கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, November 7, 2021

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 2

கடலைக் கடந்து (இரண்டாம் பாகம்) - 2

பாஸ்போர்ட்டோடு ப்ளூடார்ட் ஊழியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய எல்லா டாகுமெண்டுகளையும் சனிக்கிழமை மாலையே தயார் செய்துவிட்டு திங்கள் கிழமை காலை பத்து மணி முதல் ப்ளூ டார்ட் ஊழியரை எதிர்பார்க்க ஆரம்பித்தேன். பதினொன்றாகியது, பன்னிரெண்டும் ஆனது.. அவர் வரும் வழியாயில்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டால்," நீங்கள் சனிக்கிழமை தரவில்லை, அதனால் உங்களுக்கான ஆர்டர் கான்சலாகி விட்டது. இனி அடுத்த ஸ்லாட் எப்போது வருமோ அப்போதுதான் வருவோம்" என்று தலையில் குண்டை போட்டார். 

எனக்கு பக்கென்றாகி விட்டது. "இது மாதிரி விஷயங்களில் நாம் திருப்பி அனுப்பக் கூடாது, இப்போது பார்....இனி அடுத்த ஸ்லாட் எப்போது வருமோ..? மேலும் அவர்கள் கேட்ட பொழுது நாம் சப்மிட் பண்ணவில்லை என்றால் நமக்கு விருப்பமில்லை என்று கூட அவர்கள் புரிந்து கொள்ளலாம்.."என்றெல்லாம் நான் புலம்ப என் மகன்,"பதட்டப்படாதே மா, இந்த ஆள் ப்ளூடார்டின் கூரியரை கலெக்ட் பண்ணுவதற்காக ஆள். அவனுக்கு சனிக்கிழமை இந்த வேல கொடுத்திருப்பார்கள். அடுத்தது வேறு யாரையாவது அனுப்புவார்கள். ஒரே ஒரு முறை முயற்சி செய்து விட்டு ஆள் இல்லை என்று கூறிவிட மாட்டார்கள் அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்" என்று எனக்கு தைரியம் கூறி விட்டு வி.எஃப்.எஸ். க்ளோபல், ப்ளூ டார்ட் இரண்டு கஸ்டமர் கேர் எண்களை தொடர்பு கொண்டதில் உருப்படியாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ப்ளூ டார்ட் அலுவலகத்திற்கு சென்று விசாரித்ததில் முதலில் அங்கிருந்த பெண்ணிற்கு சரியாக புரியவில்லை. என்னிடமிருந்து ரெஃபரென்ஸ் நம்பரை வாங்கி அருகிலிருந்த தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார். அவர்கள் என் பெயர், விலாசம் இவற்றை உறுதி செய்து கொண்டு டாகுமெண்ட்ஸ் அடங்கிய என்வெலப் ரெடியாக இருந்தால் அந்தப் பெண்ணிடம் சமர்ப்பிக்க சொன்னார்கள். அதுதான் ரெடியாக இருந்ததே.. ப்ளூ டார்டின் கிளை அலுவலகத்தில் சமர்பித்து விட்டு வந்தேன். 

அவர்கள் தந்த ரெஃபரென்ஸ் நம்பரைக் கொண்டு பாஸ்போர்ட் கனடியன் கான்சலேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டது, விசா ஸ்டாம்பிங்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறது, விசா ஸ்டாம்ப் செய்யப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் திருப்பி அனுப்பப்பட்டுவிடும் என்றெல்லாம் தகவல்கள் அறிய முடிந்தது. ஒரு வழியாக விசா ஸ்டாம்ப் ஆகி பாஸ்போர்ட் வந்ததும் நிம்மதி பெருமூச்சு வந்தது.

எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் விநாயகருக்கு ஒரு சூரைக்காயை போட்டு விட்டு அடுத்த நிகழ்ச்சியான பயணத்திற்கு நாள் பார்க்கும் படலம் துவங்கியது.

-தொடரும்




18 comments:

  1. தானாய் வரட்டும் என்று காத்திராமல் அடுத்த முயற்சி என்ன என்று பார்த்து முயன்றீர்களே...  நல்ல விஷயம்..   ஆமாம் அதென்ன... தலைப்பு கொடுக்க மறந்து விட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ப்ளூ டார்ட்டில் இரண்டு முறை வந்து பார்ப்பார்கள் என்பது பிறகு தெரிந்தது.ஆனால் எனக்கு ரிஸ்க் எடுக்க பயமாக இருந்தது.
      //ஆமாம் அதென்ன... தலைப்பு கொடுக்க மறந்து விட்டீர்களா?// ஹிஹி! என்னுடைய லாப் டாப் கொண்டு வராததால் செல்ஃபோனில் டைப் பண்ணுகிறேன். அதனால் வரும் குழப்பங்கள்.:)))

      Delete
  2. இவ்வாறெல்லாம் சிக்கல்கள் உள்ளனவா?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் என் ராசி. எல்லோருக்கும் சுலபமாக நடக்கும் விஷயங்கள் எனக்கு சுத்தலாகும். வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. அக்கா எனக்குச் சுத்தி சிக்கலே ஆகும் ஹாஹாஹா

      கீதா

      Delete
  3. இதில் விநாயகருக்கும் லாபமாகி விட்டது.

    ReplyDelete
  4. தொடர்கிறோம்...ஆவலுடன்..

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    பயணத்தின் சிக்கல்கள் ஒருவழியாக தீர்ந்தது சந்தோஷமே .. விநாயகர் எதையும் விக்கனமின்றி முடித்து வைப்பார். மேலும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. இன்னும் ஒரு சிக்கல் வந்தது அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

      Delete
    2. இது என்ன புதிய பெயரில்? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      Delete
    3. மகளின் tabஇல் லாக் இன் செய்தேன். என் பெயருக்கு எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை:)

      Delete
    4. உங்க ஜிமெயிலில் லாக் இன் செய்தாலே போதுமே. நானும் அம்பேரிக்காவில் லாப்டாப் வாங்கித் தருவதற்கு முன்னர் மருமகள்/மகள் ஆகியோரின் கணினியிலேயே நுழைந்து பதிவுகள் கூட எழுதி இருக்கேன். நீங்க அவங்களோட டாபில் லாகின் செய்திருந்தாலும் மெய்லில் உங்கள் கணக்கில் லாகின் செய்து பதிவுகளுக்குள் நுழையலாம். முகநூலுக்கும் அப்படியேதான்! எதுக்கும் தொ.நு.நிபுணர்களையும் கேட்டுக்கவும்.

      Delete
  6. பானுக்கா இரண்டு பாகமும் படித்துவிட்டேன். எப்படியோ இறுதியில் பயணம் செய்ய முடிந்ததே பானுக்கா. கொஞ்சம் டென்ஷனான நிமிடங்களாக இருந்திருக்கும்.

    இப்போது ரீச் ஆயாச்சு ஸோ எஞ்சாய் மாடி!!!

    கீதா

    ReplyDelete
  7. நன்றி. இன்னும் ஒரு சிக்கல் வந்தது அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

    ReplyDelete
  8. ஒரு வழியாகச் சிக்கல் தீர்ந்ததில் மகிழ்ச்சி தான். என்றாலும் ஊருக்குப் போக ஏற்கெனவே நாள் பார்த்துப் பயணச்சீட்டை "ப்ளாக்" செய்திருக்க வேண்டாமோ? நாங்க அம்பேரிக்கா போவதற்கு உதவிய ட்ராவல் ஏஜென்டுகள் முதலில் பயணச் சீட்டையே ப்ளாக் செய்தனர் பின்னரே விசா வாங்குவதற்கான பேட்டிக்கு நாள் குறித்து உறுதி செய்தார்கள். அன்று ஒரு நாள் பேட்டியிலேயே விசாவும் நல்லபடியாக் கடவுள் அருளால் கிடைத்துவிட்டது.

    ReplyDelete
  9. சாதாரண விசிட் விசா என்றால் ரிட்டர்ன் டிக்கெட் இல்லாமல் விசா ப்ராஸஸ் பண்ண முடியாது. என்னுடையது சூப்பர் மாம் விசா என்பதால் ரிட்டர்ன் டிக்கெட் அவசியமில்லை. தவிர விமானங்கள் குறைவு என்னும் பொழுது நமக்கு ஆப்ஷன்ஸ் குறைந்து விடுகிறதே.

    ReplyDelete