கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, November 13, 2018

மசாலா சாட்

மசாலா சாட்  

பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிறைந்த அந்த நகைச்சுவை கேட்க பிடிப்பதில்லை. எனவே பாடல்களுக்குப் பிறகு திருச்சி கே. கல்யாணராமனின் உபன்யாசங்களை போட்டேன். நகைச்சுவையாக, ஜனரஞ்சகமாக, புது விஷயங்களையும் சொல்கிறார். அவ்வப்பொழுது தலை காட்டும் சுய பிரதாபத்தை கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி போகும் வழிக்கும் புண்ணியம்!.




பாடல்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என்று எல்லோருடைய பாடல்களும் கேட்டோம். இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய சில பழைய பாடல்களையும், ஏ.ஆர்.ஆரின் இசையில் அவர் எழுதிய 'மரங்கள் கேட்டேன் வனமே தந்தனை..' பாடலையும் கேட்ட பொழுது, அதை முழுமையாக ரசிக்க முடியாமல் கடலை சாப்பிடும் பொழுது வாயில் அகப்பட்டு சுவையைக் கெடுக்கும் சொத்தைக் கடலையைப் போல 'மீ டூ' விஷயம் செய்தது.  இவ்வளவு நல்ல கவிஞரா இத்தனை சின்னத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்? என்று தோன்றியது.

                                                                         


அதே நேரத்தில் கண்ணதாசனின் நினைவும் வந்தது. அவருக்கு மது மட்டுமல்ல போதை மருந்து பழக்கமும் இருந்தது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். பெண்கள் விஷயத்திலும் பலவீனமானவர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர்மீது யாருக்கும் வெறுப்பு வந்ததில்லை. 

'போடா போ, காமுகனும் மாண்டான், 
கடவுள் நெறி பேசும் மாமுனியும் மாண்டான்
நம்மை நாம் பாப்போம்  நமதுடலை 
பெண் பார்ப்பாள்..'

'பட்ட கடன் தீர்ப்பதற்கு 
கட்டிக்கொண்ட பெண்களுக்கு 
கொட்டித் தந்த இன்பம் ஒரு கோடி, அதில் 
ஒட்டி வந்த ஞானம் ஒரு பாதி ..'

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 
ஒரு கோல மயில் என் துணையிருப்பு..'

என்றெல்லாம் வெட்ட வெளிச்சமாக, திறந்த புத்தகமாக அவர் வாழ்ந்தது ஒரு காரணமோ?

தீபாவளிக்கு இனிப்புகள் செய்வதும், புத்தாடை அணிந்து கொள்வதும், பட்டாஸு வெடிப்பதும் மட்டுமா சம்பிரதாயம்? வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதும் சம்பிரதாயம்தான். அந்த வகையில் 'பதாயி ஹோ' படம் பார்க்கச் சென்றோம். என்னைத் தவிர எல்லோருக்கும் ஹிந்தி புரியும் என்பதாலும், நகைச்சுவை படம் என்பதாலும் இதைத் தேர்ந்தெடுத்தார்கள். ஹிந்தி படங்களில் கதை என்ன என்று புரிந்து விடும். வசனங்களும் ஓரளவு புரிந்து விடும். நகைச்சுவை காட்சிகளின் பொழுதுதான் என் நிலைமை பரிதாபமாகி விடும். 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் அரங்கமே அதிர்ந்த ஒரு நகைச்சுவை காட்சியில் நான் மட்டும் கலந்து கொள்ள முடியாமல் பரிதாபமாக உட்கார்ந்திருந்தேன்.



திருமண வயதில் ஒரு மகனையும், பிளஸ் டூ படிக்கும் இன்னொரு மகனையும் வைத்துக் கொண்டு மீண்டும் கர்ப்பமாகும் ஒரு மிடில் கிளாஸ் தாய். முதலில் அதை ஏற்றுக்கொள்ள 
முடியாமல் அவமானத்தில் மறுகும் அந்தக் குடும்பத்தினர் பின்னர் மனம் மாறுவதுதான் திரைப்படம். நீனா குப்தா(தாய்), சுரேகா சிக்ரி(மாமியார்) போன்ற தெரிந்த முகங்கள் இருக்கின்றன.  நீனா குப்தாவின் கணவராக வருபவர் நன்றாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியில் நகைச்சுவை அதிகம் போலிருக்கிறது. எல்லோரும் அதிகம் சிரித்தார்கள். நான் இதை தமிழில் எடுத்தால்(நிச்சயம் எடுத்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது) யார் யாரை போடலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தேன். 

என் மகள் இது 'ஃபாதர் ஆஃப் த பிரைட் பார்ட் டூ' வை உல்ட்டா செய்திருக்கும்   படம் என்றாள். நான் FOB part one பார்த்திருக்கிறேன். பார்ட் டூ பார்க்க வேண்டும்.  

35 comments:

  1. நல்லதொரு கலந்துரையாடலைப் போல அழகிய பதிவு....

    அந்த டைமண்ட் கவிஞர் -
    ஜெமினி என்ற படத்திற்காக எழுதிய ஓ.... பாட்டும் அதற்கான அநாகரிக ஆட்டமும் கேவலம்..மகா கேவலம்...

    அந்தப் பாடலின் ஆபாச வரிகளால்
    இவர் எழுதிய சில நல்ல வரிகளையும் அழித்து விட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranNovember 14, 2018 at 7:51 PM

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      //அந்தப் பாடலின் ஆபாச வரிகளால்
      இவர் எழுதிய சில நல்ல வரிகளையும் அழித்து விட்டேன்...//
      இது சரியில்லையே சார். கடல் என்றால் முத்தும் இருக்கும், சிப்பியும் இருக்கும்.

      Delete
  2. கண்ணதாசன் எந்த காலகட்டத்திலும் தன்னை உத்தமன் என்று சொல்லிக்கொண்டது இல்லை.

    அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய பிறகும்.

    வைடூரியமுட்டு பசுத்தோல் போர்த்தியபுலி மீட்டுவை தவிர்த்து சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Bhanumathy VenkateswaranNovember 14, 2018 at 7:56 PM

      வைடூர்யமுட்டு... ஹா ஹா ஹா! உங்கள் பாணி தனி ஜி. வருகைக்கு நன்றி.

      Delete
  3. எதோ புது ரெஸிப்பினு ஓடி வந்தேன் :)
    ஹ்ம்ம் எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் ..இது தான் நிஜம் பலர் முகமூடி போட்டும் சிலர் தைரியமா கழட்டிட்டு நான் இப்படிதான்னும் வாழறாங்க ..

    நீனா குப்தா ?? நம்ம மைண்ட் ஸ்கூல் டேஸ்க்கு போகுது :) Mendel லா கு ஒரு பொண்ணு நீனா விவியனை எக்ஸ்சாம்பில் குடுத்து வாங்கி கட்டிக்கிட்டா :)
    இங்கே வெளிநாட்டில் மூத்த பிள்ளைக்கும் அடுத்த பிள்ளைக்கும் பலருக்கு 20 வருஷ இடைவெளி கூட இருக்கு ..
    தமிழில் எடுத்தால் மே பி ஊர்வசி :)



    ReplyDelete
    Replies
    1. நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன் ஏஞ்சல்....டாஷ் போர்ட்ல பார்த்ததும்.. ஆனா தம்பட்டம்னு பார்த்ததும் கண்டிப்பா இருக்காதுனு தெரிஞ்சுருச்சு...ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. Bhanumathy VenkateswaranNovember 14, 2018 at 8:03 PM

      ஏஞ்சலை எப்படி வரவழைப்பது என்று தெரிந்து விட்டது. //இங்கே வெளிநாட்டில் மூத்த பிள்ளைக்கும் அடுத்த பிள்ளைக்கும் பலருக்கு 20 வருஷ இடைவெளி கூட இருக்கு ..// அவர்கள் அவர்களுக்காக வாழ்கிறார்கள். நாம் குடும்பத்திற்காக, உறவுக்காக, ஊருக்காக எல்லாவற்றுக்குமாக வாழ்கிறோம்.

      Delete
    3. //தமிழில் எடுத்தால் மே பி ஊர்வசி :)// யெஸ், நானும் அப்படித்தான் நினைத்தேன்.

      Delete
    4. Bhanumathy VenkateswaranNovember 14, 2018 at 8:08 PM

      //ஆனா தம்பட்டம்னு பார்த்ததும் கண்டிப்பா இருக்காதுனு தெரிஞ்சுருச்சு// என்ன கீதா இப்படி சொல்லிவிட்டீர்கள்? நானும் ரெஸிப்பீஸ் பகிர்ந்திருக்கிரேனே.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. நம் நாட்டிலும் இந்த வயது வித்தியாசம் உண்டு. உதாரணமாக என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் இடையே 22 வருஷ வித்தியாசம். என் அத்தை பிள்ளைகள் எல்லோரும் அப்பாவை விடப் பெரியவர்கள்! :))) அதே போல் என் கணவருக்கும் அவருடைய கடைசித் தம்பிக்கும் 22 வயது வித்தியாசம். என் பெரிய நாத்தனார் பெண்கள் என் கடைசி மைத்துனரை விடப் பெரியவங்க! :)))) என் கணவர் வேலைக்குப் போய் 3 வருஷம் கழிச்சுப் பிறந்தார் என்பார்கள். எங்க வீட்டிலும் எங்களோட பெரிய பேத்திக்கும் (பெண் வயிற்றுப் பேத்தி) அடுத்த 2 ஆவது பேத்திக்கும் 10 வயசு வித்தியாசம். :)))))

      Delete
    7. இந்த மாதிரிப் படங்களை எல்லாம் மூலத்தில் எடுத்ததைப் பார்ப்பதே நல்லது. மணிச்சித்திர தாழ் படம் பார்த்தப்போ இருந்த அருமையான அனுபவங்கள் ரஜினி நடிச்சு வெளிவந்த படத்தில் இல்லை! அது என்ன படம்? சந்திரமுகி? ஜோதிகாவை மையமாக வைச்சு எடுத்துட்டு ஒப்புக்கு நயன் தாரா தான் கதாநாயகினு சொல்லி இருப்பாங்க! மலையாளத்தில் ஷோபனாவின் நடிப்பைப் பார்த்துட்டு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! பாபநாசம் படம் மலையாளத்தில் பார்த்ததும் தான் தமிழின் குறைகள் புலப்பட்டன. இதைத் தமிழில் எடுத்தால் கொலை செய்துவிடுவார்கள். இயல்பாக வராது.

      Delete
  4. பானுக்கா ஹிந்தி காமெடி எனக்கு இதே நிலைமைதான்...காட்சிகள் புரியும் ஆனால் காமெடி ஹிஹிஹி...

    தமிழ்ல எடுத்த குளறுபடி பண்ணிட மாட்டாங்களோக்கா...!!!

    இருக்கலாம் கண்ண தாசன் திறந்த புத்தகமாக இருந்து அதை ஓப்பனாக வெளிப்படுத்தியதால் தான்...வைரமுத்து எல்லாம் ஹிப்போக்ரைட்ஸ்..

    இந்த மீ டூ இப்போது வேறு விதமான எதிவினைகளையும் ஏற்படுத்துகிறது. நேற்று என் தோழி அழைத்திருந்தாள் அவள் சொன்னது அவள் கணவர் 4 ஆம் வகுப்பு படிக்கும் தன் தங்கையின் குழந்தை ஒரு அறிவு பூர்வமான அதே சமயம் லாஜிக்கல் விடை சொன்ன போது ஆ செல்லமே சமத்துடி அறிவாளி என்று அவளைப் பாராட்டிக் கொண்டு கட்டி கன்னத்தில் கிள்ளி முத்தமிட்டு - டைரக்டாகக் கூட இல்லை - தட்டிக் கொடுத்தாராம். உடனே அக்குழந்தை தன்னை ஃபோர்சிபிளாக விடுவித்துக் கொண்டு...மாமா யு ஆர் செக்ஷுவலி அப்யூசிங்க் மீ என்று சொன்னதாம்...அவர் ஷாக்காகி விட்டாராம்....முதலில் விளையாட்டு என்று நினைத்தால்...அது விளையாட்டு இல்லை சீரியஸாக என்று தெரிந்ததும் அவர் மிகவும் மனம் வேதனை அடைந்துவிட்டாராம்...தோழி சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டாள்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //தமிழ்ல எடுத்த குளறுபடி பண்ணிட மாட்டாங்களோக்கா...!!!// அது எடுப்பவரை பொருத்தது.

      Delete
    2. மீ டூ பற்றி நீங்கள் சொல்லியிருக்கும் விஷயம் சரிதான். அந்த குழந்தைக்கு அதன் அம்மா, குட் டச்,பேட் டச் பற்றி சொல்லிக் கொடுத்திருந்தால், இப்போது எல்லோரையும் அப்படி சொல்லக்கூடாது என்றால் அந்தக் குழந்தை குழம்பி விடும்.

      Delete
  5. குட் மார்னிங்! கண்ணதாசன் பற்றிச் சொல்லி இருப்பது சிறப்பு. எடுத்துக் போட்டிருக்கும் வரிகளும்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ஸ்ரீராம். அந்த வரிகளுக்கு கண்ணதாசனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

      Delete
  6. நீங்கள் சொல்லி இருக்கும் ஹிந்திப் படம் தெரியவில்லை. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நான் 102 நாட் அவுட் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சென்னையில் இருந்தப்ப கோடம்பாக்கம் போயிருந்தப்ப...மச்சினர் இந்த 102 நாட் அவுட் வைத்திருந்தார் கணினியில்...அப்ப நைட் போடறேன் ஆனா நீங்க சாமியாடிடுவீங்களே நு சொல்லித்தான் போட்டார். நானும் பார்த்தேன் பாதி கூட தேறலை கண் சொக்கித் தூங்கிவிட்டேன்..ஆனால் பார்த்த வரை சிரித்து ரசித்தேன்.கொஞ்சம் ஹிந்தி புரிந்தது....இங்கிலிஷ் சப்டைட்டிலும் இருந்தது..

      நல்ல படம்..முழுதும் பார்க்கணும்...மைத்துனர் இங்க வருவார் இப்ப அப்ப கொண்டு வந்து இதுல காப்பி பண்ணிக்கலாம்னு சொல்லிருக்கார்...பார்க்கணும்..

      கீதா

      Delete
    2. 'பதாயி ஹோ' சென்னையில் ரிலீஸ் ஆகவில்லையா? அமேசான் ப்ரைமில் வந்தால் பாருங்கள்.

      Delete
  7. அக்கா அப்ப இனி கட்டிப்பிடி வைத்தியம் செல்லுபடியாவாதோ!! ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. @கீதா: இப்படி ஒரு விஷயம் இருக்கோ?

      Delete
  8. தன் பலவீனத்தை அறிந்தவரே மிகச் சிறந்த பலசாலி... கண்ணதாசன் அவர்கள் அப்படி...!

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமில்லை. அவர் ஒரு குழந்தை(மன)கவிஞர். வருகைக்கு நன்றி டி.டி.

      Delete
  9. மசாலா விஷயங்கள் இருப்பதால் மசாலா சாட் ஆக்கிட்டீங்க போல! அருமையா இருக்கு. சுருக்கமாயும் நறுக் கெனவும் சொல்லிடறீங்க. நாங்களும் பிரயாணங்களின் போது பாடல்கள் கேட்போம். ஆனால் அந்த டிரைவருக்குப் பிடிச்சது தான் வரும்! :) நேயர் விருப்பம் எல்லாம் இல்லை. அம்பேரிக்காவில் பிள்ளையோடு போறச்சே பிள்ளைக்குப் பிடிச்சதும் மாட்டுப் பொண்ணோடு போனால் அவளுடைய விருப்பங்களும் பெண், மாப்பிள்ளை, பேத்திகளோடு போனால் அவங்க விருப்பமும் கேட்பது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. >>> அவங்க - அவங்க விருப்பமும் கேட்பது.. <<<

      அவங்க விருப்பமே நம்மோட விருப்பம்..ன்னு ஆகிடணும்...
      ஒரு நிலைக்கு அப்புறம் நமக்கு..ன்னு விருப்பம் என்ன இருக்க முடியும்!..

      Delete
    2. பாராட்டுக்கு நன்றி அக்கா. //நாங்களும் பிரயாணங்களின் போது பாடல்கள் கேட்போம். ஆனால் அந்த டிரைவருக்குப் பிடிச்சது தான் வரும்! :)// ஹா ஹா ஹா!

      Delete
  10. 102 நாட் அவுட்டும் பார்க்கலை! பதாயி ஹோவும் பார்க்கலை! இந்தக் கேபிளை எடுத்துட்டு செட் டாப் பாக்ஸ் கொண்டு வந்தப்புறமாச் சானல்கள் போடவும் வரலை. வர சானல்கள் சகிக்காமலும் இருக்கின்றன. ஆகவே படங்கள் பார்த்தே இரண்டு வருஷங்கள் ஆகின்றன. அம்பேரிக்காவில் பார்த்தது தான்! தீபாவளி அன்னிக்கு 96 பார்க்கலாம்னு உட்கார்ந்தா வசனமே காதில் விழலை! பட்டாசுச்சப்தம். இரவு பனிரண்டு வரைக்கும்! :))))) தொலைக்காட்சியை அணைச்சுட்டோம். காலையில் தொலைக்காட்சி பார்ப்பதோ, இந்தப் (பா)பட்டிமன்றங்கள் பார்ப்பதோ பிடிப்பதில்லை.டாக்டர் அறிவொளியும், குன்றக்குடி அடிகளாருமா வந்து பட்டிமன்றம் நடத்தறாங்க! :(

    ReplyDelete
  11. >> டாக்டர் அறிவொளியும் குன்றக்குடி அடிகளாருமா வந்து பட்டிமன்றம் நடத்தறாங்க!:( <<

    நல்லாச் சொன்னீங்க!...
    அவங்க நடத்தின அருமையில நூற்றுல ஒரு சதம் கூட கிடையாது இப்போதெல்லாம்!..

    ReplyDelete
  12. //அவங்க நடத்தின அருமையில நூற்றுல ஒரு சதம் கூட கிடையாது இப்போதெல்லாம்!..// அது க்லாஸ்! இது மாஸ்.

    ReplyDelete
  13. மிக அருமை பானு மா. சாட் சுகமா இருந்தது. பெண்ணுடன் போனால் ஜாஸ் இசை. மருமகனுடன் சென்றால் 80 ஸ் இளையராஜா.

    கண்ணதாசன் சொன்ன விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
    வாழ்ந்து மறைந்தும் விட்டார்.

    குட் டச் . விஷயத்தினால் எந்தக் குழந்தையையும் நான் இங்கே தொடுவதில்லை.
    எல்லாக் குழந்தைகளும் மிரளுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி அக்கா! நன்றி. //குட் டச் . விஷயத்தினால் எந்தக் குழந்தையையும் நான் இங்கே தொடுவதில்லை.
      எல்லாக் குழந்தைகளும் மிரளுகின்றன.// மேற்கத்தியர்கள் இதில் மிகவும் தீவிரமாக இருப்பார்களே. ஒரு முறை புட்டபர்த்தியில் வரிசையில் தனக்கு முன் இருந்த ஒரு குழந்தையின் கன்னத்தை தொட என் கணவர் முயன்ற பொழுது அந்த குழந்தையின் தந்தை அனுமதிக்கவில்லை.

      Delete
  14. கண்ணதாசன் ச் ஒன்னதால் கோட் செய்யப்படுகிறடுஇதையே நம்மில் ஒருவர் சொன்னால்.....?

    ReplyDelete
  15. நாம் பழகும் மனிதர்களில் எல்லோருமே பத்தரை மாற்றுத் தங்கங்களா? அவர்களிடம் இருக்கும் குற்றங்களை தள்ளி குணங்களை கொள்வதுதான் (என்)பழக்கம். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  16. சமீபத்தில் தான் திருச்சி கல்யாணராமன் அவர்களின் உரை ஒன்று வாட்ஸப்-வழி பார்த்தேன். நன்றாக இருக்கிறது. சுய பிர்தாபம் - :)))

    கண்ணதாசன் பாடல் வரிகள் - ஆஹா ரகம்.

    Bபதாயி ஹோ படம் - நல்ல விமர்சனம் வந்திருந்தது இங்கே. பொதுவாக படம் பார்ப்பதில்லை. ஒரே ஒரு பாட்டு மட்டும் பார்த்தேன்....

    ReplyDelete