கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 11, 2025

படங்களாக ஒரு பதிவு

படங்களாக ஒரு பதிவு


அம்மாவின் திவசத்திற்காக திருச்சி சென்றபோது முத்தரசநல்லூர் குருவாயூர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், சிதம்பரம் போன்ற கோவில்களுக்குச் சென்றோம். எப்போதும் செல்லும் மாணிக்க விநாயகர், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கமும் விடவில்லை. இவைகளைப்பற்றி என்ன எழுதுவது? படங்கள் பேசட்டும். நேரம் குறைவாக இருந்ததால் சந்திக்க விரும்பிய தோழிகளையும், பதிவர்களையும் சந்திக்க இயலவில்லை.




பரமபத வசல்



சிவராத்திரிக்காக விளக்கொளியில் ஜொலித்த திருவானைக்கோவில். நாங்கள் திருச்சியில் வசித்த பொழுது இப்படிப்பட்ட அலங்காரங்கள் கிடையாது.











மாணிக்க விநாயகர் கோவில் விதானத்தில் இருந்த விநாயகர் சிற்பங்களை படமெடுக்க முயன்றபொழுது ஒருவர்,"புகைப்படம் எடுக்காதீர்கள்" என்றார். கோவில் நிர்வாகத்தைச் சார்ந்தவர் என்று நினைத்தால்,"ஏதாவது சாப்பிடுகிறீர்களா? போளி இருக்கு, வடை இருக்கு" என்கிறார். கர்ர்ர்....


சின்னக்கடை வீதியின் வழியே St.Joseph church




Krishna Readymade Hall:

இந்த கடையோடு ஒரு உணர்வுபூர்வமான பந்தம் உண்டு. எங்களின் சிறு வயதில் எங்கள் அம்மா எங்களுக்கு உடைகள் (skirt& blose frock) வாங்கியிருக்கிறார். நான் என் மகளுக்கு வாங்கினேன், இப்போது என் பேத்திகளுக்கு, தொடரும் பாரம்பரியம்.

சமயபுரம் கோவிலுக்குச் சென்றபொழுது மயக்கிய அந்திவானம்

மேற்கண்ட படத்தை'தெய்வீகம்' என்ற புகைப்பட போட்டிக்கு அனுப்ப நினைத்தேன்.

திருச்சியில் நான் தவற விட்ட விஷயம் பெரிய கடை வீதியின் சவுக்கில்(செளக் என்னும் ஹிந்தி வார்த்தையை உள்ளூர்வாசிகள் சவுக்கு என்பார்கள்) இருக்கும் பழைய புத்தக கடை :((

வைத்தீஸ்வரன் கோவில் குளக்கரையில்

கங்கை கொண்ட சோழபுரம்


சிதம்பரம் செல்லும் வழியில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். இதைக்கட்டிய ராஜேந்திர சோழன் தன் அப்பா கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலை விட உயரமாக இருக்கக்கூடாது என்று நினைத்ததால் இது 157 அடி உயரமாக கட்டப்பட்டதாம். பெரிய கோவில் 212 அடி. உயரம். மேற்கண்ட படத்தில் பிரமிடு போல தோன்றவில்லை? 

வெங்கட் நாகராஜ், கோமதி அக்கா, தி.கீதா போன்றவர்கள் போடும் படங்களோடு ஒப்பிடாதீர்கள். நான் ஒரு கத்துக்குட்டி.

8 comments:

  1. படங்கள் யாவும் சிறப்பு.

    ReplyDelete
  2. பானுக்கா படங்கள் எல்லாமே சூப்பரா இருக்கு.

    ஸ்ரீரங்கம் கோவில் உள்ள அந்த முன் மண்டபம் படம் போட்டிருக்கீங்க இல்லையா அதே போன்றுதான் ஸ்ரீரங்கப்பட்டினத்தின் முன் மண்டபமும் இருக்கும் அதைப் பற்றிச் சொல்லி படம் போடும் போது சொல்கிறேன்.

    ஆமாம் அக்கா படம் எடுக்கக் கூடாதுனு சொல்வாங்க கடைசில பார்த்தா அது யாரோவாக இருக்கும்.

    நானும் இப்போதைய பதிவுக்குப் படங்கள் மூலம்தான் சொல்வதாக இருக்கிறேன். அதில் பறவைகள் படங்கள் கோமதிக்கா போட்டது போல இருக்காது இது என்று சொல்ல இருந்தேன் பார்த்தா நீங்க என்னையும் சேர்த்திருக்கீங்க!!! கடவுளே!!!! ஹாஹாஹா...ஆனா என் படங்கள் அவ்வளவு எல்லாம் தரத்தில் இருக்காது அக்கா. என் மொபைலும் சரி, கேமராவும் சரி ஹைடெக் கிடையாது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //என் படங்கள் அவ்வளவு எல்லாம் தரத்தில் இருக்காது// அளவுக்கதிகமான தன்னடக்கம் உங்களுக்கு.

      Delete
  3. கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கோபுரம் அழகு. ஆமாம் டக்குனு பார்க்க பிரமிடு போல்....கோபுரம் பற்றிய தகவல் கேள்விப்பட்டதுண்டு. வைத்தீஸ்வரன் கோவில் குளம் நடுவில் அந்த மண்டபம் சூப்பர் க்ளிக் நல்லா இருக்கு, பானுக்கா.

    மயக்கிய அந்திவானம் படமும் க்ளிக் சூப்பர்.

    கிருஷ்ணா ரெடிமேட் ஹால் நான் சொல்ல வந்தேன் பேத்திக்கு வாங்கிருக்கீங்களா கையில பேக் இருக்கே, தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து வருகிறதா என்று நினைத்து சொல்ல வந்ததை நீங்களும் சொல்லியிருக்கீங்க!

    கீதா

    ReplyDelete
  4. சிவராத்திரிக்காக விளக்கொளியில் ஜொலித்த திருவானைக்கோவில் மிக நன்றாக இருக்கிறது. படங்களை பெரிது செய்துப்பார்த்தேன், அனைத்தும் அருமை.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அதைவிட படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. ஸ்ரீ ரங்கம் பெருமாளை தங்களது அழகான படங்கள் மூலம் தரிசித்துக் கொண்டேன்.

    மாணிக்க விநாயகர் கோவில், திருவானைக்கா கோவில், கடைவீதி படங்கள், அந்தி மயங்(க்)கிய இயற்கையின் வர்ணஜாலம் படம் என அத்தனையும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. எல்லாவற்றையும் நல்ல கோணத்தில் மிக அருமையாக எடுத்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    உங்களுடைய படங்களின் வாயிலாக அனைத்துக் கோவிலையும் தரிசிக்கும் திருப்தியும் கிடைத்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. Thanks Kamala! நம்முடைய பதிவுகள் யாரோ ஒருவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பது ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete