கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, November 26, 2025

சத்தியசாயி பாபா 100வது பிறந்த தின கொண்டாட்டம்

 பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின்100வது 

பிறந்த தின கொண்டாட்டங்கள் -கனடா 

நவம்பர் மாதம் 23ஆம் தேதி பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபவின் 100வது பிறந்த தினம். அதை உலகெங்கிலும் இருக்கும் அவரது பக்தர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். தீவிர சாயி பக்தர்களான என் மாப்பிள்ளையும், பெண்ணும் இங்கிருக்கும்(கனடாவில்) சாயி சென்டர் ஒன்றில் உறுப்பினர்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை சாயி பஜனுக்குச் செல்வார்கள். நானும் செல்வதுண்டு நானும் சாயி பகதைதான். 

நவம்பரில் வரப்போகும் கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டிலேயே ஏற்பாடுகளை துவங்கி விட்டார்கள். நாடக ஒத்திகை, பிறந்த நாள் பாடல், பால விகாஷ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை என்று வாரத்தில் மூன்று நாட்கள் ஒத்திகை இருந்தது. 

நாடகங்களுக்கு பொருள்களை(ஸெட் ப்ராப்பர்டீஸ்) என் மகள் செய்தாள். அவளுக்கு உதவியாக இரண்டு பெண்கள் வார இறுதியில் வருவார்கள். அதில் ஒரு பெண் ராதையாக நடித்தார், அவர் வாட்டர்லூவில் படிக்கிறார். விடிய விடிய வேலை செய்து விட்டு, அவர்கள் படுத்துக் கொள்ளவே விடியற்காலை நாலு அல்லது ஐந்து மணி ஆகி விடும். காலை ஆறு மணிக்கு எழுந்திருந்து கிளம்பினால்தான் பஜனைக்குச் செல்ல முடியும். 

ராதா,கிருஷ்ணன் மற்றும் குட்டி கிருஷ்ணனின் நான்

நவம்பர் 22ஆம் தேதி பெண்கள் தினமாக (மஹிளா விபாக்) கொண்டாடினார்கள். அந்தநிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே நடிக்கும் ராதா பக்தி என்ற நாடகம் இருந்தது. சாய் சதீஷ் என்பவர்தான் அதை இயக்கினார். அதில் கிருஷ்ணனாகவும், ராதையாகவும் நடித்த பெண்களுக்கு உணர்ச்சியை சரியாக காட்டத் தெரியவில்லை என்று ஒரு எண்ணம் இருந்ததாம். என் மகள் இதை என்னிடம் சொன்னபோது, நான்,"மேக்கப் போட்டுக் கொண்டு, மேடையில் ஏறி விட்டால் தன்னால் அந்த பாவம்(bhavam) வந்து விடும்" என்றேன்.

நான் சொன்னபடியேதான் நடந்தது. ராதையாக நடித்த பெண் கல்லூரி மாணவி. சிறு குழந்தை போல சிரித்து, விளையாடி, உற்சாகமாக இருப்பாள். அந்தப் பெண்ணுக்கு எப்படி அவ்வளவு மெச்சூர்ட் தோற்றம் வந்தது என்பது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாடகம் முடிந்து கீழே இறங்கியதும் அந்தப் பெண் ஏனோ விசித்து விசித்து அழுதாள். தன்னுடைய இயல்பிற்குத் திரும்ப சற்று நேரமாகியது.  கிருஷ்ணனாக நடித்த பெண்ணின் சிரிப்பும், நடையும் ஆஹா! 

மேற்கண்டவாறு இருக்கும் சிம்மாசனம், தூண்கள், மரம் இவைகளை என் மகளும் இன்னும் இரண்டு பெண்களும் செய்தார்கள்



புட்டபர்த்தியில் இருக்கும் தேரைப்போல அச்சு அசலாக ஒரு மினியேச்சர் தேரை உருவாக்கியிருந்தது சுஜி என்னும் பெண். 

தேரின் நுணுக்கமான வேலைப்பாடுகள் கவனிக்கவும்

சத்யபாமாவாக நடித்த பெண்ணும், நெகடிவ் ரோல் ஒன்றை செய்த என் மகளும் மிகத்திறமையாக செய்து பாராட்டுகளை அள்ளினர். கனடாவின் மிசிசாகா என்னும் இடத்தில் இருக்கும் ஹிங்து ஹெரிடேஜ் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நாடகம் துவங்குவதற்கு முன் அதில் நடித்தவர்கள் எப்படி தயாரானார்கள் என்பதை கவனிப்பது சுவாரஸ்யமாக இருந்தது. அவற்றை புகைப்படமெடுத்தேன்.

பீஸாவை அமுக்கும் கிருஷ்ணர் :))
 
தவம்





ஒரு நிகழ்ச்சி நடக்க வேண்டுமென்றால் அதற்கு எத்தனை பேர்கள் உழைக்க வேண்டியிருக்கிறது என்பது புரிந்தது.   


No comments:

Post a Comment