CHOOSE THE MIDDLE PATH
ஏனென்றால் இன்று மாங்காடு சென்று வரலாம் என்று நானும் என் நல்ல பாதியும்(BETTER HALF) கிளம்பினோம். இன்று ஞாயிறு, தவிர பௌர்ணமி வேறு ஆகவே சீக்கிரம் கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தேன். அனால் எழுந்திருக்கும் போதே காலை மணி 6:00 . கிளம்ப 8:30 ஆகி விட்டது. உபெர் கார் வரவழைத்தோம். மிகவும் சல்லிசான ரேட். கோவிலை அடைந்த பொழுது மணி ஒன்பது. வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமான கும்பல். எனவே 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு அதற்கான வரிசையில்,விநாயகரை வணங்கி விட்டு நின்றோம். அங்கு நிற்கும் பொழுதுதான் மொத்தம் மூன்று வரிசைகள் இருப்பதை கவனித்தேன். சுவரை ஒற்றி பொது வரிசை, அதற்க்கு அடுத்து நடுவில் 20 ருபாய் கட்டண வரிசை, அதற்க்கு அடுத்து கடைசியாக 50 ரூபாய் கட்டண வரிசை.
இலவச பொது வரிசை நீண்டு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் சிறப்பு வழியில் சென்று விடலாம் என்று நினைத்த பலரும் 50 ரூபாய் வழியை தேர்ந்தெடுத்து விட்டார்கள் போல, அந்த வரிசையும் சற்று நீண்டுதான் இருந்தது. நடுவில் இருந்த 20 ரூபாய் வரிசையில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்ததால்,அது சரசரவென்று நகர்ந்தது!!
இந்த அனுபவம் முதல் முறை அல்ல. ஒரு முறை திருப்பதியிலும் இப்படி நேர்ந்தது. அப்போதெல்லாம் திருப்பதியில் பொது வரிசை,கட்டண சேவை ரூ.50/-,ரூ 300/- என்று இருந்தது. நாங்கள் 300 ரூபாயில் கும்பல் அதிகம் இருக்காது என்று நினைத்தோம். எங்களைப் போலவே பலரும் நினைத்ததால் 300 ரூபாய் வரிசை நீண்டிருந்தது. 50 ருபாய் வரிசை சற்று விரைவாக நகர்ந்து விட்டது.
So moral of the story is always choose the middle path!




No comments:
Post a Comment