கணம்தோறும் பிறக்கிறேன் 

Tuesday, June 24, 2025

உடாய் ஷான் புட்தியிஸ்ட் கார்டன் (Wutai Shan Buddhist Garden) - Part 2

உடாய் ஷான் புட்தியிஸ்ட் கார்டன் 

(Wutai Shan Buddhist Garden) - Part 2


North Platform, South Platform, East Platform என்று வெவ்வேறு இடங்களில் பெரிய பெரிய மஞ்சுஸ்ரீ போதிஸ்ட்துவர்களின் சிலைகள். ஒண்று கையில் சுவடி ஏந்தி, இன்னொன்று சிம்ம வாகனத்தில் கையில் வாள் ஏந்தி, மற்றொன்று கையில் வில்லும் அம்பும் ஏந்தி, நமக்கு சரஸ்வதி, துர்கையை நினைவு படுத்தினாலும் இவர்கள் அந்த போதிசத்துவர்கள் எல்லாம் ஆண்கள் என்கிறார்கள்.

முதல் படத்தில் ஏறிச் செல்ல படிகள் இன்னும் கட்டப்படவில்லை


அந்த சிலைகளின் பிரும்மாண்டம், அழகு, முகத்தில் தவழும் கருணை.. அப்பப்பா..! பார்க்க பார்க்க மனசுக்குள் ஒரு விவரிக்க இயலாத அமைதி பிறக்கிறது. எல்லாமே கொஞ்சம் படிகள் ஏறித்தான் தரிசிக்க வேண்டும்.

எல்லா போதிசத்துவர்கள் முன்னாலும் வெண்ணிற சலவைக் கற்கள். அதில் முழங்கால் பட அமர்ந்து பீரார்திக்க வேண்டும். செருப்பு அணிந்திருக்கலாம். கீழே இருக்கூம் படத்தில் பிரார்த்தனை செய்யும் பெண்.

 


நடுவில் மத்திய பிரார்த்தனை கூடம் என்பதில் மூன்று பிரும்மாண்ட புத்தர் சிலைகள் பொன் மேனியராக, கருணை தவழும் முகத்தோடு அமரந்த கோலத்தில் பார்க்க முடிகிறது. மூன்று புத்தர்களும் கையில் வெவ்வேறு பொருள்களை ஏந்தியிருக்கின்றனர். 





அதைத்தவிர அந்த கூடத்தை சுற்றி வரும்பொழுது நிறைய புத்தர் சிலைகள், எல்லாம் வெவ்வேறு முத்திரைகள். பக்தர்கள் தட்டு தட்டாக பழங்கள், பூங்கொத்துகளை காணிக்கையாக படைத்திருக்கிறார்கள். அவற்றை அங்கேயே விற்பனை செய்கிறார்கள். இது அமைந்திருப்பது முதல் தளத்தில். 

இங்கே புத்தரை தரிசனம் செய்யும் பொழுது மணி ஒசை கேட்டுக் கொண்டே இருந்தது. கீழே இறங்கியதும் அந்த மணி ஓசை எங்கிருந்து வருகிறது என்பது தெரிந்தது.







கீழே அமர்ந்திருக்கும் புத்தருக்கு மேலே மரத்தடியில் அமர்ந்திருக்கும் வயதான புத்தருக்கு பழங்கள் கொண்டு தரும் விலங்குகளும், தேவதைகளும்

கீழ் தளத்தில் உணவு விடுதி இருக்கிறது. அங்கே நாங்கள் மல்லிகை டீ குடித்ததை ஏற்கனவே எழுதி விட்டேன். இங்கேயும் மத்தியில் ஒரு பெரிய ஹாலில் புத்தரின் வாழ்க்கையை விளக்கும் விக்கிரகங்கள். அந்த ஹாலின் சுவர் முழுவதும் வரிசையாக மரசட்டத்தில் புத்தர் படங்கள். அவை பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, அது நிறைவேறியதும் வாங்கி மாட்டுவதாம். 


இதற்கும் கீழே கார் பார்க்கிங். அங்கு ஒரு ஓரத்தில் பெரிய மணி ஒன்று இருக்கிறது. நாம் ஏதாவது நடக்க வேண்டுமென்று நினைத்தால், அந்த  விருப்பம் நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த மணியை அடித்தால் நாம் ஆசைப்பட்டது நடக்குமாம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றவரின் கோவிலில் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று இடைவிடாமல் மணி ஒலிக்கிறது. :))



விஸ்டம் லேக் தாண்டி தொலைவில் தெரிவது விஷ் ஃபுல்ஃபில்லிங் செவன் பகோடாஸ்


ஒரு போதிசத்துவரின் சன்னதியைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஸ்தூபங்களில் ஒன்று. இவை ஞான பாதையில் புத்தருக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் அவருடைய போதனைகளை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு, அங்கேயே கையோடு கொண்டு போயிருந்த உணவை சாப்பிட்டோம். பின்னர் கீழே இறங்கி, விஸ்டம் லேக், லைஃப் லிபரேஷன் பாண்ட், விஷ் ஃபுல்ஃபில்லிங் செவென் பகோடாஸ் முதலியவற்றை பார்த்துவிட்டு, வீடு திரும்பினோம். 

நாங்கள் சென்ற அன்று நல்ல குளிர், கோடையில் ஒரு நாள் செல்ல வேண்டும்.

14 comments:

  1. திறந்தவெளி திரை அரங்கம் போல திறந்தவெளி கோவில்!    பிரம்மாண்ட போதிசத்துவார்கள் அற்புதம்.   பிரார்த்தனை செய்யும் பெண் என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.  உங்கள் பெண்ணோ?  நீங்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் ஒவ்வொரு இடத்திலும் உங்களுக்கு முன்னால் நிற்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனை செய்வது என் பெரிய அக்காவின் பேத்தி. மற்ற படங்களில் இருப்பது அவள் அல்ல, வேறு ஏறு பெண்கள்.

      Delete
    2. *வேறு வேறு பெண்கள்

      Delete
  2. //ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றவரின் கோவிலில் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று இடைவிடாமல் மணி ஒலிக்கிறது. :))//

    நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள்.  யாரும் வீட்டில் உள்ள ஒரு மூத்த உறவை எதிர்பார்ப்பின்றி பார்க்கச் செல்வது போல கடவுளர்களை  அன்புடன் செல்வதில்லை.  தத்தங்களுக்கு ஒரு அல்லது பல கோரிக்கைகளுடனேயே செல்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. கடவுளர்களை அன்புடன் செல்வதில்லை. தத்தங்களுக்கு ஒரு அல்லது பல கோரிக்கைகளுடனேயே செல்கிறார்கள்!//

      ஸ்ரீராம் டிட்டோ!!! நானும் இப்படி நினைப்பதுண்டு.

      இறைவனை இறைவனுக்காக வணங்குவது

      கீதா

      Delete
    2. ஸ்ரீரங்கத்தில் இருந்த பொழுது, அங்கு வசித்த பலர், என் அம்மா உட்பட ரங்கனை தரிசிக்க, ரசிக்க மட்டுமே தினசரி ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வார்கள். ரங்கநாதரை தரிசிக்கும் பொழுது நம் தேவைகள் எதுவும் மனதில் எழும்பாது.

      Delete
  3. டையரி குறிப்பாக உள்ளது. புத்தர் சொன்ன ஆசை வேறு.அந்த ஆசை என்பது இருப்பதில் திருப்தி அடையாமல் மேலும் மேலும் சேகரிப்பதை தான் அவர் அப்படி சொன்னார்.
    நோய் உள்ளவர்கள் குணமாக வேண்டும் என்று பிரார்த்தித்தால் அது ஆசை ஆகுமா? அது போன்ற விருப்பங்கள் ஆசை என்ற சொல்லுக்கு அர்த்தமாகுமா?

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய முந்தைய பதிவில் பார்த்திருப்பீர்களே, லாஃபிங் புத்தா சன்னதியில் எத்த்னை wish fulfilling அட்டைகள் கட்டப்பட்டிருந்தன என்பதை. அவை எல்லாமே நோய்தீர வேண்டி செய்யப்படும் பிரார்த்தனைகளா?

      Delete
  4. படங்களும் விவரங்களும் நன்றாக இருக்கின்றன. போதிச்சத்துவர்கள் அழகு....பள பள வென்று இருக்கிறார்கள்! ஒரு வேளை போதிச்சத்துவர்களையும் இந்துமத கடவுளர்கள் போல வடிவமைப்பு செய்கிறார்களோ? சிம்மவாகஹனம் வில் அம்பு இப்படி!!! புத்தர் கையில் வில் அம்பு என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஆனால் வடிவங்கள் நன்றாக இருக்கின்றன

    புத்த ஸ்தலங்களில் மணி அடிப்பதுதான் வேண்டுதலுக்குச் சொல்வதுண்டு. நம் கோவில்களிலும் இப்படிச் செய்கிறார்களே இங்கு பெரும்பாலும் ஆஞ்சு கோவிலில் அப்படித்தான்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கோவில் புத்த மதத்தில் மஹாயாண பிரிவை சேர்ந்தவை. அதில்தான் புத்தருக்கு சிலை வைக்கும் பழக்கம். இந்து மதத்திலிருந்து வந்திருக்கலாம். புத்த மதம் பிறந்தது இந்தியாவில்தானே? ஹர்ஷவர்த்தனர் காலத்தில்தான் புத்த மதம் ஹீனயானம், மஹாயாணம் என இரண்டாகப் பிரிந்தது என்ரு சரித்திரத்தில் படித்திருக்கிறோமே.

      Delete
  5. புத்தர் கோயில் படங்கள், பூஜை செய்யும் விவரங்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற மணி எல்லாம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் எழுத தோன்றியது.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. முதலில் இந்தப்பதிவை தாமதமாக காண வந்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் இதற்கு கருத்துகள் தெரிவித்து விட்டேன் என நினைத்து விட்டேன்.

    புத்தப் பெருமானின் விதவிதமான வடிவங்களில், அனேக விதமான போதிசத்துவர்களின் சிலைகளுடன், மேலும் படங்களென பதிவனைத்தும் அருமையாக உள்ளது. .

    ஒவ்வொரு மதத்தினுள்ளும் எத்தனை கோட்பாடுகள், சடங்குகள், வலியுறுத்தல்கள். நம்பிக்கைகள் என பதிவை படிக்கையில் ஆச்சரியமான நினைப்பு வருகிறது. ஆயினும், எல்லா மதங்களிலும் குறிப்பிடும் அந்தந்த இறைவனார்களின் கருத்துகள் மனிதர்களாகிய நம் மனதின் அளவு கடந்த ஆசைகளை அடக்கி, "அவனோடு" இணைந்து, வாழும் இந்தப் பிறவியில் "அவனில்" ஒன்றச் செய்துவிட வேண்டுமெனபதுதான்..! ஆனால், இந்த உலகில் பிறந்த நாம்தான் இந்த ஆசைகளென்ற (அது தவறெனவே தெரிந்தும்) சுற்றிப் பிணைந்த கயிறுகளால் கட்டப்பட்ட ஜீவன்களாக உழன்று வருகிறோம். இதற்கு எப்போது எந்தப் பிறவியில் விமோசனம் கிடைக்குமோ ?

    புத்தரின் அமைதியான படங்களை பார்க்கும் போது, நம் மனதிற்குள்ளும் சிறிது நேரம் அமைதி ரேகைகள் ஓடுகிறது. இந்தப் புத்தர் கோவிலைப் பற்றி நன்றாக விபரமாக சொல்லியுள்ளீர்கள். இங்கும் பல கோவில்களில் இறைவனுக்கு முன்பாக கட்டப்பட்டிருக்கும் மணிகளில் மணியடித்து தங்கள் வேண்டுதல்களை இறைவனிடம் மானசீகமாக சொல்பவர்கள் உண்டே..! நல்ல விளக்கமான பதிவுக்கும், தகவல்களுக்கும் நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. நன்றி கமலா. எப்போதெம் போல விரிவாக,அழகாக கருத்திட்டிருக்கிறீர்கள். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete