கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, June 14, 2020

மசாலா சாட் - 18

மசாலா சாட் -18

எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு. சில ஜோசியர்களிடமும் நம்பிக்கை உண்டு. ஆனால் ரிஷப ராசிக் காரர்களுக்கு இன்று பதவி உயர்வு கிடைக்கும், பிரிந்த உறவினர்கள் சேர்வார்கள், புதிதாக வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு என்று பொத்தாம் பொதுவாக அடித்து விடும் ராசி பலன்கள் நிகழ்ச்சியில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும்  தினசரி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ராசி பலன்கள் நிகழ்ச்சியை பார்ப்பேன்,கேட்பேன் காரணம், ராசி பலன்களுக்கு இடையே அவர்கள் கூறும் ஐந்தாம் வீட்டில் ராகு இருந்தால் புகழ் கிடைக்கும் போன்ற ஜோதிட டிப்சுகளை  கேட்பதற்காக.  இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சன் டி.வி., ஜீ டி.வி., ஜெயா டி.வி. மூன்றிலும் அடுத்தடுத்து ராசி பலன்கள் நிகழ்ச்சி வரும். மூன்றிலும் மூன்று விதமாக கூறுவார்கள். இதில் ஜெயா டி.வி.யில் ராசி பலன்கள் நிகழ்ச்சியை வழங்கும் குமரவேல் பரிகாரமாக சில மந்திரங்களை கூறி விட்டு, ஜெய மோகன் எழுதியிருக்கும் இந்த புத்தகத்தைப் படியுங்கள், பால குமாரன் எழுதியிருக்கும் அந்த புத்தகத்தைப் படியுங்கள், எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் உப பாண்டவர்கள் என்னும் நூலை வாசித்துப் பாருங்கள், சாரு நிவேதிதாவின் இணைய பக்கங்களை வாசித்துப் பாருங்கள் என்பார். நல்ல வேளை ரஜினியின் அந்த படத்தை பாருங்கள், கமலின் இந்தப் படத்தை பாருங்கள் என்றெல்லாம் கூறாமல் இருக்கிறாரே!

***********************************************************************************

எங்கள் ஊருக்கு பக்கத்தில் வரகூர் என்னும் சிறு கிராமம் . அங்கிருக்கும்  பெருமாள் கோவிலும் அதில் கிருஷ்ண ஜெயந்தியின் பொழுது நடக்கும் உறியடி உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றவை. சமீபத்தில் அங்கு ஒரு திருமணம் நடந்திருக்கிறது. திருமண பெண்ணிற்கு அலங்காரம் செய்ய சென்னையிலிருந்து ஒரு பெண்ணை வரவழைத்திருக்கிறார்கள்(ரொம்ப அவசியம்) வந்த பெண்ணிற்கு கொரோனா இருப்பது தெரிய வந்திருக்கிறது. இப்போது மணப்பெண் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறாளாம். ஊரில் எல்லோருக்கும் டெஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்களாம், ஊரே பீதியில்.  கடவுளே! சப்கோ சன்மதி தோ பகவான்.

***********************************************************************************

  கீழே இருப்பவை என் அக்காவின் பேரன் ஆறு வயதே ஆன அர்ஜுன் வரைந்தவை:










அர்ஜுன் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றாலும், முக 
பாவங்களை சிறப்பாக சித்தரித்திருப்பதாக தோன்றியதால் பகிர்ந்திருக்கிறேன்.




 

48 comments:

  1. நான் தான் ஃபர்ஸ்டூனு சும்மா அட்டெண்டன்ஸ். கருத்து பின்னர். வாசித்துவிட்டேன் பானுக்கா

    கீதா

    ReplyDelete
  2. கல்யாண பெண்ணை அலங்கரிக்க சென்னையிலிருந்து...
    இதுதான் அகம்பாவத்தின் உச்சம் என்பது.

    இப்படிப்பட்டவர்களின் அகம்பாவத்துக்குத்தான் இறைவனும், இயற்கையும் கூட்டணி அமைத்து வைத்தது கொரோனா என்ற ஆப்பு.

    திருமணம் என்பதே தற்காலம் நிறுத்தி வைக்க வேண்டிய சூழலில் வாழ்கிறோம் இருவரது எதிர்காலம் குறித்த விசயமிது.

    சோசியத்தில் எனக்கும் நம்பிக்கை உண்டு ஆனால் சோசியர்களிடம் நம்பிக்கை இல்லை.

    இது முரண்பட்டதாக தெரியலாம் ஜனவரி முதல் தினம் நாட்டில் சிறந்த சோதிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போட்டி போட்டு சொன்னார்கள் நமக்கு இந்த சுபிட்சமானது என்று... என்னவாயிற்று ?

    நானும், எனது மனைவியும் ஓஹோவென்று வாழ்வோமென்ற சோதிடரின் வாக்கு என்னவாயிற்று ?

    இறைவன் நியதிப்படி நிகழ்ந்தே தீரும்.
    எல்லாம் அவன் செயல். அவன் எவன் ? என்பதுதான் மதவாதிகளின் குழறுபடி.

    ReplyDelete
    Replies
    1. //இப்படிப்பட்டவர்களின் அகம்பாவத்துக்குத்தான் இறைவனும், இயற்கையும் கூட்டணி அமைத்து வைத்தது கொரோனா என்ற ஆப்பு.// எனக்கும் இப்படிதான் தோன்றுகிறது,ஆனாலும் அப்பாவிகளும் அகப்பட்டுக் கொல்கிறார்களே? வருகைக்கு நன்றி ஜி.

      Delete
  3. அர்ஜூனின் ஓவியம் பாராட்டுக்குறியது. ஆறு வயதில் இது அதிகமே...
    வாழ்க வளர்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றி! அர்ஜுனின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கிறேன்.

      Delete
  4. காதல் தூய்மையானது..காதலர்கள் அப்படியில்லை என்பது போலத்தான் ஜோதிடமும்..ஆறு வயதுக்கு இத்தனை பெரிய விசயத்தை எடுத்துக் கொண்டதே அவன் திறமைக்குச் சான்று...வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கு நன்றி.

      Delete
  5. பேரனின் ஓவியங்கள் அருமை. நன்கு கவனம் செலுத்தினான் என்றால் பிரகாசிப்பான். வாழ்த்துகள்/ஆசிகள்/பாராட்டுகள். ஜோசியத்தில் அதுவும் உண்மையாகக் கூறுபவர்களிடம் எனக்கும் நம்பிக்கை உண்டு. பெரும்பாலும் இந்த வாரபலன், மாத பலன் எல்லாம் பார்ப்பதில்லை. நம்மவருக்கு அதில் பித்து. பார்த்துச் சொல்லுவார். ஜோசியர் புலியூர் பாலு நண்பரும் கூட. அவர் இருக்கும்வரை விடாமல் அவரின் ஜோசிய வாராந்தரி நாங்க எங்கே இருக்கோமோ அங்கே வந்துடும். காஷ்மீரத்து ஜோசியரில் இருந்து கன்யாகுமரி ஜோசியர் வரை பார்த்திருக்கார்.

    ReplyDelete
    Replies
    1. //காஷ்மீரத்து ஜோசியரில் இருந்து கன்யாகுமரி ஜோசியர் வரை பார்த்திருக்கார்.// ஹாஹா! இப்படி சிலர் உண்டு.

      Delete
  6. கல்யாணப்பெண்ணின் அலங்காரம் இப்போதெல்லாம் செலவு அதிகமானதொரு விஷயமாக இருக்கிறது. கல்யாணம் முடிந்த பின்னரும் நாம் அப்படியேவா இருக்கப் போகிறோம்? கல்யாண அலங்காரம் தேவைதான். ஆனால் கொரோனாவை விலை கொடுத்து வாங்கும் அளவுக்குத் தேவை இல்லை. :( சொன்னால் கேட்பவர் யாரும் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. //சொன்னால் கேட்பவர் யாரும் இல்லை!// அதற்காக சொல்லாமல் இருக்க்க்கூடாது. மூத்தோர் சொல்லும்,முழு நெல்லிக்காயும், முன்னால் கசக்கும்,பின்னால் இனிக்கும். நன்றி கீதா அக்கா.

      Delete
  7. பானுக்கா அர்ஜுன் என்னாமா வரைஞ்சுருக்கான் குழந்தை இதுக்குப் போய் லாங்க் வே டு கோனு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... 6 வயதிற்கு இது அபாரம்!! ஸ்வீட் ஹக்ஸ் குழந்தைக்கு. பாராட்டுகள் சொல்லிடுங்க

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி! கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று நினைத்தேன். நன்றி

      Delete
  8. அக்கா கல்யாணம் பற்றி என்ன சொல்ல?! ஹூம் நம் மக்களுக்கு.....என்ன சொல்ல...இப்படியுமா அறிவிலிகள்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தன்னை சுற்றி இருப்பவர்கள் தினம் தினம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தும் அலட்சியமாக இருப்பவர்களை என்ன செய்வது?

      Delete
  9. வணக்கம் சகோதரி

    முதலில் தங்கள் பேரனுக்கு என் வாழ்த்துகளுடன் பாராட்டுக்களையும் கூறி விடுங்கள். ஆறு வயதில் இப்படியான ஓவியங்கள் வரைவது சுலபமல்ல.. இத்தகைய கதா பாத்திரங்களை முதலில் புரிந்து கொள்வதே கஸ்டம். அதை படமாக வரைவதென்றால் எவ்வளவு திறமை இருக்க வேண்டும்.? மேலும் நல்ல முறையில் கற்று கொண்டால் சிறப்பாக வருவார். மீண்டும் பாராட்டுக்கள்..

    வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் பண்ணிப் பார் என்பது பழமொழி. கல்யாணங்கிறது வாழ்வில் ஒரு முறை வருவதால் அனைவருக்கும் அது மறக்க முடியாத நாளாக இருக்க வேண்டுமென்ற கனவு இருப்பதில் தவறில்லை. ஆனால் இப்படியான சூழலில் அது சிரமானதாக மாறுவதை கேட்க கஸ்டமாக இருக்கிறது. பாவம் அந்தப் பெண்..! இன்னும் எத்தனை கனவுகளை சுமந்திருந்தாளோ? கஸ்டமான கால கட்டங்கள் மாற பிரார்த்தித்துக் கொள்வோம்.

    சோதிடம் சில சமயம் பலிதமாகும். பல சமயங்களில் விதியின் வலிமை அதை பொய்யாக்கி விடும். எப்படி இருந்தாலும் நடப்பதை எதிர் கொள்வது நாம்தானே..! அருமையான மசாலா சாட். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல் விளக்கமான கருத்துரைக்கு நன்றி கமலா.

      Delete
  10. //நல்ல வேளை ரஜினியின் அந்த படத்தை பாருங்கள், கமலின் இந்தப் படத்தை பாருங்கள் என்றெல்லாம் கூறாமல் இருக்கிறாரே!//
    போகப்போக அதுவும் சொல்வார்.  காசு கொடுத்தால் இந்த சீரியலைப் பாருங்கள்...  அந்த சீரியலைப் பாருங்கள் என்றும் சொல்வார்!!!  விளம்பரமாகி விடும்!

    ஆனால் நகைச்சுவைக்கு இபப்டிக் சொன்னாலும் அவரின் புத்தக ஆர்வத்தை வியக்கிறேன்.  நம் தளங்களில் வரும் புத்தக அறிமுகம் போல அது!

    ReplyDelete
    Replies
    1. //அவரின் புத்தக ஆர்வத்தை வியக்கிறேன்.// ஒரு வகையில் உண்மைதான்.

      Delete
  11. வரகூர் திருமண வீடு - பொறுப்பில்லாத மனிதர்கள்.  வேறென்ன சொல்ல... தற்போதைய தமிழக அமைச்சர் ஒருவர் கூட தன் இல்லத் திருமண விழாவை இப்படி கூட்டம் கூட்டி நடத்தி இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் கடவுள் நல்ல புத்தி கொடுக்கட்டும்.

      Delete
  12. ஆறு வயதா?   ஆறு வயதில் இப்படி வரைய வருகிறதா?  கடவுளின் ஆசி பரிபூரணமாக இருக்கிறது குழந்தைக்கு.    நன்றாய் வ(ள)ரட்டும்.

    ReplyDelete
  13. ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டு என்றாலும் பார்க்கும் வழக்கம் இல்லை.

    எப்படி எலலம் கோவிட் பரப்புகிறார்கள். கேரளத்திலும் கூட தொடக்கத்தில் ஒரு குடும்பத்தினர் வெளிநாடு சுற்றுலா சென்று விட்டு எப்படியோ ஏர்போர்ட்டில் கட்டுப்பாடுகளை மீறி தப்பித்து வெளியில் வந்ததோடு கல்யாணங்களுக்கும் சென்று அவர்களுக்கும் கோவிட் இருந்தது பரப்பவும் செய்தார்கள்.

    உங்கள் அக்கா பேரன் மிகப் பெரிய ஓவியராக வருவார் என்று தெரிகிறது. விளையும் பயிர் முளையிலே! பாராட்டுகள். வாழ்த்துகள்

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி துளசிதரன்.

      Delete
  14. ஆறு வய்து சிறுவனி கை வழியாக கரி பரந்தமனின் தரிசனம்....

    அழகு.. அருமை...

    ReplyDelete
  15. வரகூருக்கு வந்த கொரோனா....

    அந்த ஊரில் விவரம் அறிந்தோர் யாரும் இல்லை போலிருக்கிறது...

    ஆற்றில் போன பீடையை
    அலக்கு போட்டு இழுத்தார்களாம்..
    என்றொரு பழமொழி உண்டு...

    ReplyDelete
    Replies
    1. அதேதான். என்ன செய்வது?

      Delete
  16. பொழுது விடிந்த நேரத்தில் பொதுவான ராசி பலன் சொல்லும் சோசியர்களில் தலைக்குப் பின்னால் தான் நவக்கிரக மண்டலமே சுற்றிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஜனங்கள் இருக்கும் வரை இந்நிலைமை மாறாது..

    இனி விரைவில் இப்படி சொல்லக்கூடும்..

    இன்னின்ன ராசிக்காரர்கள்
    நடிகை அஞ்சலா மோர் நடித்த படங்களைப் பார்ப்பது நல்லது...

    இன்னின்ன ராசிக்காரர்கள்
    நடிகர் கூமுட்டை நடித்த படங்களைக் கண்டு களிப்பது நல்லது..

    என்று இனி வந்தாலும் வரும்...

    ReplyDelete
    Replies
    1. ஓவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லி குழப்புகிறார்கள்.

      Delete
  17. சிறுவனின் ஓவிய திறமை வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் உரியது.

    ReplyDelete
  18. பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  19. ஆறுவயதில் இந்த ஓவியங்கள் ஜாஸ்தி! பையனுக்குத் திறமையிருக்கிறது..

    ReplyDelete
  20. பேரனின் ஓவியங்கள் அருமை.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. பேரன் அர்ஜூனின் ஓவியங்கள் ரொம்பவே அழகு. தொடர்ந்து வரையச் சொல்லுங்கள்.

    ஜோசியம் - நான் பார்ப்பதே/கேட்பதே இல்லை.

    வரகூர் - நிறைய முறை அங்கே சென்றிருக்கிறேன். எனது பக்கத்திலும் படங்கள் பகிர்ந்து கொண்டதுண்டு. மணப்பெண் அலங்காரத்திற்கு சென்னையிலிருந்து வரவழைத்து தேவையில்லாமல் கொரோனாவை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்ன சொல்வது! அந்த குடும்பத்தினரின் தேவையில்லாத ஆசையால் எத்தனை பேருக்குக் கஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. வரகூர் படங்கள் உங்கள் தளதில் நீங்கள் பகிர்ந்து கொண்டதை பார்திருக்கிறேன்.

      Delete
  22. ஆமாம், அர்ஜீன் வரைந்த படங்கள் மிகவும் அருமை.👌👌
    இந்த மாதிரி ஒரு சமயத்தில் கல்யாணம் என்பது முக்கிய உறவுகளுடன்,முக்கிய சடங்குகளுடன் வீட்டில் செய்வதே நல்லது.

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாக கருத்து கூரியிருக்கிறீர்கள். நன்றி.

      Delete
  23. அன்பு பானு,
    சமீபத்திய நிகழ்வுகள் மக்களின் அறியாமையை விளம்பரப் படுத்துகின்றன.
    எங்களுக்கெல்லாம் கொரோனா கண்டு பயாமில்லை என்று கூட்டம் சேர்த்தவரே அதற்குப் பலியாகிவிட்டார்.
    இந்த லட்சணத்தில் முக அலங்காரத்துக்காக
    நோயை வரவழைத்தவர்களை என்ன என்று சொல்வது:(
    விபரீதம் தான்.
    குழந்தை அர்ஜுனின் கை ஓவியங்கள் பெருமாளின் அவதாரங்களை அருமையாகச் சொல்கிறது.
    அளவுகள் சரியாக இருக்கின்றன.
    ஆறு வயது அதிசயம் அவன்.
    மனம் நிறை வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. அறியாமை இந்த அளவிற்கா? என்று தோன்றுகிறது. அர்ஜுன் பெற்றோர்களிடம் உங்கள் பாராட்டுகளை சொல்கிறேன். நன்றி.

      Delete
  24. ஆறு வயது குழந்தையின் கைவண்ணம் மிக மிகவும் அருமை.வாழ்த்துகள். தொடரட்டும் வெற்றிகள்.

    ReplyDelete
  25. // நல்ல வேளை ரஜினியின் அந்த படத்தை பாருங்கள், கமலின் இந்தப் படத்தை பாருங்கள் என்றெல்லாம் கூறாமல் இருக்கிறாரே!// ஹா ஹா ஹா இரசித்தேன்.
    அர்ஜுன் வரைந்த படங்கள் பிரமாதம். வாழ்த்துகள்.

    ReplyDelete