கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, December 31, 2017

புத்தாண்டு செய்தி

புத்தாண்டு செய்தி

ராமகிருஷ்ண பரமஹமசர் தன் சீடர்ளுக்கு உபதேசம் வழங்கும்
பொழுது வீட்டு வேலைகளை செய்தபடியே அவைகளை செவி மடுக்கும் அன்னை சாரதா தேவி தன் கருத்தை புன்னகையால் அங்கீகரிப்பாராம்.

ஒரு முறை சாரதா தேவி முறத்தால் புடைத்தும், ஜல்லடையால் சலித்தும் ஏதோ செய்து கொண்டிருந்தாராம். அதைக் கண்ட பரமஹம்சர் தன் சீடர்களிடம், "முறம், ஜல்லடை இந்த இரண்டில் முறம், தூசு, தும்பு போன்ற தேவையில்லாத விஷயங்களை வெளியே தள்ளி விட்டு நல்ல விஷயங்களை மட்டும் தன்னிடம் வைத்துக் கொள்ளும். ஆனால் ஜல்லடையோ நல்ல விஷயங்களை கீழே தள்ளி விட்டு விட்டு கல், மண் போன்ற குப்பைகளை தன்னிடத்தே வைத்துக் கொள்ளும். நாம் இந்த ஜல்லடையைப் போல இருக்கக் கூடாது. முறத்தைப் போல தீய மனிதர்களை புறம் தள்ளி விட்டு நல்ல மனிதர்களோடு மட்டும் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்" எனறாராம். அதைக்கேட்ட அவருடைய சீடர்கள் ஆஹா! என்ன ஒரு அற்புதமான கருத்து என்று பெரிதும் ஆமோதித்தனராம். ஆனால் சாரதா தேவி வழக்கம் போல் அதை ஆமோதிக்காமல் இருக்க, பரமஹம்சர் சாரதா தேவியிடம்,"என்ன நான் சொல்வதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா?" என்று கேட்டதும் சாரதா தேவி," எதை தள்ளுவது? எதை சேர்த்துக் கொள்வது? எல்லோரும் நம் மக்கள் தானே? மனிதர்கள் அப்படித்தான் நன்மையும், தீமையும் கலந்துதான் இருப்பார்கள், இதில் எதைக் கொள்வது? எதைத் தள்ளுவது? எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்". என்றாராம்.

அன்னை சாரதா தேவியின் இந்த வாக்கையே புத்தாண்டு செய்தியாக்குகிறேன்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! நட்போடும், உறவோடும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்!💐🎂😊👍

26 comments:

  1. புத்தாண்டில் நல்லதொரு செய்தி.

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  2. ""மனிதர்கள் அப்படித்தான் நன்மையும், தீமையும் கலந்துதான் இருப்பார்கள், இதில் எதைக் கொள்வது? எதைத் தள்ளுவது? எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்".
    மிக அருமை! எல்லோருக்குமே இப்படித்தானே வாழ்க்கை போகிறது! பாஸிட்டிவான வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மனோ! நலம்தானே?

      Delete
  3. நல்லதொரு செய்தி பானுக்கா!!! அப்படியே ஏற்றுக் கொளல்...அருமையான செய்தி..புத்தாண்டிற்கு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. வாவ்! அருமையான தத்துவம் ..எல்லா விரல்களும் ஒரே அளவில் இருந்தா எந்த பொருளையும் தூக்க எடுக்க இயலாதே அப்படிதான் மனுஷங்களும் அவர்களின் குணங்களும் .எல்லாரையும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொளல் சிறப்பு .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

    ReplyDelete
  5. நல்லதொரு கருத்து.
    இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்
    -பாபு

    ReplyDelete
    Replies
    1. முதன் முறையாக வந்திருக்கிறீர்கள். நன்றி,மீண்டும் வருக!

      Delete
  6. சாரதா தேவிக்கு ஜே...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. ஆமாம், நம் தமிழில் கூடக் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். இதைச் சுற்றத்துக்கு மட்டும் கொள்ளாமல் அனைவருக்குமாய் எடுத்துக்கணும். அருமையான அர்த்தமுள்ள பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //நம் தமிழில் கூடக் குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள்.// உண்மைதான் கீதா அக்கா! என் அம்மா குப்பையைத் தள்ளி விட்டு கோலத்தை போட வேண்டும் என்பார். வருகைக்கு நன்றி! உடை நலத்தைப் பேணுங்கள்.

      Delete
  8. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. நலம் பெருகட்டும்..
    நன்மைகளும் சூழட்டும்..

    அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  11. மிக அருமையான செய்தி,பகிர்வு தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அனுராதா பிரேம்குமார்!

      Delete
  13. நல்ல உதாரணத்தோடு ஆரம்பித்துள்ளீர்கள். அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete