கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 3, 2017

குழு மனப்பான்மை.

குழு மனப்பான்மை. 

ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவர் சொன்னது. அவருடைய நிறுவன மேலாளரை சந்தித்த ஒரு பிரபல நடிகர் அவர்களுடைய அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதற்கென்ன தாராளமாக வாருங்கள் என்று வரவேற்பளித்த மேலாளர்,அதற்கென ஒரு நாளையும் குறிப்பிட்டு, அவரது அலுவலக பிரத்யேக வெப்சைட்டில் இந்த தேதியில் இந்த நடிகர் நம் அலுவலகத்திற்கு வருகை தர உள்ளார். அவர் வரும்பொழுது அவரிடம் ஆட்டோகிராப் வாங்கவோ, அவரோடு செல்பி  கொள்ளவோ யாரும் முயலக்கூடாது என்று சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். ஆனாலும், அந்த நடிகர் அலுவலகத்திற்கு வருகை புரிந்த பொழுது அவரை சூழுந்து கொண்டு,புகைப்படம் எடுத்துக் கொள்ளவும், கை குலுக்கவும், பேசவும் கணிப்பொறி என்ஜினீர்கள் முயன்றதால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவை பழக்கம் இருப்பதாலோ என்னவோ நடிகர் திறமையாக சமாளித்தாராம்  சி.ஈ.ஓ தான் பாவம்  ஒரு மூலைக்குத் தள்ளப் பட்டதில் நொந்து போய் விட்டாராம். மறு நாள் இப்படிப்பட்ட ஒரு அலுவலகத்திலா நான் சி.ஈ.ஓ.வாக இருக்கிறேன் என்பதை நினைத்தால் மிகவும் வெட்கமாக இருக்கிறது என்று அலுவலக வெப் சைடில் புலம்பி இருந்தாரம்.

அவரை வெட்கமும் வருத்தமும் பட வைத்த குழு மனப்பான்மைக்கு பாமரர், படித்தவர் என்ற பேதம் கிடையாது போலிருக்கிறது.

25 comments:

  1. புகழ்! போதை! பிரபலத்துக்கு ஏங்கும் மனித மனம்! வேறென்ன சொல்ல!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. இது குழு மனப்பான்மையில் வராது. "குழு மனப்பான்மை" பெரும்பாலும் Group Politicsஐத்தான் குறிக்கும்.

    Mass Pscycology is what you are referring to. ஆரம்பிப்பவன்தான் culprit, as he did not obey the circular. அப்புறம் ஒவ்வொருத்தராச் சேர்ந்து முழு chaosதான்.

    பாவம் நடிகர். எதையோ study செய்யவந்து ஏமாற்றமடைந்திருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்! மாஸ் பிஹேவியரைத்தான் நான் குறிப்பிட நினைத்தேன். அதற்கு இணையான தமிழிச் சொல் குழு மனப்பான்மை கிடையாதா?

      Delete
    2. mass behaviour என்றால் வெகுஜன மனப்பான்மை அல்லது நடத்தை என்று வராதோ??????????????

      Delete
  3. பானுக்கா இதுதான் மொத்த கூட்டமும் செய்வது. இதில் படித்தவர் படிக்காதவர் என்பதில்லை. அதான் மாஸ் ஹீரோ என்றும் சொல்லுறாங்க போல. அதெப்படி சர்குலர் கொடுத்தும் கேட்காத கூட்டம்...படித்த படிப்பு, டிகிரி வேஸ்ட்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இந்த கூட்ட மனப்பான்மைக்கு படித்தவர், பாமரர் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. இது ஒரு வகையான கூட்ட மனப்பான்மை என்றால், வன்முறையில் ஈடுபடுவது, கல்லெறிவது, பேருந்து போன்றவற்றை கொளுத்துவது போன்றவை வேறொரு விதமான கூட்ட மனப்பான்மை. வருகைக்கு நன்றி கீதா.

      Delete
  4. சினிமா நடிகர்கள் மீதான மோஹம் எப்போது குறையுமோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்! சினிமா மோகம் இப்போதைக்கு குறையாது. அதனால்தானே நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கிறார்கள்

      Delete
  5. ஹாய் சிஸ் ....வணக்கம்
    இதை தெரிந்து கொள்ளவே வந்தாரோ...... தெரிந்தும் கொண்டார் சினிமா மோகம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்று

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி! முதல் முறையாக வந்திருக்கிறீர்கள். நன்றி! தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  6. ஒருவேளை சினிமா நடிகர் வருவதை அந்த CEO சொல்லாமல் இருந்திருக்கலாம் மேலும் அந்த நடிகர் மேக்கப் போடாமல் வந்து இருக்கலாம் அப்படி செய்து இருந்தால் இந்த பிரச்சனை இருக்காது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதைத்தான் என் மகனும் சொன்னார். நடிகரின் வருகையைப் பற்றி அந்த CEO அறிவிக்காமல் இருந்திருந்தால், "வேலை மும்முரத்தில் பலர் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் உணர்ந்து ரியாக்ட் செய்வதற்குள் அந்த இடத்தை நடிகர் கடந்திருக்கலாம்" என்று.

      வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete
  7. குழு மனப்பான்மை என்பது திட்டமிடப்பட்டவற்றில் ஊழியர்கள் காட்டும் முனைப்பைக் குறிக்காதோ? இதெல்லாம் தனி மனிதரின் வக்கிர விருப்பத்தில் வரும்னு நினைக்கிறேன். குழுவாகச் சேர்ந்து பேசி முடிவெடுப்பதைத் தானே குழு மனப்பான்மை என்பார்கள். இது நடிகரைக் கண்டதும் காணாதது கண்டது போல் துடிக்கும் மனித மனத்தைத் தான் குறிக்கும். நடிகரும் நம்மைப் போன்ற மனிதர் தானே! :(

    ReplyDelete
    Replies
    1. மாஸ் பிஹேவியர் என்பதற்கு இணையான தமிழ் சொல் தெரியாததால் குழு மனப்பான்மை என்று எழுதி விட்டேன்.

      Delete
  8. எல்லாவிடத்திலும் இவ்வாறுதான் நடக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Personally I feel this is due to " celebrity worship syndrome" or " in our society celebrity act like drug"

      Delete
    2. வளர்ந்த நாடுகள் கூட இதற்கு விதி விலக்கில்லை என்று நினைக்கிறன். நன்றி சார்!

      Delete
  9. இது உலகம் முழுவதும் நடப்பதே.

    ReplyDelete
  10. படிப்புக்கும் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை. சினிமா மோகம் ,தலைவர் மோஹம் எல்லாம் என்று தீருமோ. அறிக்கை விடாமல் இருந்திருக்கலாம். அன்னியனைப் போல வந்துவிட்டுப் போயிருக்கணும் அந்த நடிகர்.

    ReplyDelete
    Replies
    1. அந்த CEO பாடம் படித்துக் கொண்டிருப்பார். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!

      Delete
  11. தங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete