கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, June 20, 2022

விக்ரம்(விமர்சனம்)

விக்ரம் 


நானும் விக்ரம் பார்த்து விட்டேன். இந்த படத்தைப் பற்றி பலவிதமான விமர்சனங்கள் வந்தன. 

"பிரமாதம்.." என்று சிலரும், "ஒரே இருட்டு, டயலாக் புரியவேயில்லை" "எக்கச்சக்க வயலன்ஸ்" என்று சிலரும் எழுத, ஓ.டி.டி.யில் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் நண்பர் ஸ்ரீராம் படம் நன்றாக இருக்கிறது. தியேட்டரில் பாருங்கள் என்றது நம்பிக்கை அளித்தது. 

நான் கமலஹாசனின் நடிப்பை ரசிப்பேன் ஆனால் அவருடைய ஹார்ட் கோர் ஃபேன் கிடையாது. லோகேஷ் கனகராஜின் மாநகரம் படம் மிகவும் பிடித்திருந்தது.  என் மகளுக்கும் பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் கிளம்பினோம்.

முதல் பாதி செம! பகத் ஃபாசில் படத்தை எடுத்துச் செல்கிறார். இடைவேளையில் ஒரு முடிச்சு அவிழ, பின்பாதி எப்படி இருக்கும் என்று புரிந்து விடுகிறது. இருந்தாலும் இரண்டாம் பாதியும் நன்றாகவே இருக்கிறது. படத்தின் நீளம் தெரியவில்லை. 

நட்சத்திர பட்டாளம், எல்லோருக்கும் பெரிய ரோல் என்று சொல்ல முடியாது, ஆனால் குறிப்பிடத்தக்க பங்கு இருக்கிறது. எல்லோரும் தங்கள் பங்களிப்பை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

இருட்டு, இரைச்சல் என்பதெல்லாம் கொஞ்சம் மிகையான விமர்சனம். காட்சிகள் துல்லியம். பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கா விட்டாலும்,  பின்னணி இசை படத்திற்கு நல்ல சப்போர்ட். 

விஜய் சேதுபதியின் அறிமுக காட்சியில் கனடாவில் கைதட்டி வரவேற்கிறார்கள்! சூர்யாவுக்கும்  அப்படியே. 

நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.

17 comments:

  1. அதே... அதே... அப்படியே நானும் சொல்லிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அட? ஶ்ரீராம்! விக்ரம் படம் பார்த்ததால் தான் இரண்டு.மூணு நாட்களாக ஆளையே காணோமா? :)))))

      Delete
    2. நான் பார்த்து இரண்டு வாரங்களாகிறது!

      Delete
  2. நான் கமலஹாசன்/ரஜினி படங்கள் முன்னெல்லாம் தொலைக்காட்சியில் வரும்போது தான் பார்த்திருக்கேன். அப்படிப் பார்த்தவை தான் தெனாலி, மஹாநதி, வசூல் ராஜா இன்னும் சில! ஹே ராம்! பார்த்துட்டு நொந்து போயிட்டேன். சமீப காலங்களில் வருவதும் இல்லை! பார்ப்பதும் இல்லை. ஆனால் தெனாலி/பஞ்ச தந்திரம்/மைக்கேல் மதன காம ராஜன் படங்களின் காமெடி ரசிக்க வைக்கும். ஹிஹிஹி, நானும் விமரிசனம் பண்ணிட்டேனுல்ல! :)))))

    ReplyDelete
    Replies
    1. போங்க கீதா அக்கா..  நீங்க கிருஷ்ண  விஜயம், பக்த துக்காராம் படங்கள்லாம்தான் பார்ப்பீங்க...  இதெல்லாம் நாங்க பார்க்கற படமாக்கும்!

      Delete
    2. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

      Delete
  3. விக்ரம் படம் வெளியான அன்று நானும் மனைவியும் பக்கத்து காம்பவுண்டில் உள்ள தியேட்டரில் படம் பார்த்தோம். படத்தை மிகவும் ரசித்தேன் (என்ன ஒன்று... டிக்கட் 280ரூ கொடுக்கத்தான் கசந்தது) எனக்குப் பொதுவாகவே நல்ல படங்களை இருமுறை பார்க்கணும். ஓடிடிக்கு வெயிட்டிங்.

    புஷ்பா, கேஜிஎஃப் 2 போன்றவற்றையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வெளியான அன்றேவா?  ஆ...   ஆனால் சவுண்ட் சிஸ்டம் நன்றாய் இருக்கும் திரையரங்கமாய் இருந்தால் நன்றாயிருக்குமே.  ஓரிரு வெடிச்சத்தங்களுக்கு நான் என்னை மறந்து திரும்பி என் இடது பின்புறம் பார்த்தேன்!

      Delete
    2. எங்க காம்பவுண்டுக்கு அடுத்த காம்பவுண்டில் ETA Mall இருக்கிறது. அதில் Cineplexல் பார்த்தேன். கச்சரா விசில் சப்தங்கள் இல்லை. நான் ஒரு பாலிசி வைத்திருக்கிறேன். ஐந்து பைசாகூட தியேட்டரில் விற்பவைகளுக்குச் செலவு செய்ய மாட்டேன்.

      என் வீட்டிலிருந்து நடந்துபோகும் தூரத்தில் ஒரு தியேட்டர் இருக்கிறது. அதிலும் விக்ரம் வெளியாகியிருந்தது. அந்த ரோடு சரியில்லை என்பதால் அந்த தியேட்டர் செல்லவில்லை.

      நாங்க எல்லோரும் Jurassic World 4dx theatreல் சென்ற வாரம் பார்த்தோம். டிக்கெட் 800 ரூபாயாம் (அட ஆண்டவா.. என் பெண் நான் அதிர்ச்சி அடைவேன் என்று டிக்கெட் விலையைச் சொல்லவில்லை). படத்தில் டினோசர்களைத் துரத்தும்போது, பயணிக்கும்போது நாம் உட்கார்ந்திருக்கும் சீட் ஆடும், அங்கு பனி பெய்யும்போது அல்லது மூடுபனி இருக்கும்போது தியேட்டரிலும் குளிர் புகை வரும். 3டியும்கூட.

      Delete
    3. சென்னைல, 4 வருடங்களுக்கு முன்பு, பெண் சொன்னாள் என்று எல்லோரோடும் 180ரூ(?) டிக்கெட்டில் நல்ல தியேட்டரில் படம் பார்த்தோம். ஆனா பாருங்க... பெண், 900 ரூ செலவழித்து (என் பணம்தான்) ஸ்நாக்ஸ்லாம் வாங்கினா. எங்களுக்கும் இன்னும் 400 ரூ செலவழித்தாள். எனக்கு சாப்பிடவே மனதில்லை. அப்புறம் அவளைக் கூட்டிக்கொண்டு தியேட்டர் பக்கமே ஒதுங்குவதில்லை. ஹா ஹா

      Delete
  4. படம் விமர்சனம் சூப்பர் பானுக்கா....கமென்ட் போட்டு இங்கு வந்ததே இப்போது காணவில்லை....

    பாருங்க பானுக்கா உங்க பெட்டியை

    கீதா

    ReplyDelete
  5. நானும் பார்த்தேன். விமர்சனம் அருமை

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    விக்ரம் பட விமர்சனம் அருமையாக 100 மார்க் முழுமையாக தந்து செய்துள்ளீர்கள். பார்த்தவர்கள் அனைவரும் இதேதான் கூறுகிறார்கள். நானும் வெயிட்டிங். ஆனால் பார்க்க முடியுமா என்றுதான் தெரியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. 1999-க்கு பிறகு 2022-ல் இந்தியாவில் தியேட்டரில் நானும் விக்ரம் படம் பார்த்தேன்.

    கூத்தாடி களை குறைகாணும் எனது விழிகளுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. (ஹி...ஹி...)

    ReplyDelete
  8. "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்று சின் டிவியில் வரும்போது விக்ரம் படத்தை நிச்சயம் பார்த்துவிடுவேன்! சுருக்கமான விமரசனத்துக்கு நன்றி அம்மையீர் !

    ReplyDelete