கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 2, 2018

நன்னம்பிக்கை!

நன்னம்பிக்கை!

“இங்க பாரு, உன் குழந்தைக்கு உடம்பு சரியில்லைனு இங்க வந்து சொல்லிகிட்டு இருக்காத..”

ஜனனியின் குரல் ஓங்கி ஒலித்தது கிரீஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சாதரணமாக ஜனனி வேலைக்கரர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள மாட்டாள்.

பாத்திரம் சரியாக தேய்க்கவில்லை என்றால் கூட,”என்ன மீனா இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கியா? பாத்திரத்தில் டீ கறை போகவே இல்லை..” என்றும், “கொஞ்சம் அந்த மூலையையும் பெருக்கக் கூடாதா?” என்றும் கனிவு பொங்கும்.

அப்படிப்பட்டவள் இப்போது ஏன் கோபப்பட வேண்டும்? மீனா சென்ற பிறகு கிரீஷ் ஜனனியிடம் தன் சந்தேகத்தை கேட்டான். “அவள் எப்போதெல்லாம் தன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறாளோ, அப்போதெல்லாம் நம்ப அனன்யாவுக்கும் உடம்புக்கு வந்து விடுகிறது.”

“ஏதோடு எதை முடிச்சுப் போடுகிறாய்?”

“ஏதோடும், எதையும் முடிச்சுப் போடவில்லை, நான் அனுபவித்ததை சொல்கிறேன்”

கிரீஷ் ஒரு வாக்குவாதத்திற்கு தயாராக இல்லாததால் வாயை மூடிக் கொண்டான். ஆனால் அன்று மாலை குழந்தைக்கு லேசாக மூக்கு ஒழுக ஆரம்பித்து அச்சு, அச்சு என்று தும்மினாள், நடு இரவில் காய்ச்சல் வந்து விட்டது.

காலையில் கால்பால் சிரப்பை குழந்தைக்கு கொடுத்துக் கொண்டே,”நான் சொன்னேனா இல்லையா?” என்றாள் ஜனனி.

அவளின் இப்படிப்பட்ட நம்பிக்கைகளை எப்படி மாற்றுவது என்று கிரீஷுக்கு புரியவில்லை. அவன் மாலை வீடு திரும்பும் பொழுது, எதிரே மீனாவைப் பார்த்தான். வண்டியை நிறுத்தி,”என்ன மீனா? குழந்தைக்கு உடம்பு தேவலையா?” என்றான். “சரியாயிடுச்சு அண்ணா,வீட்டுல விளையாடிக்கிடிருக்கு”

“நல்லது, ஜாக்கிரதையா பாத்துக்கோ,” என்றவன் தொடர்ந்து, “குழந்தைக்கு உடம்பு சரியில்லைனா அதை ஏன் ஜனனி கிட்ட சொல்ற?” என்று கேட்டதும்,”வேற ஒண்ணும் இல்லண்ணா, “அக்கா கைல சொன்னா சீக்கிரம் சரியாகப் போய் விடும், அதான்..” என்று தன் கழுத்து மணிமாலையை வருடிய படி மீனா கூற, வாயடைத்தான் கிரீஷ். 

24 comments:

  1. ஆஹா !! அழகான குட்டி கதை ...ஹ்ம்ம் அவரவர்க்கு ஒவ்வொரு நம்பிக்கை .சொன்னா சுகமாகும்னு மீனாவின் நன் நம்பிக்கைதான் க்ரேட் .

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இவ எப்பூடி இவ்ளோ ஸ்பீட்டா ஓடுறா:))

      Delete
    2. வாங்க ஏஞ்சலின், ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். நன்றி. பூரண நலமடைந்து விட்டீர்களா?

      Delete
    3. ஏன்ஜெல், மற்றும் அதிரா சமூகத்திடம் ஒரு கேள்வி. என் மகன் இப்போது யூ.கே. வந்திருக்கிறார்(பர்மிங்கஹாம்). அங்கு உ.கி., காரட்,காலிபிளார் போன்றவை தவிர நம் நாட்டு கறிகாய்கள் கிடைக்காதா? வெண்டைக்காய்க்கும், கத்தரிக்காய்க்கும் மிகவும் மிகவும் ஏங்கிப் போய் விட்டான்.

      Delete
    4. பூஸாரை மிஞ்னிய ஏஞ்சலுக்கு வாழ்த்துகள்! ஹிஹிஹி..பூஸாருக்கு வயசாகிப் போச்சு பாருங்க ஏஞ்சல்!!!

      கீதா

      Delete
    5. பானுக்கா பர்மிங்கஹாமில் ஃபார்மார்ஸ் மார்கெட்டில் கிடைக்கும். அங்கு நிறைய ஃபார்மர்ஸ் மார்க்கெட் உண்டு என்று சொல்லிக் கேட்டிருக்கேன். முயற்சி செய்து பார்க்கச் சொல்லுங்கள் ஃப்ரெஷாவும் கிடைக்குமாம்...

      கீதா

      Delete
    6. பானுமதி அக்கா.. பேமிங்காமில் தமிழ்/ஏசியன் கடைகள் பல இருக்கின்றன.. அவர் புதிசு என்பதால் அறிந்திருக்க மாட்டார்ர்.. பேமிங்காமில்தான் திருப்பதிக் கோயில் இருக்கு.. கோயிலுக்கு முன்னாலேயே இலங்கைத்தமிழ்க்கடை இருக்கு அங்கு எல்லாமே கிடைக்கும் எனச் சொல்லுங்கோ.

      Delete
    7. அக்கா இப்போ கை பரவால்லை .

      எல்லா tesco சூப்பர் மார்கெட்லயும் வெண்டைக்கா ,கத்திரி bottle gourd லாம் கிடைக்கும் .

      Birmingham லிட்டில் ஆசியானு லிட்டில் சைனா என்று சொல்வாங்க . asian grocery shops னு பார்க்க சொல்லுங்க அதில் ஸ்ரீலங்கன் shops உம் வரும் ..அங்கே கிடைக்காத பொருளில்லை .இந்திய பாகிஸ்தானி கடைகளிலும் எல்லா நம்மூர் வெஜிடபிள்ஸும் கிடைக்கும்

      Delete
    8. Once he went to that temple. I will tell him. Thank you Adhira.

      Delete
  2. ஒரு பக்ககதை நிறைவாக இருக்கிறது.

    இங்கு நம்பிக்கை கதை. எனது தளத்தில் சந்தேகக்கதை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி. நன்றி!
      //இங்கு நம்பிக்கை கதை. எனது தளத்தில் சந்தேகக்கதை.// ஹாஹாஹா! இந்த முரண்தான் வாழ்க்கையின் சுவாரசியம் இல்லையா?

      Delete
  3. ஹா ஹா ஹா ஒருவருக்கு இன்பத்தைக் கொடுப்பது இன்னொருவருக்கு துன்பத்தைக் கொடுக்கிறதே.. அழகிய சிந்தனை... மிக அருமை... பானுமதி அக்கா பரிசு உங்களுக்கே:))

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிரா!
      சரி சரி பரிசை சீக்கிரம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுங்கள். ஹாஹா!

      Delete
    2. ஹா ஹா ஹா ஹா பரிசா!! அதெல்லாம் அதிரா மூட்டை கட்டி இன்கம் டாக்ஸுக்குப் பயந்து கொண்டு ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில் ஒளித்து வைத்திருக்கிறார்....ஹா ஹா ஹா...

      கீதா

      Delete
  4. ஹா.... ஹா... ஹா... நோய் டிரான்ஸ்ஃபர்!!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தீர்களா இல்லையா? அதுதான் கேள்வி.

      Delete
  5. அக்கா இது ஒவ்வொருததரது நம்பிக்கை. ஒருத்தருக்கு அவரிடம் சொன்னால் நோய் குணமாகிறதுனு மற்றொருவருக்கு சொன்னால் நோய் வந்துவிடுகிறது...நல்லாருக்கு கதை

    இதெல்லாம் இருக்கட்டும் கல்கிக்கு எழுதறீங்களா இல்லையா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், என் மீது உங்களுக்கிருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி கீதா. என் கதையை படிக்கும் பாக்கியம் கல்கி வாசகர்களுக்கு இருந்தால் நடக்கும்(கொஞ்சம் இடம் கொடுத்து வீடாக கூடாதே..).爛

      Delete
  6. சிலரது நம்பிக்கைகள் காக்காய் உட்காரப் பனம்பழம்விழும்கதைதான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால், அதைச் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும்.வருகைக்கு நன்றி.

      Delete
  7. அருமை பானு மா. எனக்கும் இது போல நம்பிக்கைகள் உண்டு ஹி ஹி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி அக்கா. என் அக்காக்களுக்கு நிறைய உண்டு. எனக்கும் கொஞ்சம் உண்டு. மாற்றிக் கொள்ள முயற்சி செய்வேன்.

      Delete
  8. ம்ம்ம்ம்ம், சொன்னாலே நோய் வருது என்பதும் ஒரு வகை நம்பிக்கை போலும். ஆனாலும் சில, பல சமயங்களில் காலை வேளையில் நல்ல செய்திகள் கேட்பது தான் பலரும் விரும்புவார்கள்.

    ReplyDelete