கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, September 20, 2021

அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும்

  அவன் தந்த சந்தோஷமும் ஏமாற்றமும் 


வீட்டிலிருந்த மைக்ரோ வேவ் அவன் பழுதானதால் புதிது வாங்குவதை சற்று ஒத்திப் போட்டு, சென்ற வாரம் வாங்கி வந்தார்கள். புதிய அவனில் ஏதாவது இனிப்பு செய்யலாம் என்று யோசித்த பொழுது, திரட்டுப்பால் செய்யலாம் என்றேன். ஒரு டப்பா கண்டென்ஸ்டு மில்க் வாங்கி வரச்சொன்னேன். அதை ஒரு கண்ணடி பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, அவனில் வைத்து அவனை ஸ்டார்ட் பண்ண, ஐந்தே நிமிடங்களில் வெள்ளை வெளேர் என்று சுவையான திரட்டுப்பால் கிடைத்து விட்டது.  என் மருமகளுக்கு ஒரே சந்தோஷம். 

அந்த அவனில் தயிர் என்னும் ஆப்ஷன் இருப்பதை பார்த்து விட்டு,"இதில் அரைமணி நேரத்தில் தயிர் செய்து விடலாம்" என்றாள் என் மருமகள். "தட்ஸ் கிரேட்! நமக்கு எப்படியும் இன்று தயிர் தோய்க்க வேண்டும். இதில் செய்து விடலாம்" என்ற நான், பாலக் காய்ச்சி, ஆறியதும் வழக்கம் போல் ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் அதில் சேர்த்து, அந்த பாத்திரத்தை அவனில் வைத்து, அரை மணி நேரத்திற்கு செட் செய்து விட்டு, அரை மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால், பால் அப்படியே இருந்தது.  

ஒரு வேளை அரை மணி நேரம் என்பது அரை லிட்டர் பாலுக்காக இருக்கலாம், நாம் ஒரு லிட்டர் பாலை உரைக்குத்தியிருக்கிறோம் எனவே இன்னும் ஒரு அரை மணி நேரம் வைக்கலாம் என்று மீண்டும் ஒரு அரை மணி நேரம் செட் பண்ணினேன். அப்போதும் பால் தயிராக மாறவில்லை. வெளியே எடுத்து வைத்து விட்டு கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தாலும் அதே நிலை. "என்னடா இது மதுரைக்கு வந்து சோதனை?" என்று தோன்றியது. 

யூ ட்யூபில் சென்று மன்றோ வேவ் அவனில் தயிர் செய்வது எப்படி என்று பார்த்தால், நான் செய்த விஷயங்கள் சரி, ஒன்றே ஒன்றைத் தவிர, உறைகுற்றிய பால் பாத்திரத்தை அவனில் வைத்து விட்டு தயிர் என்னும் பட்டனை அழுத்தி 2:2 என்னும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும், அது 9 மணி நேரம் என்று அவனுக்குள் வைக்க வேண்டிய கால அளவைக்காட்டுகிறது. ஆறு மணி நேரத்தில் தயராகி விடும், பிறகு மூன்று மணி நேரம் பிரீசரில் வைக்க வேண்டும். கட்டித் தயிர் ரெடியாகி விடும் என்று ஒரு ஆன்டி ஹிந்தியில் போலினார். உரை குற்றி  ஒன்பது மணி நேரம் வெளியே வைத்தாலே தயிர் ரெடியாகி விடுமே?  

அன்று மாலை மைக்ரோ வேவ் அவனை எப்படி இயக்குவது என்று செய்முறை விளக்கம் அளிக்க கம்பெனியிலிருந்து வந்தவரிடம் தயிர் மகாத்மியத்தை கூறிய பொழுது, "இதெல்லாம் மேல் நாட்டவருக்காக, நாம் எப்போதும் செய்வது போல் தயிர் பண்ணிக் கொள்வதுதான் சரி" என்கிறார். சரிதான்!  4x2 என்ற கணக்கிற்கு கால்குலேட்டரை பயன்படுத்துவது போலத்தான் என்று நினைத்துக் கொண்டேன். 



 


 

30 comments:

  1. மைக்ரோ அவன் மகாத்மியம் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. கடைசியில் அந்தப்பால் என்ன ஆனது? தயிரானதா? தலைப்பு ' அவன் தந்த சாந்தோஷமும் ஏமாற்றமும்' என்பதைப்படித்து விட்டு அவன் எப்பது யார் என்று நினைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தால் அவன் என்பது 'மைக்ரோ அவன்' என்பது புரிந்தது!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோஜி,வெது வெதுப்பான நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் பால் பாத்திரத்தை சற்று நேரம் வைத்திருந்து பின்னர் ஒரு கம்பளியால் பற்றி கொஞ்சம் நேரம் வைத்தேன். தயிராகி விட்டது. நன்றி.

      Delete
  2. தலைப்பில் நல்ல ஈர்ப்பு!  அவன் எவன் என்றுதான் நானும் பார்த்தேன்.

    ReplyDelete
  3. ஐந்து நிமிடத்தில் அவ்வளவு எளிதாக திரட்டுப்பாலா?  அட...   என்ன மாடல்? 

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் எந்த மாடலிலும் வரும் என்பது என் அனுபவத்தில் தெரிந்துகொண்டது.

      இடையில் இரு தடவை 2 நிமிடங்களுக்கு ஒரு முறை திறந்து கலந்து விட வேண்டும்.

      அப்படி 7-10 நிமிடம்.

      உங்கள் மைக்ரோ வேவ் அவனின் பவர் பாருங்கள் அதற்கு ஏற்றாற் போல் நேரம் சிறிது மாறுபடலாம். முதலில் 5 நிமிடம் வைத்துப் பாருங்கள். அப்போதே ரெடியாகிவிடும். இடையே ஒரு தடவை திறந்து கிளறுங்கள் இது நல்லது. சேஃப்டி

      கீதா

      Delete
    2. எல்லா பாடல்களிலும் செய்ய முடியும்.

      Delete
  4. தயிர் மகாத்மியம் சிரிக்க வைத்தது.  வடிவேலு ஒரு படத்தில் மூட்டைப்பூச்சி (அல்லது கொசுவோ) பிடிக்கும் மெஷின் விற்பார்.  அது நினைவுக்கு வந்ததது.

    ReplyDelete
  5. அவன் என்றதும் ஆஹா அக்கா ஒரு கதை எழுதியிருக்காங்க என்று நினைத்தேன்.

    அப்புறம் மைக்ரோ வேவ் அவன் என்று தெரிந்தது.

    ஆமாம் அக்கா மைக்ரோ வேவ் அவனில் வெகு எளிதாகத் திரட்டுப்பால் செய்துவிடலாம். நன்றாகவே வரும். 2000 ஆம் ஆண்டிலேயே செய்த அனுபவம். ஆனால் இப்போதெல்லாம் அவன் இல்லை வீட்டில்!!!

    அவனில் தயிர் - ஹாஹாஹாஹா....அது குளிர்ப்பிர்தெசங்களுக்கு நம்மூருக்கு நாம் செய்யும் நார்மல்தன

    குளிர் தொடங்கிய பிறகு டிசம்பர் ஜனுவரியில் உங்களிடம் இன்ஸ்டன்ட் பாட் இருந்தால் அதில் முயற்சி செய்யலாம். நன்றாக வருகிறது. மகன் அங்கிருப்பதால் வைத்திருக்கிறான் என்னிடம் இன்ஸ்டன்ட் பாட் இல்லை. எனவே அனுபவம் இல்லை அவன் அதாவர்து என் மகன் !!!!! சொல்லித் தெரிந்தது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //அவன் அதாவர்து என் மகன் !!!!! சொல்லித் தெரிந்தது// ஹாஹா! குளிர் காலத்தில் உரைக்குத்தி விட்டு, கம்பளி சுற்றி வைத்து விடுவேன்.

      Delete
  6. மைக்ரோவேவ் அவன் எந்த மாடல் ஆனாலும் அதில் திரட்டுப்பால் கன்டென்ஸ்ட் மில்கை வைத்துச் செய்துவிடலாம். தயிர் தோய்க்கலாம் என்பது தெரியாது. ஆனால் என்னோட அவன் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முந்தையது. ஒரே ஒரு முறை பிட்சா செய்தேன். சுமாராகத் தான் வந்திருந்தது. எலக்ட்ரிக் அவனில் வருவது போல் வரலை. தயிரெல்லாம் நாம் உறை ஊற்றிச் செய்தால் தான் ருசி, மணம். இப்போ சாம்சங் குளிர்சாதனப்பெட்டியிலும் தயிர் செய்வதற்காகத் தனி இடம், பெட்டி எல்லாம் ஒதுக்கி இருக்கிறார்கள். தயிர் செய்து தயிராக வருவதை விளம்பரங்களிலும் காட்டி வருகிறார்கள். சுமார் ஒரு வருஷத்துக்கும் மேலாகப் பார்த்து வருகிறேன். ஆனால் நாம் நேரடியாகச் செய்வது போல் இருக்குமா? சந்தேகமே!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நான் பார்த்ததில்லையே?..

      Delete
    2. நீங்க ரொம்பவே பிசியான ஷெட்யூலில் இருப்பதால் தொலைக்காட்சி பார்த்திருக்க மாட்டீங்க! தினம் நாலு தரமாவது ஏதாவது ஒரு சானலில் சாம்சங் விளம்பரத்தில் இது வந்துடும். இரண்டு இளம்பெண்கள் மாடல்கள்.

      Delete
  7. பெட்டிக்கடை மில் தயிர் டப்பாவை வாங்கி இருக்கலாமோ....

    ReplyDelete
    Replies
    1. அது இருக்கவே இருக்கிறது.

      Delete
  8. அது என்னமோ தெரியவில்லை. உள்ளே சக்தி வாய்ந்த காந்தம் இருப்பதால் இருக்கலாம். இண்டக்சன் ஹாப், மற்றும் மைக்ரோ அவன் இரண்டும் கரப்பான் பூச்சிகளுக்கு பிடித்த உறைவிடம். கொஞ்சம் நாள் உபயோகிக்காமல் விட்டதில் அவை உள்ளே புகுந்து இரண்டையும் ரிப்பேர் ஆகிவிட்டன. சரி செய்ய ஆகும் செலவில் புதியதே வாங்கி விடலாம். ஆக மைக்ரோவெவ் அவன் ஒரு நமது இந்தியா அடுக்களையில் ஒரு வேஸ்ட் உபகரணம் என்பது என் கருத்து. .

     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வெளிநாடு செல்லும்போதெல்லாம் பயன்பாட்டில் இருப்பதில்லையே! இது வரை பிரச்னை ஏதும் கொடுக்கவில்லை. இனி எப்படியோ! மைக்ரோவேவ், இன்டக்‌ஷன் ஸ்டவ் இரண்டுக்குமே 15 வயதாகி விட்டது.

      Delete
    2. இன்டெக் ஷன் ஸ்டொவெ அதிக நாள் பயன்படுத்தாமல் இருந்தால் அதன் பட்டங்கள் இயங்காமல் போய் விடுகின்றன. மற்றபடி கரப்பான் பூச்சிகள் அடையும் என்று கூற முடியாது. மைக்ரோவேவ் அவனில் மைசூர்பாக், கேரட் அல்வா, அரிசி உப்புமா என்று அத்தனையும் பண்ண முடியும்.

      Delete
    3. இன்டக்‌ஷன் ஸ்டவும் வெளிநாடு செல்லும்போதெல்லாம் அதன் டப்பாவில் சுத்தம் செய்து உள்ளே வைத்துவிட்டுப் போவோம். ஒண்ணும் ஆகலை இதுவரை. அவன் அவ்வளவாக மக்கர் செய்யாது என்று அதை வாங்கியப்போ டெமான்ஸ்ட்ரேஷனுக்கு வீட்டுக்கு வந்திருந்த எல்ஜி ஊழியர் சொன்னார். 2004--2005 ஆம் ஆண்டில் வாங்கியது அவன். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டில் இன்டக்‌ஷன் ஸ்டவ் அறிமுகம் ஆனதுமே நம்மவர் வாங்கி வந்துட்டார். அநேகமாக இந்தியாவிலேயே முதல்முறையாக இன்டக்‌ஷன் ஸ்டவ் வாங்கினது நானாக இருக்கலாம்.

      Delete
  9. அருமையான தயிர் செய்ய Samsung Curd Maestro Refrigerator உள்ளதே...

    ReplyDelete
    Replies
    1. ஃப்ரிட்ஜ் மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருகிறேன், அது பழுதாகட்டும் எங்கிறார் மகன். அப்போது நீங்கள் சொல்லியிருக்கும் மாடலை வாங்கி விடுகிறோம். நன்றி.

      Delete
    2. அதே, அதே. திரு தனபாலனும் சொல்லி இருக்காரே!

      Delete
  10. Oven புராணம் அருமை...

    சுவையோ சுவை - நகைச்சுவை..

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரி

    அவனைப்பற்றி புராணம் அருமை. நான் கூட அவன் என்று நீங்கள்"அவனை"த்தான் குறிப்பிடுகிறீர்கள் எனப் பார்த்தேன். இந்த அவனைப் பற்றிய நல்ல பயனுள்ள தகவல்கள் அறிந்து கொண்டேன். அவனில், இரண்டாவதாக (தயிர் தோய்ப்பது) பற்றி குறிப்பிட்டு எழுதியதில் உங்கள் நகைச்சுவை மிளிருகிறது. மிகவும் ரசித்தேன்.

    என்னிடம் அவன் இல்லை. "அவனுக்குள்" நாமெல்லோரும் பிறப்பிலிருந்தே எப்போதுமே ஐக்கியமாகி இருக்கிறோம். ஆனால், உணருவதில்தான் கால தாமத வேறுபாடு வித்தியாசங்கள் ஆகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  12. அவன் முதலில் நீங்கள் ஆரம்பித்தவுடன் தெரிந்து விட்டது.

    நல்ல நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.Instant குக்கரில் பாலை காய்ச்சி ஆற வைத்து நகசூட்டில் அதிலேயே தயிர் உரை ஊற்றி வைத்து விட்டால் நல்லதயிர் கிடைக்கிறது. எட்டுமணி நேரம் ஆகும் தான்.மகள், மருமகள் அதில் தான் தயிர் செய்கிறார்கள்.

    நான் ஹாட்பேக் பாத்திரத்தில் பாலை ஊற்றி உரை ஊற்றி வைப்பேன் குளிர் காலத்தில் நல்ல கெட்டி தயிர் கிடைக்கும்.

    குளிர் அதிகமாக இருக்கும் ஊருக்கு அது

    ReplyDelete
  13. இந்த பெங்களூர் குளிரில் அக்டோபரிலிருந்து, டிசம்பர், ஜனவரி வரை தயிர் தோய்வது கஷ்டம். உறைக்குற்றி விட்டு ஒரு கம்பளியில் சுற்றி வைத்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ அங்கே அனுபவிச்ச ஜீரோ டிகிரிக் குளிரிலே கூடத் தயிர் உறை ஊற்றி இருக்கேன். பால் கொஞ்சம் சூடாக இருக்கும்போதே ஹாட் ப்ளேட்டைச் சூடு பண்ணிட்டுப் பின் அணைத்ததும் பால் பாத்திரத்தில் தயிர் விட்டுத் தேக்கரண்டியால் கலக்கிவிட்டு நன்கு மூடி வைத்துவிடுவேன். அந்தச் சூட்டுக்குத் தயிர் நன்றாகத் தோய்ந்துவிடும். தோசை மாவு புளிக்க வைக்கவும் இதே டெக்னிக். தில்லியில் மைத்துனர் வீட்டிலும் இப்படித்தான் செய்வோம். ஆனால் அங்கே ஹாட் ப்ளேட் இல்லை. ஆகவே வெந்நீருக்குள் பால் பாத்திரத்தை வைத்து உறை ஊற்றுவோம். அதே அம்பேரிக்கா எனில் பால் உறை ஊற்றும் தொந்திரவெல்லாம் இல்லை. ஆனால் மாவு புளிக்க வைக்க அவனுக்குள் (எரிவாயு அல்லது மின்சார அடுப்போடு இணைந்தே வரும். பெரிய அவனாக இருக்கும்.) அதில் தோசை மாவை வைச்சுடுவோம். மெம்பிஸில் பெண் இருந்தப்போ ஸ்நோ ஃபால் அறிவிப்பு வந்த உடனே இந்த ஏற்பாடுகளெல்லாம் செய்து வைச்சுப்போம்.

      Delete