Monday, March 12, 2018

காசி யாத்திரை யூ.கே. யாத்திரை.

காசி யாத்திரை   யூ.கே. யாத்திரை.


நான் சுந்தரேசன் வீட்டை நெருங்கும் போது, சுந்தரேசனும், அவர் மனைவி சீதாவும் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு செல்லலாமா வேண்டாமா என்று கொஞ்சம் தயங்கினேன். இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, பார்க்காமல் செல்ல வேண்டாம் என்று அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினேன்.

"அடட! வா வா! எவ்வளவு நாளாச்சு?" என்று அவனும், "வாங்கண்ணா, நீங்கமட்டும் வந்திருக்கீங்க, அண்ணி வரலையா?" என்று சீதாவும் வழக்கம் போல உற்சாகமாக வரவேற்க, நானும் சகஜமாக உள்ளே நுழைந்தேன். 

எனக்கு முதலில் குடிக்க நீரும், பிறகு எங்கள் இருவருக்கும் தேன்குழல் பின்னர் எனக்கு சர்க்கரை குறைவான ஸ்டராங் காபி எல்லாம்வந்தன. சீதாவின் சிறப்பு இதுதான். சிலரைப் போல ஒவ்வொரு முறையும் எனக்கு காபி ஸ்ட்ராங்காக, சர்க்கரை குறைச்சலாக வேண்டுமென்று சொல்ல வேண்டாம். முதல் முறை சொன்னதை நினைவில் வைத்துக் கொள்வாள். 

சுந்தரேசனுக்கு எதிர்த்தாற்போல் இருந்த மேஜை மீது காசி யாத்திரை டூர் அழைத்துச் செல்லும் டிராவல்ஸ்களின் ப்ரோஷர்கள் நிறைய இருந்தன. 

"காசிக்கு போகலாம் என்று உத்தேசமா?"

ஆமாம். ஆனால் நான் மட்டும் நினைத்தால்  போதுமா? கூட வரவேண்டியவர்கள் மாட்டேன் என்று சொன்னாலென்ன செய்ய முடியும்?" என்றான்.

"நான் வர மாட்டேன்னு சொல்லவில்லை. இந்த வருஷம் வேண்டாம், அடுத்த வருஷம் வருகிறேன்னுதான் சொல்றேன்" என்று சீதா உள்ளே புகுந்தாள்.

ஓஹோ! இதுதான் இவர்களுக்குள் விவாதமா? என்று நினைத்துக் கொண்டேன். 

"அது என்ன அடுத்த வருஷம்?" என்று நான் கேட்டதும், "கேளு, நீயே கேளு என்ற சுந்தரேசன், தொடர்ந்து, "இந்த வருஷம் யூ.கே. போகணுமாம்..."  

"யூ.கேயா..?" என்னையே கொஞ்சம் தூக்கிப் போட்டது இந்த பதில்.. "யூ.கேயில் யார் இருக்கிறார்கள்?"

இவளோட பெரியப்பா பையன் இருக்கிறான். இந்த முறை விடுமுறையில் வந்தவன் சும்மா இல்லாமல், நீ அங்க வந்து விடு, உனக்கு ஊரை சுற்றிக் காட்டுவது என் பொறுப்பு. லண்டன் மட்டும் இல்ல, பாரிஸ், சுவிச்சர்லாந்து என்று எங்கெல்லாம் போக முடியுமோ அங்கெல்லாம் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டான்.   அவனோட சிஸ்டர் போகப்போகிறாளாம், தானும் போகணுமாம்.." 

"பையன் வேறு, போய்ட்டு வாங்கோ, யாரோ கூப்பிடும் பொழுது ஏன் சான்சை மிஸ் பண்ணனும்? என்று சொல்லி விட்டான். ஒன்வே டிக்கெட் அவன் ஸ்பான்சர் பண்ணுகிறானாமாம்.கேட்கணுமா..?"

"அவன் உங்களையும் சேர்த்துதான் சொன்னான்.  ஒன்வே உங்களால் போட முடியாதா?" 

சுந்தரேசன் இதற்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்க, சீதா தொடர்ந்தாள். " முதலில் ராமேஸ்வரம், பின்னர் அலகாபாத், காசி,கயா, அங்கு செய்ய வேண்டிய சடங்குகளுக்கான செலவு, பின்னர் மீண்டும் ராமேஸ்வரம், பின்னர் வீட்டில் சமாராதனை இவையெல்லாம் செய்து முடிக்க குறைச்சலாகவா செலவாகும்? அதை யூ.கே. ட்ரிப்புக்கு பயன் படுத்திக் கொள்ளலாமே..?"

இப்போது என் நண்பனுக்கு உதவலாம் என்று நினைத்த நான், "அது சரிம்மா, ஆனா ஒரு விஷயம் இருக்கு, காசி யாத்திரை எல்லாம் சீக்கிரம் செய்து விடுவது நல்லது. அங்கு செய்ய வேண்டிய சடங்குகளை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக செய்ய வேண்டும். மேலும், அங்கெல்லாம் நிறைய படிகள் இறங்கி, ஏறி, அதிகம் நடக்க வேண்டியிருக்கும். அதற்கெல்லாம் உடம்பில் தெம்பு வேண்டாமா?"

சீதா உடனே, உடம்பில் தெம்பு இல்லா விட்டாலும் பரவாயில்லை" என்று தொடங்கியதும், "என்ன சொல்ல வருகிறாள் இவள்?" என்று ஆலோசித்தேன். அவளோ தொடர்ந்து," காசிக்கு போக முடியாவிட்டாலும், காசிக்கு நிகரான ஷேத்திரங்கள் என்று நம் நாட்டில் பல ஷேத்திரங்கள் இருக்கின்றன. எங்கெல்லாம் நதிகள் கிழக்கு மேற்காக பாயாமல், உத்திர வாஹினியாக, அதாவது வடக்கு தெற்காக பாய்கிறதோ, அவை எல்லாம் காசிக்கு இணையான ஷேத்திரங்கள்தான். அங்கு பிதுர் கடன் செய்யலாம். திருவையாறு அப்படிப்பட்ட ஒரு ஷேத்திரம். பாபநாசம், பவானி என்னும் முக்கூடல் திரிவேணி சங்கமத்திற்கு இணையானது. அந்த மாதிரி யூ.கேவிற்கு இணையாக ஒரு இடம் நம் ஊரில் உள்ளதா?" என்று கேள்வி கணையை வீச, நானும், சுந்தரேசனும் வாயடைத்துப் போனோம். 

அப்புறம் என்ன, இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், "ஃபாசன் யுவர் சீட் பெல்ட்" என்னும் அறிவிப்புக்கு கட்டுப்பட்டார்கள்.    

21 comments:

 1. சுந்தரேசனும், சீதாவும் நல்லபடியாக யூ.கே. சென்று வர வாழாத்துகள்.

  அவர்கள் ஜேம்ஸ் ஊரணி பக்கம் போகாமல் நல்லபடியாக ஊர் திரும்பணும்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஹா அப்படி போடுங்க கில்லர்ஜி!!!!! வாசிக்கும் போது தோனிச்சு...பூஸார் நினைவு..

   கீதா

   Delete
  2. @கில்லர்ஜி: உங்கள் வாழ்த்த்துக்களை சுந்தரேசன்,சீதா தம்பதியிடம் தெரிவித்து விடுகிறேன்.

   கீதா நீங்கள் ரசித்து சிரிப்பது என் கதையா அல்லது கில்லர்ஜியின் பின்னூட்டத்தையா?

   Delete
 2. அதானே! கில்லர்ஜி சொல்வது போல தேம்ஸ் பக்கம் போகாமல் வரணும்! :))))) அடுத்த வருஷம் காசி யாத்திரையும் அமைய இப்போதே வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்தையும், எச்சரிக்கையையும் சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.

   Delete
 3. ஹா... ஹா... ஹா... மனைவி சொல்லே மந்திரம்.

  கில்லர்ஜி கமெண்ட் சூப்பர்!

  ReplyDelete
 4. பயணம் சிறப்பாக இடம்பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 5. காசி யாத்திரை முக்யம் இல்லையோ!...

  எப்படியோ அடுத்த வருஷமாவது நல்லபடியாக விஸ்வநாதர் தர்சனம் கிடைக்கட்டும்!...

  ReplyDelete
  Replies
  1. ஓவ்வொருவருக்கு ஒவ்வொன்று முக்கியம்.நன்றி துரை சார்!

   Delete
 6. ..பான் வாயேஜ்!! ரெண்டு பேருக்கும்...நல்ல காலம் சுந்தரேசனுக்கும், சீதாவுக்கும் நம்ம பூஸாரை தெரியாதென்று நினைக்கிறேன்...!!! ஆ இவங்க காசிக்குப் போனா பூஸாரும் சேர்ந்துடுவாங்க..காசிக்கு போறேன் போறெனு வடிவேலு ஸடைல்ல சொல்லிட்டுருக்காங்க...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. Your wishes will be conveyed to the concerned people.

   Delete
 7. ஆஆஆவ்வ்வ்வ் மீ லாண்டட்:)... அதாரது தேம்ஸ் ஐப் பற்றியும் காசியைப் பற்றியும் பேசுறதூஊஊ

  https://www.google.co.uk/search?q=cat+has+gun&safe=strict&client=safari&hl=en-gb&prmd=isvn&source=lnms&tbm=isch&sa=X&ved=0ahUKEwjd8MjlmOzZAhVJD8AKHWGMC8YQ_AUIESgB&biw=414&bih=622#imgrc=hIbQUX8yVMJ-JM:

  ReplyDelete
  Replies
  1. ஜேம்ஸ் :) டங் ஸ்லிப்ட் தேம்ஸ் uk விற்கே சொந்தம் ஸ்கொட்டிஷ் காரங்க உரிமை கொண்டாடக்கூடாது ரிவர் தேம்சுக்கு :) எங்க பக்கத்து சிட்டிலருந்து ஸ்டார்ட் ஆகிறது தேம்ஸ் நதி

   Delete
  2. வாங்க அதிரா! ஏதோ பெரிசா சொல்லப்போறீங்கனு நினைச்சா, ஏதோ லிங்கை தந்து விட்டு ஓடி விட்டீர்களே..??

   Delete
 8. /அந்த மாதிரி யூ.கேவிற்கு இணையாக ஒரு இடம் நம் ஊரில் உள்ளதா?" என்று கேள்வி கணையை வீச, நானும், சுந்தரேசனும் வாயடைத்துப் போனோம். //

  சீதா அவர்கள் லண்டனில் இறங்கினதும் சொல்வாங்க //அட நம்ம தி நகர் அட நம்ம பாரீஸ் கார்னர் மாதிரின்னு :)

  சில இடங்கள் லிட்டில் இந்தியா லிட்டில் பஞ்சாப் ஆகிருச்சு :)

  சீதாவும் சுந்தரேசனும் ஸ்வாமிநாராயன் மந்திர் வேல்ஸ் முருகன் கோவில் திருப்பதி வெங்கடாஜலபதியெல்லாம் தரிசிச்சிட்டு வரட்டும் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சொல்லிடுங்க


  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், அவர்கள் ஒரு வேளை உங்களை சந்தித்தால், உதவுங்கள்.

   Delete