கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 27, 2021

திருவெம்பாவை -12

 திருவெம்பாவை -1




ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

எங்கள் பிறவித் துன்பம் நீங்குவதற்காக நாங்கள் வணங்கும் சிவபெருமான் தலையில் கங்கையை கொண்டவராக கையிலே நெருப்பை ஏந்தி அந்தத் தில்லையிலே நடனமாடுகிறார். அவர் இந்த வான், மண் அதற்கு இடையில் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் விளையாடுவது போல மிகவும் அனாயசமாக படைத்து, காத்து, அழிக்கவும் செய்கிறார். அவரை நாங்கள் புகழ்ந்து பேசியபடி எங்கள் கை வளையல்கள் ஒலிக்க இடையில் அணிந்திருக்கும் மேகலை சிணுங்க, தலையில் சூடி இருக்கும் வாசமுள்ள மலர்களை மொய்க்கும் வண்டுகள் ஒலி எழுப்ப இந்தப் பொய்கையில் நீராடி வணங்குகிறோம்.

10 comments:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய திருவெம்பாவை பாசுரமும் அதன் விளக்கமும் மிகவும் நன்றாக உள்ளது. பாசுரத்தை பக்தியுடன் படித்துக் கொண்டேன். படைத்தல், காத்தல், அழித்தல், என அனைத்தையும் தினமும் தன் கடமையென செய்து இப்பூவுலகை காத்து வரும் நடராஜரை நானும் பணிந்து வணங்கி கொண்டேன். ஓம்நமசிவாய. ஓம்நமசிவாய. எனும் மந்திரம் அனைவரின் மனதிலும் நீடித்து நிலைத்திருக்க "அவன்" அருள் செய்ய வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.‌//ஓம்நமசிவாய. எனும் மந்திரம் அனைவரின் மனதிலும் நீடித்து நிலைத்திருக்க "அவன்" அருள் செய்ய வேண்டும்.// இறையருள் இல்லாமல் அவரை வணங்க முடியாது.

      Delete
  2. தில்லைஅம்பலனைப் பற்றிய பாடலின் விளக்கம் தெரிந்து கொண்டேன். முந்தைய பாடல்கள் விளக்கம் வாசித்தேன் கருத்துதான் இடவில்லை.

    மிக்க நன்றி

    துளசிதரன்

    ReplyDelete
  3. பாடல் வாசிக்கும் போதே அதன் நேரடியான அர்த்தமும் ஓரளவு தெரிந்து விடும் அளவு பாடல்கள் அமைந்திருப்பதும் சிறப்புதான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மிகவும் எளிமையான வரிகள். நன்றி கீதா.

      Delete