மசாலா சாட் - 21
எனக்கு என்னவோ சிறு வயதிலிருந்தே ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் அத்தனை ஈடுபாடு கிடையாது. எங்கள் அம்மா ஆங்கிலப் புத்தாண்டு அன்று இனிப்பு செய்வதுண்டு. ஒரு முறை நான் என் அம்மாவிடம், "நம்முடைய புது வருடம் சித்திரை மாத பிறப்புதானே?" என்று கேட்டேன். அதற்கு அம்மா," அது விசேஷங்களுக்கு, மற்ற விஷயங்களுக்கு ஆங்கில தேதியைத்தானே ஃபாலோ பண்ணுகிறோம். ஒண்ணாம் தேதிதான் சம்பளம் வாங்குகிறோம். இதையும் கொண்டாடத்தான் வேண்டும்" என்றாள். என்றாலும் பெரிதாக கொண்டாடியதில்லை. புத்தாண்டு தினத்தன்று அதிக கும்பலாக இருக்கும் என்பதால் அன்று கோவிலுக்குச் செல்வதையும் தவிர்ப்பேன்.
பள்ளி, கல்லூரி நாட்களில் நேரில் பார்க்கும் பொழுது வாழ்த்து சொல்வதோடு சரி. மஸ்கட்டில் இருந்த பொழுது புத்தாண்டு பார்டிகளில் கலந்து கொண்டதுண்டு. அந்த பார்ட்டிகளில் உற்சாக பானம் கட்டாயம் இருக்கும். விளையாட்டுகள், தம்போலா, பின்னர் சாப்பாடு என்று செல்லும். ஒரு முறை நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த புது வருட பார்ட்டியில் ஒருவருக்கு உற்சாகம் பீறிட்டு, அவர்கள் வீட்டு டீபாயில் ஏறி நடனமாடியதில் அந்த டீபாயின் கண்ணாடி உடைந்து விட்டது. வீட்டம்மா ," புது வருடத்தில் கண்ணாடி உடைவது நல்ல சகுனம்" என்றாள். வேறு என்ன சொல்ல முடியும்?
ஓமானில் ஆங்கில புத்தாண்டிற்கு விடுமுறை கிடையாது. அவர்கள் கொண்டாடவும் மாட்டர்கள். நாம் வாழ்த்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "திஸ் இஸ் நாட் அவர் நியூ இயர்" என்று கூறி விடுவார்கள். எனக்கும் கூட இதைப்புது வருடம் என்கிறார்களே, இதில் என்ன புதிது? நம்முடைய புது வருடம் என்றால் அன்று சூரியன் ரசிக்கட்டத்தில் முதலாவதான மேஷத்தில் நுழைகிறார், ஜனவரி ஒன்று இன்னொரு நாள்தானே என்றுதான் தோன்றும். இருந்தாலும், எல்லோரும் வாழ்த்து சொல்வதால் நானும் பதிலுக்கு வாழ்த்துவேன். காசா? பணமா? வாழ்த்திவிட்டு போகலாமே? இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
***************
நேற்று பொன்னியின் செல்வன் ஆடியோ புக் கேட்டேன். இதற்கு முன் பவா செல்லத்துரை அவர்கள் சொல்லிய சில கதைகளையும், பாரதி பாஸ்கர் படித்த சில கதைகளையும் கேட்டிருக்கிறேன். அவை வேறு விதம். ஆடியோ புக் என்றால் ஒலிச்சித்திரம் போல இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பொன்னியின் செல்வனை படித்த ஒருவர் அதை இன்னொருவருக்கு சொல்வது போல் குரலில் எந்தவித ஏற்ற இரக்கமும் இல்லாமல் சொல்லிக் கொண்டே போகிறார். கல்கியின் வர்ணனை அழகுகளையோ, பாத்திர படைப்புகளின் சிறப்பையோ உணர முடியவில்லை. குந்தவையின் கம்பீரம், நந்தினியின் தந்திரம், பெரிய பழுவேட்டரையரின் சபலம், வந்தியத்தேவனின் சாதுர்யம், ஆழ்வார்கடியானின் நகைச்சுவை, அநிருத்த பிரம்மராயரின் அறிவு தவறு, அநிருத்த பிரம்மராயரே காணோம். பொன்னியின் செல்வன் படித்து கொஞ்சம் குழப்பம் இருப்பவர்கள் இதைக் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளலாம். மற்றபடி கேட்டலில் படிப்பதே நலம்.
*************
ஒரு மைக்ரோ கதை!
திருமணம் முடிந்து எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர். தன் அறையில் துணிகளை மடித்து பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த மகளை நெருங்கி அவள் தோளை தட்டினார் சந்திரசேகர் "எல்லா ப்ராப்லங்களையும் தாண்டி நீ ஆசைப்பட்டபடியே கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடுத்து" என்று அவள் கையை குலுக்கியதும் அவளுக்கு கண்கள் லேசாக கலங்கின. துணி மடிப்பதை நிறுத்தி விட்டு படுக்கையில் உட்கார்ந்தாள். அவளுடைய அம்மாவும் அவள் அருகில் அமர்ந்து பெண்ணை மெல் அணைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள், "உனக்கு நாங்க சொல்லிக் கொடுக்க வேண்டாம். உனக்கே எல்லாம் தெரியும், நீ கெட்டிக்காரி. இத்தனை நாட்கள் இருந்ததும், நல்ல பெயர் வாங்கியதும் பெரிசு கிடையாது. இனிமேல்தான் கஷ்டம். நீ சாதாரணமா பேசுவது கூட தவறாக புரிந்து கொள்ளப் படலாம். நல்ல மாட்டுப்பொண்ணுனு பெயர் வாங்கி விடலாம், நல்ல மாமியார்னு பெயர் வாங்குவதுதான் கஷ்டம். ஜாக்கிரதை!" என்றாள் மகனுக்கு திருமணம் முடித்து மாமியாராகியிருக்கும் மகளிடம்.
************
சென்ற வாரம் ஊரிலிருந்து வந்திருந்த அக்கா பெண், மாப்பிளை, குழந்தைகளோடு பன்னர்கட்டாவில் இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு சென்றிருந்தோம். நல்ல கும்பல் இருந்தது. பெரும்பான்மையோர் மாஸ்க் அணிந்திருந்தார்கள். அங்கே சஃபாரிக்காக செல்லும் பொழுது நான் கால் இடறி கீழே விழுந்தேன் . நல்ல வேளை பெரிதாக அடி படவில்லை.
"கையில் செல்ஃபோன்" (அதனால் இல்லை)
"புடவை தடுக்கி விட்டதா?" (இல்லை)
"கீழே கவனிக்கவில்லையா?" (ஆமாம்)
விழும் பொழுது கையை ஊன்றிக் கொண்டு விட்டீர்கள், அப்படி செய்யக் கூடாது (அது அனிச்சை செயல் அல்லவா?)
மாரல் ஆஃப் தி ஸ்டோரி: நாம் தவறு செய்யும் பொழுது நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
![]() |
அபூர்வமான வெள்ளைப் புலி |
![]() |
சிற்றுண்டி மற்றும் சிறுகடைகள் |
***********
பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சிலிருந்த கண்டக்டர்,:"சிதம்பரம் எல்லாம் ஏறுங்க"
பயணி ஒருவர்: "சார், நான் ராமசாமி, ஏறலாமா?"
வணக்கம் சகோதரி
ReplyDeleteநல்ல சுவையான கதம்பம். வருடங்கள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன. இதில் உற்சாகிக்க ஏதுமில்லை என்றாலும், நீங்கள் சொன்ன "காசா. பணமா" என்ற எண்ணம்தான் எனக்கும். இப்போதைய உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்லும் போது அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வருகிறதே அதுதான் மனதுக்கு ஒரு மகிழ்வாக உள்ளது. மற்றபடி அக்கம் பக்கம் கூட என்றும் சென்று வாழ்த்துகள் பறிமாறிக் கொண்டதில்லை.
நீங்கள் சொல்வது போல் பொன்னியின் செல்வனை படித்தாலே நலம் என உணருகிறேன்.
சின்னக் கதை எதிர்பாராத திருப்பம்... நன்றாக உள்ளது. அருமையாக எழுதியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்தேன்.
பன்னர்கட்டா பூங்கா படங்கள் அருமை. அடாடா.. கீழே விழுந்து விட்டீர்களா? நல்ல வேளை..! அன்றைய தினம் காயங்கள் இன்றி விழுந்து எழுந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம். சில சமயங்களில் நம்மையறியாமலே இப்படி நடந்து விடுகிறது. (எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும்) என்ன செய்வது...? இனி எங்கு சென்றாலும் கவனத்துடன் இருக்க முயற்சிப்போம் .
நாங்களும் ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்று வந்தோம். அப்போது மதிய வேளையாததால், அங்குள்ள விலங்குகள் நம்மை அலட்சியமாக பார்த்தும் பார்க்காதது போல் படுத்தும், உறங்கியும் கொண்டிருந்தன..
ஜோக் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலா. பதிவின் ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனியாக பாராட்டும் உங்கள் பின்னூட்டம் எப்போதுமே வரவேற்க கூடியது.
Deleteஇங்கு சமீப காலமாக ஆங்கில வருடத்தின் முதல் நாளுக்கு விடுமுறை.. வெள்ளி சனி வாராந்திர விடுமுறை.. வெள்ளியன்று முதல் தேதி ஆனதால் ஞாயிறும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகிப் போனது... நமக்கோ அன்றைக்கும் சமையல் கணக்குப் பார்த்துக் கொண்டு!...
ReplyDeleteஓ,அப்படியா? நல்ல மாற்றம்தான்.
Deleteஅன்றைய தினம் விடியற்காலையில் கீழ்த் தட்டிலிருந்த அரிசிக் குவளை சரிந்து கையளவு அரிசி சிந்தி விட்டது.. நானும் இப்படித்தான் நல்ல சகுனம் என்று சொல்லிக் கொண்டேன்...
ReplyDeleteபின்னே - வட நாட்டில் வீட்டுக்குள் நுழையும் மருமகள் அரிசிக் குவளையைக் கவிழ்த்து விடுகிறேளே!...
//வட நாட்டில் வீட்டுக்குள் நுழையும் மருமகள் அரிசிக் குவளையைக் கவிழ்த்து விடுகிறேளே!...// அதுதானே..?!
Deleteதாத்தாவின் மடியிலிருந்த குழந்தையை புலி இழுத்துச் சென்ற கோரம் இன்னும் நினைவில் இருக்கிறது... நக்கீரன் இதழில் அந்தப் படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன..
ReplyDeleteஇன்று மதியம் அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது எதற்காக என்று நினைத்துக் கொண்டிருந்தால் இங்கே தங்களது பதிவில் அதே செய்தி...
சில சமயங்களில் இப்படித்தான் திடீரென்று யாரோ ஒருவர் நினைவு வரும்,அன்று அவரை சந்திப்போம், அல்லது அவர் தொலைபேசியில் அழைப்பார்.
Deleteநாரணன் அருள்...
ReplyDeleteஎதிலும் கவனமாக இருங்கள்..
அன்று ஒரே தூக்க கலக்கம், அதனால் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். கருத்துகளுக்கு நன்றி.
Deleteஇசப்பாட்டு இதுதானா:)
ReplyDeleteமிருகக் காட்சி சாலை இங்கெயும் வந்து விட்டது.
மாமியார் கதை சூப்பர். அவளை சமாதானப் படுத்த அம்மா
அப்பா வருவதுதான் அதிர்ஷ்டம்.
விழுவதும் பின் எழுவதும் நம் வழக்கம் தானே.
சலனப் படாமல் இருக்கலாம்.:)
கேள்வி எதுக்குதான் கேட்பார்களோ:)
ஆமாம், எ.பி.க்கு இங்கே எசப்பாட்டு.
Deleteமைக்ரோ கதை நிறைய பேருக்கு பிடித்திருக்கிறது என்பது மத்யமரில் தெரிந்தது.
இப்போதெல்லாம் நடக்கும் பொழுது அதிக கவனம் எடுத்துக் கொள்கிறேன். இருந்தும் அன்று கொஞ்சம் தூக்கக் கலக்கம். வருகைக்கு நன்றி.
மைக்ரோ கதை அருமை...புத்தாண்டு வாழ்த்துக்களம்மா
ReplyDeleteவாங்க மதுரை தமிழன், பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. நலமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்! பாராட்டுக்கு நன்றி.
Deleteபன்னார்கட்ட செய்தி தவிர்த்து மற்றவை படித்தேன் முகநூலில். எனக்கெல்லாம் இந்த ஆடியோ புத்தகங்கள் சரியாக வராது கடந்த சில நாட்களாக அநுத்தமா, பிவிஆர் புத்தகங்கள் படிக்கிறேன். 4,5 புத்தகங்கள் படித்துவிட்டேன். சிதம்பரம் நகைச்சுவைத்துணுக்கு அருமை. பொன்னியின் செல்வன் ஆடியோ பத்தி எழுதி இருந்தீங்களா/இல்லையா? நினைவில் இல்லை. ஆனால் படிச்சாப்போல் இருக்கு. வேறே யாரும் சொல்லி இருக்கலாமோ?
ReplyDeleteஆடியோ புத்தகம் பற்றி ஒரு முறை புதன் கேள்வி பதில்களில் கேட்டிருந்தேன். நாலைந்து புத்தகங்கள் படித்து விட்டீர்களா? க்ரேட்!என் நேரத்தை இணையம் பறித்துக் கொள்கிறது. ஆ.வி. மற்றும் அமுதசுரபி தீபாவளி மலர் இன்னும் படித்து முடிக்கவில்லை.
Deleteபுத்தாண்டு வாழ்த்துகள்...
ReplyDeleteஆமாம் இரு புத்தாண்டு நாள் உள்ளதே...?
நாங்கள் கொண்டாடுவது சித்திரை மாத பிறப்பைத்தான். இதை என் பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன். நன்றி டி.டி.
Deleteகாசா பணமா ? வாழ்த்துவோம்...
ReplyDeleteவாங்க கில்லர்ஜி! நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகை தந்திருக்கிறீர்கள். புத்தாண்டு வாழ்த்துகள்!
Deleteகதம்பம் சுவாரஸ்யம். சில முன்னாலேயே படித்தவை. பொன்னியின் செல்வன் ஆடியோ புக் பாம்பே கண்ணன் தயாரித்ததா? ஜோக் சட்டென சிரிப்பை வரவழைத்தது. இதுபோலவே டிக்கெட் எடுக்கும் ஜோக் ஒன்றும் உண்டு,.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், பாம்பே கண்ணன் இல்லை, யாரோ ஜெனிஸ் அமல்ராஜாம். 3.30 மணி நேரத்தில் சொல்லி முடித்து விடுகிறார்.
ReplyDeleteஎன்னிடம் திரு பாம்பே கண்ணன் வழங்கிய பொன்னியின் செல்வன் ஆடியோ டிவிடி இருக்கிறது மூன்று டிவிடிக்கள்.
Delete