கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, June 23, 2016

முருங்கைக்காய் கறி

முருங்கைக்காய் கறி 

முருங்கை காயில் சாம்பார் செய்யலாம், பொரித்த குழம்பு செய்யலாம், இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கறி கூட சமைக்கலாம்.

தேவையான பொருள்கள்:

முருங்கைக்காய் (இளசாக இருக்க வேண்டியது அவசியம்) - 4
காரப்பொடி - ஒன்றரை டீ ஸ்பூன் 
உப்பு -  1 டீ ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
தாளிக்க: எண்ணெய், மற்றும் கடுகு.



செய்முறை: 

முதலில் முருங்கைக்காய்களை அலம்பி துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கடுகை போட்டு அது வெடித்தவுடன் அலம்பி வைத்திருக்கும் முருங்கைக்காய்களை போட்டு மஞ்சள் பொடி, உப்பு, காரப்பொடி இவைகளை சேர்த்து கலந்து விட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்த பிரட்டி விட வேண்டும். முருங்கைக்காய்கள் நிறம் மாறுவது வெந்ததற்கு அறிகுறி. உடனே இறக்கி விடலாம். தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.   

தன் மாமியாரிடமிருந்து என் மகளும், அவளிடமிருந்து நானும் கற்றுக் கொண்ட விஷயம் இது.



7 comments:

  1. புதுசாக இருக்கிறது. குழம்பில் போட்ட காயைச் சாப்பிடுவது போல்தானே இருக்கும்?

    அரைவாசி வெந்தவுடன் தோலுரித்து விதை, சதைகளையும் மட்டும் பிரித்தெடுத்து செய்யலாமோ....

    ReplyDelete
    Replies
    1. @ஸ்ரீ ராம் குழம்பில் போட்ட முருங்கைக்காய் குழைவாக வெந்து விடும். இது பதமாக வெந்திருக்கும்.

      Delete
  2. கேரளாவில் செய்வார்கள் ஆனால் இப்படி அல்ல. தோலை நீக்குவார்கள் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காய் இளசாக இருந்தால் தோலை நீக்க வேண்டியதில்லை. வருகைக்கு நன்றி.

      Delete
  3. ஆம் இது ஒரு கேரள ரெசிபி. முருங்கைக்காயின் தோலை முதலில் நீக்கினால் அதன் ஒருவிதக் கசப்புச் சுவை நீங்கும் இதோடு உருளைக்கிழங்கையும் சேர்த்தும் வரட்டுவார்கள்

    ReplyDelete
  4. உருளை மட்டுமல்ல, தக்காளி சேர்க்கலாம், ஊறுகாய் போடலாம் என்றெல்லாம் முக நூலில் பின்னூட்டங்கள் வந்தன. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. ஐயா ஜியெம்பி அவர்கள் சொல்வது போல இது கேரளா ரெஸிபி நண்பர்கள் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன்

    ReplyDelete