மத்யமரில் வெளியான என் இரு கதைகள் அங்கு வாசிக்கத்தவர்களுக்காக:
அவள் வருவாள்
"மண்டே கிரிஜா வராளாம்.."
"ஓ அப்படியா? வெரி குட்" ராதா என்னும் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த சந்தோஷம் தொற்றிக் கொண்டது.
ஞாயிறு மாலையிலிருந்தே பாலா பரபரப்பானாள்.
திங்கள் காலை டிகாஷன் போடும்பொழுது, கிரிஜா நினைவுதான். அவள் வந்ததும் நல்ல காபியாக கொடுக்க வேண்டும். காபி கிரிஜாவுக்கு மிகவும் பிடிக்கும் என்று நினைத்துக் கொண்டாள்.
எட்டு மணி ஆனதும் தவிப்பாகி விட்டது. "இத்தனை நேரம் வந்திருக்க வேண்டுமே? ஏன் இன்னும் வரவில்லை?
செல்போனில் கிரிஜாவை தொடர்பு கொண்டபொழுது அவள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக ரிக்கார்ட் செய்யப்பட்ட குரல் கூறியது.
பாலா வாசலுக்கும், உள்ளுக்கும் நடப்பதைப் பார்த்து ராதா,"ஏன் டென்ஷனாகுற? கிரிஜா வருவாள் .." என்றார்.
பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்த பொழுது கிரிஜா தன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்குவது தெரிந்தது.
தோ! கிரிஜா வந்துட்டாளே! குடுகுடுவென்று வாசலுக்கு ஓடி கதவை திறந்தாள்.
"வாவா! ஏன் இவ்வளவு நேரமாயிடுச்சு?.. இந்தா காபியை குடிச்சுட்டு அப்புறம் வேலையைப் பார். "
சரிம்மா, இத்தனை நாளா எல்லா நீங்களே தனியா பாத்துக்கிட்டீங்களா?" என்றாள் லாக் அவுட் முடிந்து வேலைக்கு வந்திருக்கும் வேலைக்காரி கிரிஜா.
பூமராங்!
"அவங்க வீட்டுக்கு போகும் பொழுது வெற்றிலை, பாக்கு, பழம் வாங்கி கொண்டு போகணும், போகும்பொழுது வாங்கிக்க கொள்ளலாமா?"
"நான் இப்போ போய் வாங்கிட்டு வந்துடறேன். மகேஷ் எங்க?"
இங்கதான்பா இருக்கேன்...என்ன வேணும்?" என்றபடியே வந்து நின்ற மகேஷை ஏற இறங்க பார்த்தார் கணேசன்.
"என்னடா இது? இன்னிக்கு பொண்ணு பார்க்க போறோம், ஷேவ் பண்ணக்கூடாதா?"
"இப்போ இதுதான்பா ட்ரெண்ட்!"
"நோ நோ, ஷேவ் பண்ணிக்கோடா, டீசென்டா இருக்க வேண்டாமா?"
"நீ சீக்கிரம் குளிச்சு, சாப்பிட்டு, ஒரு நாப்(Nap) எடுத்துக்கோ,அப்போதான் அவங்க வீட்டுக்கு போகும் பொழுது ஃபிரெஷா இருக்கும்".
"அப்பா திஸ் இஸ் டூ மச்"
"என்னோவோ பண்ணு, கண்டிப்பா ஷேவ் பண்ணிக்கற.." என்று மகனுக்கு உத்தரவு போட்டு விட்டு கணேசன் வெளியே சென்றதும், மகேஷ் "ஏம்மா அப்பா இவ்ளோ டென்ஷனா இருக்கார்?" என்றான், "எப்போதுமே அப்படித்தானே?" என்று மகனுக்கு பதில் சொல்லி விட்டாலும் மனதிற்குள் உனக்கென்ன தெரியும் எங்கள் கவலை என்று நினைத்துக் கொண்டாள்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மகனுக்கு வரன் தேடுகிறார்கள். மேட்ரிமோனியல் சைட்டில் பதிவு செய்து விட்டு காத்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் பெண்கள் வீட்டிலிருந்து அழைப்புகள் வரவில்லை. இவர்களாக டெலிபோன் செய்தாலும் அதற்கு ரெஸ்பான்ஸ் செய்தவர்கள் குறைவாகத்தான் இருந்தார்கள். அதிலும் ஜாதகம் சேர்ந்தால் பையனுக்கு பிடிக்கவில்லை, பையனுக்கு பிடித்தால் ஜாதகம் சேரவில்லை. இத்தனையும் தாண்டி, ஒரு இடம் பொருந்தி வந்திருக்கிறது. இரண்டு குடும்பங்களுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தது. மற்ற விஷயங்களும் ஒத்து போக இதோ இன்று பெண் பார்க்க போகிறார்கள்.
மகேஷும், அந்தப் பெண்ணும் ஆன் லைனில் பேசிக் கொள்ளட்டும் என்று இவர்கள் கூறியதை பெண்ணின் தந்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இல்லை, நீங்கள் முதலில் வீட்டிற்கு வந்து பாருங்கள், அப்பொழுது இருவருக்கும் பிடித்திருந்தால்
அதன் பிறகு அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளலாம் என்று கூறி விட்டார்.
கணேசன், லலிதா தம்பதியினர் தன் இரு மகன்களோடும் பெண் பார்க்கச் சென்றனர். அந்த நிகழ்வு சுமுகமாகவே நடந்தது. பெண் சௌமியா மஞ்சள் நிறத்தில் பச்சையில் பூ போட்ட சூடிதாரில் எல்லோரையும் கை கூப்பி வரவேற்றாள். அதிக ஒப்பனை இல்லை. அவர்கள் வீட்டில் பெண்ணின் மாமா, அத்தை என்று உறவினர்களும் இருந்ததாலோ என்னவோ உரையாடல் குடும்ப அறிமுகங்களுக்குப் பிறகு பல விஷயங்களை தொட்டு சென்றது.
இரு தரப்பிலும் திருப்தியாக உணர்ந்தாலும், வீட்டில் பேசி விட்டு கருத்து சொல்வதாக கூறி வந்தனர்.
வீட்டிற்கு வந்து அவர்களுக்குள் விவாதித்ததில் பெண்ணை பிடித்திருப்பதாக சொல்ல முடிவு செய்தனர். பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று நினைத்து போனை எடுத்த பொழுது பெண்ணின் தந்தையிடமிருந்து குறுஞ் செய்தி வந்திருப்பதை பார்த்தார்.
என் மகளுக்கு உங்களின் இரண்டாவது பையனை பிடித்திருக்கிறது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் மேற்கொண்டு தொடரலாம் என்ற செய்தியை படித்ததும் " சே! என்ன அசிங்கம்!" என்று செல்ஃபோனை சோஃபாவில் எறிந்தார் முப்பது வருடங்களுக்கு முன்பு அக்காவை பெண் பார்க்கச் சென்று விட்டு தங்கையை மணந்து கொண்ட கணேசன்.
பூமராங் - ஹாஹா... Getting the same treatment after so many years! :)
ReplyDeleteமுதல் கதையும் நன்றாக இருக்கிறது.
நன்றி வெங்கட்
Deleteமுதல் கதை ஏற்கனவே படித்து விட்டேன். நல்ல கற்பனை ஹாஹா.
ReplyDeleteஇரண்டாவது ...பெற்றோர் பாடு சிரமம்தான்.
முற்பகல் ,பிற்பகலில் பலன் கொடுத்து விட்டதோ.
நல்ல கதைகள் பானு மா.
நன்றி அக்கா!
Deleteராஜ வரவேற்பு கிரிஜா அவர்களுக்கு...!
ReplyDeleteகணேசா... சிரமம் தான்...
நன்றி டி.டி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇரு கதைகளுமே டாப்..படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. உங்களுக்கு மிக அருமையான சிந்தனை. முதல் கதை பாலா எதிர்பார்த்த தவிப்பில்,என்னவோ என நினைக்கும் போது முடிவு எதிர்பாராத விதமாக அருமையாக இருந்தது.
இரண்டாவது வேறு என்னவாகவோ இருக்கப் போகிறது என்ற ரீதியில் கதை நகர்ந்து கணேசனுக்கு சாட்டையடியாய் கதை முடிவு. அதிலும் நீங்கள் இரு கதைகளிலும் இறுதி வரை முடிவை சஸ்பென்ஸாக கொண்டு சென்ற விதம் அருமை. சிறப்பான முறையில் அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விரிவான விமர்சனத்திற்கு நன்றி கமலா.
Deleteசூப்பர் கதைகள்! சுவாரஸ்யமான கதைகள்!
ReplyDeleteமிக்க நன்றி சார்.
ReplyDelete'எவள் வருவாள்?' என்று எதிர்ப்பார்த்த கதையின் முடிவு கொஞ்சமும் எதிர்பாராதது.
ReplyDeleteஇந்த காலகட்டத்தை அப்பட்டமாகப் பிரதிபலித்த கதை.
பலர் டிஷ்வாஷ் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். கூட்டிப் பெருக்க மட்டும் வீட்டிலுள்ளோர் தயாராகி விட்டால், இந்தக் கதைக்கான மவுசு கொஞ்சம் குறையலாம். (சொந்த அனுபவம்)
//பலர் டிஷ்வாஷ் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்// இப்போது வீடுகளில் வாஷிங் மெஷினுக்கு ப்ரொவிஷன் கொடுப்பது போல எதிர்காலத்தில் டிஷ் வாஷருக்கு ப்ரொவிஷன் கொடுக்கப்படும் என்று நினைக்கிறேன். நல்ல விமர்சனத்திற்கு நன்றி.
Deleteஇரண்டாவது கதை சில பழைய திரைப்படங்களை நினைவு படுத்தினாலும், 'தன் வினை தன்னைச் சுடும்' என்ற மூதுரையை செவிட்டில் அறைந்த மாதிரி சொன்னதில் பெருமை கொள்கிறது. பொருத்தமான தலைப்பு. ஆனால் தலைப்பை வைத்துக் கொண்டு கதையை யோசிக்க முடியாதபடி லாவகமாக எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஉங்களைப்போல் விமர்சனம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி.
Deleteஇரண்டாவது கதை பேஸ்புக்கில் படித்திருந்தேன். முதல் கதை இங்கே படித்தேன். இரண்டுமே உங்கள் பாணியில் நன்றாக இருந்தன. இப்பல்லாம் 'கே வா போ' க்கு கதை அனுபபிறது இல்லை நீங்க!
ReplyDeleteநன்றி ஶ்ரீராம். //இப்பல்லாம் 'கே வா போ' க்கு கதை அனுபபிறது இல்லை நீங்க!// ஹிஹி
Deleteஅப்போ பா.வெ.-யின் கதை இன்னும் மூணு மாசத்திற்கு கே.வா.போ.க. பகுதியில் இல்லை என்று சொல்லுங்கள். அடுத்த செவ்வாய் அவர் கதை தான் என்று ஒவ்வொரு செவ்வாயும் எதிர்பார்த்துக் காத்திருந்தேனே?..
Delete//அடுத்த செவ்வாய் அவர் கதை தான் என்று ஒவ்வொரு செவ்வாயும் எதிர்பார்த்துக் காத்திருந்தேனே?.// It is a great honour! Thank you!
Deleteஇரண்டு கதைகளையுமே மத்யமரில் படித்திருக்கேன். உங்கள் பாணியில் சுருக்கமாகச் சொல்லவேண்டியதைச் சிக்கனமான வார்த்தைகளில் சொல்லி விடுகிறீர்கள். வளவள என்று விவரிக்காமல் தேவையான வார்த்தைகள் பிரயோகம். பாராட்டுகள், வாழ்த்துகள்.
ReplyDeleteமனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteமுதல் கதை மிகநூலில் படித்தேன்.
ReplyDeleteஇரண்டாவது கதை போல் நான் "திருப்பம்" என்று ஒரு கதை எழுதினேன்.
முடிவு இப்படி இல்லை.
முதல் கதை நகைச்சுவையாக உண்மை நிலையை சொல்கிறது.
இரண்டாவது கதை படிப்பினை எய்த பூமாரங்க் எய்தவன் கையில்.
முகநூலில்.
ReplyDeleteஇரண்டாவது பையனை பிடித்து இருக்கு என்று பெண் சொல்வது மட்டும் ஒரே மாதிரி.
வாங்க கோமதி அக்கா. நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதினீர்களா? சமீபத்தில் படித்த நினைவு இல்லை. கருத்துக்கு நன்றி.
Deleteஇரு கதைகளையும் மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். சுருக்கமாக, சிக்கனமான வார்த்தைகளில். பாராட்டுகள்.
ReplyDeleteதுளசிதரன்
நன்றி துளசிதரன்.
Deleteபானுக்கா செம! ரெண்டாவது கதை ஹிஸ்டரி ரிப்பீட்ஸ்!! முதல் கதை இப்போதைய சூழல். இரண்டாவது கதையின் தலைப்பு சூப்பர். நீங்கள் எழுதுவதற்குக் கேட்க வேண்டுமா!!! ஷார்ட் அண்ட் ஸ்வீட்! நிறைய கற்க இருக்கிறது பானுக்கா, எனக்கு.
ReplyDeleteபலருக்கும் இருக்கும் கஷ்டங்கள் ஹெல்ப்பர் இல்லாமல். அப்படி இருக்கும் போது ஹெல்ப்பர் வந்தால் ஆரத்தியே கரைத்து எடுக்கலாம் தான் ஹா ஹா ஹா ஹா...
என் அம்மா நினைவுக்கு வந்தார். என் அம்மாவின் அஸிஸ்டென்ட் ரத்தினம் என்பவர். அதுவும் அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாமல் போனப்ப வைத்துக் கொண்டதுதான். நார்மலாகவே ரத்தினம் வரும் சமயம் அம்மா காப்பியோடும் டிஃபனோடும் காத்திருந்து அதைக் கொடுத்துவிட்டுத்தான் வேலை செய்யச் சொல்லுவார். அதுவும் ஜுரம் என்று லீவு போட்டுவிட்டு லீவு முடிந்து வரும் போது கேட்கவே வேண்டாம் அம்மா மிளகு ரசம் செய்து கொடுப்பார். பாவம் டி ரத்தினம். தொண்டைக்கட்டு. என்று.
கீதா
வாங்க கீதா. ரசிப்புக்கு நன்றி. உங்கள் அம்மா ரொம்ப ஸ்வீட்! என் இரண்டாவது அக்கா கூட வேலைக்காரியிடம் எண்ணெய் சட்டி போன்றவைகளை போடாமல் தானே தேய்த்து விடுவார்.
ReplyDeleteஎதிர்பாராத முடிவுகள். முதல் கதையில் சிரிப்பு வந்தது. இரண்டாம் கதையில் அதிர்ச்சி. சொல்லி இருக்கும் விதம் இன்றைய யதார்த்தம் பற்றியதுதான். அருமை.
ReplyDeleteமிக்க நன்றி தேனம்மை(எவ்வளவு அழகான பெயர்)
ReplyDeleteஇரண்டு கதைகளும் இக் காலத்தை ஒட்டிய கதைகள்தாம். சொல்லிச் சென்ற விதம் அருமை.
ReplyDeleteநன்றி மாதேவி.
Delete