கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, February 15, 2018

வேடிக்கை மனிதர்கள்

 வேடிக்கை மனிதர்கள்

நிஜம் கற்பனையை விட விநோதமானது என்பார்கள். அப்படி இரண்டு செய்திகள்:

சவுதி அரேபியாவில் ஒரு பெண் விவாகரத்து கோரியிருக்கிறாள். காரணம் அவள் கணவன் தன் தாயை விட தன்னை அதிகம் நேசித்ததாம்.

மனைவியை தாறுமாறாக நேசித்த அந்த கணவன் அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவளை வெளிநாட்டு சுற்றுலாவுக்கெல்லாம் அழைத்து சென்றிருக்கிறான். அவள் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கி தந்திருக்கிறான். மனைவியை இப்படி மாங்கு மாங்கென்று கவனித்தவன் பெற்ற தாயை புறக்கணித்ததை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. "இன்றைக்கு எனக்காக சொந்த தாயாரை கவனிக்காமல் விடும் இவன் நாளைக்கு என்னை விட அதிகமாக அவனைக்கவர்ந்த வேறு ஒரு பெண்ணைக் கண்டால் என்னை கை கழுவ மாட்டான் என்று என்ன நிச்சயம்?, இவன் நம்பத் தகுந்தவன் அல்ல" என்று கூறியிருக்கிறாள். என்ன ஒரு ட்விஸ்ட்!

சீனாவின் விமான நிலயம் ஒன்றில் பாதுகாப்பு சோதனைக்காக ஒரு பெணணிடம் அவளுடைய கைப்பையை ஸ்கேன் செய்யும் பொருட்டு எக்ஸ் ரே மிஷினில் போடச் சொல்லி இருக்கிறார்கள். எக்ஸ் ரே மிஷினில் போட்டால் தன் கைப்பையில் வைத்திருக்கும் பணம் எங்கேயாவது திருட்டுப் போய் விடுமோ என்று பயந்த அந்தப் பெண் தானே எக்ஸ் ரே மிஷினுக்குள் புகுந்து வெளி வந்திருக்கிறாள். எதிர் பக்கம் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொள்ள காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி.




28 comments:

  1. இரண்டாவது செய்தி படித்தேன். முதல் செய்தி புதுசு. அந்தக் கணவனின் அம்மாவுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும். "இப்ப என்ன பண்ணுவே... இப்ப என்ன பண்ணுவே..." ன்னு மனசுக்குள் கேட்டிருப்பங்களோ...!!

    ReplyDelete
  2. வேடிக்கையான மனிதர்கள் என்று சொல்வதைவிட வேடிக்கையான பெண்கள் என்று சொல்லி இருக்கலாம் என தோன்றியது

    ReplyDelete
    Replies
    1. மனிதர்கள் என்பதில் பெண்களும் அடங்கி விடுகிறார்களே. நன்றி!

      Delete
  3. அந்த பெண்ணின் மாமியார் கொடுத்து வைத்தவர் :)
    கைப்பையோடு மெஷினுக்குள் நுழைந்த பெண் ரொம்ப ஜாக்கிரதைசாலி .

    ReplyDelete
    Replies
    1. அந்தப்பெண் கணவனோடு சேர்ந்து வாழ்ந்து, மாமியாரை கவனித்துக் கொண்டால் நீங்கள் சொல்வதை ஓப்புக் கொள்ளலாம்.
      ஜாக்கிரதை தேவைதான், உடல் நலத்தை பணயம் வைக்கும் அளவிற்கா..? இரண்டு பெண்களிடமுமே ஏதோ தவறு இருக்கிறது. வருகைக்கு நன்றி ஏஞ்சல்!

      Delete
  4. இரண்டும் வித்தியாசமான செய்திகள்தான். 1 1/2 வருடத்துக்கு முன்பு, சௌதியில் ஒரு கான்ஃபரன்ஸ் நடந்தது. (அராபியர்களுக்குன்னு நினைக்கறேன்). அதுக்கு துபாயில் இருந்து சென்ற மூன்று அராபியர்களை (எமராத்திகள் என்று சொல்வார்கள்) அவர்கள் அழகாக இருந்ததால் (அதனால் சௌதி பெண்கள் ஆசைப்பட்டுவிடக்கூடாது என்று) கான்ஃபரன்சில் கலந்துகொள்ளவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    உலகில் எங்கும் வித்தியாசமான செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

    ReplyDelete
    Replies
    1. //உலகில் எங்கும் வித்தியாசமான செய்திகளுக்குப் பஞ்சமில்லை//
      100% உண்மை. நன்றி நெல்லை. வலைப்பூ தொடங்கினீர்களா இல்லையா?

      Delete
  5. அரபிக்காரன் புத்தி மேகமூட்டம் போன்றது எப்பொழுது சிதறிக் கலையும் என்று கணிக்கவே இயலாது.

    அந்தப் பெண்ணின் முடிவு சரியே காரணம் அவளையும் திருமணம் செய்ய அங்கு வரிசையில் ஆட்கள் உண்டுதானே...

    ReplyDelete
    Replies
    1. >>> அரபிக்காரன் புத்தி மேகமூட்டம் போன்றது எப்பொழுது சிதறிக் கலையும் என்று கணிக்கவே இயலாது..<<<

      இதைத்தான் தினமும் காண்கின்றேனே!..

      ஜி!.. மிகத் துல்லியமான கணிப்பு... பாராட்டுகள்..

      Delete
    2. அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதால் அப்படி நடந்து கொள்கிறார்களோ? வருகைக்கு நன்றி சகோ!

      Delete
  6. வித்தியாசமான பெண்கள். இரண்டுமே எனக்குப் புதிது. எக்ஸ்ரே மெஷினில் புகுந்து வந்த பெண் தைரியசாலி. :)

    ReplyDelete
    Replies
    1. சந்தேகம் கொடுத்த தைரியம். நன்றி அக்கா!

      Delete
  7. அந்த முதல் பெண்ணில் எனக்கென்னமோ சந்தேகமாகவே இருக்கு, அவவுக்கு வேறு ஏதோ பிரச்சனை இருக்கு, அதனால் இப்படி ஒரு குண்டைத்தூகிப் போட்டு கணவனைக் கழட்டி விடப் பார்க்கிறா.

    ஏன் கணவன் கவனிப்பது குறைந்திட்டால், இவ மருமகள்தானே.. மகள்போல இருந்து மாமியைப் பார்த்து, கணவன் விட்ட குறைகளை வெளியே தெரியாமல் அவவே நிவர்த்தி செய்யலாமே.. இப்படி ஒரு கணவனுக்காக.. தான் எதுவும் செய்யாமல், தன்னை பின்னாளில் விட்டிடுவாராம் அதனால விவாகரத்தாம்... தேம்ஸ்ல தள்ளோனும் இப்படியானோரை எல்லாம்:))..

    2 வது பெண்ணைப் படித்ததும்.. இப்பாடல்தான் நினைவுக்கு வருது..

    காசேதான்.. கடவுள...:)..

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் இதே கோணம் எனக்கும் இருந்தது நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

      Delete
    2. ஹா ஹா ஹா தாங்ஸ் கில்லர்ஜி.. எனக்கென்னமோ அந்தப் பெண்பற்றி நல்ல எண்ணமே எழவில்லை:).

      Delete
    3. ஆமாம், நானும் அப்படித் தான் நினைச்சேன். ஆனால் எழுத யோசனை!

      Delete
    4. முதல் பெண்ணைப்பற்றி படித்ததும் எனக்கும் அப்படித்தான் தோன்றியது. கீதா அக்கா இந்த கருத்தை கூறுவார் என்று எதிர்பார்த்தேன். Great persons think alike😊😊

      Delete
    5. மனதில் பட்டதை எழுதிக் கொண்டு தான் இருந்தேன். ஒரு சில விமரிசனங்களுக்குப் பின்னர் அப்படி எழுத இப்போதெல்லாம் தயக்கம்! :))))

      Delete
  8. முதல் செய்தி இந்தக் கால மகளிருக்கு அர்ப்பணம்.

    இரண்டாவது செய்தி திடுக்கிட வைத்தது. தன்னையே தன் பணத்திற்கு அர்ப்பணம் அது.

    ReplyDelete
    Replies
    1. //முதல் செய்தி இந்தக் கால மகளிருக்கு அர்ப்பணம்//
      அவர்கள் எடுத்துக் கொண்டால் சரி.
      வருகைக்கு நன்றி!

      Delete
  9. புருஷனே வேண்டாதபோது மாமியார் உறவு எங்கிருந்து வரும்?அதிரா.
    இரண்டு செய்தியும் சுடச்சுட. பணம் முதலிடம். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. அம்மா, என்னோட பதிவில் உங்களைக் காண்பதே அரிதாக இருக்கிறது. உடல் நலம் தானே?

      Delete
    2. //புருஷனே வேண்டாதபோது மாமியார் உறவு எங்கிருந்து வரும்?அதிரா.///

      அப்படி ஒரு நல்ல கணவரை வேண்டாம் எனச் சொல்வதிலேயே ஏதோ பிரச்சனை இருக்குது என்றேன், உண்மையில் ஒரு நல்ல பெண் எனில் இப்படிப்பட்ட ஒரு கணவரை இழக்க துணிவாவோ? கூடவே இருந்து அவரின் அம்மாவை தன் தாய் போல பராமரிப்பதுதானே அழகு..

      சிலர் இப்படி சொத்துக்காக திருமணம் முடித்து டிவொஸ் எடுத்து காசு பறிக்கின்றனர் என நினைக்கிறேன்.

      Delete
  10. ஒரு வேளை காதல் என்ற பெயரில் அன்புத் தொல்லை அதிகமாகி விட்டதோ?
    வருகைக்கு நன்றிமா.

    ReplyDelete
  11. இரண்டையும் படித்துவிட்டேன்.தற்போது இப்பதிவு மூலமாகக் கண்டேன். தேவையானவற்றைப் பகிர்ந்தமை கண்டு மகிழ்ச்சி.

    ReplyDelete