைய கிடைக்கட்டும் என்று வேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. //அட, நம்ம ஊரு உ.பி.கோயில் ://

    இங்கே ஆறாம் கேள்விக்கான விடை கொடுத்திருக்கேனே! அப்புறமா உ.பி.கோயில் ஆறுபடை வீடுனு கேள்விப் படலை. எதுக்கும் குறிப்புக்களைச் சரி பார்க்கிறேன்.

    ReplyDelete