கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, October 24, 2019

Original Tiruvaiyaru Ashoka

30 comments:

  1. வணக்கம் சகோதரி

    அருமையான திருவையாறு அசோகா அல்வாவை கைமணத்துடன் நல்ல விளக்கங்கள் கூறி பொறுமையாக செய்து காண்பித்தமைக்கு தங்கள் சகோதரிக்கு மிக்க நன்றிகள்.

    தீபாவளி சமயமாக இருப்பதால், என்ன இனிப்பு பண்ணலாம் என யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பக்குவத்திற்கும், தெளிவாக விளக்கம் சொல்லி செய்து காண்பித்தது உண்மையிலேயே மிகவும் நன்றாக உள்ளது. கண்ணெதிரே இருந்த அழகான மணம் மிகுந்த அல்வாவை நிஜமாகவே சுவைத்த திருப்தி வருகிறது. இம்முறைப்படி நானும் கண்டிப்பாக ஒருமுறை செய்து பார்க்கிறேன். தங்கள் சகோதரிக்கு (தங்கள் சகோதரியின் பெயர் தெரியவில்லை.. நான் பொதுவாகவே அனைவரையும் சகோதரி என்றுதான் அழைப்பேன். பெயர் தெரிந்தால் பெயரைக் குறிப்பிட்டு உடன் சகோதரி எனச் சேர்ப்பேன். ஹா.ஹா.ஹா .) என்னுடைய பாராட்டுகளும், பணிவான நன்றிகளையும் தெரியப்படுத்துங்கள். பகிர்வுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கமலா. உங்கள் பெயருக்குள் என் அக்காவின் பெயரும் இருக்கிறது, நடுவில் இருக்கும் எழுத்தை எடுத்து விடுங்கள் என் அக்கா பெயர் கிடைத்து விடும். 

      Delete
    2. வணக்கம் சகோதரி

      ஓ.. தங்கள் சகோதரியின் பெயர் கலாவா? மகிழ்ச்சி.. என் மன்னியின் பெயரும் அதுதான்..! இன்று வரை அந்தப் பெயர் ஒற்றுமையால், எங்கள் இருவருக்கும் எந்த ஒரு சிறு மனஸ்தாபங்களும் இன்றி ஒரு தாய் வயிற்று சகோதரிகளாக பாசமாக இருந்து வருகிறோம். இதில் ஒரு கூடுதல் விஷேசம் என்னவென்றால், மன்னியின் ஒரே சகோதரியின் பெயரும் என் பெயர்தான்.

      தங்கள் சகோதரியின் பெயர் அறிந்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் அழகாக பாரம்பரிய அசோகா அல்வா இனிப்பு செய்து காட்டிய அவர்களுக்கு என் பாராட்டுக்களை மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
  2. ஆகா.. அருமை...

    செய்முறை விளக்கத்துடன் சுவையோ சுவை...

    வாழ்க நலம்...

    ReplyDelete
  3. இது தஞ்சை அரண்மனையின் இனிப்பு வகையில் ஒன்று என்கிறார்கள்...

    தஞ்சாவூர் அசோகா என்று தான் சிறுவயதில் கேள்விப்பட்டது...

    கோயில் நகரம் கும்பகோணம் என்கிற மாதிரி ஆகி விட்டது...

    ReplyDelete
    Replies
    1. //தஞ்சாவூர் அசோகா என்று தான் சிறுவயதில் கேள்விப்பட்டது...//

      அப்படியா? அசோகா என்றாலே திருவையாறு என்றுதானே சொல்கிறார்கள். 

      Delete
  4. நானும் அசோகா ஹல்வாவுக்கு கோவா கலந்துதான் செய்வேன். அட! அப்ப நான் செஞ்சது இது சரிதானா? இதுதான் ஒரிஜினலா..சூப்பர். நான் நினைச்சிருந்தேன் நாம செய்யறது ஒரிஜினல் இல்லை கோவா சேர்த்து செய்யறதுனால...என் மகனுக்கு பால்/கோவா கலந்த ஸ்வீட் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். அதுக்காக நான் பொதுவாக ஸ்வீட்டில் மில்க் பௌடர், பால் அல்லது கோவா கலந்து செய்வேன். குலாப் ஜாமூன் கூட வீட்டில் கோவாலதான் அல்லத் மில்க் பௌடர்ல செய்வேனா ஸோ இதுக்கும் கோவா கலந்து செய்வேன்...ஆனா சாப்பிட்டவங்க எல்லாரும் நல்லாருக்குனு சொல்லுவாங்க ஆனா திருவையாறு அசோகா ஹல்வா மாதிரி இல்லைனு சொல்லிடுவாங்க. நான் திருவையாறு அ ஹ சாப்பிட்டதில்லை. ஸோ நான் செய்யறது சரியில்லைனு நினைச்சேன்..இப்ப ஜந்தோஷம் பொயிங்குது!!!

    அளவும் குறித்துக் கொண்டுவிட்டேன்....பானுக்கா அன்ட் பானுக்காவின் அக்காவுக்கு நன்றியோ நன்றி!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா. எங்கள் அம்மா குலாப் ஜாமூன் வீட்டில் பால் கோவா செய்து, அதிலிருந்து பண்ணுவார்கள். அந்த ருசி தனிதான். 

      Delete
  5. எங்கள் வீட்டில் அவ்வப்போதுசெய்யும் இனிப்புதான் இது அது ஒரிஜினலா டூப்லிகேட்டா தெரியாது

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினலோ, டூப்ளிகேட்டோ, வாய்க்கு நன்றாக இருக்க வேண்டும். அதுதானே முக்கியம். வருகைக்கு நன்றி. 

      Delete
  6. பானுக்கா அக்கா ரொம்ப நல்லா செஞ்சுருக்கீங்க!!!! நாவில் நீர்!!!

    இதுதான் ஒரிஜினல்னு சொன்னதும் எனக்கு சந்தோஷமும்...நான் செஞ்சது அப்படி இல்லை இப்படி இல்லைனு எல்லாரும் சொன்னாங்கனு பால் விட்டு, கோதுமை மாவு சேர்த்துனு செஞ்சு பார்த்தேன் ஆனா என் பையனுக்கு நான் கோவா சேர்த்துச் செஞ்சதுதான் பிடித்தது.

    இனி நான் முன்பு செஞ்ச நீங்க இப்ப சொல்லிருக்கும் இந்த மெத்தடையே ஃபாலோ செய்யறேன்...பானுக்கா அக்கா.

    பானுக்கா அக்கா ரொம்ப ஒல்லியா இருக்காங்களா அந்த வாணலியைக் கஷ்டப்பட்டுத் தூக்குவது போல இருக்கு..அக்கா வெயிட்டா இருந்ததோ வாணலி? அடுப்பும் கொஞ்சம் உயரமோ அக்காவுக்கு....என்ன மாதிரி ஹா ஹா ஹா...

    அக்கா சூப்பரோ சூப்பர்!! பார்க்கவே அத்தனை அழகா இருக்கு. சகல கலா வல்லவி நீங்க!! வாழ்த்துகள் பாராட்டுகள் அக்கா.

    இன்னும் இது போல வேற புதுசா வும் நீங்க செய்யறத போடுங்க அக்கா...

    பானுக்கா உங்களுக்கும் நன்றி! அக்காவை எங்களுக்கு இன்ட்ரோ செஞ்சதுக்கு!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மீள் வருகைக்கு நன்றி கீதா. //பானுக்கா அக்கா ரொம்ப ஒல்லியா இருக்காங்களா // ஆமாம், அவள் எப்போதுமே அப்படித்தான். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறாள். அங்கு இப்போது நல்ல காற்றாம். என் அக்கா பெண், "அம்மா பால்கனியில் பொய் நிற்காதே, உன்னை காற்று தூக்கிக் கொண்டு சென்று விடாய் போகிறது " என்றாளாம். 

      Delete
  7. Ssooppeerr....கலக்கிட்டேள் போங்கோ...ரொம்ப Thanks Madam....because these days Chennai and elsewhere...in the name if Asoka...எதயோ...சொத......சொதனு....சொதப்பி....வாயில் வைக்க...விளங்கல...நன்றி

    ReplyDelete
  8. அருமையான குறிப்பு. ஆனா நான் கோவாவுக்கு எங்கு போவேன்.

    ReplyDelete
    Replies
    1. கோவா கிடைக்காவிட்டால் பாலை நன்றாக குறுக்கி சேர்க்கலாம் என்று கூறியிருக்கிறாரே? என் சகோதரி இதை உங்களுக்கு பிரத்யேகமாக சொல்லக் சொன்னார். நன்றி. 

      Delete
  9. அருமையாக இருக்கிறது அசோகா .
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //அருமையாக இருக்கிறது அசோகா .
    நன்றி.
    வாழ்த்துக்கள்.// வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. 

    ReplyDelete
  11. உங்கள் அனைவரின் பின்னூட்டங்களும் என் சகோதரிக்கு முகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. அவர் பதில்  போட முயன்றிருக்கிறார், ஆனால் அது ஏனோ பப்ளிஷ் ஆகவில்லை. அதனால் என்னிடம் தெரிவித்தார். 

    ReplyDelete
  12. எனக்கும் மிக பிடிக்கும் ..

    இந்த முறையும் ரொம்ப நல்லா இருக்கு ..

    இப்படி கோவா சேர்த்து செய்தது இல்லை அடுத்த முறை இப்படி செய்து பார்க்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அனு. கோவா சேர்த்து முயற்சித்துப் பாருங்கள். நன்றாக இருக்கும். 

      Delete
  13. நான் விரைவில் பதிலெழுதறேன். சமீப பயணத்தில் அவங்க அசோகா அல்வா போட்டாங்க...ரொம்ப ருசியா இருந்தது.

    திருவையாறு அசோகா அல்வா நல்லாவே இல்லை.

    இந்த கானொளி பார்த்துட்டு எழுதறேன்

    ReplyDelete
    Replies
    1. /திருவையாறு அசோகா அல்வா நல்லாவே இல்லை.// - இதுக்கு அர்த்தம், ஆண்டவர் கடைல வாங்கின அசோகா அல்வா என்று....

      Delete
    2. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்தது, காலை வேண்டாம். 

      Delete
  14. செய்முறையைப் பார்த்தேன். ரொம்ப சுலபமா இருக்கு.

    நெய் ரொம்ப ஜாஸ்தியாத் தோணுது. கேசரி பவுடர் துளி சேர்க்கவேண்டாமா (யாத்திரைல அவங்க சேர்க்கலை. திருவையாறு ஆண்டவர் கடைல செவப்பா ஆக்கிடுவாங்க).

    ஏன் முந்திரியை வறுத்துச் சேர்க்காம திராட்சை சேர்க்கச் சொல்றாங்க?

    கடாயை இடுக்கி (கிடுக்கி) உபயோகித்துப் பிடிக்காம, விரல்ல பிடிக்கறாங்களே.. சுடலையா?

    செய்முறை ஈஸியா சொல்லியிருக்காங்க. செஞ்சுடவேண்டியதுதான்.

    ReplyDelete
  15. இதே சந்தேகம் எனக்கும் வந்தது. ஒரு வேளை மின்சார அடுப்பு என்பதால் சூடு இல்லையோ என்னவோ. 

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete