கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, September 1, 2021

மசாலா சாட்

மசாலா சாட் 


கம்சன் தன் தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என தெரிந்தவுடன் கணவன் ,மனைவி இருவரையும் சிறையில் அடைத்தான்...*

இவர்களுக்கு  குழந்தை பிறக்கும் சமயம், ஒரு கழுதையை சிறை வாசலில் கட்டி வைத்தான்.சிறைக்காவலர்களை அவன் நம்பவில்லை.கழுதைக்கு நுகரும் சக்தி மிக அதிகம்..குழந்தை பிறந்ததும் கத்த துவங்கி விடும்.கம்சன் வந்து கொன்று விடுவான்.இப்படி ஏழு குழந்தைகள் இறந்தன..*

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார் ..உடனே தேவகி கணவன் வசுதேவன்...தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான்..கழுதையும் கத்தவில்லை..கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது

எனவேதான் காரியம் ஆகனும்னா கழுதையானாலும் காலை பிடி என்ற பழமொழி வந்தது..!!*

கர்நாடகாவில் அமிர்தாபுரத்து அமிர்தேஷ்வரான கோவிலில் வெளிச்சுவரில் வசுதேவர் கழுதை காலில் விழும் சிற்பம் உள்ளது.

மேற்படி செய்தி வாட்ஸாப்பில் வந்தது. 

ஜென்மாஷ்டமிக்காக என் மாப்பிள்ளையும், பேத்தியும் பாடியிருக்கும் கிருஷ்ணாஷ்டகம் 


ஞாயிறன்று மதிய உணவருந்திய பின் ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, என் மருமகளுக்கும் தோன்ற ஸ்விக்கியில் ஐஸ் க்ரீம் ஆர்டர் கொடுத்தாள். ஐஸ்க்ரீமோடு ஒரு சிறிய பாட்டில் கோக்க கோலா, ஒரு பார் சாக்லேட், நாலு பலூன்கள் எல்லாம் வந்தன. அன்று ஸ்விக்கிக்கு பிறந்த நாளாம், அதனால் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ். 


நூறாவது நாள் படம் வெளியான பொழுது நான் திருச்சியில் இருந்தேன். அந்தப் படத்திற்கு சென்றபொழுது(சிவாலயா காம்ப்ளெக்ஸ்) இயக்குனர் மணிவண்ணன் ரசிகர்கள்,"நூறாவது நாள் படத்திற்கு இன்று நூறாவது நாள் என்று இனிப்பு வழங்கியது நினைவிற்கு வந்தது.  

'யவனிகா என்னும் சுஜாதாவின் கதை தொடராக விகடனில் வந்ததை சேகரித்து பைண்ட் பண்ணிய புத்தகம் கிடைத்தது. அப்பொழுது விகடன் குட்டியாக இருந்திருக்கிறது. எந்த வருடத்திலிருந்து இந்த பெரிய சைஸுக்கு மாறியது என்று நினைவில் இல்லை. அதில் ஒரு குட்டி கதை. 

ஒரு காக்கை மரத்தின் உச்சிக்கிளையில் எந்த வேலையும் செய்யாமல் ஒரு நாள் முழுவதும்  அமர்ந்திருந்தது. அதை பார்த்த ஒரு குட்டி முயல்,"நானும் உன்னைப் போல எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கட்டுமா?" என்று கேட்டது. அதற்கு காகமும் "சரி" என்றது. அந்த முயல் குட்டி மரத்தின் அடியில் பேசாமல் உட்கார்ந்திருந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு நரி அந்த முயலை கவ்விக் கொண்டு போய் விட்டது. மாரல் ஆஃப் தி ஸ்டோரி: எந்த வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமென்றால் நாம் ரொம்ப ரொம்ப உயரத்தில் இருக்க வேண்டும்.   

வெட்டியாக ஒரு கேள்வி:

உணவின் பெயரைக் கொண்ட உணவகங்களை குறிப்பிடுங்கள் பார்க்கலாம் உதாரணம் 'தலப்பாகட்டி பிரியாணி'   

சந்திக்கலாம். 







👇

19 comments:

  1. விஷ்ணுவின் அம்சமான மாயாவிடம் சொல்லி கர்ப்பத்தை இடம் மாற்றி என்றெல்லாம் அல்லவா வரவேண்டும்?  கதை சற்றே மாறி இருக்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. நம் புராண கதைகளில் இடைச்செருகல்கள் நிறைய இருக்குமே. தவிர கர்மத்தை இடம் மாற்றியது, தேவகியின் கர்பத்திலிருந்து ரேவதியின் கர்பத்திற்கு மாற்றியது பலராமனை அல்லவா? கண்ணனை யசோதைக்கு அருகில் போட்டு விட்டு அவளுக்கு பிறந்த யோக மாயாவை வசுதேவர் தூக்கி வருகிறார்.

      Delete
  2. க்ருஷ்ணாஷ்டகம் சூப்பர்.  ஸ்விக்கிக்கு பிறந்த நாளா?  அடடா...  வாழ்த்து சொல்லி இருக்கலாமே!!!  

    ReplyDelete
    Replies
    1. //க்ருஷ்ணாஷ்டகம் சூப்பர்.// நன்றி.

      Delete
  3. விகடன் குமுதம் எல்லாம் ஒரு நேரத்தில் ஒரே சைசில் இருந்தன.  இப்போது குமுதம் ரொம்பக் குட்டியாகி விட்டது என்று நினைக்கிறேன்.  விகடன் பேசித்தாகி விட்டது.  அந்நாட்களில் தினமணி கதிர் சற்று பெரிதாக இருக்கும்.  கலைமகளும்.

    ReplyDelete
    Replies
    1. //அந்நாட்களில் தினமணி கதிர் சற்று பெரிதாக இருக்கும்.// ஆமாம். கலைமகள், அமுதசுரபி இவை இரண்டும் ஒரு சைஸ். கல்கி ஒரு அலாதி சைஸில் இருக்கும்.

      Delete
  4. சென்னையில்; தோசா என்கிற பெயரிலேயே கடைகள் இருக்கின்றன.  அப்புறம் முருகன் இட்லி கடை.  இட்லீஸ் என்றொரு கடை இருக்கிறது.  அப்புறம் நூடுல்ஸ் ஸ்பாட்.

    ReplyDelete
    Replies
    1. யோசித்தால் நிறைய பெயர்கள் நினைவுக்கு வருகின்றன.

      Delete
  5. கலைமகள், அமுதசுரபி, கல்கி மூன்றும் ஒரே அளவில் வந்து கொண்டிருந்தன. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்றவை ஒரே அளவில் வந்தன. பின்னர் விகடன் நிர்வாகம் கைமாறியது விகடன் பெரிய அளவிலும், குமுதம் நிர்வாகம் கைமாறியது குமுதம் ரொம்பச் சின்ன அளவிலும் வருகின்றன என நினைக்கிறேன். கல்கி கடைசி வரை எப்படி வந்ததுனு தெரியலை. இப்போ அச்சில் கல்கி வருவதில்லை. குங்குமம் போன்ற பிற புத்தகங்கள் பற்றித் தெரியவில்லை. எந்தப் புத்தகமும் இப்போ வாங்குவது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. //கலைமகள், அமுதசுரபி, கல்கி மூன்றும் ஒரே அளவில் வந்து கொண்டிருந்தன// கொஞ்சம் சிறியது.
      குங்குமம், சாவி இரண்டும் லே அவுட், உள்ளடக்கம் எல்லாம் ஒரே மாதிரி இருந்தது.ஜூ.வி, நக்கீரன், துக்ளக் எல்லாம் ஒரு சைஸ்.

      Delete
  6. பேத்திக்கு நல்ல வளமான குரல். நன்றாகப் பாடி இருக்காள். ஸ்விக்கி/ஜொமோட்டோ பற்றிய என் அறிவு பூஜ்யம் என்பதால் அது பற்றி எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு சந்தேகம். நேரில் போய் வாங்குவதற்கும்/இப்படி ஆர்டர் செய்து வாங்குவதற்கும் விலை ஒரே மாதிரி இருக்குமா/வித்தியாசம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. விலை வித்தியாசம் கிடையாது. டெலிவரி சார்ஜ் கொஞ்சம் இருக்கும். அது நாம் ஆட்டோவில் போய் வருவதைவிட மிகக் குறைவாகவே இருக்கும் (பெரும்பாலும்). இப்போதெல்லாம் எதற்கும் வீட்டை விட்டு வெளியில் செல்லவே வேண்டாம். எல்லாமே ஆன்லைனில் வரவழைத்துக்கொள்ளலாம். நான் நிறைய பொருட்களை இப்படி வாங்க ஆரம்பித்திருக்கிறேன்.

      ரெஸ்ட்ராண்ட் ஆர்டர் செய்வது (ஸ்விக்கி, ஸொமட்டோ...), நேரில் வாங்குவதை விட ஆஃபரில் மிகவும் குறைவாக இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். சமீபத்தில் அடையாறு ஆனந்தபவனில் 60 சதம் டிஸ்கவுண்டில் ஏகப்பட்டது வாங்கினோம் (என் வெயிட்டையும் ஏற்றிக்கொண்டேன்)

      Delete
    2. //பேத்திக்கு நல்ல வளமான குரல்.// நன்றி. தெரிவிக்கிறேன்.

      Delete
  7. சுவையான மசாலா சாட்.

    தற்போது வாராந்தர இதழ்கள் எதையும் வாங்குவதில்லை, படிப்பதும் இல்லை. அதனால் அளவு குறித்த தகவல் எதுவும் தெரியாது.

    ஸ்விக்கி பிறந்த நாள் - :) நல்லது.

    கீதாம்மாவின் கேள்விக்கான பதில் - Delivery Charges உண்டு. கூடவே சில உணவின் விலையிலும் Packing charges சேர்த்துவிடுவதுண்டு.

    ReplyDelete
  8. ஜென்மாஷ்டமிக்காக என் மாப்பிள்ளையும், பேத்தியும் பாடியிருக்கும் கிருஷ்ணாஷ்டகம் மிக அருமை.
    குழந்தை பாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  9. ரொம்ப சந்தோஷம்.நன்றி. அவர்களிடம் சொல்கிறேன்.

    ReplyDelete
  10. இருட்டுக்கடை ஹல்வா (அல்வா) என்பது உண்டு

    விஸ்வநாதன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க விஸ்வா. இன்னும் நிறைய இருக்கிறது. என்னுடைய அடுத்த பதிவில் சொல்கிறேன். நன்றி.

      Delete