கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, January 5, 2018

அருவி (திரைப்பட விமர்சனம்)

அருவி 
(திரைப்பட விமர்சனம்)



மீண்டும் ஒரு ஆப் பீட் படம். தவறு எதுவும் செய்யாமல் ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கை அதற்குப் பிறகு எப்படி மாறிப் போகிறது என்னும் ஒரு பெரிய விஷயத்தை எடுத்துக் கொண்டதற்காக பாராட்டலாம்.

ஆனால் அதையே காட்டிக் கொண்டிருந்தால் ரொம்பவும் அழுவாச்சியாக ஆகி விடுமோ?, அப்புறம் படம் ஓடுமா? என்னும் பயம் வந்து விட்டதோ என்னவோ,  துப்பாக்கி முனையில் ஏழாம் வாய்ப்பாடு சொல்ல சொல்வதும், டம்ப் ஷராட்ஸ் விளையாடுவதுமாக சிறுபிள்ளைத் தனமாக தடம்மாறி, நம்ப முடியாமல் முடிகிறது. நடுவில் தேவை இல்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணனை வேறு சீண்டுகிறார்கள். 

ஊதினால் பறந்து விடுவது போல இருக்கும் பெண், தாத்தா காலத்து கை துப்பாக்கியை அனாயசமாக கையாளுவதும், அவளும் அவளுடைய திரு நங்கை தோழியும் தனியார் டி.வி. நிலையத்தை  மிகச் சுலபமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், மிகப் பெரிய போலீஸ் பட்டாளத்தை திணரச் செய்வதும், நோய் முற்றி ஹெச்.ஐ.வி. நோயாளிகள் பாதுகாப்பு சரணாலயத்தில் இருக்கும் பெண் அங்கிருந்து தப்பிச் சென்று எங்கேயோ ஒரு மலையில் தனியாக குடிசை கட்டிக்கொண்டு வாழ்வதாக காட்டுவதும்,அங்கிருந்த படியே வாய்ஸ் மெசேஜ் அனுப்பபுகிறாள் என்பதும்., காதில் பூ அல்ல மாலையே சுற்றி இருக்கிறார்கள். 

கதா நாயகி அதிதி பாலன் நன்றாக நடித்திருக்கிறார். திரு நங்கையை நன்றாக காண்பித்திருப்பதற்காக பாராட்டலாம். இசை பிந்து மாலினி, பாடல்கள் குட்டி ரேவதி. அறிமுக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் திறமை வாய்ந்தவராகத் தெரிகிறார். தன்னுடைய அடுத்த படத்தில் தனி மனித தாக்குதல் என்னும் சின்னத்தனங்களை விட்டு விட்டு நல்ல படங்களை கொடுப்பர் என்று எதிர்பார்ப்போம்.  

13 comments:

  1. இன்னும் படம் பார்க்க கிடைக்கவில்லை எனக்கு .நான் தமிழ் படங்கள் பார்ப்பதே வெகு அபூர்வம் .இந்த படத்தைப்பற்றி நிறைய விமர்சனங்கள் வந்திருக்கு பார்க்கணும் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏன்ஜெல். தமிழ் கன்னில்(tamil gun) பார்க்கலாமே

      Delete
  2. அருமையான திரைக் கண்ணோட்டம்

    ReplyDelete
  3. இன்னும் நல்ல பிரிண்ட் கிடைக்கவில்லை (ஹி... ஹி.... ஹி...) எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்க நேர்மையாக சில விஷயங்களைச் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் நடக்க முடியாத, நம்ப முடியாத விஷயங்களை பொய்யாய்த் திரையில் பார்ப்பதிலேதானே சந்தோஷமும் அல்ப திருப்தியும் கிடைக்கிறது? பத்து வருடம் காத்திருந்தாலும் கிடைக்காத நீதிமன்ற நீதிகள் இரண்டரை மணி நேரத்தில் கிடைத்து திருப்தியாய் வெளியில் வரலாம்! நீங்கள் சொல்லி இருக்கும் தனி மனிதத் தாக்குதல்கள் எல்லாம் தவிர்க்கப்படவேண்டியவை.

    ReplyDelete
    Replies
    1. /நடக்க முடியாத, நம்ப முடியாத விஷயங்களை பொய்யாய்த் திரையில் பார்ப்பதிலேதானே சந்தோஷமும் அல்ப திருப்தியும் கிடைக்கிறது? பத்து வருடம் காத்திருந்தாலும் கிடைக்காத நீதிமன்ற நீதிகள் இரண்டரை மணி நேரத்தில் கிடைத்து திருப்தியாய் வெளியில் வரலாம்!//

      உண்மைதான்.

      Delete
  4. இந்தப் படத்தைக் குறித்துத் தாக்கியும், ஆதரித்தும் பல விமரிசனங்கள்! புதிய பாதைனு நினைச்சு எப்படி எல்லாமோ எடுக்கின்றனர். படத்தில் கதாநாயகி வலுவில் நண்பனோடு தொடர்பு கொள்வதையும் நியாயப்படுத்தி இருப்பதாகச் சொல்கின்றனர். நானெல்லாம் தொலைக்காட்சியில் வந்தால் பார்ப்பேன். இல்லைனா இல்லை தான்! :) தனிமனிதத் தாக்குதல்கள்னு சொல்லி இருப்பது நீங்க மட்டுமே! யாரைத் தாக்கி இருக்காங்கனும் புரியலை! :)

    ReplyDelete
    Replies
    1. //தனிமனிதத் தாக்குதல்கள்னு சொல்லி இருப்பது நீங்க மட்டுமே! யாரைத் தாக்கி இருக்காங்கனும் புரியலை! :)//

      சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தும் திருமதி. லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நல்லா வெச்சு செஞ்சுருக்காங்க. பாவம்!

      Delete
  5. பொதுவாக சினிமா பார்க்கும் விரும்பமில்லை - இங்கே வாய்ப்புமில்லை. ஒரு சினிமாவுக்காக தொலைதூரம் பயணித்து பார்க்க பொறுமையில்லை.

    இந்தப் படம் குறித்து சில விமர்சனங்கள் படித்தேன். உங்கள் விமர்சனம் மாறுபட்டதாய் இருக்கிறது.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு கனமான கருத்தை எடுத்துக் கொண்டு, அதிலிருந்து தடம் மாறியிருப்பது எனக்கு ஏமாற்றம் அளித்தது.

      Delete
  6. பானுக்கா அருவி சப்ஜெக்ட் ஓகே!!! ஆனால் கதைனு பார்த்தா ஒன்னுமில்லை. இன்னும் அழுத்தமா கொடுத்திருக்கலாம். வீட்டுல புரிஞ்சுக்காம வெளில அனுப்புவது எல்லாம் ஓகே... ஆனால் அந்த டிவி காட்சி..ம்ம்ம் நிஜத்தில் அந்த எபி சோட்களே படா அறுவை நா படத்திலும் ரொம்ப இழுவை..ரொம்ப நேரம் அதுக்கே இம்பார்டன்ஸ் கொடுத்து..ஓவரா தாக்கியிருக்காங்க. படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தது. சரி ஏதோ அப்படியே கொண்டு போவாங்கனு நினைச்சா....பச் நு கடைசில போகப் போக டாக்குமென்ட்ரி மாதிரியும், ஓவரா பேச்சும், ட்ரமாட்டிக்கா இருந்துச்சு...முடிவு...ஆனா டைரக்டர்கிட்ட ரொம்ப திறமை இருக்குனு தெரியுது. டீஸண்டா எடுத்துருக்காரு...நீங்க சொல்லிருக்காப்ல திருநங்கையை ரொம்ப டீஸன்டா காட்டியிருக்கார் ரொம்பவே நல்ல விதமா காட்டியிருக்கார். அது எனக்கு ரொம்பப் பிடித்தது. ஆனா படம் அப்படி மனசுல நிக்கறா மாதிரி இல்லை...கடைசி ஸீன் கொஞ்சம் எமோஷனல்.அதிதிக்குக் குரல் கொடுத்த பொண்ணு வாய்ஸ் சூப்பரா இருந்துச்சு அதுவும் அந்தக் கடைசில பேசும் போது...வாய்ஸ்..செம.....ஆனா நிறைய ட்ரமாட்டிக்...

    அடுத்த படங்கள் நல்லா வரும்னு நம்புவோம்...

    கீதா

    ReplyDelete