கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 23, 2018

பரிகாரம்

பரிகாரம் 

மகனின் பள்ளிக்கு பேரெண்ட்,டீச்சர் மீட்டிங்கிற்கு சென்று விட்டு வந்த ராதிகாவிற்கு வருத்தமும் கவலையும் மேலிட்டது. பத்தாம் வகுப்பு வரை நன்றாக படித்துக் கொண்டிருந்த கிரீஷ் இப்போது கொஞ்சம் பின் தங்கி
விட்டா ன். 

அவனுடைய ஆசிரியர்களும்," நல்லா படிக்கக் கூடிய பையன்தான், ஹோம் ஒர்கெல்லாம் சரியா செய்ய மாட்டேங்கரான், லாட் ஆஃப்  டிஸ்ட்ராக்ஷன்ஸ், கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறி விட அவள் மிகவும் அப்செட் ஆகிவிட்டாள்.

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வாங்கினால்தானே நல்ல கல்லூரியில் சேர்க்க முடியும்? என்ன பிரச்சனை அவனுக்கு? கணவனிடம் சொன்ன பொழுது அவன்," இப்போ செவன்டி பர்சென்ட் வாங்கறாந்தானே?" என்றான்.

"அதை வைத்துக் கொண்டு என்ன பண்ண முடியும்?"

"இத்தனைக்கும் ட்யூஷன் வேற போகிறான்.." 

"அந்த டீச்சர் ஒரு நாளைக்கு 200 கணக்கு போடணும்னு சொல்றா..இவன் எவ்வளவு போடறானோ?"

"இருநூறு கணக்கா?" அஷோக்கிற்கு கண்ணை கட்டியது. நல்ல வேளை, நாம் படித்து முடித்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டான். "அதெல்லாம் கொஞ்சம் கஷ்ட்டம்மா"

"என்ன கஷ்டம்? போட்டுதான் ஆகணும். இந்த டீச்சர் பரவாயில்லை, இருநூறு கணக்கு போடணும்னு சொன்னாலும், ஐம்பதுதான் ஹோம் ஒர்க்காக தருகிறாள், ஆஷா மேடம்னா, இருநூறு கணக்கு போடாவிட்டால் டியூஷனிலிருந்து நிறுத்தி விடுவாள். "

"படிப்பான், படிப்பான், ரொம்ப ப்ரெஷர் கொடுக்காத. அடலஸண்ட் ஏஜ்." 

"அதனால்தான் நான் சொன்னேன், கோ எஜுகேஷன் ஸ்கூல் வேண்டாம்னு, யூ டிண்ட் லிசன்."

"கமான், இதெல்லாம், பார்ட் அண்ட் பார்செல் ஆஃப் லைஃப். ரிஷ்யஸ்ருங்கர் மாதிரி வளர்க்கச் சொல்றியா?. அவன் படிக்க நம்மால் முடிஞ்ச அளவு ஹெல்ப் பண்ணலாம்"    

சொல்லிவிட்டானே தவிர எப்படி உதவுவது என்று தெரியவில்லை. நகரத்தின் நல்ல பள்ளியில் சேர்த்து விட்டோம், ட்யூஷனும் வைத்திருக்கிறோம். பள்ளிக்கு போய் வர ஆட்டோ, படிக்க தனி அறை, வீட்டில் அவனுக்கென்று லேப்டாப். வேறு என்ன வேண்டும்? நம்மைப் போல் நடந்து பள்ளிக்குச் சென்று, ஒரே அறையில் மூன்று பேர்கள் படிக்க வேண்டும் என்னும் நிர்ப்பந்தமெல்லாம் உண்டா? டியூஷன் வகுப்பில் சேர்ந்தால் அவமானம் என்று அப்பா சேர்த்து விட மறுத்து விட்டார். என்ன செய்வது?

மகனை நல்ல மார்க் வாங்க வைக்க ராதிகா ஒரு உபாயம் கண்டு பிடித்தாள். அவன் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு டி.வி.யில் ஜோதிடம் சொல்லும் ஒரு ஜோசியரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி கொண்டு   சந்தித்தாள்.அவர் அவனுடைய ஜாதகத்தை பார்த்து விட்டு, "அதெல்லாம் நன்னா படிப்பான், கவலைப்படாதீங்கோம்மா". என்று கூறி விட்டு, அவனுக்கு ஏதோ தசையில் ஏதோ புக்தி  நடப்பதாகவும், அதற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிள்ளையாருக்கு அவன் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்,எனவும் மேலும் ஐந்து புதன் கிழமைகளில் நவகிரஹ சந்நிதியில் உள்ள புத பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் தினசரி விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உங்களை பிள்ளை சொல்லாவிட்டாலும் கேட்கச் சொல்லுங்கள். என்று கூறினார். அதோடு ராசிக்கல் மோதிரம் ஒன்றையும் பரிந்துரைத்தார். 

ராசிக்கல் மோதிரத்திற்கு அசோக் ஒப்புக்கொள்ளவில்லை."ராதிகா நீ எந்த கோவிலுக்கு வேணாலும் போ, அர்ச்சனை பண்ணு, நான் வேண்டாம்னு சொல்லலை, ஆனால் மோதிரமெல்லாம் வேண்டாம். நாளைக்கு அவன் படித்து நல்ல மார்க் வாங்கினாலும், மோதிரத்தால்தான் தான் வாங்கினோம் என்று அவனுக்கு தோன்றி விடும். தட்ஸ் நாட் குட்" என்று தீர்மானமாக சொல்லிவிட, ராதிகா மோதிரம் வாங்கும் எண்ணத்தை கை விட்டாள்.

தன்னால் கோவிலுக்குச் செல்ல முடியுமோ முடியாதோ என்று, தன் வீட்டில் சமையலுக்கு வரும் லதா மாமியிடம் பணத்தையும் மகனின் பெயர், நட்சத்திரம் போன்ற விவரங்களையும் கொடுத்து புதன் கிழமை அர்ச்சனை செய்து கொண்டுவரச் சொன்னாள். தினசரி வீட்டில் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கத் தொடங்கியது. 

லதா மாமி அதோடு கூட தானும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லியபடியே சமைப்பாள். கோவிலில் அர்ச்சனை செய்யும் பொழுதும், விளக்கு போடும் பொழுதும் அந்த வருஷம் ப்ளஸ் டூ பரீட்சை எழுதப் போகும் தன் மகனுக்காகவும் வேண்டிக் கொள்வாள். 

அந்த வருட பொதுத்தேர்வில் கிரீஷ் பெற்ற மதிப்பெண்களில் பெரிதாக முன்னேற்றமில்லை. ஆனால் லதா மாமியின் மகன் 92% சதவிகிதம் வாங்கி தேர்ச்சி பெற்றிருந்தான்.


20 comments:

  1. பரிகாரம் - நல்ல பகிர்வு.

    லதா மாமியின் பக்திக்கு பலன் கிடைத்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட். பாயிண்டை சரியாக பிடித்து விட்டீர்கள். நன்றி.

      Delete
  2. ஆகா....
    நரியை நனையாம குளிப்பாட்ட முடியுமா!...

    பேசாம கிரீஷ்..ந்ற பேரை மாத்தி வெச்சிருக்கலாம்....

    இல்லேன்னா
    கிளி ஜோசியம் பார்த்திருக்கலாம்...

    இவ்வளவு செஞ்சிருந்தும்
    காத்து திசை மாறிப் போயிடிச்சே!...

    ReplyDelete
    Replies
    1. //பேசாம கிரீஷ்..ந்ற பேரை மாத்தி வெச்சிருக்கலாம்....//
      ஹா ஹா, அது பெரிய ப்ராசஸ் ஆச்சே!

      Delete
  3. பாடம் பரிட்சை சம்பந்தப்பட்ட கதைக்குள் ஏதோ ஒரு பாடம் ஒளிந்து கொண்டு இருக்கிறது....

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. கண்டு பிடித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

      Delete
  4. //நல்லவேளை, நாம் படித்துமுடித்து விட்டோம் என்று நினைத்துக்கொண்டான் //

    அதே உணர்வுகள் எனக்கும்!

    ReplyDelete
  5. அது சரி, ஒருவரின் ராசிக்குத் தக்கவாறுதானே பரிகாரம்? லதா மாமிக்குஎப்படி ஒத்துப்போச்சு? என்றெல்லாம் கேள்வி கேட்காமல் பக்தியை மெச்சி முயற்சியை மெச்சி கிடைத்த பரிசு என்று சொல்லி அமைகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. //பக்தியை மெச்சி முயற்சியை மெச்சி கிடைத்த பரிசு என்று சொல்லி அமைகிறேன்!//
      அதேதான். தெளிவுக்கு நன்றி.

      Delete
  6. ராதிகாவுக்குப் பசின்னா அவங்க தானே சாப்பிடணும்! சமையல்கார அம்மாவா சாப்பிட முடியும்! அதான்!

    ReplyDelete
    Replies
    1. நெத்தியடி அக்கா. நன்றி!

      Delete
  7. ஸ்ரீராம் சொன்னதுக்கு பதில். ஒருவேளை அந்தப் பையரின் நக்ஷத்திரம் வேறாக இருந்தாலும் ராசி ஒண்ணாய் இருந்திருக்கலாம். அதோடு பிரார்த்தனைகள் பண்ணிக் கொண்டது மாமி தானே! ராதிகா ஜோசியரைப் போய்ப் பார்த்ததோடு சரி!

    ReplyDelete
  8. Replies
    1. உங்களுக்கும் நான் சொல்ல வந்த விஷயம் புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். நன்றி

      Delete
  9. சிலரது நம்பிக்கைகளில் சிலர் பணம் பார்க்கிறார்கள்இதாஅல் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன வென்றால் .........நமக்கு ஏன் பொல்லாப்பு

    ReplyDelete
  10. //சிலரது நம்பிக்கைகளில் சிலர் பணம் பார்க்கிறார்கள்//
    இந்த கதையில் நான் அட்ரஸ் செய்திருப்பது இந்த விஷயம் அல்ல. நான் குறிப்பிட்டிருப்பது மற்றவர்களுக்கு புரிந்திருக்கிறது. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. //நமக்கு ஏன் பொல்லாப்பு//
    இதில் என்ன பொல்லாப்பு? உங்கள் கருத்தை தாராளமாக கூறலாம். நான் 'லோகோ பின்ன ருசி' என்பது புரியாத தொட்டார் சுணுங்கி இல்லை.

    ReplyDelete
  12. ஹா ஹா ஹா மகனுக்காக செய்வதை தன் கையாலயே செய்தால் வேறு விதமாகியிருக்குமோ?:)..

    ReplyDelete
  13. அதிலென்ன சந்தேகம் அதிரா? நீங்கள் என்ன தலையை காட்டுகிரீர்கள், வாலை காட்டுகிரீர்கள், ஓடி விடுகிரீர்கள்?

    ReplyDelete