Thursday, April 13, 2017

தோல்வியே வெற்றியாய்

தோல்வியே வெற்றியாய் 

இன்றைய வெற்றிகரமான ஹீரோ வசந்த் குமாரின் மகன் வருண், ஸ்கூலிலிருந்து வந்ததும் ஷூவை கழற்றி வீசினான். புத்தகப் பையை சோபாவில் தூக்கி எறிந்து விட்டு,"ரொம்ப பசிக்கிறது மம்மி! சாப்பிட ஏதாவது குடு.." என்று சொல்லிவிட்டு அம்மாவின் செல்போனை எடுத்துக் கொண்டு நோண்டத் தொடங்கினான். 

"சரி, சரி, நீ மொதல்ல முகம் கழுவி ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. வந்த உடனே செல்.."  என்று மகனை விரட்டி விட்டு, தம்பி வந்துடுச்சு, டிபன் எடுத்து வையுங்க" என்று சமையல்கார அம்மாவுக்கு வசுந்தரா உத்தரவிட்டாள்.

ஒரு புறம் டி.வி.யை ஓட விட்டு, இன்னொரு புறம் செல் போனை பார்த்துக் கொண்டே டிபனை சாப்பிடத் தொடங்கினான்.

"என்னடா? எக்ஸாம் மார்க்கெல்லாம் வந்தாச்சா?" என்று கேட்ட அம்மாவிடம்,"ஓ! ஐயாதான் முதல், நாளைக்கு பேரன்ட்ஸ்,டீச்சர்ஸ் மீட்டிங்கில்  ரிப்போர்ட் கார்ட் கிடைக்கும்" என்றதும் நிம்மதியான வசுந்தரா, மறுநாள் மிகுந்த நம்பிக்கையோடு பள்ளிக்குச் சென்றாள்.
அங்கு சென்றதும்தான் மகன் சொன்னது அப்பட்டமான பொய் என்று தெரிந்தது. கணிதத்தில் மட்டும் பார்டரில் பாஸ் ஆகியிருந்தான், மற்ற பாடங்களில் எல்லாம் மிகவும் குறைந்த மதிப்பெண்கள். ஆசிரியர்கள் புகார் சொன்ன பொழுது தலை குனிந்து கேட்டுக் கொண்டான். 

வீட்டிற்கு திரும்பி வரும் பொழுது,"என்னடா வருண்? என்னமோ 
முதல் மார்க் என்றாய்..? எல்லாவற்றிலும் இவ்வளவு குறைந்த மார்க்? என்று துக்கம் தொண்டையை அடைக்க கேட்டதும், "என்னமா ரொம்ப ஓவர் ரியாக்ட் பண்ற? அப்பாவின் படங்கள் ஓடாவிட்டாலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்... அப்படின்னுதானே விளம்பரம் செய்கிறார்கள்..? என்று கேட்டதும், பதில் பேச முடியாமல் உறைந்தாள்.


22 comments:

 1. தங்கள் கதையின் முடிவு வாசகர்களையும் பதில் பேச முடியாமல் உறைய வைத்துவிட்டது. :)

  எல்லோருக்கும் தோல்வியே வெற்றியாய் அமையட்டும்.

  பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா!

   Delete
 2. நல்ல போடு போட்டான்
  எதிர்காலத்தில் நல்லா வருவான்
  சுவாரஸ்யமான குட்டிக் கதை
  இந்தக் காலத்துப் பிள்ளைகள்
  இப்படித்தானே இருக்குது
  பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஐயா!

   Delete
 3. அம்மாவுக்கு உறைக்கும்படி சொன்னதை விட அப்பாவுக்கு உறைக்கும்படி சொல்லி இருக்கலாம். அதோடு இனிமேலாவது படிப்பில் கவனமும் செலுத்தலாம். படிப்பும், நடிப்பும் ஒன்றல்ல! அல்லது அப்பா மாதிரி நடிக்கத் தான் போயாகணும்! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா! ஒரு திரைப்படம் வெளியாகி நாலு நாட்களில் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள், அதில் பாதிக்கு மேல் தோல்வி என்பது பின்னர்தான் தெரிகிறது. இதை கேலி செய்வதுதான் என் நோக்கம், என்றாலும் நீங்கள் சொல்வது போல தந்தைக்கு உரைக்கும்படி சொல்லியிருக்கலாம். நன்றி!

   Delete
 4. தங்களுக்கும்
  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா! சென்ற பதிவிற்கு எழுதவேண்டிய கமெண்டை இந்த பதிவிற்கு எழுதி விட்டீர்கள் னென்று நினைக்கிறேன்.

   Delete
 5. அடடே.... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டான் வருண்.

  ReplyDelete
 6. கதை எழுத ஆரம்பித்தாகி விட்டது இல்லையா? வெரிகுட்! காத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம்! இந்த கதை சில வருடங்களுக்கு முன்பே ஒரு நோட்டில் எழுதி வைத்து விட்டு அதை மறந்தும் போய் விட்டேன். இப்பொழுது எதற்காகவோ அந்த நோட்டை எடுத்தபொழுது கண்ணில் பட பதிவேற்றினேன்.

   Delete
 7. கில்லாடியாக வருவான் வருண்...

  ReplyDelete
 8. ஆஹா.... நல்ல பாடம் தான்!

  பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நன்றி!

   Delete
 9. வருணைப் புகழ்வதா இல்லை அவனது பாடத்தை ஏற்பதா தெரியலை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா!

   Delete
 10. எழுத்தில் இன்னொரு 'சுஜாதா' ஆகவேண்டும் என்று முயற்சிப்பது புரிகிறது. வெற்றி கிடைக்கட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  -இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

  ReplyDelete
 11. நானா? சுஜாதாவா? சான்ஸே இல்லை. ஒரு காலத்தில் இந்துமதி போலவும், வாஸந்தி போலவும், பின்னர் ஆர்.சூடாமணி போலவும்(ஏ அப்பா!) எழுத ஆசைப் பட்டதுண்டு. ஆசை இருக்கு தாசில் பண்ண ஹும்..! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

  ReplyDelete
 12. நானா? சுஜாதாவா? சான்ஸே இல்லை. ஒரு காலத்தில் இந்துமதி போலவும், வாஸந்தி போலவும், பின்னர் ஆர்.சூடாமணி போலவும்(ஏ அப்பா!) எழுத ஆசைப் பட்டதுண்டு. ஆசை இருக்கு தாசில் பண்ண ஹும்..! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

  ReplyDelete
 13. அருமை
  முதன் முறையாய் தங்களின் தளத்திற்கு வருகிறேன்
  இனி தொடர்வேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ! வாங்கோ! ரொம்ப சந்தோஷம்! பாராட்டுக்கு நன்றி!

   Delete