கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 8, 2017

துருவங்கள் பதினாறு (திரை விமர்சனம்)

துருவங்கள் பதினாறு
(திரை விமர்சனம்)



எத்தனை நாட்கள் ஆயிற்று இப்படி ஒரு படம் பார்த்து? ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை கட்டிப் போடும் திரைக்கதை!  'துருவங்கள் பதினாறு' படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு இருபத்தியோரு வயதுதான் ஆகிறதாம். ஸ்ரீதர்,பாண்டியராஜனுக்குப் பிறகு இள வயது இயக்குனர். ஆனால் வியக்க வைக்கும் முதிர்ச்சி. பார்முலா படங்களிலிருந்து விலகி விறுவிறுப்பாக ஒரு த்ரில்லர் படத்தை தந்திருக்கிறார். பாடல் வேண்டாம், காமெடி வேண்டாம் என்று முடிவு செய்தது பெரிய விஷயம் இல்லை, கதாநாயகியே வேண்டாம் என்று தைரியமாக முடிவு செய்திருக்கிறாரே..! பெரிய விஷயம்தான். இந்த தைரியம் பின்னாளில் சூப்பர், சுப்ரீம்,மெகா, தலை, வால், தளபதி, சேனாதிபதிகளை வைத்து படம் எடுக்கும் போதும் குறையாமல் இருக்க வேண்டுகிறேன். 

படத்தில் நமக்கு தெரிந்த ஒரே முகம் ரகுமான். பாத்திரத்தை உணர்ந்து வெகு இயல்பாக, அழகாக நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்ல படத்தில் வரும் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். காமிரா, இசை என்று அத்தனையும் அருமை.! 

குறை சொல்லித்தான் தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்களை சொல்லலாம். ஒன்று முதல் நாளிரவு பெரும் மழையில் நனைந்த சாலை மறு நாள் காலை துப்புரவாக காய்ந்திருப்பது சற்றே உறுத்துகிறது.   அதே போல கடைசி சண்டைக் கட்சியில் ஒரே இருட்டு, யார் யாரை அடிக்கிறார்கள்? யாரால் யார் சுடப்படுகிறார்? யார் தப்பி ஓடுகிறார்? யார் கார் முன் விழுகிறார் என்பதெல்லாம் ஒரே குழப்பம். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் சற்றே குறைகிறது, ஆனாலும் படம் தொய்யவில்லை.

படம் முடிந்தவுடன் இயல்பாக கை தட்டுகிறார்கள் ரசிகர்கள். இது போதாதா?

12 comments:

  1. பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் படம்.

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. இங்கே பார்க்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. இந்திய தொலை காட்சிகளில் முதல் முறையாக போடும் பொழுது பார்க்க வேண்டியதுதான்.

      Delete
  3. விமர்சனம் நன்று

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை விமரிசித்ததற்கு நன்றி! திரைப்படம் பார்க்கும் பழக்கம் இருந்தால் கண்டிப்பாக பாருங்கள்.

      Delete
  4. பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் படம்....உங்கள் விமர்சனமும் அதைச் சொல்லுகிறது...

    கீதா

    ReplyDelete
  5. Even we are planning to watch this movie!!!

    ReplyDelete
  6. இப்படி ஒரு படம் வந்திருக்குன்னே இப்போத் தான் தெரியும். இங்கே கிடைக்குதானு பார்க்கிறேன். ஆவலைத் தூண்டி இருக்கீங்க! :)

    ReplyDelete
  7. நல்லதொரு விமர்சனம்... நன்றி...

    ReplyDelete