Saturday, August 5, 2017

சில செய்திகள், சில எண்ணங்கள்

சில செய்திகள், சில எண்ணங்கள் 


வரதக்ஷனை கேட்டு தன்னை கொடுமை படுத்தினார்கள் என்று ஒரு பெண் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட கணவன்,மற்றும் அவன் வீட்டாரை உடனே கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்று சட்டம் இயற்றப் பட்ட பொழுது, சோ மட்டுமே அதை கண்டித்தார்.
"இதனால் தனிப்பட்ட விரோதம் காரணமாக ஒரு பெண் மாமனார், மாமியாரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு புகார் கொடுத்தால் அப்பாவியான அவள் கணவனும், அவன் பெற்றோரும் தண்டிக்கப் படக்கூடும்" என்றார். ஆனால் அப்படி பெரும்பாலும் நடக்காது. 


வரதக்ஷனை கொடுமைக்காக பல பெண்களின் புகுந்த வீடுகளில் ஸ்டவ்கள் வெடித்ததால்தான் அப்படி ஒரு சட்டம் இயற்றப் பட்டது. நம் பாரத நாரிகள் கணவனோ, மாமியாரோ அவளை கொளுத்தினால் கூட, இறக்கும் தருவாயில் அவளிடம் வாக்குமூலம் வாங்க காத்திருக்கும் போலீசிடம், "என் கணவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது ஒரு விபத்துதான்' என்று கூறி ராமன்களை(??)மன்னிக்கும் சீதைகளாக இருந்ததால், குற்றவாளிகள் என்று நன்றாக தெரிந்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தது. அதற்காகத்தான் வரதக்ஷனை கொடுமைகளில் சம்பந்தப் பட்டவர்களை விசாரணை இல்லாமல் கைது செய்யலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அது மீண்டும் மாற்றப்பட்டு விட்டது.


மனிதர்களுக்கு காதல் உணர்வை தூண்டுவது மூளையில் சுரக்கும் டோபோமைன் என்னும் ஹார்மோனம். காதல் உணர்வு கம்மியாக இருப்பவர்களுக்கு இந்த டோபோமைனை ஊசி மூலம் செலுத்தினால் காதல் உணர்வு அதிகரிக்குமாம். நம் நாட்டை பொறுத்த வரை டோபோமைன் சுரக்காமல் இருக்க மருந்து கண்டு பிடிக்கலாம். 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை விசாரித்த லட்சுமி ராமகிருஷ்ணனிடம் அந்தப் பெண்,"பிளஸ் டூ படிச்சேன்,லவ் பண்ணினேன்" என்று கூற,லட்சுமி ராமகிருஷ்ணன்,"லவ் பண்ணியது இருக்கட்டும், வேற என்ன உருப்படியா பண்ணின?" என்றார். அதைப் போல நம் ஊர் இளைஞர், மற்றும் இளம்பெண்களை இந்த காதல் படுத்தும் பாடு இருக்கிறதே..! பாருங்கள் வாரா வாரம் ஓட்டுக்களை குவித்த ஓவியா  பிக் பாஸிலிருந்து வெளியேற காதல்தானே காரணம்!(அட சட்! பி.பி.யை தவிர்க்க முடியவில்லையே..!)


அதே போல தவிர்க்க முடியாத வேறு சில விஷயங்கள்  ஜி.எஸ்.டி., நீட் தேர்வு. ஜி.எஸ்.டி. பற்றி பேச எனக்கு ஞானம் பத்தாது. நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தினசரி தொலைக்காட்சியில் கதறுகிறவர்கள் எல்லோரும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டம் என்று ஏதோ சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் அதிகமாக கற்பிக்கப்படுவது போலவும், ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தில் ஒன்றுமே கற்பிக்கப் படுவதில்லை போலவும் பேசுகிறர்கள். உண்மையில் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., ஸ்டேட் போர்ட் எல்லாமே ஒரே பாட திட்டம்தான், கற்பிக்கப்படும் முறைதான் வேறு. முதல் இரண்டு போர்டுகளின் கல்வி முறை  ஒரு நிலத்தை ஆழ உழுவதற்கு சமம் என்றால், ஸ்டேட் போர்ட் கல்வி முறை அதே நிலத்தை அகல உழுவதற்கு சமம்.

ஸ்டேட் போர்டில் கிராம புறத்து மாணவர்கள் கல்வி கற்க எளிதாக இருக்க வேண்டும் என்று சொல்லி,ஒரு புறம் பாடத்திட்டத்தை நீர்த்து போக செய்து விட்டு, மறுபுறம் மதிப்பெண்களை அள்ளிப் போட்டு வாங்கும் மார்க்குகளுக்கு மரியாதை இல்லாமல் செய்து விட்டார்கள். வட மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் நாட்டில் படித்து ஒரு மாணவன் 90 சதவிகிதம் பெற்றால் அதிலிருந்து 10மார்க்குகள் குறைவாகத்தான் மதிப்பிடுவார்கள். அதற்காகத்தான் ஒரு பொது தேர்வு நடத்தி அதன் மூலம் மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது. அதே முறையை மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கும் கடை பிடிப்பதில் என்ன தவறு? இவர்கள் பாட முறை எதையும் மாற்ற வேண்டாம். ஸ்டேட் போர்ட் தரத்தை உயர்த்த வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் செய்தால் போதும். ஒன்று, புத்தகத்தில் இருக்கும் அதே கேள்வியை நம்பரைக் கூட மாற்றாமல் கேட்பதை நிறுத்த வேண்டும். இரண்டாவது மதிப்பெண்களை அள்ளிப் போடுவதை குறைக்க வேண்டும். இவை இரண்டையும் செய்தாலே தரம் தன்னால் உயர்ந்து விடும். 

31 comments:

 1. வரதட்சணைக் கொடுமை விஷயத்தில் ராமனை மன்னிக்கும் சீதைகள் குறைவாகவே இருப்பார்கள். மேலும் இப்போதெல்லாம் பெண் கிடைப்பதே கஷ்டமாக இருப்பதால் வரதட்சணை கொடுமை இருக்காது!!

  பிக் பாஸில் ஓவியாவை மட்டுமே ரசித்தேன். அவரும் வெளியேறி விட்டார். இன்னமும் இருக்கும் சந்தேகம் இந்தக் காதல் கூட அமோக ஆதரவு இருக்கும் அவரை வெளியேற்ற பிக் பாஸ் நடத்திய நாடகமோ என்றும் தோன்றுகிறது.. உண்மை எனில் ஓவியாவின் பிடிவாதக் காதல் வியக்க வைக்கிறது! லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்பவே கோபப படுவார்.

  நீட் தேர்வின் மூலம் தரமான மருத்துவர்கள் கிடைக்காமல் போனால் அவர்களிடம் மருத்துவம் பார்த்துக் கொள்ள போகும் நாம்தான் பாதிக்கப்படுவோம் என்பது உணராமல் போராட்டங்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் நீட் தேர்வு பற்றிய கருத்தையும் சரி என்று வழி மொழிகிறேன்...

   ஹஹஹ ஸ்ரீராம் நீங்கள் ரசித்த ஓவியாஅவுட்டா!!!! இனி பிக் பாஸின் நிலைமை??!!! ஓவியாவின் பிடிவாதக் காதல்???!! அதுவும் நாடகமோ??!! உண்மையாக நடிக்கவும் முடியும்தானே நல்ல திறமையான நடிகை என்றால்...

   கீதா

   Delete
  2. //இப்போதெல்லாம் பெண் கிடைப்பதே கஷ்டமாக இருப்பதால் வரதட்சணை கொடுமை இருக்காது!!//

   பொதுவாக வரதட்க்ஷனை கொடுமை வெகுவாக குறைந்துதான் இருக்கிறது. ஆனால் மீண்டும் ஸ்டவ்கள் மாமியார் வீட்டில் வெடிக்காமல் இருக்க வேண்டும்.

   //லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்பவே கோபப் படுவார்.//
   அது முதல் சீசனில் என்று நினைக்கிறேன். இப்பொழுது குறைத்துக் கொண்டு விட்டார். இந்த மாதிரி ஷோக்களில் கோபப்படாமல் இருக்க முடியாது.

   வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

   Delete
 2. வரதக்ஷணைக் கொடுமைனு சொல்லி அதன் மூலம் பாதிக்கப்பட்ட பிள்ளை வீட்டாரை நன்றாக அறிவேன். :( என்ன செய்ய முடியும்! இப்படியும் நடக்கலாம் என்று தான் சோ அவர்கள் சொல்லி இருப்பார். அது மாற்றப் பட்டு விட்டது என்பதை அறியவில்லை! :( விளக்கம் கொடுத்திருக்கலாமோ?

  ReplyDelete
  Replies
  1. யெஸ் கீதாக்கா...

   இப்போது சமீபத்தில் கூட ஆணிற்கு ஆதரவாக சென்னைக் கோர்ட் பெண் சொல்லுவது பொய் என்று தீர்ப்பு கொடுத்திருக்கிறது குறிப்பாக காம்பன்சேஷன் விஷயத்தில்...டெக்கான் க்ரோனிக்கிள்ஸில் வந்திருந்த செய்தி....

   கீதா

   Delete
 3. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என்று ஒரு நடிகை இருந்தார் என்பதே தொலைக்காட்சிகள் மூலம் தான் தெரியும். அதுவும் இந்த "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி ஒரு முறை கடுமையாக விவாதிக்கப்பட்டதினால். மற்றபடி நிகழ்ச்சியைப் பார்ப்பதும் இல்லை! பிக் பாஸ் குறித்தும் எதுவும் தெரியாது! தினம் இரவு ஏழரை முதல்எட்டரை வரை தொலைக்காட்சியில் ஓடும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மட்டும் தானாக ஏற்பட்டது. அதுக்கப்புறமும் தொலைக்காட்சியில் உட்காருவதில்லை. செய்தி சானல்கள் ஓடிக் கொண்டிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. லட்சுமி ராமகிருஷ்ணன் வெறும் நடிகை மட்டுமல்ல. பன்முக திறமை கொண்டவர். முதல் சீசனில் அவர் கடுமையாக விமர்சிக்கப் பட்டதால் வேறு சிலரை வைத்து இந்த நிகழ்ச்சியை முயற்சித்தார்கள், அவை அத்தனை சிறக்கவில்லை எனவே மீண்டும் ல.ரா.வே அழைக்கப்பட்டிருக்கிறார். நான் இந்த சீசன்தான் பார்க்கிறேன். அதுவும் தொடர்ந்து பார்ப்பதில்லை. நன்றாகத்தான் நடத்துகிறார்.

   Delete
 4. சிபிஎஸ்சி மற்றும் மாநிலப் பாடத்திட்டம் ஒன்று என எதை வைத்துச் சொல்கிறீர்கள்னு புரியலை. இரண்டு பாடத்திட்டங்களில் படித்த பிள்ளைகளுக்கும் நான் ட்யூஷன் எடுத்திருக்கேன். மாநில அரசுப் பாடத்திட்டம் முக்கியமாகத் தமிழ் தரம் குறைவாகவே இருக்கும். பாடங்களில் மட்டும் தவறு இருக்காது. குழந்தைகள் எழுதுவது, படிப்பது எல்லாமும் தட்டுத் தடுமாறித் தான் இருக்கும். மேலும் மாநில அரசுப் பாடங்களை மனப்பாடம் பண்ணி எழுத வேண்டும். சொல்லிக் கொடுத்தாலும் குழந்தைகள் எங்க வகுப்பு ஆசிரியர் கேள்வி-பதில் கொடுத்திருக்காங்க. இதைப் படித்தால் போதும்னு சொல்லி இருக்காங்க. பரிக்ஷையிலே இதான் வரும்னு சொல்லுவாங்க. அதே சிபிஎஸ்சி எனில் கேள்விகளுக்கு விடை கண்டு பிடிக்கத் தானாக முயல வேண்டும். புத்தகத்தில் இருந்து எதையும் மனப்பாடம் பண்ணி எழுத முடியாது.

  ReplyDelete
 5. "நீட்" தேர்வுக்கு விலக்குக் கோருவதன் மூலம் எதிர்கால சமுதாயத்துக்கு விளையப் போகும் கெடுதல்களை இப்போது யாரும் உணரவே இல்லை என்றே சொல்லலாம். :( எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டுப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. //சிபிஎஸ்சி மற்றும் மாநிலப் பாடத்திட்டம் ஒன்று என எதை வைத்துச் சொல்கிறீர்கள்னு புரியலை.//
   நான் குறிப்பிடுவது சிலபஸ்(பாட திட்டம் என்றால் சிலபஸ்தானே?). ஒரு உதாரணத்திற்கு ஒன்பதாம் வகுப்பில் "Newton's law of motion' சி.பி.எஸ்.சி. மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அதே NEWTON'S LAW OF MOTION ஸ்டேட் போர்ட் மாணவர்களுக்கும் இருக்கும். அனால் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை, புத்தகத்திலுள்ள கேள்விகளுக்கு
   பதில் தெரிந்திருந்தால் போதும். மற்றபடி நீங்கள் கூறியிருப்பவை வேதனை தரும் நிஜம்

   Delete
 6. பிக் பாஸ் - யாரையும் விட்டு வைக்கவில்லை! :)

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் - உங்களைப் பாராட்டறேன். எங்கயும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் கான்ட்ரவர்ஷியல் கருத்துக்கள் நீங்கள் எழுதுவதே இல்லை. வெங்கட் என்ன நினைக்கிறார் என்பதை நீங்கள் வெளிப்படுத்துவதே இல்லை.

   Delete
  2. //சிபிஎஸ்சி மற்றும் மாநிலப் பாடத்திட்டம் ஒன்று என எதை வைத்துச் சொல்கிறீர்கள்னு புரியலை.//
   நான் குறிப்பிடுவது சிலபஸ்(பாட திட்டம் என்றால் சிலபஸ்தானே?). ஒரு உதாரணத்திற்கு ஒன்பதாம் வகுப்பில் "Newton's law of motion' சி.பி.எஸ்.சி. மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், அதே NEWTON'S LAW OF MOTION ஸ்டேட் போர்ட் மாணவர்களுக்கும் இருக்கும். அனால் அதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை, புத்தகத்திலுள்ள கேள்விகளுக்கு
   பதில் தெரிந்திருந்தால் போதும். மற்றபடி நீங்கள் கூறியிருப்பவை வேதனை தரும் நிஜம்

   Delete
 7. வரதட்சிணை கொடுமை - இது இன்னமும் பல சமூகத்தில் இருக்கிறது. ஆனால் ஆண், பெண் பேதம் நிச்சயம் எனக்கு அடுத்த தலைமுறை அல்லது அதற்கு அடுத்த தலைமுறையில் நிச்சயம் இருக்காது. எனக்கு அடுத்த தலைமுறையிலேயே, நிறையப் பெண்கள், 'பொழுதுபோலயா, புதுசா வரவனுக்கு சமைச்சுப் போட்டு வீட்டுலேயே இருப்பதற்கு, நான் வேலைக்குத்தான் போவேன், ரெண்டுபேரும் சேர்ந்துதான் எல்லாவற்றையும் பங்குபோட்டுக்கொள்ளவேண்டும்' என்று, கன்சர்வேடிவ் வீடுகளைச் சேர்ந்தவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

  என் பெண் சொல்றா, சி.பி.எஸ்.ஸி தரத்தைவிட, சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் தரம்தான் முக்கியம். இங்க உள்ள (நான் இருக்கும் ஊர்ல) ஸ்டான்டர்ட் (பாடம் நடத்தும், படிப்பிக்கும்) சென்னைல பி.வி.எம்ல இல்லை அப்படீங்கறா. ஸ்டேட் போர்டுலயும் நிறைய பள்ளிகளில் தரம் இருந்தாலும், அவங்க, போட்டி காரணமாக, 'வாந்தி எடுக்கும் கல்விமுறை'க்கு அடிமை ஆயிடறாங்க. நான் கல்லூரி படிக்கும்போதே, என் அண்ணனுக்கு எடுத்த பேராசியரின் நோட்ஸை, எனக்கு அதே சப்ஜெக்ட் எடுக்கும் பேராசிரியர் ஒத்துக்கொள்ளமாட்டார், மார்க் போடமாட்டார். இதுதான் நம்முடைய கல்விமுறை. வெளி'நாட்டுல, கல்லூரி லெவல்ல, திறமை இல்லைனா, அதாவது தானாகப் புரிந்து படிக்கும் திறமை இல்லைனா, படிக்கவே முடியாது. (அதுனாலதான், என்னுடன் பணியில் இருந்த தென் ஆப்பிரிக்க வெள்ளையர், இந்தியாவில் ஒரு தெருவுக்கு 10 எஞ்சினியரும், 10 டாக்டரும், மற்ற எல்லாரும் பட்டம் படித்தவங்களா இருப்பாங்க, ஒருத்தரிடமும் குவாலிட்டி இருக்காது, ஆனால் மேற்குலகில் ஒருவன் பட்டம் பெற்றிருந்தாலே அவன் அதற்கேற்ற குவாலிட்டியோட இருப்பான்' என்று சொன்னார். அவர் சொன்னது வலித்தாலும் உண்மை இருக்கிறது.

  பிக் பாஸ் - ஸ்ரீராம் - இது எல்லாமே கட்டுக்கதைதான். பல வாரங்கள் கழித்து, வைல்ட் கார்ட் என்ட்'ரி என்று சொல்லி, பரணி, ஓவியா, கஞ்சா, ஆர்த்தி இவர்களில் யார் ஒருவர் உள்ளே செல்லவேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று வாக்களிக்கும் முறையை பத்து நாட்களுக்கு (அல்லது இரு வாரங்களுக்கு) ஜல்லியடித்து அனேகமாக ஓவியா மீண்டும் உள்ளே நுழைவார். உள்ளே இருப்பவர்களில் பார்க்கும்படி இருந்தவர் ஓவியா என்பதால், அவர் வெளியேறுவதற்கு முன்பாகவே அந்த வரிசையில் பிந்துமாதவியை உள்ளே அனுப்பியவுடனேயே தெரியவில்லையா? இது ஸ்கிரிப்ட் படி நடக்கும் விஷயம் என்று? (இதுல எரிச்சலா இருக்கறது, மசாலாவுக்காக குவாலிட்டி இல்லாத காயத்ரி, ஜூலி, சக்தி போன்றவர்களை இன்னமும் உள்ளேயே வைத்திருப்பது. காயத்ரி விஷயத்தில் கமல் சறுக்கிவிட்டார் என்றே நினைக்கிறேன்)

  நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று கோருவதில் அர்த்தமே இல்லை. இது ஒலிம்பிக்ஸில், பின்னடங்கிய நாட்டிலிருந்து வருகிறேன் அதனால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எனக்கு மட்டும் 70 மீட்டர்தான் ஓடுவதற்கு சொல்லவேண்டும் என்று கேட்பதுபோல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நெல்லை உங்கள் சி பி எஸி கருத்தையும் டிட்டோ செய்கிறேன். சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மிக மிக முக்கியம். அடே போல அந்த பாரா முழுவதுமே டிட்டோ செய்கிறேன்..

   ஓ பிக் பாஸிலும் வைல்ட் கார்ட் எல்லாம் இருக்கா...

   நீட் தேர்விற்கு நீங்கள் கொடுத்திருக்கும் உதாரணத்தை ரசித்தேன்...சரியே

   கீதா

   Delete
  2. //என் பெண் சொல்றா, சி.பி.எஸ்.ஸி தரத்தைவிட, சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் தரம்தான் முக்கியம்.//
   உண்மைதான். ஆனால் இப்போதிருக்கும் எலி போட்டியில்(ராட் ரேஸ்)ஆசிரியர்களுக்கும் அழுத்தம் அதிகம். ரிசல்ட், ரேங்க் என்று மேனேஜ்மென்ட் அவர்களை துரத்துகிறது.   Delete
 8. பானுக்கா அப்பாவி ராமன்களும் இருக்கிறார்கள். சீதைகளும் ஸ்மார்ட்டாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். ஆம் சோ சொன்னதில் தவறே இல்லை. பெண்களுக்குச் சட்டம் ஆதரவாக இருப்பதால் அதனைப் பல பெண்கள் தங்களுக்கு ஆதரவாகப் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுத்துகிறார்கள் அதுவும் ராமனும் குடும்பமும் அப்பாவியாக இருந்துவிட்டால்...இப்போது ஆண்களுக்கும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணும் விதத்தில் சில சட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

  ஆஹா ஓவியா பொண்ணு வெளில போயிருச்சா. இனி அவ்வளவுதான் போங்க பிக் பாஸ் ஸ்மால் பாக்ஸ் தான். வியூவர்ஸ் டல் ஆகிடுவாங்க...டி ஆர் பி ரேட் இனி இன்னும் ஏறும் பாருங்க...ஓவியாவ இப்ப வெளில போகச் சொல்லிட்டு திரும்ப உள்ள கூட்டிட்டு வருவாங்க பாருங்க..பின்ன ஓவியா இல்லைனா பிக் பாஸே இல்லையாமே!!! வலைலியே பாருங்க ஓவியா சப்போர்ட்டர்ஸ் தான் அதிகம். ஸோ ஓவீயா வில் பி இன் சூன்!

  நீட் தேர்வு தமிழ்நாட்டு அரசியல்வியாதிகள் மற்றும் பல தமிழ் தமிழ் என்று அடித்துக் கொள்பவர்கள் நம் கிராமத்து மற்றும் சிறிய டவுன் மாணவக் குழந்தைகளுக்கு வைக்கும் ஆப்பு! அதை மாணவர்களேனும் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றி எழுதனூம்னா நிறைய எழுதலாம்...போரடித்துவிட்டது...ஏனென்றால் எழுதுவதில் எந்தப் பிரயோசனமும் இல்லை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா, சில விஷயங்களிப் பற்றி பேச ஆரம்பித்தால்... முடியாது. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

   Delete
 9. தரம் என்பது நாமே நமக்கு உயர்த்திக் கொள்வது... மற்றவை எல்லாம் o(zero)

  ReplyDelete
  Replies
  1. எப்படி உயர்த்திக் கொள்வது என்பதும் தெரிய வேண்டுமல்லவா டிடி? ஆசிரியர்களின் தரமே முதல்லே சரியா இல்லை. அப்புறமாத்தானே சொல்லிக் கொடுக்க முடியும்! எல்லோருடைய பின்னணியும் அவரவர் தரத்தை உயர்த்திக் கொள்ளும்படி அமைவதில்லையே! பின்னணி இல்லாதோர்க்கு நாம் தானே கற்பிக்க வேண்டும்!

   Delete
  2. வாங்க டி.டி.சார். நல்ல பதில்! தரத்தை உயர்திக் கொள்ள கற்றுக் கொள்வதை நிறுத்தக் கூடாது. ஆனால் இப்போதைய இளம் தலை முறை எப்படியோ ஒரு இன்ஜினீயரிங் முடித்து, ஒரு எம்.என்.சியில் வேலை வாங்கி, இங்கே இரண்டு வருடம் வேலை பார்த்து விட்டு, வெளி நாடு சென்று விட்டால் லைஃப் செட்டில் என்ற ரேஞ்சில்தானே சிந்திக்கிறார்கள். வருகைக்கு நன்றி! உங்கள் பின்னூட்டத்திற்கு போன் மூலம் பாதி அளித்திருந்தேன். ஏனோ வரவில்லை.

   Delete
 10. முக நூலில் படித்தது எறும்புக்கு லிப்ஸ்டிக் போட்டதுபோல் யார் அது
  அட அது நம்ம ஓவியா .......!

  ReplyDelete
 11. இப்பொழுது வேண்டுமானால் இன்ஜினியரிங் தேர்வுகளுக்கு மதிப்பு இல்லாமல் இருக்கலாம்.

  அவற்றிற்கு மதிப்பும் ஸீட்டுக்கு ஆலாய் பறந்த காலத்தில் கூட
  JEE தேர்வுக்கு ஏன் இப்படி ஒரு எதிர்ப்பே இருந்ததில்லை?.. அதுவும் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்கள் பெற்ற ரேங்க் அடிப்படையில் நிச்சயம் இடம் உண்டு + உதவித்தொகை என்பதை தீர்மானிக்கும் தேர்வு அல்லவா?..

  அல்லது அகில இந்திய அளவில் ரேங்க் போடும் அப்படியான தேர்வு இருப்பதே வெகுவாகத் தெரியாதா?..

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார்! என்ஜினீயரிங் மட்டுமல்ல, சட்டம், சி.ஏ., மேலாண்மை(எம்.பி.ஏ.) போன்ற எல்லாவற்றிற்கும் பொது நுழைவு தேர்வு உண்டு. மருத்துவத்திற்கு பொது நுழைவு தேர்வு வைக்கும் பொழுது மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும் என்று புரியவில்லை.

   Delete
 12. JEE மற்ற பொதுத் தேர்வுகளிலிருந்து வேறுபட்டது. (Joint Entrance Examination (JEE) is an engineering entrance examination conducted for admission to various engineering colleges in India.)) இன்ஜினீயரிங் ஸீட்டுக்கு ரிசர்வ் பண்ணுகிற மாதிரியான தேர்வு. கிட்டத்தட்ட நீட் போன்றது. அதனால் JEE க்கு இல்லாத எதிர்ப்பு நீட்டுக்கு ஏன் என்று கேட்டேன்.

  சிதம்பரம் அவர்கள் நிதியமைச்சராய் இருந்த பொழுது ரூ.10000/-க்கு மேல் வங்கியில் பணமாக எடுத்தால் ரூ.10/- வரியாகத் தர வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். 'ஐயோ, ஏழை பாழைகள் இதனால் பாதிக்கப்படுவார்களே!' என்று வசதி படைத்தவர்களிடமிருந்து கூக்குரல் எழுந்தது.
  அந்த மாதிரியான ஒரு எதிர்ப்பு நீட்டுக்கு!

  ReplyDelete
  Replies
  1. //சிதம்பரம் அவர்கள் நிதியமைச்சராய் இருந்த பொழுது ரூ.10000/-க்கு மேல் வங்கியில் பணமாக எடுத்தால் ரூ.10/- வரியாகத் தர வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். 'ஐயோ, ஏழை பாழைகள் இதனால் பாதிக்கப்படுவார்களே!' என்று வசதி படைத்தவர்களிடமிருந்து கூக்குரல் எழுந்தது. அந்த மாதிரியான ஒரு எதிர்ப்பு நீட்டுக்கு//
   Very true. எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான். மீள் வருகைக்கு நன்றி!

   Delete
 13. என்னைப் பொறுத்த வரை முதல் இரண்டு வருடங்கள் தேசிய நீரோட்டத்தில் அதாவது "நீட்" தேர்வில் தமிழக மாணவர்கள் கஷ்டப்படலாம் . ஆனால் என்றேனும் ஒரு நாள் நாம் அதில் கலக்கவிட்டால் கஷ்டம் நமக்குத்தான்.

  ReplyDelete
 14. உண்மைதான். அரசியல்வாதிகள் ஒதுங்கி நின்றால் மாணவர்கள் மறு பேச்சில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள்.

  ReplyDelete