கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 6, 2017

நவம்பரில் நான் பார்த்த படங்கள்

நவம்பரில் நான் பார்த்த படங்கள் 

நவம்பர் மாதம் நடிகர் கமலஹாசன் பிறந்த மாதமாக இருந்ததால் ராஜ் டி.வி.யில் தினமும் மதியம் 1:30க்கு கமலஹாசன் நடித்த படங்களாக போட்டார்கள். அதில் நான் மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் மற்றும்  மன்மத லீலை பார்த்தேன். 


மூன்றுமே கே.பாலசந்தர் இயக்கியவை. அது வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி கதாநாயகியாகவும், ரஜினிகாந்த் வில்லனாகவும் அறிமுகமான படம் மூன்று முடிச்சு. இருவருமே புதுமுகம் என்பது போல் இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்திருந்திருக்கிறார்கள். கமலஹாசன்(அப்போதெல்லாம் அவர் கமலஹாசனாகத்தான் இருந்திருக்கிறார். பின்னாளில்தான் கமல்ஹாசன்) இடைவேளைக்கு முன்பாகவே இறந்து விடுகிறார். படத்தில் கொஞ்ச நேரம்தான் வந்தாலும், நிறைவான நடிப்பு.
டைட்டிலில் படப்பிடிப்புக்கு இடம் தந்து உதவிய திருமதி.ராஜலக்ஷ்மி, திரு.ஸ்ரீனிவாசனுக்கு நன்றி என்று போடுகிறார்கள். கமலின் பெற்றோர்கள் என்று நினைக்கிறேன்.அபூர்வ ராகங்கள் படத்தை அந்தக் காலத்தில் ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்தார்கள். அந்த கால கட்டத்தில் இது ஒரு வித்தியாசமான முயற்சிதான். ஸ்ரீ வித்யா,நாகேஷ், சுந்தர்ராஜன் கச்சிதம். கமல் கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அவருக்கு ஏன் அப்படி ஒரு கன்றாவி ஹேர் ஸ்டைல்? ஜெயசுதா தவறான தேர்வு. புதுமையாக செய்யலாம் என்று ஆரம்பித்து ஒரு கட்டத்திற்குப் பிறகு கதையை கட்டுப்படுத்த முடியாமல் அதன் போக்கில் விட்டு விட்டார் போலிருக்கிறது. 

குட் ஜோக்! என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு உடனே நல்ல ஹாஸ்யம் என்று மொழி பெயர்க்கும் சுந்தர்ராஜனின் ஸ்டைல் புன்னகைக்க வைக்கிறது. 


மன்மத லீலை... கதாநாயகன் என்பவன் கண்ணியவானாகத்தான்  இருக்க வேண்டும் என்னும் அந்தக் கால மரபை உடைத்து ஒரு சபலிஸ்டை கதாநாயகனாக காட்டியிருக்கும் துணிச்சல்...! ஆனால் நடிகர்கள் தேர்வு சரியில்லை. கமலஹாசன் என்னதான் நன்றாக நடித்திருந்தாலும் பால் வடியும் முகம்,சின்னபையனைப் போன்ற தோற்றம் இரண்டும் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு ஜஸ்டிபை பண்ண முடியாமல் தடுக்கின்றன. உடன் நடித்த நடிகைகளும் சோ சோ தான். சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பல காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன.' மனைவி அமைவதெல்லாம்...' 
'நாதமென்னும் கோவிலிலே...' என்று இரண்டு நல்ல பாடல்கள். இந்தப் படம் வெளிவந்த கால கட்டத்தில் திருமணம் செய்து கொண்ட ஆண்கள் நலங்கின் பொழுது மனைவி அமைவதெல்லாம் பாடல்தான் பாடுவார்கள்.

இந்தப் படத்தைப் பற்றி பாலச்சந்தர் கூறிய பொழுது, "கமலஹாசனின் நடவடிக்கைகளை கவனித்தேன், அப்பொழுது உருவான கதாபாத்திரம்தான் மன்மத லீலை மது" என்றார். கமலஹாசன் மீது இவ்வளவு மோசமான அபிப்ராயமா? 

19 comments:

 1. இப்படங்களை முன்பு பார்த்ததுண்டு. மீண்டும் பார்க்கும் பொறுமை இல்லை.

  இப்போதெல்லாம் படங்களே பார்க்க முடிவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்! படங்கள் பார்க்க முடியவில்லை என்றால் வளர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.

   Delete
 2. விமர்சனம் நன்று என்னவொன்று இதை பார்க்க கே.பாலசந்தர் இல்லை அதுதான் வருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. உங்கள் கிண்டல் புரிகிறது😅

   Delete
 3. இந்த மூன்றுமே அரைகுறையாகப் பார்த்த நினைவு...பானுக்கா...உங்க விமர்சனம் ஷார்ட் அண்ட் க்ரிஸ்ப்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மு.மூ வந்த பொழுது பார்த்தது, அதன் பிறகு இப்போதுதான் பார்த்தேன். நன்றி

   Delete
 4. மூன்று படங்களுமே பார்த்த படங்கள். எனது டீனேஜில் ஒரு கட்டத்தில் நான் பார்த்த படங்களின் டிக்கெட்டை அந்தப் படத்தின் பெயர் எழுதி சேமித்து வைத்திருந்தேன்!!! அது ஒரு கிறுக்குக் காலம். நீங்கள் 'இந்த மாதத்தில் நான் பார்த்த பட்டங்கள் என்று டைட்டில் போடவும் அது நினைவுக்கு வந்துவிட்டது.

  ReplyDelete
 5. அபூர்வ ராகங்கள் ஹேர் ஸ்டைல் அப்போதைய புது நாகரீகம்! அந்தப் படக் கதையின் சிக்கல் மிக பிரபலம். "என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ..." அந்தப் படத்தின் நாகேஷ் நகைச்சுவை ப்ளஸ் கேரக்டரும் ரசிக்கத்தக்கது. மூன்று முடிச்சு கிட்டத்தட்ட ரஜினிதான் ஹீரோ. மன்மத லீலையில் நீங்கள் சொல்லி இருக்கும் பாடலுடன் "சுகம்தானா சொல்லு கண்ணே... பாடலும் நன்றாயிருக்கும். டைட்டில் ஸாங்கும் எனக்குப் பிடிக்கும்! "சிரிக்கின்ற பெண்களைப் பார்க்கின்ற கண்ணுக்கு அழைப்பது போலொரு சித்தத் துடிப்பு... சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள இவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு...!"

  ReplyDelete
 6. விமர்சனம் பழைய பாலச்சந்தர் படங்களுக்கா.... இப்படி சொல்லிவிட்டு போயிருக்கிறாரா... ஓகே சின்னதா இருந்தாலும் முக்கியமானத்தை கவர் பண்ணிட்டீங்க

  ReplyDelete
  Replies
  1. விமரிசிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. எதைப்பற்றி எழுதலாம் என்று யோசித்ததன் விளைவு. நன்றி!

   Delete
 7. இதில் 'அபூர்வ ராகங்கள்' தான் எல்லோர் மனதையும் அந்த நாட்களில் மிகவும் கவர்ந்த படம். ஸ்ரீவித்யா ந்டிப்பும் கமல் வசன்ங்களும் மிகவும் பிரசித்தம். 'கேல்வியின் நாயகனே' பாடல் காட்சி மிகவும் அழகாயிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். ஜெயசுதா ஒரு திருஷ்டி பரிகாரம். வருகைக்கு நன்றி அக்கா.

   Delete
 8. அபூர்வ ராகங்கள் கதைக்கரு பாலச்சந்தருடையதே இல்லை. ஐம்பதுகளில் அந்தக் காலத்துக் கல்கியில் திரு அரு.ராமநாதன் அவர்கள் எழுதி வந்த "குண்டு மல்லிகை" என்னும் நாவலின் கதைக்கரு. அதைக் கொஞ்சம் அப்படி, இப்படி மாற்றிப் படமாக எடுத்தார் பாலச்சந்தர். "மன்மத லீலை" படம் எல்லாம் பார்த்தது இல்லை. மற்ற இரண்டு படங்களைக் கொஞ்சம் கொஞ்சம் சில காட்சிகளைப் பார்த்திருப்பதால் புரிந்து கொள்ள முடிகிறது.

  ReplyDelete
  Replies
  1. கீதா அக்கா.... குண்டுமல்லிகை பிச்சுமணி ரொம்பவே வேறுபட்ட கேரக்டர். வயது வித்தியாசம் தவிர மற்றதெல்லாம் பொருந்தாது.

   Delete
  2. குண்டு மல்லிகை படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஶ்ரீராம் வேறு மாற்று கருத்து சொல்லியிருக்கிறாரே...தகவலுக்கு நன்றி!

   Delete
  3. பல வருடங்கள் முன்னால் படித்தது. உண்மையில் அது வெளிவந்த கால கட்டத்தில் படிக்கத் தடை போட்டிருந்தார்கள். பின்னர் கல்யாணம் ஆன பின்னரே படித்தேன். ஒரே முறை தான் படித்திருக்கேன். ஆகவே பிச்சுமணியின் குணநலன்கள் நினைவில் இல்லை. அந்த நாவலுக்குக் "கல்பனா" வரைந்திருக்கும் ஓவியங்கள் மட்டும் நினைவில் இருக்கிறது.

   Delete
 9. பாலசந்தரின் பரம ரசிகன் நான். இந்த படங்களை பல முறை பார்த்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் கே.பி.படங்கள் பிடிக்கும்.
   வருகைக்கு நன்றி ஐயா!

   Delete