Monday, June 13, 2016

புத்தகத் திருவிழா 2016!

புத்தகத் திருவிழா 2016!

எல்லா வருடங்களும் ஜனவரியில் நடக்கும் புத்தக கண்காட்சி இந்த வருடம் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப் பட்டு இப்போது ஜூனில்தான் நடை பெற்றது. சென்ற வருடம் டிசம்பரில் வந்த வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து சென்னை விடுபடாததுதான் தாமதத்திற்கு காரணம். 
இது 39வது புத்தகக் கண்காட்சி. புத்தக கண்காட்சி என்று பொதுவாக அறியப்பட்டாலும், புத்தக ஆர்வலர்கள் இதை புத்தக திருவிழா என்றே குறிப்பிடுகிறார்கள்.

முதலில் காயிதே மில்லத் கல்லூரியிலும், பின்னர் பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே இருக்கும் செயின்ட்.ஜான் பள்ளியிலும், சென்ற வருடம் ஒய்.எம்.சி.ஏ. க்ரௌண்டிலும் நடை பெற்ற புத்தக கண்காட்சி இந்த வருடம் ஏனோ தீவு திடலில் நடை பெற்றது. 

ஜூன் மாதம் என்பது புத்தக கண்காட்சி நடத்த ஏற்ற மாதம் கிடையாது. இப்போதுதான் பள்ளிகள் திறக்கும், அதற்காக நிறைய செலவு செய்திருக்கும் பெற்றோர் புத்தக கண்காட்சிக்கு வருவார்களா? அதனால் வருகையும் விற்பனையும் எதிர்பார்த்தது போல இல்லை. நடுவில் இரண்டு நாட்கள் மழை வேறு, என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் நான் சென்றது ஞாயிற்று கிழமையாக இருந்ததாலோ என்னவோ, புத்தக திருவிழா என்பதற்கு ஏற்ப தேர் கூட்டம், திருவிழா கூட்டமாக இருந்தது. கார் பார்கிங்கிலிருந்து நுழைவு வாசலுக்கு மினி பஸ் ஷட்டில் சர்வீஸ் விட்டிருந்தார்கள். அதற்கு ஒரு நீண்ட வரிசை காத்துக் கொண்டு நின்றது. நாங்கள் ஒரு ஆட்டோ பிடித்து சுவாமி சிவானந்தா சாலை வழியாக சென்று, நேபியர் பாலத்தை கடந்து கண்காட்சிக்குள் நுழைந்தோம். 

எழுநூறு ஸ்டால்கள்! இட வசதி தாரளமாக இருந்ததால் அத்தனை கும்பலிலும் சௌகரியமாக நடக்க முடிந்தது என்றாலும் என் தோழி கால் வாசி சுற்றுவதர்க்குள் களைப்படைந்து விட்டார். ஆகவே என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. வழாக்கம் போல பொன்னியின் செல்வன் நிறைய கண்ணில் பட்டது. நான் சந்தியா பதிப்பகத்திலிருந்து திரு.ஜீ.வி. அவர்களின் 'ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' புத்தகமும்,லா.ச.ரா.வின்' புத்ர' புத்தகமும் மட்டும் வாங்கினேன். பக்கத்தில் இருந்த 3D ஓவிய அரங்கில் சில புகைப் படங்கள் எடுத்துக் கொண்டு நடையை கட்டினோம். அசோகமித்ரனின் 'புலிக் கடன்' பிலிப்கார்டில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6 comments:

 1. புத்தகங்கள் நல்லதொரு நண்பன்
  வாழ்த்துகள் புகைப்படங்களின் கோணம் அருமை
  ஃபாலோவர் பாக்ஸ் வைக்கலாமே... பதிவுகளை தொடர்வதற்கு வசதியாக இருக்கும்.

  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  ReplyDelete
 2. நீங்கள் எப்போதுபதிவு எழுதுகிறீர்கள் என்பதை அறியவும் உங்களைத் தொடரவும் கில்லர்ஜி சொல்லியது போல் ஃபாலோவர்ஸ் பாக்ஸ் வைக்ககலாமே புத்தகக்கண்காட்சியோ திருவிழாவோ காண எனக்குக் கொடுப்பினை இல்லை. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி! பாலோயர்ஸ் பாக்ஸ் வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

   Delete
 3. கீதாக்காவின் எண்ணங்கள் தளத்தில் உங்கள் கமென்ட் பார்த்தேதே தேடிப் பிடித்து இங்கு வந்தேன். அதற்கு முன்னால் உங்கள் பின்னூட்டம் எங்கள் ப்ளாக்கில் முதலில் பார்த்துத் தேடியபோது நோ ரெகார்ட்ஸ் ஃபௌண்ட் என்று வந்தது. ஜி எம் பி ஸார், கில்லர்ஜி சொல்வது போல ஈமெயில் ஸப்ஸ்கிருப்ஷன் வைக்கலாம்.

  இந்தமுறை புத்தகக் கண்காட்சிக்கு செல்லவில்லை. வீட்டிலிருந்தபடியே நண்பர் கோவை ஆவி உதவியுடன் கர்ணபரம்பரை மட்டும் வாங்கினேன்.

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு கஷ்ட்டப்பட்டு தேடி வந்ததற்கும், பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி. மூன்று பேர் பாலோயர்ஸ் பாக்ஸ் வைக்கச் சொல்லி விட்டீர்கள். வைத்து விட வேண்டியதுதான்(எப்படி? என்று தெரிந்து கொண்டு விடுகிறேன்).

   Delete
 4. ji i am a voracious reader i am happy to note that you are also a voracious reader good wishes

  ReplyDelete