Thursday, April 27, 2017

நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு

நினைச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு 


சற்றே பருமனான என் தோழியின் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவளுக்கு தன் உருவம் குறித்து கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை. எடையைக் குறைக்கும்
முயற்சியில் ஈடுபட விரும்பினாள். டயட் அவளுக்கு கடினமாக இருந்தது. சில நாட்கள் செய்வாள், விட்டு விடுவாள். நான் அவளுக்கு ஒரு ஆலோசனை சொன்னேன்.

உனக்கு பிடித்த நடிகையின் புகைப்படத்தில் முகம் இருக்கும் பகுதியில் உன் புகைப்படத்திலிருந்து உன் முகத்தை ஒட்டி விடு. சுருக்கமாக morphing செய்து விட்டு தினசரி அந்த படத்தை பார். நாம் மனதால் எதை உணர்கிறோமோ அதுவாகவே மாறிவிடுவோம், எனவே நீயும் சுலபமாக இளைத்து விடலாம் என்றேன். 

அவளும் தலையாட்டினாள். ஆனால் நான் சொன்னதை சீரியசாக எடுத்துக் கொண்டாளா என்று தெரியாது. ஒரு மாதம் கழித்து அவளை பார்த்த பொழுது முன்பை விட இன்னும் கொஞ்சம் வெய்ட் போட்டிருப்பது போல தோன்றியது.

என்ன உன் ஆபரேஷன் வெயிட் லாஸ் எப்படி இருக்கிறது? நான் சொன்ன டெக்கினிக்கை முயற்சி செய்தாயா? என்றேன்.

போங்க ஆண்ட்டி, நீங்க சொன்னதை கேட்டதால்தான் இன்னும் அதிகமாக வெயிட் போட்டுவிட்டேன்.

ஏன்? ஏன்?

நீங்க என்ன சொன்னீங்க? எனக்கு பிடித்த நடிகைகள் படத்தையும் என் புகைப்படத்தையும் மார்பிங் பண்ணச் சொன்னீர்கள், பாருங்கள் என்று தன் ஆண்ட்ராய்டு போனை என் முன் நீட்டினாள்.

பார்த்த நான் திடுக்கிட்டேன். அடிப்பாவி! இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா?

ஏதோ காலத்திற்கேற்றார் போல் திரிஷா, தமன்னா, தீபிகா படுகோன் படங்களை வைத்திருப்பாள் என்று பார்த்தால்... சாவித்திரி(சர்தான்), ஜெயலலிதா(ஏய்), ஊர்வசி(அடி..!), குஷ்பூ..!! இவளை என்ன செய்தால் தேவலை? இவர்களுடைய நடிப்புதான் அவளுக்கு பிடிக்குமாம்...

அடியே! உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது... 

28 comments:

 1. ஹாஹா :) ரசித்தேன் அக்கா ....நீங்க இலியானா இல்ல தமன்னா பேர்களைகுறிப்பிட்டு சொல்லியிருக்கணும் :)

  அப்புறம் இந்த எடை குறைத்தல் வெயிட் ப்ராப்லம்லாம் மனா உளைச்சலாலும் கூடும் ..இப்பெண் அதையே நினைச்சிட்டிருக்கறதால் தான் எடை இன்னும் அவரை விடாம பிடிச்சிட்டிருக்கு வேறு விஷயங்களில் மனதை டைவேர்ட் செய்தா கட்டாயம் குறையும் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சலின்! நீண்ட நாட்களுக்குப் பின் வருகை தந்திருக்கிறீர்கள். நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி!

   Delete
 2. நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். மிகவும் ரஸித்துப் படித்தேன்.

  என்னதான் சொன்னாலும் எனக்கும் சாவித்திரி, ஜெயலலிதா, ஊர்வசி, குஷ்பூ.. போன்ற சற்றே கொழுகொழு மொழுமொழு நடிகைகளைத்தான் மிகவும் பிடிக்கும். :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா! தென்னிந்தியர்களுக்கு கொஞ்சம் பூசினாற்போல இருந்தால்தான் பிடிக்கும்.

   Delete
  2. என்ன இப்படி assume பண்ணிட்டீங்க. குஷ்புவுக்கு கோவில் கட்டினதை வச்சு சொல்றீங்களா? சிம்ரனுக்கு சிலையே வைப்பார்களே.

   Delete
 3. ஐயய்யோ, நகைச்சுவையாக எழுத இப்போதுதான் முயன்று
  கொண்டிருக்கிறேன். நீங்கள் போட்டிக்கு வந்துவிட்டீர்களே!

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. நான் தொன்னூறுகளிலிருந்தே நகைச்சுவையாக எழுத முயன்று கொண்டிருக்கிறேன். சில சமயம் க்ளிக் ஆகி விடுகிறது போலிருக்கிறது:)) எதிலும் போட்டி இருந்தால்தானே சுவாரஸ்யம்.
   பட்டி மன்றத்தை பற்றி ஒரு முறை அவ்வை நடராஜன், கத்தியும் கத்தியும் மோதினால் ரத்தம் வரும், ஆனால் பூந்தியும் பூந்தியும் மோதினால் எங்கும் இனிமைதான் என்றார். அது போல இனிமையை பரப்பலாம் வாருங்கள்.

   Delete
 4. நல்லவேளை, ருஷ்யேந்திரமணி, டி ஏ மதுரம் என்று முயற்சிக்கவில்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம்! நல்ல வேளை அப்படி எதுவும் தோன்றவில்லை.

   Delete
 5. ஆஹா அருமை அருமை

  (இன்னும் கொஞ்சம் தெளிவாய்ச்
  சொல்லி இருக்கவேண்டுமோ
  பிடித்த ஒல்லியான நடிகை
  என்பது மாதிரி....)

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லியிருந்தால் எல்லோரையும் சிரிக்க வைத்திருக்க முடியாதே.. வருகைக்கு நன்றி

   Delete
 6. ஹஹஹஹஹ....செம..மிகவும் ரசித்தோம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி துளசிதரன் மற்றும் கீதா!

   Delete
 7. நல்ல வேளை பிந்துகோஷ் புகைப்படத்தை வைத்திருக்கவில்லை.

  நம்ப தமிழ்நாட்டுக்காரங்களுக்கே கொஞ்சம் குண்டான நடிகைகளைத் தான் பிடிக்கும். வடநாட்டில் வத்தக்காச்சியாக இருந்தால்தான் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. //நம்ப தமிழ்நாட்டுக்காரங்களுக்கே கொஞ்சம் குண்டான நடிகைகளைத் தான் பிடிக்கும். வடநாட்டில் வத்தக்காச்சியாக இருந்தால்தான் பிடிக்கும்.//

   உண்மைதான்! வருகைக்கு நன்றி!

   Delete
 8. நிஜமா, கற்பனையா தெரியலை. ஆனாலும் ரசித்தேன். சிறு வயதுக்காரங்க இளைப்பது கடினம் அல்ல! :)

  ReplyDelete
  Replies
  1. முழுக்க முழுக்க கற்பனை. வருகைக்கு நன்றி!

   Delete
 9. அந்த பெண் இளைக்க்கிறாரோ இல்லையோ ஆனால் பாருங்க வருங்காலத்தில் பேமஸாக ஆக வாய்ய்ப்பு இருக்கு ஏன் தமிழக முதலமைச்சராகவும் வாய்ப்பு இருக்கு அப்போது சொல்லுவார்கள் தான் இந்த நிலைக்கு வர நீங்கள்தான் காரணம் என்று....

  ReplyDelete
  Replies
  1. அடடா இப்படி ஒரு விஷயம் இருக்கா! நீண்ட நாள் கழித்து வருகை தந்திருக்கிறீர்கள். நன்றி!

   Delete
 10. ஹாஹா... பல சமயம் இப்படித் தான் முடிவு வேறு மாதிரி ஆகிவிடுகிறது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்! நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், நகைச்சுவை ஏதும் இல்லை. வருகைக்கு நன்றி!

   Delete
 11. இதற்குத்தான் சொல்வதைச் சரியாகச் சொல்ல வேண்டும் என்பது

  ReplyDelete
  Replies
  1. சரிதான்! கடைசியில் நான் குற்றவாளி ஆகி விட்டேனா?வருகைக்கு நன்றி!

   Delete
 12. சொன்னது சொன்னீர்கள் . இலியானா சொல்லக் கூடாதோ.
  பருமன் ஓடிப் போயிருக்குமே. வெகு நன்றாக இருந்தது படிக்க. இளைப்பது கஷ்டம் தான் பா.
  பானுமதி

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி அக்கா! நீண்ட நாட்கள் கழித்து நீங்கள் வந்ததில் ரொம்ப சந்தோஷம்! நிஜமாக இப்படி நடந்தால் இலியானா பெயரை சொல்கிறேன், இது கற்பனைதானே. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
   //இளைப்பது கஷ்டம் தான்// ரொம்ப ரொம்ப கஷ்டம்:(

   Delete