கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, September 27, 2019

மசாலா சாட் - 11



மனம் சோர்வுற்றிருக்கும்பொழுது இசை கொடுக்கும் ஆறுதல் அலாதி. லால்குடி ஜெயராமன் அவர்களின் தில்லானாவாக இருக்கலாம். மேடை அமைப்பை பார்த்தால் வெளிநாட்டில் நடந்த கச்சேரி என்று தோன்றுகிறது.
இப்போதெல்லாம் பல விஷயங்கள் மாறியிருக்கின்றன. கர்நாடக இசைக்கச்சேரி மேடை போல இல்லாமல் ஆர்கெஸ்ட்ரா போல சிஷ்ய கோடிகளோடு பாடியிருக்கிறார். குட் ஜாப்!


வேடிக்கை மனிதர்கள்:

பிரிட்டனில் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தையை  எந்தவிதமான பால் வேற்றுமையும் காட்டாமல் வளர்க்க வேண்டும் என்றும் விரும்பினார்களாம்.
அதனால் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிவித்தார்களே ஒழிய, என்ன குழந்தை என்று தெரிவிக்கவில்லையாம். ஆனால் குழந்தையை கொஞ்சும் பொழுதும், அழும் பொழுது சமாதானப் படுத்தும் பொழுதும் கஷ்டமாக இருந்ததாம். மற்றவர்களிடம் அந்த குழந்தையைப் பற்றி குறிப்பிடும் பொழுது, 'ஹி', என்றோ, 'ஷி' என்றோ குறிப்பிடாமல் 'தே' என்று குறிப்பிடுவார்களாம். குழந்தையின் பாட்டி ஒரு முறை டயப்பர் மற்றும் பொழுது தெரிந்து கொண்டாராம்.  இது குழந்தையை மனோ தத்துவ நீதியாக பாதிக்காதா? நேச்சுரல் இன்ஸ்டிங்ட் என்று என்று ஒன்று உண்டே, அது காண்பித்து கொடுத்து விடாதா? 'கொலையுதிர் காலம்'  நாவலில் சுஜாதா "இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களின் ஆடைகளை, ஏன் உள்ளாடைகளையே அணிந்து கொள்வது பற்றி எனக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் அவள் பெண்தான் என்பதற்கு நிறைய சாட்சியங்கள் இருந்தன, தெரிந்தன" என்று எழுதியிருந்ததைப் போல தெரிந்து விடாதா என்ன?










38 comments:

  1. பாடலை ரசித்து கேட்டேன் மேடம்.
    இசை கேட்டு பசு பால் கொடுத்ததாக சரித்திரம் உண்டு, மனிதர் நாம் மயங்காமல் இருப்போமா...

    பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டு என்று நினைத்தது போல் இருக்கிறது இவர்களது குழந்தை வளர்ப்பு செயல்.

    முழு பூசணியை சோற்றுக்குள் மறைக்க முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. /பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டு என்று நினைத்தது போல் இருக்கிறது இவர்களது குழந்தை வளர்ப்பு செயல்.

      முழு பூசணியை // - கில்லர்ஜி...உங்கள் பதிலை ரசித்தேன். ஒரு அப்பா/அம்மா தன் பசங்களுக்கிடைல, பெண், ஆண் என்பதால் சலுகை/கண்டிப்பு கொடுக்காம வளர்க்க நினைத்தால் அதில் அர்த்தம் உண்டு. அது ஆணா/பெண்ணான்னு அவங்க சொல்லலைனா, குழந்தை அடி முட்டாளாவே இருக்கும்னு நினைச்சுட்டாங்களோ? இவர்கள் வேடிக்கை மனிதர்கள் இல்லை...

      Delete
    2. ஆம் நண்பரே உண்மைதான்.

      வேறொரு நாற்றமெடுக்கும் உவமை உண்டு சொல்ல வேண்டாமென விட்டு விட்டேன்.

      Delete
    3. >>> வேறொரு நாற்றமெடுக்கும் உவமை உண்டு ...<<<<

      வேணாம்... வேணாம்...
      கொடி பிடித்துக் கேட்டாலும் சொல்லீடாதீங்க!...
      கோடி கொடுத்துக் கேட்டாலும் சொல்லீடாதீங்க!...

      Delete
    4. ஜொள்'லவே மாட்டேன் ஜி

      Delete
    5. கில்லர்ஜி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமே....முடியாது என்று யார் சொன்னது? ஒரு அண்டா சோறு ஆக்கி அதனுள மறைச்சி வைத்து பாருங்க

      Delete
    6. @அவர்கள் உண்மைகள்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்னும் சொலவடைக்கு ஆதாரமான கதையை என்னுடைய யூ ட்யூப் சானலில் பகிர்ந்திருக்கிறேன். கேட்டுப்பாருங்கள். நன்றி.

      Delete
    7. கண்டிப்பாக பார்க்கிறேன் அம்மா

      Delete
  2. பெண்கள் ஆண்களுக்கான உடைகளைத் தரிக்கும் பொழுது அவ்வளவு பெரிதாக மாற்றம் ஏதும் தெரிவதில்லை. மனத்தளவில் ஆண்களுக்கான பெளருஷம் வந்து விடுவதான ஒருவகை பாவனை சிலருக்கு அவர்களின் அன்றாட வெளியுலகப் பணிகளைக் கையாள்வதற்கு தேவைப்படுகிற ஒரு சப்போர்ட்டாகவும் இருக்கலாம்.

    ஆனால் ஆண்கள் விஷயத்தில் அப்படி இல்லை. இது சுஜாதாவுக்கும் தெரியும். விளம்பரங்களில் பெண்களின் பங்களிப்பு போல எதற்கும் பெண்களைச் சுட்டி ஏதாவது சொன்னால் அதற்கான மவுசு கூடுவது தெரிந்து தான் இதெல்லாம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete
  3. பாம்பே ஜெயஸ்ரீ குரலுக்குக் கேட்க வேண்டுமா?    இது மாதிரி மெல்லிசை போல இப்போது நிறைய பாடத்தொடங்கி விட்டார்கள்.    கொஞ்சம் குண்டாகிவிட்டார் போல...  ஒல்லியாய் இருப்பார்.   ஆனாலும் பாம்பே ஜெயஸ்ரீ மெலடிகளுக்குதான் பேமஸ்!

    ReplyDelete
    Replies
    1. பாம்பே ஜெயஶ்ரீயின் குரலை விட பாடுவதில் இருக்கும் பாவம் மிகவும் பிடிக்கும்.

      Delete
  4. ஜெண்டரை மறைப்பதில் என்ன முன்னேற்றம் கண்டார்களோ... 

    சில நேரங்களில்சில மனிதர்கள்!

    ReplyDelete
    Replies
    1. அதேதான். நன்றி ஶ்ரீராம்.

      Delete
  5. பாடல் அருமை. மிகத் திறமையானவர் பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //மிகத் திறமையானவர் பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள்.// அதில் என்ன சந்தேகம்?

      Delete
  6. வணக்கம் சகோதரி

    பாடல் அருமை. பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் வளம் மிகவும் ரசிக்கத்தக்கது. இப்போதும் கேட்டு ரசித்தேன்.

    குழந்தை வளர்ப்பு..! என்ன சொல்வது? கலி முத்தி விட்டது. வேறு எப்படி நினைப்பது.. அந்த பெற்றவர்களுக்கு இதில் என்ன சந்தோஷமோ ? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. அன்பு பானு மா. முதலில் அருமையான இசைக்கு நன்றி.

    அது தனி ரகம் . பாம்பே ஜெய்ஸ்ரீ மெலடி அரசி.
    இங்கிலாந்து தம்பதியர்கள் குழந்தையும் பெற்று கொடுமைப் படுத்த வேண்டாம்.

    மனப் பிறழ்வைக்காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. //மனப் பிறழ்வைக்காட்டுகிறது.// சரியான வார்த்தை. நன்றி வல்லி அக்கா.

      Delete
  8. பாம்பே ஜெயஸ்ரீ பக்திப்பாடல்கள் பாடுவதில் வல்லவர், மெய்ம்மறந்து பாடுவார். ஆங்கிலேயப் பெற்றோரின் முட்டாள்தனமான எண்ணம் ஆச்சரியமாக இருக்கிறது. இப்படியும் உண்டா? ஆண், பெண் உடையைப் போடுவதால் ஏற்படும் மாற்றங்கள் பெண் ஆண் உடையைப் போடுவதில் வருவதில்லை என நினைக்கிறேன். இப்போதெல்லாம் பெண்கள் சகஜமாக ஆண்களின் உடையைப் போடுகின்றனர். நமக்கும் பழகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. //இப்படியும் உண்டா?// இருக்கிறதே, அதனால்தான் செய்தியாகியிருக்கிறது. நன்றி அக்கா.

      Delete
  9. பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் இசைக் காணொளி இனிமை...

    இந்த மாதிரி மேலைநாட்டுக் கிறுக்குத் தனங்கள் படித்ததுண்டு...

    உடை விஷயம் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை...

    ReplyDelete
  10. பாம்பே ஜெயஸ்ரீயின் பாடல்பகிர்வு நன்றாக இருந்தது கேட்டு மகிழ்ந்தேன்.

    //பிரிட்டனில் ஒரு தம்பதி தங்களுக்கு பிறந்த குழந்தையை எந்தவிதமான பால் வேற்றுமையும் காட்டாமல் வளர்க்க வேண்டும் என்றும் விரும்பினார்களாம்.//

    அதற்கு இப்படியா?

    ReplyDelete
  11. பானுமதி அக்கா போட்டிருக்கிறீங்களே எனப் பாடல் கேட்டேன், நன்றாக இருக்கு. நான் க.சங்கீதம் கேட்பதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தைரியமாக க.சங்கீதம் கேளுங்க, அது உங்களை அடித்து விடாது, அல்லது கடித்து தின்று விடாது.

      Delete
  12. வேடிக்கை மனிதரை ஜெயிலுக்கு அனுப்போணும்...
    பல விசயங்களில் பெற்றோர் தான் தம் விருப்பத்தை குழந்தைகள்மேல் திணிக்கின்றனர்.. தாம் விரும்பும் பட்டப்படிப்பை படிக்கச் சொல்லி திணிப்பதைப்போல். இன்றுகூட ஒரு விசயம் பேசினோம்...

    ReplyDelete
    Replies
    1. //வேடிக்கை மனிதரை ஜெயிலுக்கு அனுப்போணும்...// உங்கள் கோபம் புரிகிறது.

      Delete
  13. என்னவெனில், குழந்தை கிடைக்கவில்லை எனில் அது ஒன்றும் சொல்ல முடியாது விதி,
    ஆனா ஒரு குழந்தை போதும் என நிறுத்துகிறார்களே அது எவ்ளோ தப்பு? உங்களுக்கு ஒரு குழந்தை போதும் ஆனால் அக்குழந்தைக்கு ஒரு துணை தேவையெல்லோ... இக்கதை ஏன் வததெனில்....

    இப்போ எங்கள் நெருங்கிய சொந்தத்தில் ஒரு 33 வயசுப் பெண் இறந்திட்டா, கார்ட் அட்டாக் போல வந்து, கணவருக்கு 35 வயசு... இரு குழந்தைகள், 2 வது பிறந்து இப்போ எட்டு மாதங்கள்... குழந்தையை கைக்குள் அணைச்சபடி நித்திரையில் போய் விட்டா:(...

    எங்களால் போக முடியவில்லை பியூன்றல் வீடியோவில் பார்த்தோம்... அப்போ அந்த கணவரை, கிரியைகளின் போது, அவரின் அண்ணா கைவிடவே இல்லை, அப்படியே கட்டி அணைத்தபடியே பொன்னாலேயே பிடிச்சுக்கொண்டு நிக்கிறார், சுண்ணம் இடிக்கும்போதும் தம்பியை அணைச்சுப்பிடிச்சபடியே நிற்கிறார்...
    அதைப் பார்த்ததும் தோன்றியது... இன்பத்தில் இல்லாட்டிலும் துன்பத்தில் ஒரு சகோதரம் தேவை....

    அதை பெற்றோர் தடை பண்ணுவது எவ்வளவு தப்பு.

    இந்தக் கதையை பானுமதி அக்காவுக்குச் சொல்லோணும் என நினைச்சே இங்கு எழுதினேன்:(...

    ReplyDelete
    Replies
    1. மொபைல் ரைப்பிங் என்பதால் எழுத்துப் பிழைகள்...
      பின்னாலேயே என்பது பொன்னாலேயே என வந்திருக்கு....

      Delete
    2. //உங்களுக்கு ஒரு குழந்தை போதும் ஆனால் அக்குழந்தைக்கு ஒரு துணை தேவையெல்லோ... //  
      கரெக்ட்! அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் அந்த குழந்தைகளுக்கு உறவுகளே இல்லாமல் போய் விடும்.

      Delete
  14. வருகைக்கும், மீள் வருகைகளுக்கும் நன்றி அதிரா.  உங்களோடு பகிர்ந்து கொள்ள ஒரு விஷயம் இருக்கிறது. நேற்று அமேசான் பிரைமில் 'கடாரம் கொண்டான் பார்த்தேன். அதில் அக்ஷரா ஹாசனின் பெயர் ஆதிரா.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ இதை மேடை போட்டு ஜொள்ளியிருக்கலாமெல்லோ:).. இப்போ அஞ்சு பார்க்கிறாவோ தெரியல்லியே இதை கர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
  15. இனிமையான இசை. பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் குரல் எனக்கும் பிடித்தமானது. அவ்வப்போது இப்படி இசை கேட்பது மனதுக்கு அமைதி தரும்.

    குழந்தை - என்ன சொல்ல... புதிய சிந்தனை என நினைத்து என்னென்னவோ செய்கிறார்கள்! ஒன்றும் சொல்வதற்கில்லை.

    தமிழகம் வந்திருந்ததால் பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை. தில்லி திரும்பியதும் விடுபட்ட பதிவுகளை படித்து வருகிறேன். தாமதமான வருகைக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete