Tuesday, May 16, 2017

ப.பாண்டி (விமர்சனம்)

ப.பாண்டி (விமர்சனம்)தனுஷ் முதல் முறையாக இயக்கி இருக்கும் படம். முதல் காதலில் தோற்ற இருவரும் தங்கள் முதிய பிராயத்தில் அந்த காதலை புதுப்பித்துக் கொள்ளலாமா என்று யோசிக்கும் கதை. 

கதா பாத்திரத்திற்கேற்ற நடிகர்களை தேர்வு செய்திருப்பதிலேயே தனுஷிற்கு பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. அந்த அப்பா பாத்திரத்திற்க்கு ராஜ் கிரானை விட வேறு ஒரு சிறந்த தேர்வு இருக்க முடியுமா? ஆரம்ப காட்சிகளில் மகனிடம் பயந்து கொண்டு பம்முவதும், பேரக் குழந்தைகளிடம் பாசம் காட்டுவதிலும், நண்பர்களோடு முக நூலில் போடுவதற்காக விடம் விதமாக போஸ் கொடுக்கும் வெள்ளந்தி தனத்திலும், இறுதியில் "உனக்காக இரண்டு தடவ வீட்டை விட்டு ஓடி வந்திருக்கேன்" என்று கூறுவதிலும் சபாஷ் போட வைக்கிறார். 

கடைசி இருபது நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் தன். முத்திரையை பதிக்கிறார் ரேவதி. எந்த கல்மிஷமும் இல்லாமல் முன்னாள் காதலனோடு பைக்கில் ஊர் சுற்றுவதும், "வீட்டு அட்ரஸ் கொடுத்தது தப்பா போச்சு" என்று ராஜ் கிரனை கோபிப்பதும், மகளிடம்(நம்ம டி.டி) முன்னாள் காதலனைப் பற்றி பேசுவதும், கடைசியில் எப்போதோ முன்னாள் காதலனோடு எடுத்துக் கொண்ட புகைப் படத்தை அவனிடமே திரும்ப கொடுத்து விட்டு,அவனுக்கு கண்ணீர்  மல்க விடை கொடுப்பதும்.ஆஹா ...!

"வயதானாலும் துணை துணைதான்" என்று மகள் கூறி விட்டுச் சென்றதும் ஒரு துள்ளல் நடை நடக்கிறாரே..! வயதானாலும் ரேவதி ரேவதிதான். 

சின்ன வயது ரேவதியாக வரும் மடோனா செபாஸ்டியனும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ராஜ் கிரண் மகனாக வரும் பிரசன்னா பாஸ் பண்ணி இருக்கிறார், முதல் வகுப்பில் இல்லை. மற்றபடி எல்லோருமே தங்கள் தங்கள் ரோலை நன்றாக செய்திருக்கிறார்கள். 

வளர்ந்து வரும் இளம் இசை அமைப்பாளரான ஷான் ரோல்டன் இசையில் தனுஷ் மடோனா படும் பாடல் நன்றாக இருக்கிறது. பி.ஜி.எம். சிறப்பு. தற்கால இசை அமைப்பாளர்களை போல சிந்தசைசர் பயன் படுத்தாமல் அசல் இசைக்கருவிகளை கொண்டு இசை அமைத்திருக்கிறாராம். வாழ்க! வளர்க!

கம்பி மேல் நடப்பது போன்ற ஒரு கருவை எடுத்துக் கொண்ட தனுஷின் துணிச்சலையும், அதை கொஞ்சம் கூட விரசம் தட்டாமல் எடுத்திருக்கும் திறமையையும் பாராட்டலாம்!

24 comments:

 1. நடுநிலையான விமர்சனம் நன்று

  ReplyDelete
 2. நேற்றுதான் படம் பார்த்தேன்
  அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 3. சென்னை சென்றதும் பார்க்கலாம் என்றிருக்கிறேன். அதுவரை தியேட்டரில் இருக்கவேண்டுமே!

  ReplyDelete
  Replies
  1. யூ டியூப் என்று ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியாதா? அல்லது நீங்கள் திரும்பி வர இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும் என்றால் தொலை காட்சியில் பார்த்து விடலாம்.

   Delete
 4. ம்ம்ம்... படம் பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள். நிறைய நடித்தால் பார்க்கப் பொறுமை இருக்க வேண்டுமே...! பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. திரை அரங்கில் நாம் உட்கார்ந்து செட்டில் ஆகிறோம், இடை வேளை வந்து விடுகிறது. கண்டிப்பாக பொறுமையை சோதிக்கவில்லை.

   Delete
 5. பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டும் விமர்சனம்...

  ReplyDelete
 6. நிச்சயமாகப் பார்க்க வேண்டும். நல்ல கதைக்கரு. பகிர்விற்கு மிக்க நன்றி..

  ReplyDelete
  Replies
  1. பாருங்கள், பிடிக்கும். வருகைக்கு நன்றி!

   Delete
 7. நல்ல விமர்சனம். பார்க்க நினைத்திருக்கும் படம்.

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு...

  ReplyDelete
 9. ஹூம்... சினிமா பார்த்து நாட்களாகிவிட்டன

  ReplyDelete
  Replies
  1. எப்போதாவது ஒரு முறை இம்மாதிரி நாள் படங்களைப் பார்க்கலாம்,தவறில்லை.

   Delete
 10. ம்ம்ம்ம்ம் நானும் இந்தப் படம் பார்த்து விமரிசனம் எழுதி இருக்கேன். ஆனால் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. முடிந்தால் நேரம் இருக்கையில் வருகை தாருங்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. //ம்ம்ம்ம்ம் நானும் இந்தப் படம் பார்த்து விமரிசனம் எழுதி இருக்கேன்.//
   ஓ! அப்படியா? பார்க்கிறேன். வருகைக்கு நன்றி!

   Delete
 11. நல்ல விமர்சனம்!

  ReplyDelete
 12. முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete